Pradhanya

Well-known member
Staff member
Joined
Oct 6, 2024
Messages
424
சாந்தினி எதையும் கண்டு கொள்ளாமல் போன் நோண்டி கொண்டிருந்தாள். பிரகாஷ் அங்கும் இங்கும் நடந்து கொண்டிருந்தார். "உன்னோட ட்ரெஸ் டிராலி ரெடியா பொண்ணு? நைட்டு சாப்பாடு? அங்கே போய் தங்க ஏற்பாடு இருக்கு தான சகுந்தலா? போன் சார்ஜர் எடுத்து வச்சிட்டியா பொண்ணு? தங்கம் உனக்கு காப்பர் வாட்டர் பாட்டில் வாங்கி வச்சிருக்கேன். தங்கம் இது சின்ன கெட்டில் தண்ணி சூடு பண்ணி குடிக்கிரதுக்கு" என பார்த்து பார்த்து கவனித்தார்.

சகுந்தலா புன்னகையுடன் வெளியே வந்தவள். எல்லாமே எடுத்து வச்சிட்டென் மாமா!! என்றாள்.

உன்னோட ATM கார்ட் எல்லாம் பத்திரமா இருக்கு தானே? பர்ஸ் என ப்ரகாஷ் கேட்க..

உமாவின் பார்வை பதட்டத்துடன் மாறியது. சகுந்தலா பெரிதாக அலட்டிக் கொள்ளாமல் மாமா நான் வந்து ATM கார்டை அத்தை கிfஎட்Dட்ட தான் கொடுத்து வச்சிருக்கேன்.

எதுக்கு அவள் கிட்ட கொடுத்த? என பிரகாஷின் பார்வை உமாவின் பக்கம் திரும்ப..

நான் போறது புது இடம் மாமா!! அது தேவையில்லாம எதுக்கு எடுத்திட்டு போகனும். எனக்கு பணம் தேவை பட்டால் உங்களுக்கு போன் பண்ணி கேட்கிறேன் நீங்க அனுப்ப மாட்டீங்களா என்ன? என சகுந்தலா கூற..

பிரகாஷ் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தார்.

அத்தை கிட்ட இருக்குறதுல உங்களுக்கு என்ன மாமா பிரச்னை? என்னை வெளி ஆள் மாதிரி பார்க்கிறீர்களா? என கேட்டாள்.

அப்படியெல்லாம் ஒன்னுமில்லை என பிரகாஷ் கூற..

அப்டின்னா பிரச்னை இல்ல மாமா!! அத்தை நான் போயிட்டு வரேன். என்றவள் சாந்தினி பக்கம் வந்து நின்றாள்.

பாப்பா நிக்கிது? என்ன அப்படி பார்க்கிற? என பிரகாஷ் கேட்க..

இவள் உலகத்தை விட்டே போற மாதிரி பேசி பில்ட் அப் பண்றீங்க? இங்கே இருக்க ஈரோட்டுக்கு தானே போறா!!

பல்லை உடைப்பேன் சாந்தினி? இது என்ன பேச்சு? என பிரகாஷ் கோபத்தில் கர்ஜித்தார்.

சாந்தினி கோபத்துடன் எனக்கு இப்போ தான் நிம்மதி! இவள் இந்த வீட்டை விட்டு போறா! என்னமோ உங்க பொண்ணு மாதிரி இவளை தலையில் தூக்கி கொண்டாடுவீங்க!! இப்போ பாருங்க விட்டு போறா!! ஆனால் நான் எங்கேயும் போக மாட்டேன். ஏன்னா நான் தான் உங்க பொண்ணு என்று விட்டு கிச்சன் பக்கம் சென்றாள்.

சகுந்தலா எதுவும் பேசாமல் அமைதியாக நின்றாள்.

தங்கம் அவள் எதோ சொல்லிட்டு போறா!! என ப்ரகாஷ் கூற..

விடுங்க மாமா!! நம்ம சாந்தினி தானே!! என புன்னகையுடன் கடந்து விட்டாள்.

வேலா வேலைக்கு சாப்பிடு தங்கம். எனக்கு போன் பண்ணு. அங்கே போனதும். என பிரகாஷ் பஸ் ஏற்றி விட்டார்.

இனிதாக விடை பெற்றாள் சகுந்தலா.

**

விடியர் காலையில் முழிப்பு தட்டியது சர்வேஷ்க்கு!! இதோ உணர்வுகள் தானாக நட்டு கொண்டது. தலையில் அடித்து கொண்டான். ச்ச எப்போவும் அவளோட நினைப்பு வந்தது தொலையிது. இது good sign இல்லையே!! என்ன பண்ணலாம். நம்ம மனசுல அனுஷா தான் இருக்கா!! அப்போ அவளை நினைக்கணும் என சொல்லி கொண்டவன். உடனே செயலில் ஈடுபட்டான்.

அனுஷாவின் போன் சிணுங்கி கொண்டிருக்க.. சர்வேஷ் காத்திருந்தான்.

ஹலோ சர்வா?? என்ன இந்த நேரத்தில் கால் பண்ணிருக்க? இப்போ தான் டூட்டி முடிச்சிட்டு வீட்டுக்கு வந்தேன். நீ எதுக்கு எனக்கு கால் பண்ண? என சோர்வுடன் கேட்டாள் அனுஷா.

அனு!! என மெல்ல அழைத்தவன். கிஸ் மி என கேட்டான் சர்வேஷ். இதை கேட்க கூட அவனுக்கு தயக்கமாக இருந்தது.

அனுவின் கண்கள் விரிய.. முத்தமிட்டாள். இச் இச் என்று. ஆர்வமாக ஏற்லி மார்னிங் எப்டி பேபி? இச் இச் என சத்தத்துடன் முத்தத்தை தொடர்ந்தாள்.

சட்டென போன் கட் ஆனது. அனுஷா போனை பார்த்து விட்டு என்னாச்சு இவனுக்கு? என மீண்டும் அழைத்தாள்.

ஹலோ சர்வா ஆர் யூ ஓகே? நான் நேரில் வரவா? என அனுஷாவின் குரல் கேட்க..

வேணாம்!! ஒரு கெட்ட கனவு கண்டேன். அதான் உன்னோட நினைப்பு வந்திடுச்சு. இட்ஸ் ஓகே பேபி நீ தூங்கு என சொல்லி போனை கட் செய்தான்.

அப்படியா ஓகே பேபி என அனுஷாவும் படுக்கையில் விழுந்தாள். நிச்சயம் ஆனதுக்கே இப்டி இருக்கான். அப்போ சீக்கிரம் அவனுக்கு இருக்க விசயம் சரியா போயிடும். என் சர்வா பேபி!! என கனவில் மிதந்தபடி உறக்கத்தை தழுவினாள்.

ஆனால் சர்வேஷ்? அவன் என்ன ஆனான்? உணர்வுகள் தூக்கு மாட்டி தலை தொங்கி கொண்டது. ஒன்றும் தோன்றவில்லை. என்னாச்சு? இதுக்கு அர்த்தம் என்ன? ரீசன் என்ன? லாஜிக்கா பார்க்க போனால் எனக்கு அனுஷா மேலே தான் இப்படி எண்ணம் வரணும். ஆனால் சம்மந்தமே இல்லாம எங்கிருந்து இவள் வந்தாள்? அவள் சகுந்தலா தேவி இல்ல என்னோட வாழ்க்கையில் சதி பண்ற சதி தேவி. என படுக்கையில் விழுந்தான்.

ஒன்றும் முடியவில்லை. வெடுக்கென உயிர் போவது போல வலது பக்கத்தில் வலி வேறு ஊரை கொன்றது. இப்பொழுது வெள்ள பெருக்கு (வெள்ளை பெருக்கு) ஆர்ப்பரித்து வெளியேற வேண்டும். ஆனால் ஆனால்!.. அங்கும் இங்கும் நடந்தபடி இருந்தவன். படுக்கையில் விழுந்து போனை எடுத்தான். அவளின் எண்களை தேடினான்.

யாருடைய நம்பர்? சதி தேவி தான்.. இதோ அழைப்பு சென்றது. அவள் எடுக்கவில்லை. இரண்டாம் முறை எடுத்தாள்.

ஹலோ சார் இந்த நேரத்தில் கால் பண்ணி இருக்கீங்க? நீங்க நினைக்கிற மாதிரி நான் எப்போவும் உங்க கண்ணு முன்னாடி வர மாட்டேன் என அந்த மெல்லிய குரல்..

மூச்சு வாங்கும் சத்தம் கேட்டது.

ஹலோ!! சார் நான் சகுந்தலா பேசுறேன் லைன்ல இருக்கீங்களா? என அவள் மீண்டும் கேட்க..

ம்ம் இருக்கேன் என மூச்சு வாங்க கண்களை மூடினான்.

இதோ அவன் ஹார்மோன் நதியில் வெள்ள பெருக்கு.

எதுக்கு கால் பண்ணீங்க? என சகுந்தலா கேட்க..

என்னையவே எதிர்த்து கேள்வி கேட்கிறயா? அந்த அளவுக்கு வந்திட்டியா நீ? என சர்வேஷ் குரல் சாந்தமாக ஒலிக்க..

சாரி சார் நான் போனை வைக்கிறேன்.

"ஹே நான் உன்னை வெக்க சொல்லல"

சொல்லுங்க சார்!! என பதட்டத்துடன் கேட்டாள்.

நீ ஒழுங்கா இருக்கியான்னு போன் பண்ணேன். சரி வைக்கிறேன் என போனை வைத்தான் சர்வா.

என்னாச்சு? இவர் எதுக்கு எனக்கு கால் பண்ணாரு? அதுவும் திடீர்னு? ஒரு வேளை என் மேலே சந்தேகம் வந்திருக்கும் என தனக்கு தானே நினைத்தவள். இனி இந்த நம்பரை பயன்படுத்த கூடாது. புது நம்பர் வாங்கிக்கலாம். இந்த நம்பரை அன் அவெய்லபிள் பண்ணனும் என்று ஒரு டீயை குடித்து விட்டு அவளது லேடிஸ் ஹாஸ்டல் புறப்பட்டாள் சகுந்தலா.

நாட்கள் மெல்ல நகர்ந்தது. சகுந்தலாவின் வேலை இப்பொழுது ஃபாலிகல் ஸ்டடி செய்யும் இடத்திற்கு மாற்ற பட்டிருந்தாள். பேசண்டை வர சொல்லுங்க என குரல் கேட்க..

சட்டென மாஸ்கை சரி செய்து கொண்டு டாக்டர் யாரென பார்த்தாள்.

அது அவளுக்கு தெரிந்த ஆதி தான். கண்களில் சிரிப்பு மின்ன..

ஆதி நீங்க எங்கே இங்கே? என சகுந்தலா கேட்க..

நான் தான் புதுசா ஜாயின் பண்ணிருக்கேன். ஸ்கேன் பண்ண என புருவத்தை தூக்கினான்.

அப்படியா? நீங்க ஶ்ரீ சர்வா ல தானே ஒர்க் பண்ணீங்க இங்கே எப்படி?

ஆதி புன்னகைத்தபடி பாரதி நர்சிங் ஹோம் இப்போ சர்வா நர்சிங் ஹோமாக மாற போகுது. என்னை தான் டாக்டர் சர்வேஸ் இங்கே அனுப்பினார். அதுக்கு தான் இன்டர்வியு எடுத்தோம் அதுல தான் நீ ஜாயின் பண்ணியா? என கேட்டார்.

இதை கேட்டதும் சகுந்தலாவின் முகம் மாறி போனது. ஹே சகு என்னாச்சு? என ஆதி கேட்க..

பேசன்ட் பார்க்கலாம் என வேலையில் கவனம் செலுத்தினாள் சகுந்தலா.

ஆனால் உண்மையில் சர்வேஷ்க்கு இதை பற்றி தெரியாது. இந்த பாரதி நர்சிங் ஹோம் உரிமையாளர் மற்றும் மருத்துவர் பாரதியும் ராஜியும் ஒரே கல்லூரியில் மருத்துவம் படித்தார்கள். பாரதி ராஜத்திடம் பேசி கை கணிசமான தொகைக்கு கை மாற்றுதல் செய்து விட்டார்.

எப்டி இருக்க பிரண்ட்ன்னு சொல்லிட்டு அதுக்கு அப்புறம் ஒரு தடவை கூட மேடம் என்னை மீட் பண்ணவே இல்ல என ஆதி கேட்க..

இனி டெய்லி மீட் பண்ணலாம் என சகுந்தலா புன்னகையுடன் கூறினாள்.

ஆதி அவளையே பார்க்க.. எதுக்கு அப்படி பார்க்கரீங்க? என சகுந்தலா கேட்க..

உன்னோட முகம் ஒரு குழந்தை மாதிரி இருக்கு. ஆனால் வசீகரமாக இருக்கு. கண் மை இல்ல மேக் அப் இல்ல, நீ எதை பத்தியும் திங்க் பண்ண மாட்டியா? காதுல மட்டும் குட்டி கம்மல். உன்னோட வயசுல இருக்கவங்க எல்லாம் வேற மாதிரி இருக்காங்க. நீ வேற மாதிரி இருக்க என்றான் ஆதி.

சகுந்தலா முடியை காதுக்கு ஒதுக்கிய படி எனக்கு டால்கம், பெர்ஃப்யூம், ஃபேஸ் கிரீம் எதுவும் சேராது. எனக்கு எந்த மேக் அப் products ம் சேராது. தங்கம் மட்டும் தான் சேரும். அதனால் தான் இப்படி இருக்கேன். ஸ்டிக்கர் பொட்டு ஒத்து வராது. அந்த பசை ஒத்துக்காது. இது வேங்கை பால்ல செஞ்ச பொட்டு சின்ன வயசுல குழந்தையில் இருந்து இது ஒன்னு ஒத்து போகும். இப்படியே இருந்து எனக்கு பழகி போச்சு வேற என்ன பண்ண சொல்றீங்க? என்றாள்.

ஹே சும்மா சொன்னேன் இப்போ கூட நீ அழகா அமுள் புரோடெக்ட் மாதிரி இருக்க!! என்றான் ஆதி.

ஆதிஇஇ! என அழுத்தி உச்சரித்தாள் சகுந்தலா.

சரி வாங்க மேடம் சாப்பிட போலாம். என அழைத்து சென்றான். சேனிடைசருடன் வலம் வந்தாள் சகுந்தலா முன்பை விட இப்பொழுது ஆதி மற்றும் சகுந்தலா இருவரும் சகஜமான நண்பர்களாகி போனார்கள்.

இது ஒரு பக்கம் சென்று கொண்டிருக்க இங்கே அனுஷா சர்வா முன்னால் இருந்தாள்.

என்னாச்சு? முக்கியமா பேசணும்னு சொன்ன? என சர்வா கேட்க..

சர்வா அது வந்து!!

"என்னன்னு சொல்லு அனு!!"

"pathology படிக்க அப்ளை பண்ணேன் கிடைச்சிடுச்சு." என்றாள் அணுஷா.

ஹே சூப்பர் அனு! என சர்வா உற்சாகமாக பார்த்தான்.

ஆனால் அப்ராட் போகனும்.

போயிட்டு வா!

ஒன் அன்ட் ஆஃப் இயர் ஆகும்.

"ம்ம் அதனால என்ன? உன்னை நான் தடுக்க மாட்டேன் பேபி!" என்றான் சர்வா.

ஆனால் மேரேஜ்!! என அனுஷா பார்க்க..

சர்வா கண்கள் சுருக்கிய படி மேரேஜ் பண்ணிட்டு படிக்க போறியா? என கேட்டான்.

இல்ல டென் டேஸ்ல ஜாயின் பண்ணனும். படிச்சிட்டு வந்துட்டு மேரேஜ் பண்ணிக்களாமா? உனக்கு ஓகே வா? என அனுஷா அவனது முகத்தை பார்த்தாள்.

சர்வா..?

தொடரும்.

அன்பு - பூங்கொடி கதை போதை சீதை முடிந்ததும் வரும்






































.
 

Mani

Member
Joined
Dec 25, 2024
Messages
76
Ok sis sikkerm podunga 👍👍👍👍
 
Top