Pradhanya

Well-known member
Staff member
Joined
Oct 6, 2024
Messages
426
"எதுக்கு ரிசைன் லெட்டர்?" என சர்வா அவளை பார்க்க..

"அது வந்து!!" என உதடுகள் துடித்தது.

"ம்ம் பதில் சொல்லு? எதுக்கு? என சுவற்றில் ஒரு கையை வைத்தபடி கேட்டான் அது சகுந்தலாவுக்கு மிகவும் நெருக்கத்தில் இருப்பதை போல இருந்தது.

"சொல்லு!" என அவளின் மோவாயை நிமர்த்தினான்.

"ந.. நான் உங்க பக்கத்தில் இருந்தால் உங்களுக்கு தொந்தரவா இருக்கும். நம்ம ரெண்டு பேருக்கும் நடுவில்.. "

ரெண்டு பேருக்கும் நடுவில் என்ன இருக்கு? என சர்வா அழுத்தமாக கேட்க..

சகுந்தலாவின் இமை குடைகள் கீழே பார்க்க, "அது வந்து உங்களுக்கு தொந்தரவா இருக்க கூடாதுன்னு நினைச்சேன். அதான் ரிஸைன் பண்ண வந்தேன்"

"அது நீ நடந்துக்கிறது பொறுத்து! ஆனால் அதுக்காக வேலைய விட்டு போகனும்னு நான் உன்னை சொல்லவே இல்ல. உன்னை யாரு anhe கோயம்புத்தூரில் வேலைய விட்டு வர சொன்னது? அப்பன் குதிருக்குள்ள இல்லன்னு நீயே காட்டி கொடுத்திடுவ போல!!" என ஸர்வா கேட்க..

"சத்தியமா என்னால உங்க கல்யாண வாழ்க்கையில் எந்த பிரச்னையும் வராதுன்னு உறுதி அளிக்கிறேன்" என படபடத்த விழிகளில் பார்த்தாள் சகுந்தலா.

கல்யாணமா? என சர்வா கேட்க..

ம்ம் நியூஸ் பேப்பர்ல பார்த்தேன் டாக்டர் அனுஷாவுக்கும் உங்களுக்கும் மேரேஜ்ன்னு அதான் உங்களுக்கு தொந்தரவா இருக்க கூடாதுன்னு இங்கே வந்தேன். இது உங்க ஹாஸ்பிடல்ன்னு எனக்கு தெரியாது சார் என்றாள் சகுந்தலா.

சர்வா எதுவும் பேசாமல் அமைதியாக அவளை பார்க்க.. இதயம் படபடக்க தலை குனிந்தபடி நின்றிருந்தாள்.

சகுந்தலாவின் தனித்துவ வாசனை அவன் நாசியை தாக்க.. அமைதியாக அவனது இருக்கையில் வந்து அமர்ந்து கொண்டவன். நீ வேலைய விட்டு போக அவசியம் இல்ல. இங்கேயே உன்னோட ஒர்க்க கண்டினியூ பண்ணலாம்.

தேங்க்ஸ் சார் ஆனால் என சகுந்தலா சொல்ல வர..

"நான் சொல்றத தான் நீ கேட்கணும். உன்னோட இஷ்டத்துக்கு பேச கூடாது புரியுதா?"

ஓகே சார் என அவள் எதுவும் பேசாமல் அமைதியாக இருக்க..

போய் எனக்கு ஒரு எலக்ட்ரோலைட் வாங்கிட்டு வா!! என கூறினான் சர்வா.

ஓகே சார் என சகுந்தலா வெளியே வந்தவள் அவன் கேட்டதை போல எலக்ட்ரோலைட் ஜூசை வாங்கி வந்து கொடுத்தாள்.

எங்கே தங்கி இருக்க? என சர்வா கேட்க..

"ஹாஸ்டல்ல சார்"

ம்ம் சரி!! நான் நாளையில் இருந்து பேபிக்கு OPD பார்க்க போறேன். என் கூட நீ தான் இருக்கணும்.

சார்!! என சகுந்தலா அதிர்ச்சியுடன் கேட்க..

What the hell? எதுக்கு இப்படி ரியாக்ட் பண்ற? எனக்கு ஹெல்பிங் நர்ஸ் வேணும்ல.. என சர்வா அவளை உருத்து பார்க்க..

அது நான் வந்து ஃபாலிக்கில் ஸ்டடிக்கு வர பேசன்ட்ச பார்த்திட்டு ஆதி ஸார் கூட அட்டன்ட்ல இருந்தேன். என்றான் சகுந்தலா.

சர்வா அவளை முறைத்து பார்க்க..

சார்!! என பதட்டத்துடன் அழைத்தாள்.

மேடம் உங்க இஷ்டத்துக்கு தான் இங்கே வேலை செய்வீங்களா என்ன? ஏன்னா இது மேடம் ஹாஸ்பிடல்! எனக்கு எப்படி ஒபே பண்ணுவீங்க? என சர்வா கேட்க...

அவளின் கண்ணில் நீர் கோர்த்து கொண்டது. சாரி சார் ந..நான் ஒர்க் பண்ற விசயத்தை தான் சொன்னேன்.

உனக்கு ஹெட் நர்ஸ் எக்ஸ்ப்ளைன் பண்ணுவாங்க நீ இப்போ போகலாம் என்றான் சர்வா.

ஓகே சார் என தலையை ஆட்டிய படி வெளியே வந்தவள் கண்களில் நீர் தாரை தாரையாக கொட்ட கர்சீப் கொண்டு கண்களை துடைத்தவள் வேகமாக வாஷ் ரூம் நோக்கி ஓடினாள்.

அவள் சென்றதும் இறுக்கமான மனநிலை தளர்ந்து சுழல் நாற்காலியில் சாய்ந்து கொண்டவனுக்கு உள்ளுக்குள் மின்னல் வெட்டியது. 'என்னோட ஹாஸ்பிடல்ல என் பக்கத்தில் இருக்கா சதிகாரி!! என தலையை கோதியவனுக்கு திடீரென பொறி தட்டியது போல நினவு. டைம் காட் அன்னிக்கு நான் கான்பரன்ஸ் அட்டன் பண்ணேன். அன்னிக்கு நான் போகாமல் ஆதி போயிருந்தால் என்ன நடந்திருக்கும்? என்ன அந்த ரூம்ல ஆதியும் சதியும்.. ஆதி அவளை மேட்டர்.. இது ஹைப்போதெட்டிகள் அதான் நடக்களையே நடந்திருக்காது. சகுந்தலா தேவி எப்படி அவன் கூட? ச்சீ!... நினைக்கவே கேவலமா இருக்கு' என நினைத்து கொண்டான் சர்வேஷ்.

அன்று முழுவதும் சகுந்தலா அவனுடன் இருப்பது போல பார்த்து கொண்டான். அடுத்த நாள் கொண்டாட்டத்துடன் OPD ஆரம்பமானது. நோயாளிகள் சீராக வர தொடங்கினார்கள். டாக்டர் ரெண்டு நாளாக ஃபீவர் எதுவுமே சாப்பிட மாட்டின்றான். ஒரே அழுகை என ஒரு பெற்றோர் கூறி கொண்டிருக்க..

சகுந்தலா என சர்வா கம்பீரமாக அழைக்க.. டாக்டர் ரெண்டு நாளாக விட்டு விட்டு ஃபீவர் இருக்கு போல, இப்போ 100 டிகிரி இருக்கு. குழந்தை வெயிட் சரியா இருக்கான், பல்ஸ் செக் பண்ணிட்டேன். இந்த காய்ச்சல் டானிக் கொடுத்திருக்காங்க என அனைத்தையும் கூறினாள்.

சர்வா விரைப்புடன் குழந்தையை பார்க்க.. கண்ணா இங்கே பாருங்க அழ கூடாது இந்தாங்க என கையில் ஒரு பொம்மையை கொடுத்து சமாதானம் செய்ய பார்த்தாள்.

குழந்தைய திருப்புங்க? மோஷன் எப்டி போறான்? என வயிற்றை அழுத்தி பார்த்தான் சர்வா. ஸ்டதெஸ்கோப் வைத்து அனைத்தையும் செக் செய்தான்.

மோசன் ரெண்டு நாளாக போகல டாக்டர் என பெற்றோர் கூற..

வாமிட் இருக்கா என கேட்டான்.

"ஆமா டாக்டர்"

சகுந்தலா ஒரு சப்போசிட்டரி வச்சு விடு, என்றவன் பெற்றோரை பார்த்து இட்லி கொடுங்க. ப்ரோபயோட்டிக் தண்ணில மிக்ஸ் பண்ணி ஊத்தி விடுங்க. நீர் ஆகாரம் கொஞ்சம் நிறைய கொடுங்க. அண்ட் மோஷன் வந்ததும் ஃபீவர் குறைய ஆரம்பிச்சிடு்ம் அப்படி காய்ச்சல் இருந்தால் கூட்டிட்டு வாங்க என சர்வா அனுப்பி வைத்தான்.

அச்சோ இல்ல டா இல்ல அவ்ளோ தான்!! என சகுந்தலா குழந்தையை கொஞ்சிய படி சப்பொசிட்டரி வைத்து விட்டாள்.

இது ஆன்டி பயோடிக் 12 மணி நேரத்துக்கு ஒரு தடவை ஊத்தி விடுங்க. இது காய்ச்சல் டானிக். இப்போ கொடுக்க தேவையில்லா! என சொல்லி அனுப்பி வைத்தாள்.

நெக்ஸ்ட் என பெல் அடித்தான் சர்வா. இப்படியே காலை 10 முதல் 12 வரை நடுவில் ரவுண்ட்ஸ் உணவு இடைவேளை. மாலை ஆறு மணிக்கு ஆரம்பித்து இரவு 10 வரை என ஒவ்வொரு நாளும் வேகமாக அதன் போக்கில் ஓட ஆரம்பித்தது.

சர்வா தனக்கு அருகில் அவளை வைத்து கொண்டான். பகல் முழுவதும் அவள் அவனருகில் இருக்க வேண்டும். அன்னை ராஜியிடமிருந்து அழைப்பு வந்தது.

"ஹான் சொல்லுங்க மா!"

எப்போ கிளம்புற? என ராஜி கேட்க..

எதுக்கு கிளம்ப வேணும்? எங்கே கிகம்பனும்?

என்ன டா தெரியாத மாதிரி கேட்கிற? என்னால ஈரோடு போகவே முடியாதுன்னு குதிச்சிட்டு இருந்த? இப்போ எங்கே அப்டின்னு கேட்கிற? என ராஜி கேட்டார்.

இங்கே ஒன்னும் பிரச்னை இல்ல. வேலை நிறைய இருக்கு. அதான் அப்படி கேட்டேன். என்றான் சர்வா.

சரி எப்போ வர?

இப்போதைக்கு வர ஐடியா இல்ல!! நீங்க பாருங்க மா எனக்கு டையேடா இருக்கு. என போனை வைத்தான் சர்வா.

இந்த பையன் எப்போ என்ன நினைப்பான்னு கொஞ்சம் கூட புரிஞ்சுக்கவே முடியல என்ற படி படுக்கையறை சென்றார் ராஜி.

அடுத்த நாள் ஹாஸ்பிடல் மிகவும் உற்சாகமாக இருந்தது. பாரதி நர்சிங் ஹோமில் இருந்து ஶ்ரீ சர்வா நர்சிங் ஹோமாக மாறிய பின் முதன் முதலாக இரட்டை குழந்தைகளை பிரசவம் பார்த்து நல்ல படியாக இந்த உலகுக்கு கொண்டு வந்தார்கள் மகப்பேறு மருத்துவர்கள். அதற்காக ஹாஸ்பிடலில் கொண்டாட்டத்தின் வெளிப்பாடாக பிரசவமான இரட்டை பெண் குழந்தைகளின் பெற்றோர் இருவரையும் அழைத்து ஒரு புகைப்படம் எடுத்து கொள்ள பட்டது. அதனுடன் கேக் வெட்ட ஏற்பாடு செய்யபட்டது.

சகுந்தலா ஆதியின் அருகில் நின்றிருந்தாள். உற்சாகமாக புன்னகைத்த படி அவள் பாத்து கொண்டிருக்க.. சகு உனக்காக ஒன்னு வாங்கிட்டு வந்திருக்கேன். இந்த கேக் வெட்டி முடிச்சதும் டீ சாப் போலாம் வா!!

காஸ்ட்லி கிஃப்ட் எல்லாம் வாங்கிக்க மாட்டேன். என சகு முறைத்து கொண்டு கூற..

அந்த அளவுக்கு என் கிட்டயும் பணம் இல்ல என தலையை கோதியபடி கூறினான் ஆதி.

அதை கேட்டதும் களுக் என சிரிப்பு வர அடக்கி கொண்டு நின்றாள் சகுந்தலா.

ஆதியும் புன்னகையுடன் கிஃப்ட் கொடுத்தா வாங்கிக்கணும் ஆராய கூடாது மண்டு என்றான்.

அப்படி என்ன கிஃப்ட்?

உனக்கு அத்தியாவசியமான ஒரு விசயம். கண்டிப்பா யூசாகும் என ஆதி கூற..

ஓகே வரேன் டாக்டர் என சல்யூட் வைத்தாள்.

அவள் சல்யூட் வைக்கும் போது தான் சர்வாவும் வந்து சேர்ந்தான். மகப்பேறு மருத்துவர் சிறியதாக நான்கு வார்த்தைகள் பேசி விட்டு சர்வேஷ் பக்கம் திரும்பினார்.

ம்ம் கட் பண்ணுங்க டாக்டர் என கத்தியை நீட்டினான் சர்வா

சார் நான் எப்படி? என மருத்துவர் கேட்க..

நீங்க அன்ட் பேபீஸ் மம்மி என இருவரையும் கூறினான். அனைவரும் உற்சாகமாக கைகளை தட்டினார்கள்.

சகுந்தலா தேவி!! என சர்வா அழைக்க..

சார் என அடித்து பிடித்து முன்னால் வந்தாள். எல்லாருக்கும் டிஸ்ட்ரிபியூட் பண்ணு.

முதலில் கட் செய்து அவனுக்கு நீட்டினாள். லாஸ்ட்டா என்னோட ரூம்க்கு கொண்டு வா! இப்போ எல்லாருக்கும் கொடு என உத்தரவு பிறப்பித்து விட்டு இரட்டை குழந்தைகள் இருக்கும் பக்கம் சென்று இரண்டு அழகு ஓவியத்தையும் பார்த்தான். சிறிது நேரம்.

கேக் வாங்கி கொண்டு அவரவர்கள் பேசி கொண்டு அவ்விடத்தை விட்டு நகர.. ஆதிக்கு வெட்டி கொடுத்தாள் அவன் வாங்கி கொண்டு காபி ஷாப் போறேன் நீயும் வந்திடு என மெல்ல குரலில் கூற.. ம்ம் என தலை அசைப்புடன் சர்வாவுக்கு வெட்டினாள்.

பேன்ட் பாக்கெட்டில் கைகளை நுழைத்தபடி அவளை தான் பார்த்து கொண்டிருந்தான் சர்வா.

சார்!! என கேக் பீஸை தட்டில் எடுத்து கொண்டு வந்தாள்.

அவன் முறைத்து பார்க்க.. சாரி சார் என அதை அவனது அறையில் வைத்தவள். நேராக வாஷ் ரூம் சென்று இரண்டு கைகளையும் சேனிடைசர் போட்டு கழுவி விட்டு அப்படியே முகத்தையும் கழுவியவள் தனது முகம் துடைக்கும் கற்சீபில் துடைத்து கொண்டே நேராக வெளியே இருக்கும் காபி ஷாப் சென்றாள்.

சர்வேஷின் கழுகு பார்வையில் காட்சிகள் கண்ணில் பதிந்தது.

அடுத்து என்ன நடக்கும்?

தொடரும்..
 

Revathipriya

Active member
Joined
Oct 14, 2024
Messages
137
Erode ku vara maatenu sonnavan kadaisila erode ah vittu kilamba maatengraan paarungapa🤭😯🤗. Shakuntala and Aadhi oda closeness paarthu ippo namma Sharva ku possessiveness vandhuchu 🤭 🤗 🤩. Appo kadaisila namma Anusha thaan paavam pola Sis 😖🤗.Story sema Superb and very very interesting Sister ippavey we are eagerly awaiting for the next ud Sister👌👌👌🔥🔥🔥👍😍.
 
Last edited:
Top