அத்தியாயம்- 32
“என்ன சொல்லணும்? இப்போவே சொல்றேன்!!” என காலை மெல்ல பிடித்து முத்தமிட்டான்.
“தேடி கண்டுபிடி குருசேத்ரன். என்னைக் கல்யாணம் பண்ண எவ்ளோ ‘பிளான்’ போட்டிருப்ப? உன் அம்மாவோட வாயில் இருந்து என்னோட பேர் வர என்னென்ன செஞ்சிருப்ப? அதே போல இதையும் கண்டுபிடி!!” என்றாள் செம்பருத்தி.
“கண்டிப்பா!” என மார்தட்டிக்கொண்டான் குரு. இப்படி அவன் செம்பருத்தியின் காலைப் பிடித்திருக்கும் காட்சியை எம்.ஜி. கன்ஸ்ட்ரக்சனில் வேலை செய்வோர் யாரேனும் பார்த்தால் எப்படி இருக்கும்? என அவனுக்கே தோன்றியது. ‘இது வெறும் hypothetical தான்’ என தனக்குத்தானே சொல்லிக்கொண்டான்.
“சரி, எனக்குத் தூக்கம் வருது,” என அவள் எழுந்து கொள்ள…
“முத்தம்?”
“அதான் காலுக்குக் கொடுத்தியே, அப்புறம் என்ன?”
“ப்ளீஸ்டி, கெஞ்சுறேன்,” என குருசேத்ரன் கூற…
“அன்னிக்கு என்ன பண்ண? ம்ம், உன்னோட அம்மாவுக்கு 5 ரவுண்டு தோட்டத்தைச் சுத்தி வர ‘பனிஸ்மென்ட்’ பண்ண தான?”
“அப்படியா? எனக்கு ஞாபகம் இல்லையே!” என குருசேத்ரன் சொன்னான்.
“அப்போ இல்ல, தள்ளிப் போ!!” என செம்பருத்தி நகர…
“ஹே, ப்ளீஸ்டி! ப்ளீஸ்!!” என்று கெஞ்சினான்.
“உன்னையும் பார்த்தா பாவமா இருக்கு. அதுவும் எம்.ஜி. கன்ஸ்ட்ரக்சனோட ஓனர் இப்படி சாதாரண ஒரு ‘நர்ஸ்’ கிட்ட கெஞ்சினால் அது பார்க்க ஒரு மாதிரி தான் இருக்கும். சரி வா வந்து ‘கிஸ்’ பண்ணு,” என அழைத்தாள் செம்பருத்தி.
குருசேத்ரன் அருகில் நெருங்கினான்.
“தள்ளிப் போ!”
“என்னாச்சு?”
“போய் ‘ப்ரஷ்’ பண்ணிட்டு வா!” என ஆயாசமாக அமர்ந்தாள் செம்பருத்தி.
“என்னை ரொம்ப மோசமா ‘ட்ரீட்’ பண்ற நீ?”
“டேய், போடா!” என செம்பருத்தி காலை ஆட்டிக்கொண்டு இருந்தாள்.
அடுத்த கால் மணி நேரத்தில் அவளின் முன் வந்தான்.
அவனை இந்த நிலையில் பார்க்க மிகவும் சுவாரசியமாக இருந்தது அவளுக்கு.
“‘ப்ரஷ்’ பண்ணிட்டேன். ‘மவுத் வாஷ்’ பண்ணிட்டேன்,” என்றவன் அருகில் நெருங்கி மோவாய்ப் பிடித்தான்.
“எனக்குப் ‘பெர்ஃப்யூம்’ ஸ்மெல் பிடிக்கல. போய் குளிச்சிட்டு வா! என்றாலே பார்க்கலாம்.”
“குளிச்சிட்டேன். இன்னொரு முறை இ பண்ணிட்டேன்.”
“என்னை இ ய ‘மேட்டர்’ பண்ணியா?”
“ஹே,” என குருசேத்ரன் முகம் கோபத்தில் சிவக்க…
செம்பருத்தி வாயைப் பொத்திக்கொண்டு சிரித்தாள்.
“சிரிக்காத டி!” என்று தலையைக் கோதினான்.
“உனக்கு என்னை பார்த்தா எப்படித் தெரியுது? ஹே வா! சீ போடி! என்ன, என்னைப் பார்த்தா ‘தேர்ட் பெர்சன் சிங்குளர்’ போல இருக்கா? அப்போ நானும் உன்னை இனி ஹே சீ போடா நாயே! மனிதக் குரங்கே! மலைக்குரங்கே! அப்படின்னு கூப்பிடவா?”
“நம்ம முத்தத்தைப் பத்திப் பேசிட்டு இருந்தோம்,” என்றவன் அருகில் நெருங்கி அவளின் உதட்டில் முத்தமிட்டான். மென்மையுடன்…
செம்பருத்தி அப்படியே படுக்கையில் சரிந்து சொக்கி கிடந்தாள்.
“என்னை பிடிக்கும் தான உனக்கு?”
“பிடிக்கல! சுத்தமா!…”
“பொய் சொல்ற!”
“அதுக்கு அவசியமில்ல. எனக்குப் பிடிச்சிருந்தால் நான் நேரடியா சொல்லியிருப்பேன். உன்னை எனக்குப் பிடிக்கல! உன் விருப்பத்துக்கு என்னைக் கட்டிக்கிட்ட! எனக்குன்னு ஒரு ‘ஸ்பேஸ்’ இல்ல. அதனால உன்னை எனக்கு…” என்று உதட்டைப் பிதுக்கினாள்.
“பிடிக்க என்ன பண்ணணும்?”
“சிக்ஸ்பேக் வைக்கணும்.”
“சீக்கிரம் வந்திடும்.”
“என் காலைப் பிடிக்கணும்.”
“ம்ம், இப்போவே,” என பிடித்துக்கொண்டான்.
செம்பருத்தியின் உதட்டில் மெல்லிய புன்னகை.
“என்னை உனக்கு பிடிக்குமா?” என கேட்டாள் செம்பருத்தி.
“ம்ம், உன்னைப் பிடிக்கும்.”
“அது பொய் தான! அந்த வீடியோ கிளிப்ல பார்த்தேனே. என்னைக் கொல்ற அளவுக்குப் பிடிக்காதுன்னு சொன்னியே!”
“ஆமா, சொன்னேன். பட் உன்னை ‘கிஸ்’ பண்ணதும் தெரிஞ்சது.”
“என்ன?”
“என்னோட முடிவு நீயா இருப்பன்னு. உன்கிட்ட தான் நானு அடங்கிப் போறேன்னு தெரிஞ்சுகிட்டேன்,” என்றான் குரு.
“அடேங்கப்பா! இப்படியெல்லாம் பேசி என்னை மயக்க முயற்சி பண்ணாத! நான் மயங்க மாட்டேன்,” என்றவள் அவனுக்கு முதுகு காட்டிப் படுத்துக்கொண்டாள்.
அடுத்த நாள் ஆரவாரத்துடன் விடிந்தது. சுப்ரியாவின் முன் இருவரும் அமர்ந்திருந்தார்கள்.
“என்ன?” என குரு கேட்க…
“சர்விக்கல் ஸ்டிட்ச் போடணும். குழந்தை கொஞ்சம் கீழே இறங்கி இருக்கு,” என்றாள் சுப்ரியா.
குருசேத்ரன் அவளின் கையை இறுக்கமாகப் பிடித்துக்கொண்டு ஒருவித நடுக்கத்துடன் செம்பருத்தியின் நெற்றியில் முத்தம் பதித்தான்.
“டேய், என்ன பண்ற?” என சுப்ரியா கேட்பதற்குள் செம்பருத்தியின் உதட்டைக் கவ்வியிருந்தான்.
“குரு, நீ ‘டூ மச்சா’ பண்ணிட்டு இருக்க? இது சாதாரண ‘ஆபரேஷன்’ அப்படி கூட சொல்ல முடியாது. சும்மா லேப்ராஸ்கோப்ல தான் பண்ணப் போறோம். உன்னோட இந்தப் பாசம் பொழியும் வேலையை வீட்டுக்குப் போய் பண்ணுடா தடிமாடு,” என்றாள்.
வேகமாக அவனை விலக்கி விட்டாள் செம்பருத்தி. மூச்சு வாங்கிக்கொண்டே…
“முடிஞ்சதா?” என சுப்ரியா திரும்ப… விரலில் முத்தமிட்டு கண்ணில் ஒற்றினான் குரு.
“டேய், என்னோட இதயம் வீக்கா இருக்கு,” என சுப்ரியா கூறிக்கொண்டே நிமிர அங்கே ஸ்ரீராம் இந்த விரல் முத்தக் காட்சியைக் பார்த்துக்கொண்டிருக்க, ‘பென் ஸ்டாண்டை’ தூக்கி வீசினாள் அவன் மேல்.
“அது நான் எதையும் பார்க்கல மேடம்,” என்றான் ஸ்ரீராம்.
“இன்னும் இதே இடத்தில் நீ நின்னா ‘ஸ்லிப்பர்’ வரும்!!” என சுப்ரியா பற்களைக் கடித்துக்கொண்டு கூற வேகமாக வெளியே ஓடிவிட்டான் ஸ்ரீராம்.
“டாக்டர், என்னைக்கு ‘ஆப்பரேஷன்’ பண்ணலாம்? நான் ரெடி,” என செம்பருத்தி கூற…
“இப்போ கூட நான் ரெடி! ஆனால் உன் புருஷன் இங்கே இருந்து போகணும்,” என சுப்ரியா கூறிவிட்டு எழுந்தாள்.
“நான் ‘ஆப்பரேஷன் தியேட்டருக்கு’ வருவேன்.”
“உனக்கு ஒரு ‘ஆப்பரேஷன்’ பண்றேன் டா!!” என சுப்ரியா ‘பேப்பர் வெயிட்டை’ தூக்கினாள்.
“நாளைக்கு காலையில் வச்சுக்கலாம் டாக்டர்,” என்று விட்டு செம்பருத்தி எழுந்தாள்.
“இந்த குழந்தைகள் வேணாம். உனக்கு எதுவும் ஆச்சுன்னா நான் செத்துடுவேன்,” என்றான் குரு.
“உயிரை எடுக்காதீங்க குருசேத்ரன். என் பின்னாடி வராதீங்க, ப்ளீஸ். நான் தைரியமா இருக்கேன். எனக்கு என்னோட குழந்தைங்க வேணும். தட்ஸ் இட்” என்று விட்டு நடந்தாள் செம்பருத்தி.
அன்று இரவு அவளையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருந்தான்.
“டேய் மலைக்குரங்கு, உனக்கு என்னடா கேடு!”
“ப்ளீஸ்டி, எனக்குப் பயமா இருக்கு.”
“அய்யோ, விடேண்டா என்னை!! ஒண்ணும் ஆகாது! ப்ளீஸ் குரு. என்னைத் ‘டார்ச்சர்’ பண்ணாதீங்க,” என அவள் தலையைச் சொரிந்துகொண்டே எழுந்து அமர்ந்தாள்.
கண்களில் நீர் கோர்க்கப் பார்த்தான்.
“டேய், அழறயா?” என செம்பருத்தி அதிர்ந்து கேட்டாள்.
அவன் வேக மூச்சுடன் பார்த்தான். செம்பருத்திக்கு அவனைப் பார்க்க மிகவும் பாவமாக இருந்தது. கோபத்தை மீறி ஒரு நேசம். அதைக் காதலாகவும் வைத்துக்கொள்ளலாம். இல்லை தன் குழந்தைகளின் தகப்பன் என்னும் உணர்வில் எடுத்துக்கொள்ளலாம்.
குருசேத்ரன் வேகமாக எழுந்து கொள்ள, “ஹே கங்குவா!! இங்கே வா!!”
“ம்ம்,” என அவளைத் திரும்பிப் பார்த்தான்.
“ம்ம், வா! பக்கத்தில் வா!”
குருசேத்ரன் அருகில் செல்ல, அவனை அமர்த்திக்கொண்டவள், “கண்டிப்பா எனக்கு எதுவும் ஆகாது. என்னோட ஆயுள் கைதி நீ! உன்னை ‘டார்ச்சர்’ பண்ணாம அவ்ளோ சீக்கிரம் விட்டுப் போக மாட்டேன்,” என்றவள் அவனது தோளில் சாய்ந்துகொண்டு “எனக்குத் தூக்கம் வருது. வா, தூங்கலாம்,” எனப் படுத்துக்கொண்டாள்.
அடுத்த நாள் கலவரம் செய்தான் என்று தான் சொல்ல வேண்டும்.
லேப்ராஸ்கோப்பிக் நல்லபடியாக முடிந்து ‘ICU’வுக்கு மாற்றப்பட்டாள்.
அடுத்த நாள் ‘நார்மல் வார்டுக்கு’ ‘ஷிஃப்ட்’ ஆகியிருந்தாள் செம்பருத்தி. திவ்யன், தீட்சண்யன், கீர்த்தனா, திலகா என மொத்த குடும்பமும் வந்து பார்த்துச் சென்றார்கள். பாரி, செல்வி, துளசி, கர்ணன், சம்பூர்ணம், தர்மன், ரோஜா என அனைவரும் பார்த்து விட்டுச் சென்றார்கள்.
மறுபடியும் திவ்யன் சம்பூரணத்துடன் ஒருமுறை வந்தான்.
மணியம்மை தன் மகனிடம், “எப்போ வீட்டுக்குப் போகலாம்னு கேட்டு வா குரு,” என அனுப்பினார்.
“இதோ மா!” என குருசேத்ரன் சென்றுவிட…
“செம்பருத்தி, இந்தா மா ஜூசு குடி,” என நீட்டினார்.
“ம்ம், அத்தை,” என அவள் வாங்கிக்கொள்ள…
“வளைகாப்பு முடிச்சதும் ஒரு சின்ன வேண்டுகோள்.”
“சொல்லுங்க அத்தை!”
“நீ இங்கேயே நம்ம வீட்டில் இருந்திடு,” என்றார் மணியம்மை.
செம்பருத்தி திடுக்கிட்டுப் பார்க்க, மணியம்மை சோர்வுடன், “நீ மட்டும் உன் அம்மா வீட்டுக்குப் போறதாக இருந்தால் கூடவே குருவையும் கூட்டிட்டுப் போயிடு.”
“என்ன அத்தை சொல்றீங்க?” என செம்பருத்தி புரியாமல் கேட்டாள்.
“உன் புருஷன் இந்த ரெண்டு நாளில் எவ்ளோ அட்டூழியம் பண்ணான் தெரியுமா? சத்தியமா சொல்றேன், என்னால அவனை சமாளிக்க முடியல. அதுதான் உண்மை. அந்த அளவுக்கு உன்மேல் பைத்தியமா ஆகிட்டான். அப்படி என்னடி பண்ண?”
“காமெடி பண்ணாதீங்க அத்தை!” என செம்பருத்தி டம்ளரை நீட்டினாள்.
“என்ன காமெடி? அவன் தான் என்கிட்ட வந்து உன்னைக் கல்யாணம் பண்ணிக்க கேட்டான். கட்டினான். உன்னை மட்டும் தான் கட்டுவேன்னு சொன்னான். எனக்கு ஒரே குஷி. என் மனசுல இருந்த விஷயம் தான் என் பையன் மனசுலேயும் இருந்திருக்கு. அதை விட உன்னை ‘லவ்’ பண்றேன்னு சொன்னான். கேட்கவே எனக்குச் சிரிப்பா வந்தது. அதுக்கு என்னை திட்டினான் தெரியுமா?” என்றார் மணியம்மை.
செம்பருத்தி ஒரு நொடி ஸ்தம்பித்துப் பார்த்தாள். ‘அப்போ நிஜமாவே அந்த மலைக்குரங்கு லவ் பண்ணுச்சா?’ என்ற கேள்வி தான் ஓடிக்கொண்டிருந்தது. ‘ம்ம், இப்படிப்பட்ட மனுஷன் கிட்ட நான் மாதவன், மேடி மாதிரியா ‘லவ் எக்ஸ்பிரஸ்’ எதிர்பார்க்க முடியும். இந்தக் ‘கிரியேச்சர்’ ‘லவ்’ பண்ணுச்சுன்னு சொன்னதே அதிசயம் தான். அதுல என்னை…’ என்றவளுக்கு உடல் வலிகள் அனைத்தும் சட்டென்று மறைந்து காதல் அணுக்கள் மொத்தமாகப் பரவியது. இதோ அந்தக் காதல் அணுக்கள் உருவாகக் காரணமானவன் காந்தக் கண்களுடன் நுழைந்தான்.
“நாளைக்கு காலையில் வீட்டுக்குப் போயிடலாம் மா!” என்றான் குரு.
“அப்போ ஓகே,” என்றவர் செம்பருத்தியின் பக்கம் திரும்பி, “என்ன மா சொல்ற? நான் கேட்டதுக்குப் பதில்?” என்றார் மணியம்மை.
“அதுக்கு இன்னும் 5 மாசம் இருக்கே அத்தை. அப்புறம் பார்த்துக்கலாம்,” என்றாள்.
“என்ன விஷயம்?” என குருசேத்ரன் கேட்க…
“வளைகாப்பு முடிஞ்சு எங்க வீட்டுக்குப் போறேன். அதுக்குத் தேவையான பொருள் எல்லாம் வாங்க உங்க அம்மா கிட்ட திங்க்ஸ் ‘லிஸ்ட்’ போட்டேன்.”
இதைக் கேட்டதும் குருசேத்ரன் முகம் இறுகிப் போனது.
மணியம்மை பேச வர, செம்பருத்தி இடைமறித்து, “நீங்க வீட்டுக்குக் கிளம்புங்க அத்தை. அவர் என்னைப் பார்த்துக்கட்டும்,” என்றாள்.
ஸ்ரீராம் அங்கே வர, “அம்மாவை வீட்ல விட்டுடு,” என அனுப்பி வைத்தான் குரு.
செம்பருத்தி சிரிப்பை அடக்கிக்கொண்டு அவனைப் பார்த்தாள்.
தொடரும்…