தீ பிடிக்க தீண்டி விடு

by Pradhanya kuzhali
568 views

promo

அந்த இடத்துக்கு வந்து நிற்கவே மேனியெல்லாம் கூசியது பெண்ணவளுக்கு.
மேம் அவரு உள்ளே வர சொல்லிட்டார்.. நீங்க போகலாம்..என மேனேஜர் பெரு மூச்சுடன் அவளை பார்த்து கூறினார்.

ம்ம் என ஒற்றை பதில் கொடுத்தவள். எந்த வெளிப்பாடும் இல்லாமல் உள்ளே நுழைந்தாள்.

உருண்டு திரண்ட உடல் வாகுடன் அமர்ந்திருந்தவனின் கண்களில் அத்தனை வன்மை ஒளிந்திருந்தது. அவன் எதிர்பார்த்த நாள் வந்து விட்டது. ஆம் அவனை தேடி வந்து விட்டாள் அனு வர்ஷினி.

ஆதி!! என அழைத்தபடி உள்ளே நுழைந்தவளை. அசாதாரணமாக பார்த்தான் ஆதி சேஷன். வெள்ளி விழா நாயகன். இருவரும் இரண்டு படங்களில் ஒன்றாக நடித்திருந்தாலும். இரண்டு வருடங்கள் அவள் ஃபீல்ட் அவுட். அதற்கு காரணம்  சாட்சாத் ஆதியே தான்..

ஆதியா? என அவனது கண்களில் கோபம் கொப்பளித்தது. அனு தலையை குனிந்து கொண்டாள்.

ஆதியின் உதட்டில் புன்னகை மிளிர, எதுக்கு வந்திருக்கேன்னு தெரியும் தானே?

அனு கீழ் உதட்டை கடித்து கொண்டாள். அவளது தேகம் நடுங்கியது. ஆம் சினிமா துறையில் நீடித்து நிலைக்க என்ன தேவை அனுசரிப்பு.. ஆங்கிலத்தில் சொல்ல போனால் adjustment.

நான் ஒன்னும் உன்னை கட்டாயப்படுத்தல தாராளமா நீ என வாசர் கதவை பார்த்தான் ஆதி.

இல் இல்ல.. எனக்கு தெரியும்… என அவளின் குரல் நடுங்க..  நான் எனக்கு என கண்களில் நீர் கோர்க்க உள் இழுத்து கொண்டாள்.

Come closer என சொல்லியபடி சிங்க நாற்காலியில் அமர்ந்தான் ஆதி சேஷன். அனு அவனை நெருங்கினாள்.

ஆத்மன் என வேகமாக அவனை விட்டு விலக முற்பட்டாள் சுடர்.

அவளை இழுத்து முத்தமிட்டான் மூர்க்கமாக.. வேகமாக அவனை தள்ளி விட்ட சுடர் விழி, கொண்ணுடுவேன் ராஸ்கல் என உதட்டை புறங்கையால் துடைத்தாள்.

அவளது போன் சிணுங்கியது. வேலாயுதம் என்று மின்னி கொண்டிருந்த பெயர் உள்ளுக்குள் கோபத்தையும் ஆத்திரத்தையும் கொடுத்தது. வேகமாக போனை விசாரித்தான்.

என் டாடி சம்மதம் இல்லாம என சுடர் சொல்ல வர.. அவளை கைவலைவுக்குள் கொண்டு வந்த ஆத்மன். அந்த ஆளு உன்னோட அப்பனே இல்லடி என கத்தி இருந்தான்.

And தீப்பிடிக்க தீண்டி விடு கதை.. அசுரனும் அகதியும் கதையில் வரும் சுடர் விழி தான் இதுல ஒரு ஹீரோயின்

ஆதி சேஷன் – அனு வர்ஷினி

ஆத்மன் – சுடர் விழி

கமெண்ட் வேணும் நிறைய..  மங்கையவள் site ல எழுத முடிவு பண்ணிட்டேன் தீ மார்ச் ல இருந்து தீ பிடிக்கும் படிக்க படிக்க 🫣🫣🫣🤣🤣🤣🔥🔥🔥

You may also like

Leave a Comment