Episode -17

ஹே போன்ல என்ன டி பண்ற? என கேட்டபடி சத்ய தேவ் உள்ளே வந்தான். 

நானா? நான் என்ன பண்ண போறேன்? உன்னோட போனை வச்சு? சார்ஜ் இல்ல அதான் செக் பண்ணேன் என சொல்லியபடி போனை தூக்கி அவனிடம் வீசினாள் ரிதம். 

திமிரா? என சத்ய தேவ் அவளின் மேல் விழ, ஹே பாப்பா! என்று வயிற்றை பிடித்தாள் பயத்துடன். 

அவன் விஷமமாக புன்னகைக்க, முறைத்துக் கொண்டு முதுகை காட்டினாள். போடிஇஇ! என அவளின் அருகில் வந்தவன். மீசை முடி குறுகுறுக்க ஆயிரம் முத்தங்களை அவளின் மணி வயிற்றில் வழங்கினான். 

வெயிட் பண்ணு! சுட சுட உன் குழந்தைய கொடுத்திட்டு போறேன் என முகத்தை திருப்பினாள். 

“ம்ம் போ! எனக்கு ஒன்னும் பிரச்னை இல்லை.” என பாய்ந்து கொண்டு அவளின் உதட்டில் முத்தமிட்டான் சத்ய தேவ். 

“ச்சீ! ப்ரஷ் பண்ணியா நீ? குளிச்சியா நீ?”

“ஹே சூரக்கழுதை ரெண்டு தடவை குளிச்சிட்டேன் டி! இங்கே குளிக்காம இருக்கிறது நீ தான்! தள்ளு தள்ளு”  

அது என்னால குளிக்க முடியல.. சலுப்பா இருக்கு! உனக்கு தெரியுமா? உன்னோட பாப்பா என சொல்ல வந்தவள். அப்படியே கப் சிப்பென வாயை மூடிக் கொண்டாள். 

நான் வேணும்னா குளிக்க வைக்கட்டா? வரியா? எல்லா இடத்தையும் அப்படியே பிசைஞ்சு..  

ஹே நாயே! 

இல்ல டி அப்படியே தொட்டு பிடிச்சு விட்டு நல்லா அழுத்தி மசாஜ் செஞ்சு விட்டு குளிக்க வைக்கிறேன். என இரு புருவம் தூக்கினான். 

உள்ளுக்குள் சாக் அடித்தது அவனது வார்த்தைகள். முகத்தை திருப்பி கொண்டவள் போர்வையை இழுத்து போர்த்தி கொண்டாள். 

அவளின் கழுத்து குழியில் முத்தமிட்டவன். “சரி தூங்கு நான் கிளம்புறேன்.”

“ஆபிஸ் போகணுமா?” என தலையை தூக்கி பார்த்தாள். 

இல்ல உன்னோட தம்பி தனியா இருப்பான். அதான் அவன் கூட தூங்க போறேன் என்றான் சத்ய தேவ். 

அப்போ என்ன மயிருக்கு கல்யாணம் பண்ணானோ? கிறுக்கன். அவன் மட்டும் பொண்ணா பிறந்திருந்தால் அவ்ளோ தான். குழந்தை திருமணம் பண்ணிருப்பான். எப்போ பாரு தீரா தீரா தீரா!  பைத்தியங்க.. என அவள் கோபத்தில் முணுமுனுத்தாள். 

சத்ய தேவ் மெல்ல சிரித்த படி உன் தம்பி ய பார்க்க நான் போகல. என் தம்பியை மேடம் கொஞ்சம் கவனிச்சீங்கனா நல்லாருக்கும் என அருகில் வந்தான். 

மிதுன் தேவ் வந்திருக்கானா? என் கிட்ட பேச கூடாதுன்னு சொல்லிருக்க போல.. 

“ஹே சூறகழுதை ராவடி ராங்கி! ப்ச் இந்த நேரத்தில் எதுக்கு டி அவனை நினைக்கிற? நான் சொன்னது அவனை இல்ல இங்கே என்னை பாரு டி!” என சைகை காட்ட..  

அய்யோ சண்டாள பாவி! என போர்வையை போர்த்தி கொண்டவள். என்னால முடியாது. போடா நீ ரோட்ல கூட படு என் கிட்ட வராத என பொய் குறட்டை விட்டாள். 

சத்ய தேவ் சிரித்தபடி அறையை சாத்த… ஹே கதவை சாத்தாத.. என ரிதம் கத்தினாள். 

ஒன்னும் பிரச்னை இல்ல திறந்து விடுறேன். ஆனால் அதுக்கு முன்னாடி முக்கிய விசயம். எல்லா இடத்துலயும் கேமரா அண்ட் சென்சார் வச்சிருக்கேன். முக்கியமா நீ ரூம் வெளியே வந்த உடனே மாட்டிக்குவ? ஓடி போற எண்ணத்தை கை விட்டுட்டு தூங்குர வழிய பாரு என கூறி விட்டு சென்றான் சத்ய தேவ். 

இவன் கிட்ட சொல்லாம பிளான் போட்டு ஓடி இருக்கனும். எல்லாம் என்னோட தப்பு தான் என நொந்து கொண்டவள். தூங்க ஆரம்பித்தாள். 

அறையின் கதவின் முன் நாய் குட்டியை கட்டி போட்டிருந்தான் சத்ய தேவ். இவன் தான் சென்சார் காவலன். ரிதம நம்ப முடியாது கிருக்குதனம் எதுவும் செய்தால் என்ன செய்வது? வயிற்றில் குழந்தையை வைத்துக் கொண்டு.. 

ருத்ரனின் அறைக்குள் சென்றதும் சத்ய தேவ்வின் முகம் மாறியது. டேய் ராஸ்கல் என்ன டா பண்ணிட்டு இருக்க? என கொந்தளித்து அருகில் வந்தான். 

ம.. மாமா!..  என முழு போதையில் தள்ளாடியபடி தன்னை சமன் படுத்திக் கொண்டு நின்ற ருத்ரன் அப்படியே படுக்கையில் விழுந்தான். என்ன டா பண்ற தீரா? எதுக்கு டா கவுன்சிலிங் அனுப்பினேன் உன்னை? அய்யோ இது வீட்ல தெரிஞ்சா என்ன ஆகிறது? ஏன் டா இப்படி பண்ற?  என கொதித்தான் சத்ய தேவ். 

இல்… ல..  மமா..  நான் என்ன பண்ணட்டும்? என்னால மறக்க முடியல.. அவளை … அவ..ளை மாமா ..  அவ..ள் என்..னை கொல்..ட்ரா கொடு..மைமைமை பண்..றா! தி..ரும்ப தி…ரும்ப வந்…து நிக்..கிற அவளை நான் என்ன பண்ணதும்? என உளறி கொண்டிருந்தான் ருத்ரன். 

கன்னத்தில் பளார் என்று ஒரு அரை! ருத்ரன் அப்படியே அரையை வாங்கிக் கொண்டு சத்ய தேவ்வின் தோள்களில் சாயுந்தான். 

பாத்ரூம் தள்ளி சென்று குளிர்ந்த நீரை திறந்து விட்டான் சத்ய தேவ். 

கொஞ்சம் கொஞ்சமாக போதை இறங்க, ருத்ரனுக்கு சுயநினைவு வர ஆரம்பித்தது. 

அரை போதையில் அவனை வெளியே அழைத்து வந்தவன். வேகமாக கிச்சன் சென்று மோர் செய்து குடிக்க வைத்தான். ம்ம் குடி.. 

“இல்ல மாமா”

“கழுத்தை திருகி போட்டுடுவென் குடி” என அவனை சாப்பிட வைத்து மாத்திரை போட்டு சோர்வுடன் அமர்ந்தான் சத்ய தேவ். 

கைகள் எல்லாம் போதை கேட்டு நடுங்கிய படி கிடந்தான் ருத்ரன். அடுத்து என்ன செய்வது என யோசனையுடன் அமர்ந்திருந்த சத்ய தேவ் அப்படியே உறங்கி போனான். 

****

எத்தனை தடவை கால் பண்ணாலும் எடுக்க மாட்டிக்கிறான்? என ஹரிணி யோசித்தபடி நின்றிருந்தாள். 

நிலா மெல்ல வீட்டை விட்டு வெளியேற… என்ன பண்ற! எங்கே போற நிலா! கம்முன்னு இங்கே வந்து உட்காரு. அந்த பொண்ணு கிட்ட நீ எதையும் போய் கேட்க வேணாம். இன்னிக்கி நீயும் நானும் தான் தூங்க போறோம். என இழுத்து வந்து படுத்துக் கொண்டாள். 

நிதின் அவளுக்கு அழைக்க..  

“சொல்லு!”

அது நீ இன்னிக்கி நிலா கூடயே தூங்கிக்க.. என்றான் நிதின். 

என்ன ஆச்சரியம்? இது நீ தானா? என ஹரிணி கேட்க.. 

அங்கே உன் கூட படுக்க எனக்கு ஓகே தான். ஆனால் மினிஸ்டர் பதவி தடுக்கிது தூக்கம் வரல டி! இட்ஸ் ஓகே பாப்பாவுக்காக என்றான் நிதின். 

ஹரிணி மெல்ல சிரிக்க.. சரி சரி நான் வைக்கிறேன். இல்லன்னா மனசு மாறி தேடி வந்துடுவேன் என போனை வைத்தான் நிதின். 

அடுத்த நாள் ஆரவாரத்துடன் விடிந்தது. மாலை தான் நிச்சயதார்த்தம் கௌரி நல்ல நேரத்தில் செய்வதாக திட்டமிட்டிருந்தார்கள்.

கண்மணி பூரிப்பில் இருந்தாள். அழகு பதுமையாக அவளை  தயார் செய்தார்கள். நிலா இயல்பாக இருக்க, அவளிடம் வந்து உடையை கொடுத்து விட்டு சென்றார் தேஜூ. 

இவ்வளவு பெரிய ட்ரெஸ்சா? எதுக்கு இத்தனை நகை? எதுக்கு எனக்கு அலங்காரம் என ஆயிரம் கேள்விகளை கேட்டு குடைந்து எடுத்தாள் நிலா. 

கேள்வி கேட்காமல் போடு நிலா. இதெல்லாம் உன்னோட டாடி தான் செலக்ட் பண்ணார். 

அப்படியா? என கேள்வி கேட்காமல் அணிந்து கொண்டவள் ஒரு மூலையில் ஜன்னல் வழியாக அவர்களின் தோட்டத்தை பார்த்து கொண்டிருந்தாள்.

நிலா தங்கம் என அழைத்த படி அவளின் அம்மாச்சி வீல் சேரில் தாத்தாவை தள்ளிக் கொண்டு வந்தார். அம்மாச்சி என ஓடி சென்று கட்டிக்கொண்டாள். கொஞ்சினாள். 

நேத்து தான் பிறந்த மாதிரி இருக்கு. இன்னும் ஒரு வருடம் போனால் என் பேத்திக்கு குழந்தை பிறந்து நான் கொள்ளு பாட்டி ஆகிடுவென். என்றார் 

நிலா மெல்ல தலையசைத்து இயல்பாக பார்த்தாள். 

பொண்ணு போற இடத்தில் அனிசரிச்சு நடந்துக்கணும். எல்லாரையும் சேர்த்து பிடிக்கணும் தங்கம் என கலைவாணி அறிவுரை கூறி கொண்டிருக்க..  “என்ன? என்ன சொல்றீங்க அம்மாச்சி?” என நிலா புரியாமல் கேட்டாள். 

இன்னிக்கி  ஒரே மேடையில் உனக்கும் அப்புறம் நிவாஸ்க்கும்  நிச்சயதார்த்தம். உன்னோட மாப்ளை இப்போ தான் வந்திருக்கார். அவங்க கெஸ்ட் ஹவுசில் இருக்காங்க. என்றார். 

அவ்வளவு தான் நிலாவுக்கு கிடுகிடுவென நடுங்கியது. அதை வெளிக்காட்டி கொள்ளாமல் வேகவேகமாக வெளியே அவர்களுடன் சென்றாள். 

“எதுக்கு வெளியே வந்த? ரூம்லயே இரு!” என தேஜூ சொல்லிக் கொண்டே வர..  நான் அப்பாவை பார்க்கணும். இப்போவே .. 

“அப்புறம் பார்க்கலாம் போ நிலா” 

“மா நான் இப்போவே அப்பாவை பார்க்கணும் என்னை விடு!” என வேகமாக சென்றாள். 

நிலா என நிவாஸ் கோபமாக அழைக்க..  அனைவரையும் முறைத்து பார்த்தவள் வேகமாக தன் தந்தையை தேடினாள். 

Spr எங்கும் இல்லை. நெஞ்சே வெடித்து விடும் போல இருந்தது. யாருக்கும் என்னால துரோகம் பண்ண முடியாது. அய்யோ நான் என்ன செய்வேன்? நான் சத்ய தேவ் அண்ணா கூடயே இருந்திருக்க வேணும். இங்கே வந்தது தப்பு. என வேகமாக சத்ய தேவ்க்கு அழைத்தாள். 

“அண்ணா நான் நிலா பேசுறேன்” 

நிலா மா அண்ணன் முக்கியமாக வேலையில் இருக்கேன் டா வர முடியாது. நான் வர try பண்றேன் தங்கம். 

அண்ணா நீ வரல இனி என்னை பார்க்க முடியாது. என தேம்பி தேம்பி அழுதாள் நிலா. 

என்னடா மா ஆச்சு?

அண்ணா! இங்கே எல்லாரும் சேர்ந்து எனக்கு கல்யாணம் பண்ண பார்க்கிறாங்க! என்னால இங்கே ஒரு நிமிடம் கூட இருக்க முடியாது. நான் எப்படி இருக்கேன்னு உனக்கே தெரியும் தான! வா நீ வா! இல்ல நான்!.  என அழுத படி கட் செய்தாள் நிலா. 

சத்ய தேவ் கிளம்ப அனைத்து வேலைகளையும் செய்தான். இங்கே நிச்சய மேடையில் நிவாஸ் மற்றும் கண்மணி நின்றிருக்க.. 

நிச்சயத்துக்கு வந்திருந்த விவேகாவின் கண்கள் அதிர்ச்சியில் விரிந்தது. இந்த பொண்ணு என் பையனோட காதலி மீனாட்சி! அவளே தான்! அய்யோ! என கைகள் நடுங்க வேகமாக சத்ய தேவ்க்கு அழைத்தார் விவேகா. 

சத்ய தேவ்!

“சொல்லுங்க அத்தை நான் வந்துட்டே  இருக்கேன்.”

“சத்ய தேவ்! நான் அது ருத்ரன் லவ் பண்ண பொண்ணை பார்த்தேன் டா! இங்கே என் கண்ணு முன்னாடி நிக்கிறா” என விவேகா கூறவும்..

ஹரிணி சத்ய தேவ்வை அழைக்க வரவும் சரியாக இருந்தது. 

சத்ய தேவ்வின் கண் முன் கண்மணி..

தொடரும்..

Leave a Comment

Follow Me

Top Selling Multipurpose WP Theme

Newsletter

About Me

பிரதன்ய குழலி நாவல் தளத்துக்கு அனைவரையும் அன்புடன் வரவேற்கிறேன்.

இந்த தளத்தில் இருக்கும் அனைத்து கதைகளும் பிரதன்ய குழலி அவர்களால் எழுதப்பட்டது. அனைத்து கதைகளும் கற்பனையே. கொஞ்சம் ஊடல், அதிகமா காதல். என உணர்வுகளின் குவியலை படிக்கலாம்.