Episode -3

தன் கணவன் ஹரியிடம் வேலை விசயத்தை சொல்வதற்காக காத்திருந்தாள் பிரியா. போன் செய்ய மாட்டாள். குறுஞ்செய்திகள் மட்டும் அனுப்புவாள். போன் செய்தால் அவன் வல் வல்லென நாய் போல குறைப்பான். ஹரி வருவதற்கு மணி பத்தை தாண்டியது. 

“என்னங்க” என ஆசையுடன் படுக்கையில் அமர்ந்திருந்தாள். 

“நான் வெளியிலேயே சாப்பிட்டு வந்துட்டேன். நீ சாப்பிட்டு படு! எனக்கும் தூக்கம் வருது” என உடை மாற்ற சென்றான். 

இது எப்போழுதும் நடக்கும் வழக்கமான விசயம் தானே! ஒரு பெரிய மூச்சை விட்டவள். அவனுக்காக காத்திருந்தாள். 

“நீ இன்னும் சாப்பிட போலயா?” என ஹரி அவளிடம் கேட்க..

“போகனும் தான் ஆனால் அதுக்கு முன்னாடி உங்க கிட்ட ஒருவிசயம் சொல்லணும். எனக்கு… 

எனக்கு கவர்மென்ட் வேலை கிடைச்சிருக்கு. நாளைக்கு ஜாயின் பண்ண சொல்லிட்டாங்க. கலெக்டர் ஆபிஸில் ரிப்போர்ட் பண்ணிட்டு நான் நாளையில் இருந்து தாசில்தார் ஆபிஸில் ஒர்க் பண்ண போறேன். கிளர்க்காக!” என்றாள் பிரியா.

“ஓ அப்படியா! சரி நீ வேலைக்கு போக அம்மாவுக்கு சம்மந்தம் தானே!” என போனை நோண்டிய படி கேட்டான் ஹரி. 

அவ்வளவு தான்! இதற்காக தான் பிரியா இவ்வளவு நேரமும் முழித்து பட்னி கிடந்து அவன் வருவான் என வழி மேல் விழி வைத்து காத்திருந்தாளா? 

ஹரி மெல்ல நிமிர்ந்து அவளை பார்த்தவன். “என்ன எதுவும் வேணுமா? எல்லா விஷயத்தையும் அக்கா சொன்னா! உன்னோட விருப்பம் தான் எனக்கு முக்கியம்” என ஒப்புக்கு பேசினான். 

சரி என படுக்கைக்கு சென்றாள்.

 “ஹே நீ இன்னும் சாப்பிடல..”

“இல்ல எனக்கு பசிக்கல!” என முதுகு காட்டினாள். 

“பிரியா போய் சாப்பிட்டு வந்து படு இல்லன்னா நைட் முழுக்க நெண்டிகிட்டே இருப்ப! எனக்கு தூக்கம் டிஸ்டர்ப் ஆகும். போய் சாப்பிட்டு வா!” என கட்டளையிடும் தொனியில் கூறினான். 

எதுவும் பேசாமல் பிரியா எழுந்து சென்றாள். சாதம் தொண்டையில் இறங்க மறுத்தது. இதுதான் கல்யாண வாழ்க்கையா? நான் யாருக்கு என்ன பாவம் செய்தேன். என முனகினாள். அதே நேரம் ஹரி அவனது தாய் வேதநாயகியின் அறைக்கு சென்றான். 

அவர்கள் பேசுவது காதில் விழுந்தது. “அவள் படிச்சதுக்கு வேலை கிடைக்கல. அவளோட அப்பன் டிக்கெட் வாங்கி மேலோகம் போனதுக்கு இவளுக்கு வேலை.” என வேதநாயகி கூற..  

“விடு மா அப்படி சொல்லாத” என ஹரியின் வாயில் இருந்து ஒருவார்த்தை வரவில்லை. அதற்கு பதிலாக அப்படியா மா என கேட்டான் ஹரி. 

“நமக்கு எதுக்கு பொல்லாப்பு! அவள் வேலைக்கு போயி ஃப்ளைட் கப்பல் வாங்கட்டும். எனக்கு தான் கால் வலி ரொம்ப அதிகமா இருக்குது.

முடியல ஹரிதங்கம்” என வேதநாயகி கூற..  

“அம்மா அவள வேலைக்கு போக வேணாம்னு சொல்லிடவா” என கேட்டான் ஹரி. 

“போயிட்டு போறா விடு அப்புறம் நம்மளுக்கு பாவம் வந்து சேரும்.” என்றவர் “நீ போயி தூங்கு தங்கம்” என அனுப்பி வைத்தார். 

ஹரி அவளை கண்டு கொள்ளாமல் படுத்து உறங்கிவிட்டான். கடவுளே! என மொத்த பாரத்தையும் ஒட்டி பார்த்து கொண்டு படுக்கையில் சோர்வுடன் விழுந்தாள். கண்களில் கண்ணீர் கொட்டியது. அது அனைத்தையும் தலையணை வாங்கிக் கொண்டது. 

என்று விடியும் அவள் வாழ்க்கை.. விண்மீன் கண்களால் தன் வாழ்க்கை என்று விடியும் என சூரியனை எதிர்பார்த்த நேரத்தில் கண்ணீரின் காயத்தை செந்நீரில் ஆற்ற சிசுபாலன் தோன்றுவான். இதோ விடிந்தது. 

ஆறு மணிக்கு எழுந்தவள் காலை டிபன் முடித்து மதியம் சமைக்க செல்ல.. 

“போதும் டி யம்மா ராதா வீட்டில் இருந்து வேலைகாரி வரா அவள் சமைச்சு கொடுப்பா! நீ உன் கலெக்டர் உத்யோகத்துக்கு கிளம்பு” என கண்ணாடியை மூக்கிற்கு தள்ளிய படி கூறினார் வேத நாயகி. 

டிபன் பாக்ஸ்க்கு லெமன் சாதம் கிளறிக்கொண்டு காலை உணவை அவசரமாக சாப்பிட்டவள். சாமி கும்பிட்டு விட்டு “என்னோட துயரத்தை போக்க எனக்கு ஒரு அங்கீகாரமாக இந்த வேலைய பார்க்கிறேன். நீ தான் முருகா என் கூட இருந்து வழி நடத்தனும்” என கிளம்பினாள். 

அவளின் அனைத்து செய்கையையும் வேதநாயகி ராக்கிங் சேரில் ஆடியபடி பார்த்துக் கொண்டிருந்தார். 

ஹரி பொறுமையாக வந்து சாப்பிட்டான். அவனுக்காக காத்திருந்தாள்.

“ அம்மா போயிட்டு வரேன் என ஹரி கிளம்ப.  அத்தை நானும் போயிட்டு வரேன்” என கிளம்பினாள் பிரியா. 

“போயிட்டு வா!” என கூட சொல்ல வில்லை கைகளில் நெட்டி முறித்துக் கொண்டு எழுந்தார். 

“என்னங்க என்னை கலெக்டர் ஆபிஸில் விட்டுடுங்க” என வண்டியில் ஏறினாள். 

ஹரி அவளை இறக்கிவிட்டவன். கிளம்ப போக.. 

 என்னங்க என மீண்டும் அழைத்தாள். 

“என்ன எனக்கு நேரமாகுது.” என ஹரி கடுகடுத்தான். 

“என் கிட்ட சில்லறை இல்ல அதனால..” என தயங்கி நின்றாள் பிரியா. 

“காசு வேணும்னு கேட்க தெரியாதா? அதை சுத்தி வளைச்சு சொல்ற!” என இரண்டு 500 ரூபாய் தாளை நீட்டி “சில்லறை வாங்கிக்கோ இதை இந்த மாசத்துக்கு மொத்தமா வச்சுக்க” என்றுவிட்டு வண்டியை கிளப்பியிருந்தான். 

அவமானம் அவளை மொத்தமாக பிடுங்கி தின்றது. அழுகையுடன் வெம்பி நின்றாள் பிரியா. அதற்கு மேல் கவலையை ஓரமாக தள்ளி வைத்தவள். நேராக கலெக்டர் ஆபிஸ் சென்று அதற்கு உரிய டிபார்ட்மெண்ட் சென்று விசாரித்தாள். 

“கொடுமுடி தாலுக்காவா மா நீ!”

ஆமாங்க சார் என விவரங்களை நீட்டினாள். 

“சரிமா ரொம்ப நல்லதா போச்சு இது உங்க தாலுக்காவுக்கு வந்த லெட்டர்ஸ் இதை தாசில்தார் கிட்ட கொடுத்திடு” என்றார். 

அதை அனைத்தையும் வாங்கி கொண்டவள். பேருந்துக்கு காத்திருந்தாள். 

“மேடம் மேடம்” என அழைப்பு பின்னால் கேட்டது. அவள் சுற்றிலும் பார்க்க.. 

இன்னும் கொஞ்ச நேரம் வெயிட் பண்ணு மா! தாசில்தார் மீட்டிங்கு வரார். அவர் கூடவே போயிடு சப்கலெக்டர் கிட்ட பேச வரார்” என கூறினார். 

பிரியாவுக்கு கொஞ்சம் நிம்மதியாக இருந்தது. அரை மணி நேரம் காத்திருந்தாள். ஒன்பது மணிக்கு ஜீப் வந்தது. சிசுபாலன் சோலோவாக இறங்கி நேராக உள்ளே சென்று பேசிவிட்டு வெளியே வந்தான். 

“கொடுமுடி தாலுக்கா போகனும்க அந்த ஆபிசா இந்த ஜீப் போகுது?” என பிரியா கேட்க.. 

“இது தாசில்தார்க்கு மா!”

பிரியா அதே இடத்தில் நின்றாள். “அய்யோ இப்போ என்ன பண்றதுன்னு தெரியலையே! இதுக்கு நேராக பஸ்லயே போயிருக்கலாம்” என திரும்பினாள். 

சிசுபாலன் கம்பீரமாக நடக்க… 

டிரைவர் அவனிடம் பிரியாவை பற்றி கூற.. 

“வண்டியில் வந்து ஏற சொல்லுங்கண்ணா” என முன் சீட்டில் ஏறி அமர்ந்தான். 

பிரியாவிடம் விவரம் சொல்லி ட்ரைவர் அழைக்க.. 

“இல்ல பரவாயில்லை அண்ணா நான் பஸ்லயே போயிக்கிறேன்.” என அவள் நகர.. 

“அட வா மா! தாசில்தார் ஐயாவே வர சொல்லிட்டார். இது உனக்கு முதல் நாள் வா மா!” என அழைத்துசென்றார். 

அவள் உள்ளே ஏற செல்ல.. “அம்மா கண்ணு சாருக்கு வணக்கம் சொல்லிடு” என ஓட்டுநர் இருக்கைக்கு சென்றார். 

பிரியா ஒருவித பதட்டத்துடன் சிசுபாலன் பக்கம் நடந்தாள். சைட் மிரரில் அவள் நடந்து வருவது தெரிந்தது. சிசுபாலன் ஒரு நொடி அவளை பார்த்தான். 

“குட் மார்னிங் சார்” என வியர்க்க விறுவிறுக்க கூறினாள். 

பிரியாவுக்கு தாசில்தார் பெயரை கேட்டாலே பள்ளியில் ஹெட் மாஸ்டர் போல தோன்றியது. 

“மார்னிங் ஏறிக்கோங்க” என்றவன். அண்ணா போலாம் என்றான் சிசு. 

அவள் ஏறியதும் ஈரோட்டில் இருந்து வண்டி நேராக சோலார் வழியாக கொடுமுடி சென்றது.

கிட்ட தட்ட ஊஞ்சலூர் நெருங்கி இருந்தார்கள். அந்த நேரம் பார்த்து சிசு பாலனுக்கு அழைப்பு வந்தது. 

“என்ன சொல்றீங்க? நல்லா பார்த்தீங்களா?” என கேட்டான் சிசு. 

மறுபக்கம் வந்த பதிலில் “சரி நான் வரேன்” என போனை வைத்தவன். 

“அண்ணா ரயில்வே ட்ராக் பக்கம் வண்டிய விடுங்க” என்றான் சிசு. 

அவ்விடத்தை வேடிக்கை பார்த்துக் கொண்டே வந்தாள். 

தண்டவாளம் பக்கத்தில் ஒரே கூட்டமாக இருந்தது. சிசு நேராக இறங்கி ஸ்பாட்டுக்கு சென்றான். அவன் பின்னால் ஓட்டுனரும் சென்றார். 

அவளும் இறங்கி பின்னால் சென்றாள். தலை ஒரு பக்கம் உடல் ஒரு பக்கம் என ஒரு சடலம்.. 

அந்த நேரம் போன் வர.. ஸ்பாட்ல தான் மேடம் இருக்கேன் என சிசு பாலன் சொல்லிக் கொண்டே திரும்ப… இரத்த வாடை வீச அய்யோ முருகா என அவ்விடத்தை நடுக்கத்துடன் பார்த்து மயங்கி பிரியா சரிய.. ஹே ஹே ஹலோ என சிசு அவளை பிடித்தான். மொத்தமாக பிரியா அவன் மேல் விழுந்தாள். 

தொடரும்..

Leave a Comment

Follow Me

Top Selling Multipurpose WP Theme

Newsletter

About Me

பிரதன்ய குழலி நாவல் தளத்துக்கு அனைவரையும் அன்புடன் வரவேற்கிறேன்.

இந்த தளத்தில் இருக்கும் அனைத்து கதைகளும் பிரதன்ய குழலி அவர்களால் எழுதப்பட்டது. அனைத்து கதைகளும் கற்பனையே. கொஞ்சம் ஊடல், அதிகமா காதல். என உணர்வுகளின் குவியலை படிக்கலாம்.