Pradhanya

Active member
Staff member
Joined
Oct 6, 2024
Messages
122
நேராக பாத்ரூம் சென்றவள் வேகமாக முகத்தில் தண்ணிரை ஆவேசமாக அடித்து கழுவினாள். 'பைத்தியமா அவன்? இப்படி ஆவேசமாக ச்சீ! அவன் மனசுல என்ன நினைச்சிட்டு இருக்கான். இனி அவனோட மூஞ்சிலியே முழிக்க கூடாது.' என மனதில் நினைத்தவள். வேகமாக வெளியேற முயன்றாள் சங்கவி.

ப்ச்! என தலையை பிடித்தவளுக்கு தன்னுடைய கைப்பையை தியேட்டர் இருக்கையில் வைத்தது நினைவுக்கு வந்தது. 'இனி பேச ஒன்னும் இல்ல. அவன் பேசினால் கண்ணம் கண்ணமா அறைஞ்சிட்டு வந்திடனும்' என முடிவுடன் உள்ளே சென்றாள்.

படம் ஓடிக்கொண்டிருக்க, கார்த்திக் புன்னகையுடன் போன் பேசி முடித்திருந்தான். கூடவே கையில் அவளுக்காக ஸ்வீட் பாப்கார்ன் வாங்கிருந்தான். பாப்கார்ன் செலவு மட்டும் ஆயிரம் இருக்கும். கேரமல் பாப்கார்ன் தியேட்டரில் அவ்ளோ விலை.

வேகமாக கைப்பையை எடுத்தவள் நகர செல்ல, உன்னோட போன் என கார்த்திக் நீட்டினான்.

ஹே என்னோட போன் எப்டி உன் கைக்கு வந்தது? நீ எதுக்கு டா எடுத்த? என சங்கவி நின்றபடி பேசி கொண்டிருக்க, ஹலோ மேடம் பிளீஸ் சிட் டவ்ன் படம் மறைக்கிது” என பின் சீட்டில் இருந்து சத்தம் வந்தது.

சங்கவி வேறு வழியில்லாமல் அமர்ந்தவள். அவனை முறைப்படி என் போன்ல என்னடா பண்ணிட்டு இருந்த என்று சத்தமாக பேசினாள்.

கார்த்திக் சிரித்தபடி பேச ஒன்னும் இல்ல. வானதி கிட்ட தான் பேசிட்டு இருந்தேன்.

சங்கவி பதட்டத்துடன் கைகளில் சொடக்கு எடுத்துக் கொண்டே “அய்யோ அவகிட்ட என்னடா பேசின? அதுவும் என் போன்ல நீ எதுக்கு டா கால் பண்ண? என் கிட்ட லவ் யூ சொல்றேன்னு ஒரு கிறுக்குத்தனம் பண்ணிட்டு இருக்கியே! அத அவகிட்ட சொல்லல தானே” என்று தவிப்புடன் அவனைப் பார்த்தாள்.

அச்சோ நீ சொல்லலாம்னு இருந்தியா? என்று உதட்டை பிடிக்க வந்தான்.

ச்சீ என தட்டி விட்டாள்.

“நான் வானதி கிட்ட உன்ன லவ் பண்றத பத்தி சொல்லிட்டேன்!” என்று கூலாக கூறினான்.

சங்கவி தலையின் மேல் கை வைத்தபடி “உனக்கு என்ன பைத்தியம் பிடிச்சிருக்கா கார்த்திக்! உன்னை யார் டா இப்படி பண்ண சொன்னது? எதுக்குடா நீ அவகிட்ட சொன்ன?”

ஹே அவள் என் பிரென்ட் நான் எதுவும் அவ கிட்ட நான் மறைச்சதில்லை. அதனாலதான் சொல்லிட்டேன். இப்போ அதுக்கு என்ன? அவ கூட நான் லவ் பண்றத நம்பல. அதனாலதான் நீயும் நானும் படத்துக்கு வந்து இருக்கோம்ன்னு சொன்னேன். அதையும் வானதி நம்பவே இல்லை. அதுதான் உன் போன்ல இருந்து கால் பண்ணேன். அண்ட் நீ நடந்து வரும்போது உன்னை போட்டோ எடுத்து என் போன்ல இருந்து அவளுக்கு சென்ட் பண்ணேன். இப்போ அவ நம்பி இருப்பா தானே கவி? என இரு புருவங்களை தூக்கினான் கார்த்திக்.

சங்கவி பற்களை கடித்தபடி முறைத்தவள். “கார்த்திக் நீ என என்கிட்ட அடி வாங்கியே சாகப் போற. ஒழுங்கா இந்த கிறுக்குத்தனத்தை எல்லாம் மறந்திடு. நான்… எனக்கெல்லாம் உன் மேல அப்படி ஒரு எண்ணம் கிடையாது.”

அப்படியெல்லாம் மறந்திட முடியாது. இத நீ எப்படி கிறுக்குத்தனம்னு சொல்லுவ?என்று கூறியவன் பாப்கானை அவளின் வாய்க்கருகில் கொண்டுசென்று “சாப்பிடு உனக்காக தான் வாங்கிட்டு வந்தேன்”

“உன்னை செருப்பை கழட்டி அடிக்க போறேன் டா.”

“ஒன்னும் பிரச்சனை இல்ல பொறுமையா அடிச்சுக்கலாம். சாப்பிடு அப்புறம் நமத்து போய்டும்” என்றான் கார்த்திக்.

“கார்த்திக் உன்ன கொலை பண்ற கோபத்தில் இருக்கேன் டா. தயவு செஞ்சு தேவையில்லாத வேலை பண்ணிட்டு இருக்காத. நீ பொறுக்கி வேலை பண்ணிட்ருக்க. நீ டாக்டர் டா அது உனக்கு ஞாபகம் இருக்கா?” என்று சங்கவி அவனைப் பார்த்தாள்.

ஏன் டாக்டர் லவ் பண்ண கூடாதா? போடி!
நீ சாப்பிடலைன்னா என்ன? நான் சாப்பிடுவேன். உனக்கும் சேர்த்து. அப்புறம் உனக்கு ஊட்டி விடுவேன் என்று கூறிய படி அவளின் உதட்டை வருடினான்.

சங்கவி மேல் மூச்சு வாங்கிக்கொண்டே அவனைப் பார்க்க, நான் பொறுக்கி தான். உன் மேலே எவ்வளவு ஆசை தெரியுமா டி! ஸ்கூல் படிக்கிறப்பருந்து என்று கூறினான்.

சங்கவி அப்பட்ட அதிர்ச்சியுடன் அவனைப் பார்க்க, “நம்ப முடியலையா நான் லவ் பண்ணுது யாருக்கும் தெரியாது. நீ சொன்னையே பொறுக்கி தனம். என சிரித்தவன். ம்ம் திருட்டுத்தனம் கூட நிறைய பண்ணிருக்கேன். என்றான் சர்வ சாதாரணமாக

‘இதுக்கு மேல ஒரு நிமிஷம் கூட இங்க இருக்க முடியாது’ என்று நினைத்தவள். வேகமாக அவ்விடத்தை விட்டு எழுந்து செல்லப்போக பின்னால் இருந்து “இந்தம்மா ஒரு இடத்தில் உட்காரவே உட்காராதா! அங்கேயும் இங்கேயும் ஆடிக்கட்டே இருக்க!” என்று சத்தம் வந்தது.

சரியாக கார்த்திக்கின் இருக்கையை அவள் கடக்கும் போது கையைப் பிடித்து கொண்டான். விடு கார்த்திக் என்று சங்கவி மீண்டும் கூற, அப்படியெல்லாம் விட முடியாது. என்று இழுத்து பிடித்து வலுக்கட்டாயமாக அவனது மடியில் அமர வைத்துக் கொண்டான் கார்த்திக்.

“கார்த்திக் விடு! விட்றா…!! விடு” என்று அவள் நெளிந்து கொண்டே எழ முயற்சி செய்ய, “உன்ன விடவா புடிச்சேன் உன்ன 7th படிக்கிறதிலிருந்து லவ் பண்ணிட்டு இருக்கேன் டி! அவ்வளவு சீக்கிரமாக விட்டுடுவேனா?” என்று அவளின் இடையே இறுக்கி அணைத்தான்.

‘என்ன சொல்றான்? ஏழாவது படிக்கிறப்ல இருந்து லவ் பன்றானா? என்னை இப்படி டார்ச்சர் பண்றானே!’ என சங்கவி தவித்தவள். “அய்யோ கார்த்திக் விடு! நீ லவ் பண்றேன்னு சொன்னா? அதை ஏத்துக்கிட்டு உன் பின்னாடி வருவேன்னு நினைச்சியா? உன் மேல எனக்கு அந்த பீல் கிடையாது டா. நீ என்னோட பிரென்ட்” என்று மீண்டும் சங்கவி கூறினால்.

“உன்னோட விளக்கங்களை எல்லாம் ஓரங்கட்டிடு. நான் பிரண்டா இருந்தா என்ன? இனிமே என்ன லவ்வரா பாரு.”

“அப்படி உன்ன நான் பாக்கலை டா!”

ஆமா நீ, நானு வானதி மூணு பேரும் ஃபிரண்டா இருந்தோம். அதுக்கப்புறம் தானே நீ எனக்கு லவ்வரா மாறின. அது போல இப்ப நீ என்னைய லவ்வரா நினைச்சுக்கோ என்று கூறினான் கார்த்திக்.

அய்யோ என அவள் நெற்றியை பிடித்தாள்.

அவனோ சங்கவியின் கழுத்தில் முத்தமிட ஆரம்பித்தான்.

கார்த்திக் விட்றா..

ஹேய் உன்ன விட்டுப் போகத்தான் இத்தனை வருஷம் காத்திருந்தனா? நீ எனக்கு வேணும்டி. உன் கிட்ட நிறைய பேசணும் டி. இன்னும் கூட எனக்கு அந்த சீனரி ஞாபகம் இருக்கு. நீ வயசுக்கு வந்த நேரம்ன்னு நினைக்கிறேன்.

சங்கவி வாயை பொத்தி கொண்டு அவனை பார்த்தாள்.

“உன்ன சுத்தி பொண்ணுங்க எல்லாம் உட்கார்ந்து பேசிட்டு இருந்தாங்க. சிரிச்சாங்க. நான் அப்போ இங்கிலீஷ் மிஸ் கிட்ட இருந்து நம்ம எல்லாரோட காம்போசிஷன் நோட்டு வாங்கிட்டு வந்து எல்லாத்துகிட்டையும் கொடுத்துக்கிட்டு இருந்தேன். அப்பதான் பசங்க எல்லாரும் பேசிகிட்டானுக!”

கார்த்திக் ப்ளீஸ் நிறுத்து என்று சங்கவி மீண்டும் கூற, “நான் சொல்லுவேன் நான் எப்ப உன்ன லவ் பண்றேன்னு சொல்லணும் தானே! எப்படி எல்லாம் உன்ன லவ் பண்ணிருக்கேன்னு உனக்கு தெரியணும். நீ கேட்டு தான் ஆகணும்” என்று கூறியவன். கழுத்தில் முத்தமிட்டபடி அப்போ உன்னோட டிரஸ்ல ரெட்டிஷா இருந்தது. எனக்கு ஒரே பதட்டமா ஆயிடுச்சு. அந்த நேரம் பார்த்து வானதிக்கு அம்மை வந்து அவ லீவு போட்டுட்டா. நீயும் அந்த நிலைமையில் இருக்கும்போது எனக்கு யார்கிட்ட என்ன கேட்கிறதுன்னே தெரியல. அதுக்கு அப்புறம் தான் தெரிஞ்சது நீ வயசுக்கு வந்துட்டேன்னு. அப்படின்னா என்னன்னு எனக்கு ஒரே யோசனை. உன்ன பாக்கணும் உன்கிட்ட பேசணும்னு எனக்கு தோணிக்கிட்டே இருந்தது. அதுக்கப்புறம் நீ ஒரு வாரம் ஸ்கூலுக்கே வரல. எப்ப நீ ஸ்கூலுக்கு வருவேன்னு நான் வெயிட் பண்ணிக்கிட்டு இருந்தேன். அதுக்கப்புறம் வந்த கூடவே புதுசா ஒன்னு வந்தது என்று கூறினான்.

சங்கவி எதுவும் பேசாமல் அமைதியாக கைகளை இறுக்கி மடக்கிய படி அமர்ந்திருந்தாள். அவளுக்கு இதயம் வேகமாக துடித்தது. இப்படி எல்லாம் தன்னை அவன் தன்னை பற்றி யோசித்து இருக்கிறான் என்று கேட்கவே ஆச்சரியமாக இருந்தது. அதை விட பதட்டம் அதிகமாக இருந்தது. அவளுக்கு காதலின் மேல் இருக்கும் அறிவு அந்த உணர்வு எப்படி இருக்கும்? என்று சங்கவிக்கு தெரியாது ஆனால் கார்த்திக் சொல்வதெல்லாம் மிகவும் ஆச்சரியப்பட வேண்டிய விஷயமாக தோன்றியது.

கேட்கிறாயாடி!! என்று கார்த்திக் கூற, சங்கவியிடம் எந்த பதிலும் இல்லை.

சரி நான் சொல்லுவேன் என்று அவளின் டாப்ஸின் உள்ளே கைகளைக் கொண்டு சென்றான். தடா சட்டம் போட்டு அவனது கைகளை இறுக்கிப் பிடித்துக் கொண்டாள். ம்ம் இது கூட எனக்கு பிடிச்சிருக்கு என்று கையை கோர்த்துக்கொண்டு அவளின் தோள்பட்டையை மெதுவாக கடித்தான் கார்த்திக்.

ஹே ப்ளீஸ் விடு என்று சங்கவியின் உதடுகள் தந்தியடிக்க… சரி நீ கதை கேளு என்று ஆரம்பித்தான்.

அப்பதான் டி எனக்கு மீசை முளைச்சது. உன்ன பாக்கணும் போல தோனுக்கிட்டே இருக்கும்.நான் வீட்டுக்கு போனாலும் உன்னோட நினைப்பாவே இருக்கும்.சரி அதை விடு உன் கூட புதுசா ஒரு விஷயம் வந்ததுன்னு சொன்னேனே என்னன்னு கேக்க மாட்டியா?”

தயவு செஞ்சு என்னை விடு நான் போறேன் என்று சங்கவி கூற, ப்ச் அது என்ன தெரியுமா? உன்னோட வலது கன்னத்துல ஒரு குட்டி பரு பாக்கவே அவ்ளோ அழகு நல்லா சிவந்து போச்சு தெரியுமா? அப்படியே உன்னோட உதடு சிவப்பா இருந்தது உதடும் அந்த பருவும் கிட்டத்தட்ட ஒரே மாதிரி அப்படியே ஈரப்பதத்தோடு இருந்தது. நான் சம் டைம்ஸ் நெனச்சுக்குவேன் ஏன்டா இவள இப்படி ரசிகரோம்ன்னு. ஐயோ இது தப்பு. இது உனக்கு தெரிஞ்சா நீ என்கிட்ட பேச மாட்டேன்னு நெனச்சு, நானே உன் கிட்ட இருந்து விலகனும்னு பிளான் பண்ணேன். ஆனா நான் எவ்வளவுதான் உன் கிட்ட சிடு சிடுன்ன்னு நடந்துக்கிட்டாலும், நீ எனக் சுத்தி சுத்தி வந்து என்கிட்ட பேசுறது, எனக்கு நெல்லிக்காய் கொடுக்கறது, வீட்ல தேங்காய் சாதம் உங்க அம்மா செஞ்சு கொடுக்கிறது, அதுக்கப்புறம் நம்ம ஷேர் பண்ணி சாப்பிடறது, அப்படியே கொஞ்சம் கொஞ்சமா பக்கத்துலயே இருந்து உன்ன ரசிக்க ஆரம்பிச்சேன். உன்னை டிஸ்டர்ப் பண்ணாம இருக்க எனக்கு நானே கட்டு படுத்துகிட்டேன்.

“போதும் கார்த்திக்”

நான் சொல்லுவேன் டி! என அவளின் கன்னத்தை உரசினான். நீ ஏஜ் அட்டன்ட் பண்ண மாதிரி எனக்கும் குரல் உடைஞ்சது. மீசை கொஞ்சமா வந்துச்சு. உன்னோட அந்த பருவ தொட்டு பாக்கணும்னு தோணும். உன்னோட உதட்ட வருடி பாக்கணும்னு தோணும். உனக்கு முத்தம் கொடுக்கணும்னு தோணும். உன்னை கட்டி பிடிச்சுக்கணும்னு தோணும். உன்ன பார்த்துக்கிட்டே இருக்கணும் போல தோணும். நீ பூவெச்சிட்டு வந்தா அவ்வளவு அழகா இருக்கும் தெரியுமா? அதுக்கப்புறம் நம்ம சிஎஸ்ஐ ஸ்கூல் ஜாயின் பண்ணோம். நான் உன் மேல வெறுப்பா இருக்கிற மாதிரி காமிச்சுக்குவேன். ஆனா நீ என்கிட்ட ஓடி ஓடி வந்து பேசுறது எனக்கு அப்படியே ஒரு கரண்ட் ஷாக் அடிச்ச மாதிரி இருக்கும். அந்த வைப்ளயே இருந்தேன் டி. உன்கிட்ட லவ்வ சொல்ல வரும்போதுதான் வானதி பிரச்சனை வந்தது. அப்போ முடிவு பண்ணேன்.

சங்கவி…?

தொடரும்..
 
Author: Pradhanya
Article Title: Episode -26
Source URL: Pradhanya kuzhali novels-https://pradhanyakuzhalinovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

Magi

New member
Joined
Oct 6, 2024
Messages
25
Superb 💓 Karthik describing semma 😍 lovely🌹🌹🌹🌹 achoo Karthik oda love story kekrapo enaku blush aaguthu🥵
 
Kavi

New member
Joined
Oct 25, 2024
Messages
2

Karthik love explanation sema
 
Top