Pradhanya

Well-known member
Staff member
Joined
Oct 6, 2024
Messages
424
படிச்சிட்டு வந்துட்டு எப்படி? அதுக்கு 2 யியர்ஸ் ஆகுமே? என சர்வா கேட்க..

அனுஷாவின் மண்டையில் வெளிச்சம் தோன்ற அப்டின்னா ரிஜிஸ்டர் மேரேஜ் பண்ணிக்கலாமா? என அவன் மேல் சாய்ந்தாள்.

நீ சொல்றத ரெண்டு வீட்லயும் கேட்க மாட்டாங்க அனு.

இப்போ என்ன தான் டா பண்ண சொல்ற?

உனக்கு லீவ் விடுவாங்க தானே!!

ம்ம் ஆனால் இப்போவே எப்படி விடுவாங்க.

"இப்போ இல்ல அனு!! நீ போயி இப்போ ஜாயின் பண்ணு. நல்லா படி!! 6 மங்த்ஸ் கழிச்சு ஒன் வீக் லீவ் வாங்கிட்டு வா!! நம்ம மேரேஜ் பண்ணிப்போம். இது தான் சரியா இருக்கும்" என்றான் சர்வா.

ஹான் சூப்பர் ஐடியா. அப்போ வீட்டில் கேட்டால் 6 மங்த்ஸ் கழிச்சு பண்ணிக்கலாம்ன்னு சொல்லவா?

ம்ம் இது சரியா இருக்கும் என்றான் சர்வா.

அனுஷா அவனை கட்டி கொண்டவள். மெல்ல உதட்டில் முத்தமிட்டாள்.

சர்வா சட்டென விலக..

சர்வா!! என்ன டா? தள்ளி போற?

இப்போ வேணாம் மேரேஜ் முடியட்டும். இப்போ நீ படிக்கணும். உன்னோட goal அ அச்சிவ் பண்ணனும். அப்புறம் இதெல்லாம் வச்சுக்கலாமே!! என சர்வா மென்மையுடன் கூற..

"கிஸ் கூட தர மாட்டியா? நீ? இட்ஸ் ஓகே நீ தர வேணாம் நான் தரேன் வாங்கிக்கோ!"

சர்வேஷ் ஒரு பெரு மூச்சை விட்டவன். அவளின் பக்கம் திரும்பி தயக்கத்துடன் முகத்தை கையில் ஏந்தி அவளின் உதட்டில் முத்தமிட்டான் ஆழ்ந்து.

அனுஷா பரவசத்தில் மிதந்தவள். மெல்ல அவன் மேல் வீழ்ந்தாள்.

சட்டென பிரித்து நிற்க வைத்தான்.

சர்வா பேபி!! பேசாமல் நான் இங்கேயே இருந்திடவா!! மேரேஜ் பண்ணிக்கலாம் படிக்க போகல!!

ஹே அனு அடி வாங்க போற நீ!! ஒழுங்கா படிச்சிட்டு வர!! என கட்டளையிடும் நோக்கில் கூறினான்.

சரி போறேன் என உதட்டை பிதுக்கினாள். வீட்டுக்கு சென்றதும் இரு வீட்டாரையும் அழைத்து அனைத்து விவரங்களையும் கூறினார்கள்.

சேகர் என்ன சொல்வது என யோசனையுடன் பார்க்க.. ராஜம் எதுவும் பேச வில்லை.

சர்வா இரண்டு குடும்ப உறுப்பினர்களையும் பார்த்து எனக்கே எந்த பிரச்னையும் இல்ல அப்படிங்கும் போது உங்களுக்கு என்ன பிரச்னை? அனுஷா போகட்டும் போயி படிக்ககட்டும். ஆறு மாசத்துல ஒரு முகூர்த்தம் ஃபிக்ஸ் பண்ணுங்க மேரேஜ் முடிச்சிட்டு மீதி படிப்பை கண்டினியூ பண்ணுவா என்றான்.

சேகர் ராஜியை பார்த்து, உங்களுக்கு ஓகேவா சம்மந்தி!! உங்க முடிவு தான் முக்கியம் என கேட்டார்..

ஆறு மாசத்துல கல்யாணம் பண்றது ஓகே தான். ஆனால் உடனே என் மருமகள் கன்சீவ் ஆகனும். இது தான் என்னோட டிமாண்ட் என ராஜி கூறினார்.

சர்வா அமைதியாக இருக்க.. கண்டிப்பா ஆன்டி அதுக்கு ஏத்த மாதிரி நான் மெயின்டெய்ன் பண்ணிக்கறேன். ரொம்ப தேங்க்ஸ் ஆன்டி என்றாள் அனுஷா.

கல்யாணத்துக்கு தேவையான எல்லா விசயத்தையும் நாங்க ரெடி பண்ணி வச்சிருப்போம் நீ எந்த கவலையும் படாமல் படிக்க போ மா என்றார் சேகர். அப்படியே ராஜியிடம் நன்றியும் தெரிவித்தார்.

ஆதி, சர்வா, சேகர், லலிதா, அனுஷாவின் தங்கை ஆருதி, ராஜி, ஶ்ரீ மதி, என அனைவரும் அவளை வழி அனுப்பி வைத்தார்கள்.

அனுஷாவை அனுப்பி வைத்த கையுடன் ஹாஸ்பிடல் சென்றான் சர்வா. அதாவது அவனது விஷயத்துக்காக..

என்னாச்சு சர்வேஷ் என்னை தேடி வந்திருக்கீங்க? என டாக்டர் தாமோதரன் கேட்க..

உங்க கிட்ட ட்ரீட்மென்ட் எடுக்க தான் வந்தேன். என்றான் சர்வா.

என்னாச்சு எதுவும் பிரச்சனையா? என தாமோதரன் கேட்க.

அது வந்து எனக்கு impotent என்றான் சர்வா.

தாமோதரன் தீவிரமாக முகத்தை வைத்து கொண்டு என்ன நடந்தது? எல்லாத்தையும் ஆர்டரா சொல்லுங்க. என கேட்டார்.

சர்வா தயக்கத்துடன் பார்க்க.. be frank மிஸ்டர் சர்வேஷ் நீங்களும் டாக்டர் சோ ஓபனா பேசுங்க என்றார்.

எனக்கும் அனுஷாவுக்கும் இன்னும் சிக்ஸ் மந்த்ல மேரேஜ் என சர்வேஷ் கூற..

"ஓகே"

பாஸ்ட் டூ ஒன் மங்த்க்கு முன்னாடி நான் ஒரு stranger பெர்சன் கூட bed share பண்ணேன்.

ஓகே அப்போ சீமன் வெளியே வந்ததா?

ம்ம் என்றான் ஒற்றை பதிலில்.

நெக்ஸ்ட் என்னாச்சு?

இப்போ என்னோட பிரச்னை என்னன்னா எனக்கு அனுஷா மேலே அந்த ஃபீல் தோன மாட்டிக்கிது. என்னோட மைண்ட் பிளாங்க்கா இருக்கு டாக்டர். என்றான் சர்வா.

தாமோதரன் சிரித்துவிட்டு இதுக்கு பேர் impotent கிடையாது. நீங்க அந்த term அ தப்பா புரிஞ்சிட்டு இருக்கீங்க.

என்ன சொல்றீங்க? அப்படி இருக்க வாய்ப்பே இல்ல. இது வரை நான் எனக்கு வெளியே வந்ததே இல்ல என சர்வா டாக்டரை பார்த்தான்.

"ஆனால் இப்போ வருது தானே!"

சர்வா குழப்பத்துடன் பார்த்தான்.

தாமோதரன் தீவிர முகத்துடன் உங்களுக்கு impotent இல்ல. Impotent means எல்லாமே தோணும் ஆனால் செய்ய முடியாது. அது குறை. ஆனால் உங்களுக்கு இருக்கறது sexuality things அதாவது உங்களுக்கு இன்டரெஸ்ட் difference ஆகுது.

சீமன் டெஸ்ட் கொடுத்திட்டு போங்க.

இல்ல என்னால முடியல என சர்வா கூற..

தாமோதரன் சிரித்து விட்டு ஒரு சாதாரண ஆளுக்கு mood develop பண்ற விசயத்தை பார்த்தால் உங்களுக்கு எதுவும் தோணாது. ஆனால் நீங்க ஸ்பென்ட் பண்ண அந்த stranger அ பத்தி நினைச்சிட்டு டெஸ்ட் பண்ணிட்டு வாங்க என ஒரு பாட்டிலை நீட்டினார்.

சர்வா பெரு மூச்சுடன் பார்க்க..

ம்ம் போங்க மிஸ்டர் சர்வா! என அனுப்பி வைத்தார்.

இதோ இரண்டு மணி நேரத்தில் ரிசல்ட் வந்தது.

நீங்க impotent இல்ல. இதோ உங்க ரிப்போர்ட் குழந்தை பெத்துக்க உண்டான எல்லா தகுதியும் இருக்கு. உங்களோட உயிர் குவாலிட்டியா இருக்கு. கவுண்ட் குட், வேகம் சூப்பர் அதோட quantity, quality எல்லாமே ஓகே. என்றார் தாமோதரன்.

இப்போ எனக்கு என்ன தான் பிரச்னை? என சர்வா கேட்க..

"உங்க மனசுல அனுஷா இல்ல"

"என்ன சொல்றீங்க? வாய்ப்பே இல்ல"

இல்ல மிஸ்டர் சர்வா நான் அப்படி சொல்லல! நீங்க அனுஷாவை விரும்பி லவ் பண்ணி தான் கல்யாணம் செஞ்சுக்க போறீங்க. அதுல எந்த மாற்றமும் இல்ல. ஆனால் Intimateன்னு எழுதி வச்ச இடத்தில உங்க மனசு அனுஷாவை பார்க்க மாட்டிக்கிது. சோ அதை ட்யூன் பண்ணுங்க. உங்களோட மனசு தான் பிரச்னை. உங்களோட மைன்ட்ல அதாவது எண்ணங்களில் மாற்றம் கொண்டு வாங்க. கண்டிப்பா உங்க கல்யாண வாழ்க்கை சிறக்கும் என்று சொல்லி அனுப்பி வைத்தார் தாமோதரன்.

சர்வா அதே மனநிலையில் வீடு வந்து சேர்ந்தான்.

சர்வா!!

சர்வா!!

சர்வா!! என காட்டு கத்தலாக கத்தினார் ராஜி.

அம்மா!! என சர்வா திரும்பி பார்க்க.. பாரதி நர்சிங் ஹோம்ம ஶ்ரீ சர்வா நர்சிங் ஹோமாக மாத்தினதும் அங்கே நம்ம ஹாஸ்பிடலில் பிறக்கும் முதல் பத்து குழந்தைகளுக்கு ஒரு கிராம் கோல்ட் காயின் கொடுக்கணும்னு சொல்லி இருந்தேன்ல!! அது என்னாச்சு!! நீ எப்போ ஈரோடு கிளம்புற? என கேட்டார் ராஜி.

ம்ம் போறேன் மா!! இன்னும் ரெண்டு நாள்ல கொஞ்சம் இங்கே வேலை எல்லாம் முடிச்சிட்டு தான் அங்கே போகனும் என கூறினான் சர்வா.

சரி வேலைய சீக்கிரமா முடிக்க சொல்லு. என உத்தரவிட்டு அவரது வேலைகளை கவனித்தார்.

இரண்டு நாள் என சொல்லி விட்டு ஒரு வாரம் இங்கேயே இருந்தான் சர்வா. தன் மருத்துவ மனைக்கி எதிரில் இருக்கும் ஹர்ஷவர்த்தன் ஹாஸ்பிடலை பார்த்ததும் சகுந்தலாவின் நினைவு வர.. அன்று ஹோட்டல் ரூமில் அவள் மறந்து விட்டு சென்ற ID கார்டை எடுத்தவன் அவளின் எண்ணுக்கு அழைத்தான். போன் கால்கள் கனெக்ட் ஆக வில்லை..

ஐடியில் இருக்கும் சின்ன முகத்தை விரல் கொண்டு வருடியவன் உடனே வேறு எண்ணில் இருந்து ஹாஸ்பிடல் எண்ணுக்கு அழைத்தான்.

ஹலோ ஹர்ஷவர்த்தன் ஹாஸ்பிடல்ஸ் உங்களுக்கு என்ன தகவல் வேணும் என மறு முனையில் இருந்து குரல் கேட்க..

சகுந்தலா தேவியோட ID மிஸ் பண்ணிட்டாங்க. அவங்க நம்பர் ரீச் ஆகல இதை அவங்க கிட்ட கொடுக்கணும்.

"சாரி சார் அது தேவையில்லை இனி"

What happen மேம்?

அவங்க இங்கிருந்து ரிலீவ்
ஆகி ஒன் மந்துக்கு மேலே ஆக போகுது என்றார் மறுமுனையில் இருந்து.

சர்வா..?

இதோ சர்வா - சகுந்தலா தேவி சந்திப்பு

தொடரும்..
 

Mani

Member
Joined
Dec 25, 2024
Messages
76
Superrrrrrrrrr sikkerm next episode podunga sis❤️❤️❤️❤️❤️❤️❤️
 

samundeswari

Member
Joined
Oct 22, 2024
Messages
66
Superb pls daily two ud podunga writer story vera level padicha ,padichikite erukanum thonuthu superb
 
Top