🦚 பிரதன்யா குழலி நாவல்களுக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்!📖 படியுங்கள், ரசியுங்கள், கதைகளின் உலகில் மூழ்குங்கள்🪶 கதைகளின் தோகை விரியும் இடம்💎 இலவசம் முதல் பிரீமியம் வரை, உங்களுக்குப் பிடித்த கதையைத் தேர்ந்தெடுங்கள்🦚 பிரதன்யா குழலி நாவல்களுக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்!📖 படியுங்கள், ரசியுங்கள், கதைகளின் உலகில் மூழ்குங்கள்🪶 கதைகளின் தோகை விரியும் இடம்💎 இலவசம் முதல் பிரீமியம் வரை, உங்களுக்குப் பிடித்த கதையைத் தேர்ந்தெடுங்கள்🦚 பிரதன்யா குழலி நாவல்களுக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்!📖 படியுங்கள், ரசியுங்கள், கதைகளின் உலகில் மூழ்குங்கள்🪶 கதைகளின் தோகை விரியும் இடம்💎 இலவசம் முதல் பிரீமியம் வரை, உங்களுக்குப் பிடித்த கதையைத் தேர்ந்தெடுங்கள்🦚 பிரதன்யா குழலி நாவல்களுக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்!📖 படியுங்கள், ரசியுங்கள், கதைகளின் உலகில் மூழ்குங்கள்🪶 கதைகளின் தோகை விரியும் இடம்💎 இலவசம் முதல் பிரீமியம் வரை, உங்களுக்குப் பிடித்த கதையைத் தேர்ந்தெடுங்கள்
1. மன்னவன் மயங்கும் மலரவள்
செம்பருத்தி
📖 செம்பருத்தி · Chapter 1 of 33

மன்னவன் மயங்கும் மலரவள்

  • 7 Feb 2026
  • 2,610 reads
  • ☆ No ratings yet
  • 7 min read

அத்தியாயம் -1

வானத்தைத் தொடும் அளவுக்கு உயரமாக வளர்ந்திருந்த அந்தக் கட்டிடங்களைப் பார்க்கும்போது அவனது உதட்டுக்குள் ஒரு கர்வம் மின்னியது. “அதெல்லாம் எம்.ஜி. கன்ஸ்ட்ரக்‌ஷன் பெயர் சொல்லும்.”

“பாஸ், டாக்டர் சுப்ரியா மேம் லைன்ல இருக்காங்க,” என காரியதரிசி ஸ்ரீராமின் குரல் கேட்டதும் தான் தன்னிலைக்கு வந்தான் குருசேத்ரன். பேரில் மட்டும் குரு இல்லை, அனைவர் வாழ்விலும் குரு பெயர்ச்சி செய்து ஆட்டிப் படைப்பவன்.

🪔 Exclusive Diwali Offer for Pradhayakuzali Readers
AVS Crackers - Diwali special, up to 90% off, Sivakasi factory direct Shop Now →

“அப்பாயின்ட்மென்ட் வாங்கினாளா?” எனக் குரு கேட்க, ஸ்ரீராம் திகைத்து விழித்தான்.

“ஹே ஹலோ! ஸ்ரீராம், நீ ஸ்பீக்கர்ல போடு!” என்று கூச்சலிட்டாள் சுப்ரியா.

“மேடம்…” என அப்பொழுதும் ஸ்ரீராமின் பார்வை தன் முதலாளியின் மீது இருக்க, “ம்ம்” என கர்ஜித்தான் குருசேத்ரன்.

அடுத்த நொடி பொரிந்து தள்ளினாள். “டேய், எனக்காக ஒண்ணும் நான் கால் பண்ணல. அண்ட் சத்தியமா உனக்கு கால் பண்ணி பேச எனக்கு ஒரு பர்சன்ட் கூட ஆசையில்ல. உங்க மம்மியப் பார்த்துக்க வந்த நர்ஸை என்னடா பண்ண? அந்தப் பொண்ணு பெட்ல படுத்துடுச்சு. அந்த அளவுக்கு ஒர்க் பிரஷர் பண்ணியிருக்க நீ!” என்றாள் சுப்ரியா.

“சி பிரியா! நீ என்ன ஹாஸ்பிடல் நடத்துற? அந்த நர்ஸுக்கு ஒரு பிரஷர் கூட கரெக்டா எடுக்கத் தெரியல. ஒரு தெர்மோமீட்டர் வைக்கத் தெரியல! எனக்கு ஒர்க்ல பங்சுவல் முக்கியம். அந்தக் கேர்ள் ஆடி அசைஞ்சி ஃபுல் மேக்கப்ல வரா! டூ இரிடேட்டிங். ஐம் பிளாஸ்ட். அதான் கேட்டேன்,” என்றான் குருசேத்ரன்.

ஸ்ரீராம் பயத்தில் அமர்ந்திருந்தான். ஆம், குருவுக்குப் பொறுமை என்பது மிக அரிது. எல்லாவற்றையும் மிகவும் வேகமாக, நேர்த்தியாக செய்பவன். காலில் சக்கரத்தைக் கட்டிக்கொண்டு ஓடுவான். அப்படி அவன் சக்கரத்தைக் கட்டிக்கொண்டு ஓடியதால் தான் இன்று கொங்கு மண்டலத்தில் இருக்கும் பெரும்பாலான ஹாஸ்பிடல், பள்ளிகள், கல்லூரிகள் அனைத்தும் எம்.ஜி. கான்ஸ்ட்ரக்‌ஷனில் கட்டப்பட்டிருக்கிறது.

இதோ அடுத்த கட்டமாக மிகப்பெரிய ப்ராஜெக்ட் மல்டி நேஷனல் தீம் பார்க் ப்ராஜெக்ட்டுக்காகச் சென்று கொண்டிருக்கிறான் அதை கைப்பற்ற. அது தனக்குத் தான் என மமதையில் செல்கிறான்.

சுப்ரியா மறுமுனையில் பெருமூச்சு விட,

“சுப்ரியா, பெட்டர் நீ நர்ஸ் எலிஜிபிலிட்டி டெஸ்ட் வச்சு என் அம்மாவுக்கு பெஸ்ட் நர்ஸ் கொண்டு வா!” என்றவன், “கொண்டு வர,” என்று அதிகார தொனியில் கூறிவிட்டு, “அதை விட உனக்கு என்ன வேலை? ஹான்?” எனச் சொல்லிவிட்டு போனை கட் செய்தான்.

“இந்த பையன்?” என நினைத்துக்கொண்டே சூழல் நாற்காலியில் சாய்ந்தாள் சுப்ரியா.

அவளும் குருசேத்ரனும் சிறுவயது நண்பர்கள், ஒன்றாகப் படித்தவர்கள். மேல் படிப்பில் குரு பொறியியல் சென்றுவிட, சுப்ரியா மருத்துவம் தேர்வு செய்தாள்.

“என்ன பண்றது?” என யோசித்துக்கொண்டிருந்தாள். அந்த நேரம் கதவு தட்டப்பட்டது.

“ஹான், கம் இன்,” என சுரத்தே இல்லாத குரலில் பதில் கொடுத்தாள்.

ஹெட் நர்ஸ் வித்யா உள்ளே வந்து, “டாக்டர், திஸ் இஸ் செம்பருத்தி, ஸ்டாஃப் நர்ஸ்சாக அப்பாயின்ட் பண்றதுக்காக,” என அவளைக் காட்டினார்.

“குட் மார்னிங் டாக்டர்!” எனப் புன்னகை முகமாக கோப்புகளை நீட்டினாள் செம்பருத்தி.

“ம்ம்,” என வாங்கிப் பார்த்தவள், கொஞ்சம் ஆர்வத்துடன், “நல்ல கட் ஆஃப் வாங்கிருக்கீங்க, அப்புறம் ஏன் நர்சிங் சூஸ் பண்ணீங்க? கண்டிப்பா உங்களுக்கு எம்.பி.பி.எஸ். சீட் கிடைச்சிருக்குமே?” என இருக்கையைக் காட்டிவிட்டு, வித்யாவைப் பார்த்து கையசைத்தார்.

வித்யா தலையசைப்புடன் சென்றுவிட, செம்பருத்தி புன்னகையுடன், “தேங்க்ஸ் மேம். எனக்கும் மெடிக்கல் படிக்க ஆசைதான், ஆனா டொனேஷன் கொடுக்குற அளவுக்கு வசதி இல்ல. வீட்ல கஷ்டம் அதனால,” என்றாள்.

“ஓ, ஓகே! மோகன் குமாரமங்கலத்தில் நர்சிங் பண்ணியிருக்கீங்க ரைட்?”

“எஸ் மேம்.”

“எங்கெங்கே பிராக்டிஸ் பண்ணீங்க?” எனக் கோப்பை மூடி வைத்துவிட்டு கேட்டாள் சுப்ரியா.

🪔 Exclusive Diwali Offer for Pradhayakuzali Readers
AVS Crackers - up to 90% off, factory direct from Sivakasi Shop Now →

செம்பருத்தி மிகவும் பொறுமையாக, நேர்த்தியாக பதில் கொடுக்க, சட்டென சுப்ரியா மண்டையில் பளீர் என்று பல்ப் எரிந்தது. ‘பேசாம மணியம்மை ஆன்டியைக் கேர் பண்ணிக்க சரியான ஆள் இந்தப் பொண்ணுதான்,’ என நினைத்தாள்.

செம்பருத்தி அனைத்து பதிலையும் கூறி முடித்தவள் சுப்ரியாவைப் பார்க்க, அவளோ பராக்குப் பார்த்துக்கொண்டிருந்தாள்.

“க்கும்… டாக்டர்,” எனச் செம்பருத்தி அழைக்கவும் தான் தன்னிலைக்கு வந்தாள் சுப்ரியா.

“வேற எதுவும்?” எனத் தயங்கிய படி கேட்டாள் செம்பருத்தி.

“அப்புறம் உங்க ஃபேமிலி பத்தி சொல்லுங்க.”

“அப்பா கட்டிட மேஸ்திரி, அம்மா ஹவுஸ் ஒய்ஃப்.”

“அப்போ வீட்டுக்கு ஒரே பொண்ணு,” எனச் சுப்ரியா சிரித்துக்கொண்டே கூற, “இல்ல, அது வந்து…”

“என்னாச்சு?” என சுப்ரியா உற்றுப் பார்க்க, “எங்க ஃபேமிலி கொஞ்சம் பெருசு மேம், எங்க வீட்ல நான் நாலாவது பொண்ணு,” என்றாள் செம்பருத்தி.

“இதுல என்ன இருக்கு?” என சுப்ரியா கூற, ஒரு பெருமூச்சு விட்டவள், “எனக்கு மூணு நாலு சிஸ்டர்ஸ், ஒரு பிரதர்,” எனக் கூறினாள். அதற்கு மேல் எதையும் கூறவில்லை.

“ஓகே, டன். நீ செலக்டட், கங்கிராஜுலேஷன்ஸ்,” என்றாள் சுப்ரியா.

“தேங்க்ஸ் மேம்,” என கன்னக்குழி தெரிய சிரித்தாள் செம்பருத்தி.

“ஒன் மினிட்,” என்றவள் லேண்ட் லைனில் அப்பாயின்ட்மென்ட் ஆர்டரை தயார் செய்யச் சொன்னாள். அடுத்த பத்து நிமிடத்தில் சூடாகத் தயாரானது ஆர்டர் காப்பி.

சுப்ரியா அவளைப் பார்த்து, “சீ செம்பருத்தி, நீங்க ஒர்க் பண்ண போறது ஒரு வீட்ல…”

“ஹாங்?” என அவள் புரியாமல் பார்க்க, “செம்பருத்தி, ரிலாக்ஸ் டியர். என்னோட ஆன்டி கொஞ்சம் சுகர் பிரஷர் பேஷன்ட். அவங்களை கவனிக்காம விட்டு சுகர் கிட்னிய அபெக்ட் பண்ணி டயாலிசிஸ் பண்ற ஸ்டேஜ்க்கு முன்னாடி நாங்க சேவ் பண்ணிட்டோம். இப்போ அவங்க ஓகே. ஒரு சிக்ஸ் மந்த் அவங்களை பார்த்துக்கணும். உங்களுக்கு சம்பளம் 40000,” என்றாள் சுப்ரியா.

“என்ன மேம் சொல்றீங்க? எனக்கு எக்ஸ்பீரியன்ஸ் கூட கம்மி தான். ஆனால் நீங்க?” என செம்பருத்தி கேட்க, “என்னோட ஆன்டியோட ஹெல்த் சம்பந்தப்பட்ட விஷயம் செம்பருத்தி. அதான் இந்த அமௌன்ட். நீங்க அங்கேயே தங்கிப் பார்க்கணும். அதுக்குத் தான் இந்த அமௌன்ட்,” என்றாள்.

சுப்ரியாவுக்கு நிச்சயமாகத் தெரியும் அவள் கண்டிப்பாக ஒத்துக்கொள்வாள் என்று. அதற்கு காரணமே செம்பருத்தியின் குடும்ப சூழல் தான். அதை விட தெளிவு, நேர்த்தி, பொறுமை என அனைத்தும் இருக்கிறது செம்பருத்தியிடம். இதுவரை 15 நர்சுகள் மணியம்மையை பார்க்கச் சென்று ஒரு மணி நேரத்தில் பிச்சுக்கொண்டு வந்திருக்கிறார்கள். அதற்கு காரணம் சாட்சாத் குருசேத்ரன் தான்.

“ஆனால் மேம், நான் நைட்டு வீட்டுக்கு போகணும். இதுல காம்ப்ரமைஸ் பண்ண முடியாது,” என்றாள்.

“ஹாஸ்பிடலுக்கு எப்படியும் ஷிஃப்ட் டியூட்டி வருவீங்கதான?” என சுப்ரியா கேட்க, “ஆனால் மேம்,” என மறுபடியும் இடைமறித்தாள் செம்பருத்தி.

“சீ செம்பருத்தி, ஜஸ்ட் ரிலாக்ஸ்! இது கட்டாயம் இல்லை. நீங்க விருப்பப்பட்டால் கேர் பண்ணிக்கப் போலாம், இல்லன்னா ஹாஸ்பிடலில் இங்கேயே ஒர்க் பண்ணலாம். உங்களுக்கு 18000 சம்பளம். 6 மாசம் ட்ரைனிங் பீரியட் முடிஞ்சதும் 2000 ஏத்துவோம். ஒரு நாள் டைம் எடுத்துக்கோங்க, நாளைக்கு வந்து என்னைப் பாருங்க,” என்று சாதாரணமாகக் கூறி அனுப்பி வைத்தாள் சுப்ரியா.

“40000-மா? இல்ல 20000-மா? எதை சூஸ் பண்றது?” என குழப்பமான மனநிலையுடன் ஹாஸ்பிடலில் இருந்து வெளியே வந்தவள், தெரியாமல் ஒரு காரில் இடிக்கச் செல்ல, “ஹே, இடியட்!!” என கத்தினான் குருசேத்ரன்.

🪔 Exclusive Diwali Offer for Pradhayakuzali Readers
AVS Crackers - up to 90% off, factory direct from Sivakasi Shop Now →

டிரைவர் ரத்னவேல் பயந்தபடி அவனைப் பார்க்க, ஸ்ரீராம் சீட்டில் ஒட்டி வைத்துக்கொண்டான்.

சட்டென சுயநினைவுக்கு வந்தவள், “சாரி சார்!” என்றாள்.

“நீ விழுந்து வர என் வண்டி தான் கிடைச்சதா? வேற வண்டி பார்த்து விழு! கண்ட்ரி ப்ரூட்,” எனத் திட்டினான்.

செம்பருத்தி அவனை ஒரு பார்வை பார்த்தவள், அதன் பின் ஒரு பொருட்டாக மதிக்காமல் நடந்து சென்றாள்.

டிரைவர் இன்னும் உள்ளே செல்லாமல் இருக்க, “ரத்னவேல், உங்களை வெத்தலை பாக்கு வச்சு அழைக்கணுமா?” எனக் கத்தினான் குரு.

“சாரி சார்,” என வேகமாகப் பார்க்கிங் பக்கம் செல்ல, “நோ பார்க்கிங் இங்கே, வெறும் 5 நிமிசம் தான் ஸ்கெட்யூல், சோ வெயிட் பண்ணுங்க,” என இறங்கிச் சென்றான். அவன் பின்னால் ஓட்டமும் நடையுமாக ஓடினான் ஸ்ரீராம்.

“என்னாச்சு? நர்ஸ் ரெடியா?” எனக் கேட்டுக்கொண்டே உள்ளே நுழைந்தான் குரு.

“கண்டிப்பா நாளைக்கு வரும்டா ஒரு நர்ஸ்,” என்றாள் சுப்ரியா.

“அப்படியா? சரி, கிளம்பு.”

“எங்கேடா?”

“அதுவரைக்கும் அம்மாவ நீ வந்து பார்த்துக்கோ! ஸ்ரீராம், போய் சுப்ரியா பேக் எடுத்திட்டு அவளை ஃபாலோ பண்ணு.”

“பாஸ்!” எனத் திடுக்கிட்டுப் பார்த்தான் ஸ்ரீராம்.

“ஹே, ஃபாலோ பண்ணு! ஹே, வா பிரியா, போலாம்,” எனக் கதவைத் திறந்தான்.

ஹெட் நர்ஸ் வித்யா வர, சுப்ரியா பெருமூச்சுடன், “சுஜாதா மேடம வரச் சொல்லிடுங்க, நான் புறப்படுறேன்,” எனச் சென்றாள்.

வேறு என்ன செய்ய முடியும் அவளால்?

குரு சொன்னதை போலவே 5 நிமிடத்துக்குள் காரில் ஏறி இருந்தான். சீறிப் பாய்ந்து கொண்டு வீடு வந்து சேர்ந்தது.

“ஹே சாந்தா, வாய் நமா நமான்னு இருக்கு, அப்படியே அந்த மைசூர் பாகு கொஞ்சமா கொடு, பட்டும் படாமல் கடிச்சிக்கிறேன்,” என்றார் மணியம்மை.

“மைசூர் பாகு எதுக்கு? நேரா மைசூர் போயிட்டு வாங்களேன்,” என சொல்லிக்கொண்டே உள்ளே நுழைந்தான் குருசேத்ரன்.

“ஐயோ, வந்துட்டானே! எந்த நேரத்தில் இவனோட சாத்தான்… ஐயோ தாத்தாக்காரன் குருசேத்ரன்னு வச்சான்னு தெரியல, போருக்குப் போறவன் மாதிரியே திரிஞ்சி என்னை டார்ச்சர் பண்றான்,” என முனகிய மணியம்மை, “அடடே, குரு தங்கம், வாடா கண்ணா,” என டோனை மாற்றினார்.

“மாம், உங்க ரீல் முடிஞ்சிடுச்சு,” எனப் புருவத்தைச் சுருக்கிப் பார்த்தான்.

🪔 Exclusive Diwali Offer for Pradhayakuzali Readers
AVS Crackers - Diwali special, up to 90% off, Sivakasi factory direct Shop Now →

“கடவுளே, இவன் கிட்டருந்து என்னை காப்பாத்து?” என மணியம்மை வேண்ட, இங்கே செம்பருத்தி குருசேத்ரன் வீட்டுக்கு வேலைக்கு வர ஒத்துக்கொண்டாள்.

தொடரும்.

How did this episode feel?
Rate this episode Be the first to rate

💬 Be the first to comment

Share your thoughts

error: Content is protected !!