🦚 பிரதன்யா குழலி நாவல்களுக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்!📖 படியுங்கள், ரசியுங்கள், கதைகளின் உலகில் மூழ்குங்கள்🪶 கதைகளின் தோகை விரியும் இடம்💎 இலவசம் முதல் பிரீமியம் வரை, உங்களுக்குப் பிடித்த கதையைத் தேர்ந்தெடுங்கள்🦚 பிரதன்யா குழலி நாவல்களுக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்!📖 படியுங்கள், ரசியுங்கள், கதைகளின் உலகில் மூழ்குங்கள்🪶 கதைகளின் தோகை விரியும் இடம்💎 இலவசம் முதல் பிரீமியம் வரை, உங்களுக்குப் பிடித்த கதையைத் தேர்ந்தெடுங்கள்🦚 பிரதன்யா குழலி நாவல்களுக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்!📖 படியுங்கள், ரசியுங்கள், கதைகளின் உலகில் மூழ்குங்கள்🪶 கதைகளின் தோகை விரியும் இடம்💎 இலவசம் முதல் பிரீமியம் வரை, உங்களுக்குப் பிடித்த கதையைத் தேர்ந்தெடுங்கள்🦚 பிரதன்யா குழலி நாவல்களுக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்!📖 படியுங்கள், ரசியுங்கள், கதைகளின் உலகில் மூழ்குங்கள்🪶 கதைகளின் தோகை விரியும் இடம்💎 இலவசம் முதல் பிரீமியம் வரை, உங்களுக்குப் பிடித்த கதையைத் தேர்ந்தெடுங்கள்
16. அன்பானவன் அடங்காதவன் அசராதவன்
அன்பானவன் அடங்காதவன் அசராதவன்
📖 அன்பானவன் அடங்காதவன் அசராதவன் · Chapter 16 of 160

அன்பானவன் அடங்காதவன் அசராதவன்

  • 13 Jul 2025
  • 997 reads
  • ☆ No ratings yet
  • 8 min read

Episode -16

நிலாவின் முகம் வியர்த்து போனது. இது மீனாட்சி.. தங்க மீனாட்சி தீராவோட லவ்வர் மீனாட்சி தான! இவங்க நிவாஸ் அண் அண்ணா கூட எப்படி? என ஒரு வித மிரட்சியுடன் பார்த்தாள். 

🪔 Exclusive Diwali Offer for Pradhayakuzali Readers
AVS Crackers - Diwali special, up to 90% off, Sivakasi factory direct Shop Now →

“நான் கண்மணி! நீங்க நிலா தான! உங்களை பத்தி தான் மாமா எல்லா நேரமும் எதுவும் சொல்லிக்கிட்டே இருப்பார். நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க. உங்களோட கண்ணாகுளி அப்படியே மாமா மாதிரியே இருக்கு” என தன் மாமனாரை ஒப்பிட்டாள். 

நிலா எதுவும் பேசாமல் அமைதியாக இருக்க, அந்த இடத்துக்கு வந்த நிதின் பிரகாஷ், சரி போதும் பாப்பா ரெஸ்ட் எடுக்கட்டும் ரொம்ப தூரத்தில் இருந்து வந்திருக்கா! அதனால அப்புறம் பேசிக்கலாம் என அவளை தோல் மேல் கைபோட்டு அழைத்து சென்றான். 

அண்ணா ஒரு நிமிடம் இரு. “பாப்பா அண்ணி கிட்ட பேசவே இல்ல. ஏன் உனக்கு கண்மணிய பிடிக்கலையா?” என கேட்டான் நிவாஸ். 

நிலா திகிலுடன் மீனாட்சி அதாவது கண்மணியை பார்க்க, பேசு நிலா என அதட்டினான் நிவாஸ். 

அது வந்து ஒன் ஒன்னும் இல்ல. நான் ரெஸ்ட் எடுக்க போறேன். என எதுவும் பேசாமல் நகர்ந்தாள். 

ஹரிணி அவர்களின் பின்னால் செல்ல, நிதின் அறையில் விட்டு விட்டு திரும்பினான். 

வா ஹரிணி நீயும் போய் ரெஸ்ட் எடு நாளைக்கு ரொம்ப நேரம் அலைச்சல் இருக்கு. உனக்கு எந்த வேலையும் இல்ல தான். ஆனாலும் நீ கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துக்கோ! கவனமா இருக்கணும் என்றான் நிதின். 

அண்ணி உங்க கிட்ட கொஞ்சம் பேசணும்.  என நிலா சொல்ல.. 

நீ போ நான் நிலா கூட இருந்திட்டு வரேன். என ஹரிணி அனுப்பி வைத்தாள். 

நித்தினுக்கு எதோ ஒரு மூலையில் கொஞ்சம் நிம்மதியாக இருந்தது. தன்னை தவிர்த்தாலும் கூட தன் மனைவியின் மீது பாசமாக இருக்கிறாள் பேசுகிறாள் தன் தங்கை நிலா என நினைத்துக் கொண்டான். 

“என்ன விசயம் நிலா? உனக்கு எதுவும் பிரச்னை இல்லையே!” என ஹரிணி விசாரிக்க.. 

அண்ணி ஒரு நிமிசம் என கதவை சாத்திய நிலா. இந்த நிவாஸ் அண்ணா கூட ஒரு பொண்ணு இருக்கே! அந்த பொண்ணு!. 

அது உன்னோட சின்ன அண்ணி. சோ பொண்ணு சொல்லாத சண்டைக்கு வர போறான் உன் அண்ணன் என்றாள் ஹரிணி. 

அய்யோ அண்ணி அந்த பொண்ணு பேரு கண்மணி இல்ல என நிலா கூறினாள். 

பின்ன? வேற என்ன? என ஹரிணி கேட்க.. 

ஒரு பெரு மூச்சை விட்டவள். அண்ணி அந்த பொண்ணு பேரு மீனாட்சி! தங்க மீனாட்சி! ரிதம் அண்ணியோட தம்பியும் இந்த பொன்னும்… என நிறுத்திய நிலா “இவங்க ரெண்டு பேரும் கிட்ட தட்ட 8 வருசத்துக்கு மேலே விரும்பினாங்க. அவங்க பிராமண பொண்ணு.” என கைகளை பிசைந்த படி கூறினாள். 

ஹரிணி அதிர்ச்சியுடன் என்ன சொல்ற நிலா? இதெல்லாம் உணக்கெப்படி தெரியும்? இந்த பொண்ணு ஏமாத்த வந்திருக்களா? ஏற்கனவே நிதின் நிறைய பாதுகாப்பு போட்டிருக்கான். நான் உடனே இதை உன் அண்ணன் கிட்ட சொல்றேன். 

“அய்யோ அண்ணி ஒரு நிமிசம் வெயிட் பண்ணுங்க. இந்த பொன்னும் நானும் நாட்டியாலயாவில் மீட் பண்ணோம். கெட்ட பொண்ணு இல்ல. நல்ல பொண்ணு தான். அப்புறம் அவர் ஆர்மிக்கு போனார் தானே அப்போ தான் சத்ய தேவ் அண்ணா சொன்னாங்க”

எவர்? என ஹரிணி புரியாமல் கேட்க..  அது அவர் தான் ருத்ரன். இந்த பொண்ணு செத்து போயிட்டதாக சத்ய தேவ் அண்ணா சொன்னாரு. ஆனால் இந்த பொண்ணு உயிரோட இருக்காங்க. நிதின் அண்ணா கிட்ட சொன்னால் பிரச்னை வந்திடும். நம்ம சத்ய தேவ் அண்ணா கிட்ட சொல்லி எதுவும் பண்ண சொல்லலாம். ருத்ரன் இந்த பொண்ணை அவ்ளோ உயிருக்கு உயிரா நேசிச்சார். என்றாள் நிலா. 

நிலா வயிற்றை பிடித்துக் கொண்டு அங்கும் இங்கும் நடந்தவள். என்ன பண்றது? அய்யோ பெரிய பிரச்னை ஆகிடுமே! என யோசிக்க.. நிலா நகத்தை கடித்த படி இன்னொரு பக்கம் நின்றிருந்தாள். 

🪔 Exclusive Diwali Offer for Pradhayakuzali Readers
AVS Crackers - up to 90% off, factory direct from Sivakasi Shop Now →

நிலாவின் நினைவுகள் பின்னோக்கி சென்றது. தீரா தீரா என கொஞ்சி கொஞ்சி அழைப்பாள் மீனாட்சி. சலங்கையை ருத்ரன் தான் காலில் கட்டி விடுவான். அவளை காரில் இருந்து தரையில் விட மாட்டான் கையில் ஏந்தி கொள்வான். இடம் காலம் பார்க்காமல் அவர்களின் இரண்டு இதழ்களும் தழுவிக் கொள்ளும் அவ்வப்பொழுது. ருத்ரன் காதல் மொத்தமும் மீனாட்சி. அவருக்கு மீனாட்சி கிடைச்சிட்டா ரொம்ப சந்தோசமா இருப்பார் என நினைத்தாள். 

ஆனால் எப்படி? எப்படி இந்த மீனாட்சி நிவாஸ் அன்னாவோட காதலியாக? ஒண்ணுமே புரியலையே? கண்டிப்பா இது கட்டாய படுத்த இருக்குமா? ருத்ரன பழி வாங்க நிவாஸ் அண்ணா இப்படி பன்றாணா? என்ன பண்றது? எப்படியாவது கண்மணியாக இருக்க மீனாட்சி தான் இதுக்கு விளக்கம் கொடுக்கணும். நம்ம இப்போ உடனே போய் கேட்டுட்டு வருவோம் என புறப்பட்டாள். 

யாரடி நீ? நீயும் தானே அவனை உயிருக்கு உயிராக நேசிக்கிறாய்? ஆமாம் ஆனால் ருத்ரன் மனசுல எனக்கு இடம் இல்லையே! இத்தனை வருடமும் மீனாட்சிய தானே அவர் நினைச்சிட்டு இருக்கார். அதை விட என் தீராவை நினைக்க எனக்கு தகுதி இல்ல. நான் கரை பட்டவள். நான் கலங்கி விட்டேன். இனி என் வாழ்க்கையில் என்ன இருக்கு. என்னோட வாழ்க்கையே அவ்ளோ தான்.. என மீனாட்சியை பார்க்க புறப்பட்டாள் நிலா. 

ஹே எங்கே போற? என ஹரிணி தடுக்க.. “அண்ணி நான் போய் அவங்க கிட்ட பேசிட்டு வந்துடுறேன்.” 

“அய்யோ என்ன டி பண்ற நிலா? கொஞ்சம் அமைதியா இரு! சத்ய தேவ் கிட்ட சொல்லணும்.  உங்க வீட்ல இருக்க யாருக்குமே பொறுமை இல்ல. உன்னையும் சேர்த்து தான் சொல்றேன். இதை எடுத்தோம் கவுத்தோம்ன்னு செஞ்சிட முடியாது. ஏற்கனவே உங்க குடும்பத்துக்கும் ருத்ரன் குடும்பத்துக்கும் சுத்தமா ஆகாது. இப்போ இதை மட்டும் சொல்லிட்டா அவ்ளோ தான்! நான் சத்ய தேவ்க்கு கால் பண்றேன்.” என திரும்ப திரும்ப முயற்சி செய்தாள் ஹரிணி 

ரிங் சென்று கொண்டிருந்தது. ஆனால் சத்தியதேவ் அழைப்பை எடுத்தபாடில்லை போன் ரிதமின் கைகளில் இருந்தது. திரும்பத் திரும்ப போன் பண்றாளா? இவ எதுக்கு இவனுக்கு போன் பண்ணனும்? நான் டைவர்ஸ் வாங்கிட்டு கூட போனாலும்,  இவங்க ரெண்டு பேரும் பேசுறத விடமாட்டேன். என்று அழைப்புகள் திரும்ப திரும்ப வந்ததும் flight mode போட்டாள். சிறிது நேரத்தில் சுவிட்ச் ஆப்பே செய்து விட்டாள் ரிதம். 

நிலா தவிப்புடன் ஹரிணியை பார்த்துக்கொண்டிருக்க “போன் ஃப்லைட் மோட்ல போயிடுச்சு. என்னன்னு தெரியல என்று அவள் கூற, “அப்போ அண்ணா வேலையா இருப்பாங்க. நீங்க தொந்தரவு பண்ணாதீங்க. நான் போய் ஒரு வார்த்தை பேசிட்டே வந்துடுறேன். என்று நிலா கிளம்பினாள். 

அய்யோ  கொஞ்ச நேரம் அமைதியா இரு. ஒரு நாளில ஒன்னும் நடந்துடாது.  நாளைக்கு நிச்சயதார்த்தத்துக்கு கண்டிப்பா சத்திய தேவ் வருவான். அவன் கிட்ட நான் இத பத்தி பேசுறேன். என்று ஹரிணி கூறினாள். 

அண்ணி இந்த நிச்சயதார்த்தமே வேண்டாம்ன்னு சொல்றேன் என்று நிலா. பொந்தில் இருந்து தலையை விடும் பாம்பு போல கூறிக் கொண்டிருக்க… 

அந்த பொண்ண முதல்ல கண்காணிக்கணும் இத நித்தின் கிட்ட எடுத்துட்டு போனாலும் பிரச்சனை தான், அந்த  நிவாஸ் கிட்ட சொன்னா அதை விட பிரச்சனை. அவன் என்னமோ வானத்திலிருந்து கண்மணி குதிச்சு வந்த மாதிரி ஓவரா பண்ணிட்ருக்கான். அதனால நாளைக்கு என்ன நடக்குதுன்னு பார்க்கலாம் வெயிட் பண்ணு. 

நிதின் பிரகாஷ் மற்றும் நிவாஸ் இருவரும் தனது தந்தையின் முன் நின்றிருந்தார்கள்.  என்ன விஷயம்? என்று SP கேட்க…

“உங்ககிட்ட சொல்லாம நாங்க ஒரு விஷயத்தை  அரெஞ் பண்ணிட்டோம் பா!”  

என்ன என்று அருகில் இருக்கும் தன் மனைவி தேஜுவை பார்த்தார் SP. 

அம்மாவுக்கு எதுவும் தெரியாது. அது நம்ம பாப்பாவுக்கும் நாளைக்கு நிச்சயதார்த்தம் பண்ணிடலாம்ன்னு… 

நிவாஸ்!!!  அவளுக்கு என்ன வயசு ஆகுது? கல்யாணம் பண்றது? யாரை கேட்டு  எங்கேஜ்மென்ட் ஃபிக்ஸ் பண்ணீங்க? யார் மாப்பிள்ளை? என்ன டா மனசுல நினைச்சிட்டு இருக்கீங்க? என SP கோபமாக எழுந்து நின்றார். 

நித்தின் பிரகாஷ் தன் தந்தையை பார்த்து ” இது இதுதான் சரி நம்ம இப்பவே கல்யாணம் பண்ணிடனும் நான் சொல்றதை கேளுங்க டாடி!” என்று அழுத்தமான பார்வையுடன் தன் தந்தையின் மீது பதித்தான். 

நான் இதுக்கு சம்மதிக்க மாட்டேன்!  எவனாவது என் பொண்ணை கட்ட வீட்டுக்குள்ள வந்தான்? கால வெட்டி போட்டுருவேன். என்ன நிதின் மினிஸ்டர் கொழுப்பில் பேசிட்டு இருக்கியோ?  ரெண்டு பேரும் பெரிய மனுஷங்களா ஆகிட்டீங்கன்னு ஆடிட்டு இருக்கீங்களா?  நீங்க என் கால் தூசிக்கு சமம் டா என்று கர்ஜனையுடன்,  அவர் இருவரின் கழுத்தை திருகிப் போடும் அளவுக்கு உச்ச ஸ்தானியில் கூறினார். 

அவங்க சொல்றது சரிதான். அவளுக்கு கல்யாணத்தை பண்ணிடலாம் அப்போதான் அவளோட பெர்சனல் லைஃப வாழுவா!  இனி வீட்டோட குடும்பத்தை பார்த்துக்கட்டும்.  இதுதான் சரியான நேரம்.  25 வயசு என்ற தேஜூ கூறினார். 

என்ன டி? இது உன்னோட பிளான் தானா? என் பொண்ணை என் கிட்டருந்து பிரிக்கிரீங்களா? உனக்கு என்ன பைத்தியமா தேஜு? உனக்கு எத்தனை வயசுல கல்யாணம் ஆச்சு? என்று கோபத்துடன் SP தேஜுவின் பக்கம் திரும்ப… 

ஹே நான் சொல்றதை கேளு!  இல்ல உன் பசங்க முன்னாடி அவமானப்பட போறியா சூர்ய பிரகாஷ்!…  என்று பெருமூச்சை விட்டவர். அவளுக்கு இதுதான் கல்யாண வயசு. So ரெண்டு கல்யாணத்தையும் கிராண்டா பண்ணிடலாம். என் பேச்சைத்தான்  இவனுங்க ரெண்டு பேரும் கேட்கல.  அட்லீஸ்ட் என் பொண்ணோட கல்யாணத்தையாவது நான் சந்தோஷமா பாக்குறேனே?  அதுவும் இப்பவே… அண்ட் எனக்கு யாரை பற்றியும் கவலை இல்லை.  நீ முடிவா என்ன சொல்ற?  என்று தேஜு கோபமாக பார்த்தார். 

🪔 Exclusive Diwali Offer for Pradhayakuzali Readers
AVS Crackers - up to 90% off, factory direct from Sivakasi Shop Now →

SPR எதுவும் பேசாமல் அமர்ந்து கொண்டார். நிதின் மற்றும் நிவாஸ் இருவரும் தங்கள் தந்தையை பார்க்க.. “உங்க அப்பாவுக்கு கல்யாணத்தில் சம்மதம். போய் வேலையை பாருங்க.”

இல்ல தேஜு!.  டாடி!..  என நிதின் ஆரம்பிக்க..  போ நிதின் நான் பார்த்துக்கிறேன். என அனுப்பி வைத்தவர் தன் கணவனின் அருகில் அமர்ந்தார். 

இது எதையும் அறியாமல் நிலா தன் ஜீவன் தீரன் என்னும் ருத்ரன் காதலித்த மீனாட்சியை கரம் பிடிக்க வேண்டும் என வேண்டி கொண்டிருக்க, அந்த ஜீவனோ முரட்டு குடியில் மயங்கி கிடந்தான். 

நிலாவின் விருப்பமின்றி புது மாப்பிள்ளை வீடு வர போகிறான். 

இதெல்லாம் ஒருத்தன் தலையில் தான் விடியும். 

தொடரும்.. 

அந்த ஒருத்தன் என்னோட டார்லிங் சத்ய தேவ்

do like and share pradhanyakuzhalinovels

How did this episode feel?
Rate this episode Be the first to rate

💬 Be the first to comment

Share your thoughts

error: Content is protected !!