Pradhanya

Well-known member
Staff member
Joined
Oct 6, 2024
Messages
425
என்ன சொல்றீங்க? என சர்வாவின் முகம் மாறியது.

ம்ம் சார்!! அந்த ID தேவையில்லை!! என்றார்கள் ஹாஸ்பிடலில் இருந்து.

ஓகே தேங்க்ஸ் என சொல்லிய படி போனை வைத்தவனுக்கு மனமெல்லாம் ரணமாக இருந்தது. அதை விட ஏமாற்றம் அதிகம். இருக்காதா பின்ன? அந்த ஒரு நாள் இரவில் கிட்ட தட்ட வசீகர மருந்தின் வீரியத்தில் மூன்று முறைக்கு மேல் அவளுடன் கூடலில் திளைத்து இருக்கிறான். சொல்ல போனால் மூளையும் இந்த விவஸ்தை கெட்ட உடலும் அவளின் ஸ்பரிசத்துக்கு ஏங்கி தவிக்கிறது.

அவள் வேலையை விட்டு போய்ட்டாளா? எவ்வளவு திமிர்? என் கிட்ட சொல்லாமல் போயிருக்கா? அதை விட போன் நம்பர் மாத்திட்டு போயிருக்கா? என உள்ளுக்குள் வேதனை பரவியது.

அதே மனநிலையுடன் ஹாஸ்பிடலில் நுழைந்தான். அனைவரிடமும் எரிந்து விழுந்து ஆயிரம் கேள்விகள் கேட்டு அங்கிருப்பவர்களை குடைந்து எடுத்தான். "ஹே என்ன பா டாக்டர் இவ்வளோ கோபத்தில் இருக்காரு? என்னாச்சு அவருக்கு ஏற்கனவே அடுப்பில் இருக்கும் தீ கங்கு போல தான் நம்ம கிட்ட நடந்துப்பாரு. ஆனால் இது அதை விட அதிகமா இருக்குது. அய்யோ முடியல" என அங்கிருக்கும் செவிலி பெண் இன்னொருத்தியிடம் கூறி கொண்டிருக்க..

அதுவா!! அனுஷா மேம் கூட நிச்சயம் ஆனதும் மேடம் இவரை விட்டுட்டு படிக்க போயிட்டாங்கள்ள அந்த காண்டுல இப்படி இருக்காரோ!! அதுவா தான் இருக்கும் என அங்கிருக்கும் செவிலிகள் பேசி கொண்டார்கள்.

திரும்ப திரும்ப ராஜியிடமிருந்து போன் வந்தது. கடுப்புடன் போனை எடுத்தான். ம்ம் நான் ஹாஸ்பிடல்ல இருக்கேன் மா!! உங்களுக்கு என்ன வேணும்? என கோபமாக பேசினான்.

"சர்வா நான் உன்னை ஈரோடு கிளம்ப சொன்னேனே என்னாச்சு? அங்கே நேம் போர்ட் வைக்க போறாங்க. கணபதி ஹோமம்க்கு சொல்லி இருக்கேன். நீ பண்ற வேலை எல்லாத்தையும் நான் போன்ல லீட் பண்ணி செய்ய சொல்லிட்டு இருக்கேன்" என பொரிந்து தள்ளினார்.

மறுமுனையில் இருந்து பதில் வரவே இல்லை.

சர்வாஆஆஆ!! என ராஜி அழைக்க..

இப்போவே கிளம்புறேன். என சொல்லி போனை வைக்க போக..

உனக்கு அங்கே போக விருப்பம் இல்லன்னு எனக்கு தெரிஞ்சு போச்சு. அட்லீஸ்ட் ரெண்டு நாள் மட்டும் போய் தங்கி எல்லாத்தையும் முடிச்சிட்டு வா!! இனி ஆதி பார்த்துக்கட்டும். அப்புறம் நான் அடிக்கடி போய் பார்த்துக்கிறேன் என்றார் ராஜி.

ரெண்டு நாள் தான் அதுக்கும் மேலே என்னால இருக்க முடியாது. என சர்வாவின் குரல் ஒலிக்க..

பெருந்துறையில் ஸ்டார் வியு அப்பார்ட்மென்ட்ல நம்ம பிளாட்ல ஸ்டே பண்ணிக்கோ எல்லாமே ஆல்ரெடி தயாரா தான் இருக்கு என்று போனை வைத்தார்.

சர்வேஷ்வரன் நேராக ஈரோட்டுக்கு காரை விட்டான். அவன் சென்றதும் ராஜி ஹாஸ்பிடல் வந்து சேர்ந்தார். கோவை கிளைக்கு.

நேமிங் போர்ட் வைப்பதை அனைவரும் பார்த்து கொண்டிருந்தார்கள். சகுதந்தலாவுக்கு உள்ளுக்குள் பயப்பந்து உருண்டது. அய்யோ அவர் நேரில் வந்தா கண்டிப்பா நம்மள திட்டுவார். என்ன பண்ணுவேன் நான்? இதுக்கு ஒரு வழி தான் இருக்கு. வேலையை ரிசைன் பண்ணனும். அதுக்கு உண்டான வேலையை பார்ப்போம் என நினைத்து கொண்டாள்.

எப்படியோ ஒரு ரிசைன் லெட்டரை எழுதி விட்டாள். அடுத்தபடியாக இங்கிருந்து வேறு எங்கு வேலைக்கு செல்வது என யோசனை. அதை விட ஆதி வேறு ஆயிரம் கேள்வி கேட்டு குடைந்து எடுப்பார். அவருக்கு பதில் சொல்ல வேண்டும் என நினைத்து கொண்டே நாளைய பொழுதை நினைத்து படுக்கையில் விழுந்தாள்.

**

சார்!! என மெல்லிய குரல் கேட்க.. கால் மி சர்வா என அவளை இழுத்து களைக்க ஆரம்பித்தது அவனது கைகள்.. சர்வாஅஅ! என கண்களை மூடிய படி அவள் கூற.. ம்ம் என அவளின் செவ்வதர உதட்டை கவ்வி கடித்தான். மோக முத்தங்கள் நின்ற பாடில்லை..

காலிங் பெல் திரும்ப திரும்ப அழைக்க.. சட்டென முழிப்பு தட்டியது.

அதிகாலை ஏழு மணி!! இதோ ஓயாமல் காலிங் பெல் அடிக்க.

தனது நிலையை பார்த்தான் சர்வா. சகுந்தலா தேவி!! என்னை இந்த நிலைமைக்கு கொண்டு வந்துட்டல்ல என எழுந்து பாத் ரூம் சென்றான். பின்னர் கனவிலே இந்த அளவுக்கு தோன்றுகிறது. நேரில் பார்த்தால் என்ன ஆகும். தலையை கோதியபடி வேகமாக வெளியே வந்து கதவை திறந்தான்.

என்ன டா இன்னும் கிளம்பலயா? கதவை திறக்க இத்தனை நேரமா? என்ன பண்ணிட்டு இருக்க நீ? என ஆதி கேட்டு கொண்டிருக்க..

அஞ்சு நிமிசம் வெயிட் பண்ணு வரேன். என சர்வா உள்ளே செல்ல..

ஹே proper ஆ குளிச்சிட்டு வா! அண்ட் அம்மா உனக்கு இந்த ட்ரெஸ் கொடுக்க சொன்னாங்க. என நீட்டினான் ஆதி.

அடுத்த அரை மணி நேரத்தில் ஒயிட் சர்ட் ப்ளூ ஜீனில் அழகாக தயாரானவன் ஈரமான கேசத்துடன் வேகமாக புறப்பட்டான்.

இத்தனை அவசரம் உனக்கு எதுக்கு டா? ஏனோ தானோன்னு வர!! என ஆதி திட்டி கொண்டே வர..

சட் அப் ஆதி!! டென்ஷன் பண்ணாத நீயும். என சர்வா எரிந்து விழுந்தான்.

ம்ம் அம்மா எல்லாத்தையும் சொன்னாங்க இப்போ என்ன? உனக்கு இங்கிருந்து போகனும் அவ்ளோ தான!! இன்னிக்கி ஈவ்னிங்கே கிளம்பு என ஆதி கூற..

சர்வேஷ் எதுவும் பேசாமல் சாலையில் கவனம் செலுத்தினான். அனைவரும் அங்கே ஹாஸ்பிடலில் காத்திருந்தார்கள். விநாயகர் விக்கிரகத்தின் முன் குருக்கள் பூஜைக்காக நின்று கொண்டிருக்க.. சர்வா வந்ததும் அனைத்தும் ஆரம்பமானது.

வலது கால் எடுத்து வச்சு உள்ளே போங்க!! என குருக்கள் சொல்ல.. சர்வா உள்ள சென்றான். தம்பி உங்க கையால் இந்த நீர் பூசணி உள்ளே காசு போடுங்க இதை இங்கே கட்டணும் என குருக்கள் நிற்க சர்வா அவர் சொன்னதை போலவே செய்தான்.

எல்லாமே சிறப்பா முடிஞ்சது. இனி இந்த ஹாஸ்பிடல் இந்த ஈரோட்டில் நல்ல மகப்பேறு மருத்துவ மனையா இருக்கும் என வாழ்த்தி விட்டு புறப்பட்டார்.

அங்கிருக்கும் அனைத்து செவிலி பெண்கள் மற்றும் மகப்பேறு மருத்துவர்கள், lab டெக்னீசியன்ஸ், scan டாக்டர்கள், மருந்தக பணியாளர்கள், இதர துப்புரவு பணியாளர்கள் என அனைவரும் அவனுக்கு வணக்கமும் வாழ்த்தும் தெரிவித்து விட்டு வந்தார்கள். ஆனால் ஒருத்தி மட்டும் செல்லாமல் அங்கேயே நின்றாள்.

இன்னும் எவ்ளோ நேரம் இங்கேயே நிப்ப சகுந்தலா!! போ போய் அவர்கிட்ட கொடுத்திட்டு கிளம்பு என உள்ளுக்குள் குரல் கேட்க.. ஒரு பெரு மூச்சை விட்ட சகுந்தலா மெல்ல அவனரையின் பக்கம் வந்தாள். கதவை தட்டிய படி சார் என அழைத்தாள்.

ப்ச் என்ன வேணும்!! டிஸ்டர்ப் பண்ணாம போங்க!! என கோபத்தில் விட்டத்தை பார்த்து கொண்டே கூறினான்.

சார் அது முக்கியமா பேசணும் என அவனுக்கு எதிரில் வந்து நின்றாள். என்ன வேலை போற காரியம் என கோபமாக எதிரில் இருப்பவளை பார்த்தான் சர்வா.

சார் நான் தான் சகுந்தலா தேவி!! என அவள் கூற..

உள்ளுக்குள் அனைத்து உணர்வும் கரை புரண்டு ஓடியது. டோர் லாக் பண்ணு!! என சர்வா கம்பீர குரலில் கூற..

சார் நான் வேணும்னு இங்கே வந்து ஜாயின் பண்ணல!! உங்க ஹாஸ்பிடல் ஆக போகுதுன்னு எனக்கு தெரியாது. உங்க கண்ணில் பட கூடாதுன்னு தான் நான் கோயம்புத்தூர்ல இருந்து இங்கே ஈரோடு வந்தேன் என அவள் கண்களில் நீர் கோர்க்க கூற..

Do what I say? என பற்களை கடித்து கொண்டு கூறினான் சர்வா. அவள் பயத்துடன் எட்சிலை கூட்டி விழுங்கிய படி அவனை பார்க்க..

ம்ம் என உருமினான்.

மெல்ல அவன் சொன்னதை செய்தாள். உடனே லேண்ட் லைன் போனை நேர்த்தியாக காதில் வைத்தவன். நான் கூப்பிடுற வரை என் ரூம் பக்கம் யாரையும் அனுப்பாதீங்க என சொல்லி விட்டு போனை வைத்தான் சர்வா.

சகுந்தலாவின் கண்களில் நீர் வழிய..

எதுக்கு போன் நம்பர் change பண்ண? யாரை கேட்டு அங்கிருந்து இங்கே வந்த? கைல என்ன? என அவளை அணு அணுவாக மேய்ந்து கொண்டே கேட்டான் கேள்விகளை..

அத்!! அது வந்து என அவள் தயங்க..

கைல என்ன என எழுந்தான்.

இது வ.. இது வந்து ரிஸைன் லெட்டர் என சகுந்தலா குனிந்து கொண்டே கூற..

அதை வாங்கிய அவளின் கண் முன் துண்டு துண்டாக கிழித்து டஸ்ட் பின்னில் போட்டான்.

சகுந்தலா அதிர்ந்து அவனை பார்த்தாள்.

சர்வேஷ்..?

தொடரும்..
 
Top