Pradhanya

Well-known member
Staff member
Joined
Oct 6, 2024
Messages
429
என்னாச்சு காதுல கம்மல காணோம்? கழுத்தில் அந்த சின்ன செயின் எதையுமே காணோம்? என்னாச்சு என ஆதி அவளை கேள்வி கேட்டு குடைந்து எடுத்தான்.

அது வந்து ஒரு கம்மல் திருகாணி காணோம்! தோடு தொலைஞ்சு போச்சு அதான் எல்லாத்தையும் கழட்டி வச்சுட்டு வந்துட்டேன். இப்போ என்ன ஆச்சு டாக்டர்? என சகுந்தலா கேட்க..

ஆதி ஒரு பெரு மூச்சை விட்டவன். அகதி மாதிரி இருக்க சகு!! ஏற்கனவே உன் மூஞ்சி பாவமா தான் இருக்கும். இப்போ அதுக்கு மேலே இருக்கு சகு.

பரவாயில்ல!!

ஹே லூசு மாதிரி பண்ணாத!! எல்லாரும் கேள்வி கேட்பாங்க!! என ஆதி அவளிடம் கூறினான்.

நான் தோடு மாத்தி புது தோடு வாங்கிக்கிறேன் என்றாள் சகுந்தலா.

ஈவ்னிங் ரெடியா இரு நான் வரேன்.

எதுக்கு டாக்டர்? என சகுந்தலா கேட்க..

வேற எதுக்கு தோடு வாங்க தான் என்றவன். ரவுண்ட்ஸ் சென்று விட்டான்.

மாலையும் ஆனது. இன்று மூன்று டெலிவரி பேசன்ட்ஸ் ஸ்கேனுக்காக காத்திருக்க.. ஆதி சகுந்தலாவுக்கு கால் செய்தவன். சகு நாளைக்கு தோடு எடுக்க போலாம் மார்னிங் ரெடியா இரு! நாளைக்கு உனக்கு வீக் ஆஃப் எனக்கும் வீக் ஆஃப் போய் வாங்கிட்டு வருவோம். காரணம் சொல்லாத எனக்கு புடிக்காது. நான் வாங்கி தருவேன். நீ வாங்காம இருந்த அப்புறம் பேசவே மாட்டேன். என சொல்லி விட்டு போனை ஆதி கட் செய்யும் முன் சர்வா கட் செய்தான்.

சகுந்தலா ரெஸ்ட் ரூம் சென்றிருந்த நேரத்தில் அவளின் போன் சிணுங்கியது. அதில் ஆதியின் படம் ஆடி கொண்டிருக்க.. இங்கு ஒருவனுக்கு சர்வமும் ஆடியது.

சார் ஒருத்தர் தான் இருக்காங்க வர சொல்றேன் என அங்கே வந்த சகுந்தலா சொல்லி விட்டு திரும்ப..

பேசன்ட்டை பார்த்து முடிச்சதும் எனக்கு வெயிட் பண்ணு!!

சார் டூட்டி எனக்கு முடிஞ்சது! என சகுந்தலா கூற..

நான் உன்னை வெயிட் பண்ண சொன்னேன் என அவளை முறைத்து பார்த்தான் சர்வா.

சரிங்க சார்!! என அடுத்த பேசன்ட்டை மேற்பார்வை பார்த்து அனைத்தையும் முடித்து அனுப்பி வைத்தவள். உடை மாற்ற செவிலி பெண்களின் அறைக்கு சென்றாள்.

சர்வா காரில் ரெடியாக இருக்க.. சகுந்தலா அவளது பையை எடுத்து கொண்டு வெளியே வந்தாள்.

கார் நின்று கொண்டிருக்க ஹாரன் அடித்து உள்ளே ஏற சொன்னான்.

அங்கும் இங்கும் பார்த்து கொண்டே அருகில் வந்தவள். எதுக்கு சார் என கேட்க..

கேள்வி கேட்காமல் வந்து ஏறு டி!! என பற்களை கடித்தான்.

உரிமைபட்டவன் போல அழைக்கிறான். அது ஏன் என்று தான் சகுந்தலாவுக்கு இது வரை தெரியவில்லை. அவனிடம் கேள்வி கேட்கவும் அவளுக்கு தைரியம் இல்லை.

காரில் ஏறி கொண்டாள். நேராக ஜுவல்லரி ஷாப் பக்கம் திருப்பினான்.

எங்கே போறோம்? ச... சார்!! என்னோட ஹாஸ்டல் இந்த பக்கம் இருக்கு. என சகுந்தலா கூற..

சர்வேஷ் நேராக வண்டியை நிறுத்தி விட்டு இறங்கி வா என கதவை திறக்க..

எதுக்கு?

வான்னு சொன்னேன்! என அதட்டினான்.

ஒரு வித பதட்டத்துடன் வந்தவள் இங்கே எதுக்கு கூட்டிட்டு வந்திருக்கீங்க? என கேட்டாள். அவளின் தோல் மேல் கை போட்டு கொண்டான்.

சார்!! என்று திக்கென அழைத்தாள்.

வா என இழுத்து சென்றான். சகுந்தலா கலவரத்துடன் உள்ளே சென்றாள். ஜிமிக்கி வேணும் மேடம்க்கு என கூறினான். அனைத்து ஜிமிக்கி கலெக்ஷனையும் அடுக்கினார்கள். தங்க கொலுசு வேணும், அண்ட் கைக்கு வளையல், கழுத்துக்கு செயின் அண்ட் எதுலயும் ஸ்டோன் இருக்க கூடாது என சர்வா ஆலுமையுடன் கூற..

இதோ சார் என அனைத்து ஊழியர்களும் விழுந்து விழுந்து கவனித்தார்கள். இதயம் வேகமாக துடிக்க அவனை திகைப்புடன் பார்த்தாள் சகுந்தலா.

ம்ம் இது நல்லாருக்கும் டிரை பண்ணு! என சர்வேஷ் அவள் பக்கம் தள்ளி வைத்தான்.

அவள் அமைதியாக இருக்க அனைத்தையும் சர்வேஷ் தேர்வு செய்து ம்ம் இந்த ஸ்ட்ரட் போடு என திணித்தான்.

சார் நான் போட்டு விடுறென் என ஒரு பணிப்பெண் வர.. சர்வேஷ் தள்ளி நின்று கொண்டவன் கைகள் போனில் எதையோ நோண்டி கொண்டிருக்க.. பொம்மை போல அமர்ந்திருந்தவழுக்கு அனைத்தையும் அணிவித்தாள்.

இப்பொழுது சகுந்தலாவை பார்க்க Elite ஆக இருந்தாள். ஒரு மேல் தட்டு பெண் போல செல்வ சீமாட்டி போல தோற்றம் கொடுத்தது இந்த நகைகள். அவள் பணக்கார பெண் தானே!! அதில் என்ன சந்தேகம்? தேவநாதன் - லட்சுமி தம்பதியின் மகள்.

சார் வந்து பாருங்களேன். மேடம்க்கு இது பிரிட்டி அண்ட் எலைட் லுக் கொடுக்குது என பணிப்பெண் கூற.. மெல்ல நிமிர்ந்து பார்த்தவன். இந்தாங்க கார்ட் ஸ்வைப் பண்ணி கொண்டு வாங்க என கூறி விட்டு அவளருகில் வந்து அமர்ந்தான்.

எதுக்கு இதையெல்லாம் பண்ணிட்டு இருக்கீங்க? என அவனை பார்த்து கேட்டு விட்டாள்.

சர்வேஷ் அலட்டி கொள்ளாமல் நான் தொட்ட பொருளுக்கு மதிப்பு குறைவா இருக்க கூடாது. அதுக்கு தான் என முடித்தான்.

சகுந்தலாவின் கண்களில் நீர் கோர்த்து கொண்டது.

மொத்தம் எவ்ளோ பில் என பணிபெண்ணிடம் கேட்டாள் சகுந்தலா.

மேம் GST சேர்த்து மொத்தமா 5 லட்சம் வருது என புன்னகையுடன் கூறினாள் அவள்.

தலையில் அடித்து கொள்ளாத குறையாக கோபம் வந்தது அது மட்டுமில்லாமல் அழுகையும் பீறிட்டு கொண்டு வந்தது.

வா போலாம் சாப்பிட என இழுத்து சென்றான். நீங்க பண்றது உங்களுக்கு நல்லா இருக்கா? என சகுந்தலா கேட்க..

நல்லாருக்கு!! என ஒற்றை பதிலில் கூட்டி சென்றான்.

"நான் ஹோட்டல்ல சாப்பிட மாட்டேன். ஹாஸ்டல் போகனும் பிளீஸ் விடுங்க"

"அப்போ ஹோட்டல் போக வேணாம் வீட்டுக்கு போலாம்." என சர்வேஷ் வண்டியை வீட்டுக்கு விட்டான்.

"எங்கே கூட்டி போறீங்க? பிளீஸ் ஹாஸ்டல்ல விடுங்க"

"நீ ஹாஸ்டல வெக்கேட் பண்ணிட்டு வந்திடு!"

எங்கே? நான் தங்க? என சகுந்தலா கேட்க..

என் கூட தான்!! என அடுத்த குண்டை எடுத்து வீசினான்.

சகுந்தலா ஒன்றும் புரியாமல் அவனை பார்க்க, இப்படி புரியாத மாதிரி ஆக்ட் பண்ணாத கிளம்பி வா! நீ வரணும்!! வருவ என உத்தரவிட்டான்.

என்னால வர முடியாது உங்க பொருள் எனக்கு எதுவும் வேணாம் என வேகமாக அவள் கழட்ட முயற்சி செய்ய..

கழட்டி பாரு என சர்வேஷ் காரை சட்டன் ப்ரேக் போட்டு நிறுத்தி விட்டு பார்த்தான்.

முகத்தை மூடி கொண்டு அழுதாள் சகுந்தலா.

சர்வேஷ் எதையும் கண்டு கொள்ளாமல் வண்டியை நேராக வீட்டுக்கு விட்டான்.

வா என கையை பிடித்து அழைத்து சென்றான். அறை கதவை திறந்ததும் அடுத்த நொடி அவளின் உதட்டில் முத்தமிட்டான் ஆவேசமாக..

சகுந்தலா வேக மூச்சுடன் அப்படியே பின்னால் நகர முயற்சி செய்ய அறையை தாழ் போட்டு சுவற்றில் ஓட்ட வைத்தான். ரெண்டு மாசம் என்னை mad ஆக்கிட்ட இடியட்!! என முடியை அவளுக்கு வலிக்காமல் பற்றி முத்தமிட்டான். எனக்காக தான் இந்த தோடு! எனக்காக தான் இந்த செயின் என டாப்பின் உள்ளே கை விட்டு கழித்து செயினை பிடித்து இழுத்தான். எல்லாமே எனக்கு மட்டும் தான் நான் ரசிக்க தான் நீ!! நியாபகம் வச்சுக்க!! என சொல்லி கொண்டே தூக்கி சென்றான் படுக்கை அறைக்கு.

"பிளீஸ் வேணாம்!! இது தப்பு!!" என சகுந்தலா அழுதாள்.

அன்னிக்கு எனக்கு போதை கலக்கத்தில் மங்களா தான் நினைப்பு இருந்தது. ஆனால் ஒன்னு மட்டும் தெரியும். நீ என்ஜாய் பண்ண! அது நியாபகம் இருக்கு. இல்லன்னு மட்டும் சொல்லு உன்னை தொடல டி!! இப்போவே நான் போயிடுவேன். என சர்வேஷ் அவள் முகத்தை பார்க்க..

சகுந்தலா எதுவும் பேசாமல் மவுனமாக இருக்க.. மேல் சட்டையை கழட்டி வீசியவன் அவளின் அருகில் நெருங்கி "சொல்லு!!" என கழுத்தில் முத்தமிட்டான். உதட்டை கவ்வி கொண்டான்.

அன்னிக்கு எனக்கு நியாபகம் இல்ல! அது எதோ ஒரு ஆக்சிடன்ட்ல நடந்துடுச்சு! இது எல்லாத்தையும் விடுங்க! உங்களுக்கு என்கேஜ்மென்ட் ஆகிடுச்சு!! என சகுந்தலா பின்னால் தள்ளி சென்றாள்.

அதற்கு சர்வா சொன்ன பதிலை கேட்டு.

சகுந்தலா ...?

தொடரும்.
 

Jeni Shiva

Member
Joined
Oct 29, 2024
Messages
96
சைக்கோ டாக்டரா? இவன் எந்த ரூட்ல போறான்னே தெரியலையே... வெரி யூனிக் கேரக்டர்
 
Top