Episode -4

தன் மேல் மயங்கி சரிந்தவளை மெல்ல ஜீப்பின் பக்கம் தூக்கி கொண்டு வந்தான் சிசுபாலன். பிரியா அவனது மார்பில் முகம் புதைத்திருந்தாள். 

“மூர்த்தி அண்ணா!” என சிசுபாலன் ஒரு கத்தலுடன் குரல் கொடுக்க..

“சார்” என பதட்டத்துடன் ஓடி வந்தவர். 

“சார் கூப்பிட்டீங்க? மேடம்க்கு இப்போ என்னாச்சு?” என மூர்த்தி கேட்க.. 

“தெரில! வெளியே இறங்கினதும் மயங்கி விழுந்துட்டா!” என்றவன் ஒரு நொடி சுதாரித்து “இவங்களுக்கு கொஞ்சம் தண்ணி வாங்கிட்டு வாங்க காரில் இருக்கா? அவங்க கை பையில் இருக்கா பாருங்க!” என பிரியாவிடமிருந்து தள்ளி நின்றான். 

“சார் வாட்டார் பாட்டில்” இதோ என மூர்த்தி நீட்ட.. 

“சாரதா மேடம நேராக இங்கே வர சொல்லுங்க! அவங்க வந்ததும் நீங்க மூணு பேரும் ஜீப்பில் போங்க நான் சாரதா மேடமொட ஸ்கூட்டில வந்துடுறேன்.” என சொல்லிவிட்டு சிசுபாலன் ஸ்பாட்டுக்கு விரைந்தான். அங்கே கிராம நிர்வாக அலுவலர், அந்த எல்லைக்கு உட்பட்ட காவலர்கள் என அனைவரும் வந்து தண்டவாலத்தில் இருந்த சடலத்தை பற்றிய விவரங்கள் மற்றும் விசாரணைகள் ஒரு பக்கம் ஆரம்பித்தது. 

“புதுசா வந்த கிளார்க் சிசு சார் மேலேயே மயங்கி விழுந்துட்டாங்க போல!” என செய்திகள் மொத்தமாக பரவ… 

இப்பொழுது தான் பிரியாவுக்கு மயக்கம் தெளிந்தது. முகத்தை கழுவி விட்டு வந்தவள் நடுக்கத்துடன் அமர்ந்திருக்க.. 

“மேடம் பயந்துட்டீங்களா?” என டீயை நீட்டினார். OA அதாவது பியூன் கனகரத்தினம். 

“ஆமா சார்! ஒரு ஆள் தலை தனியா இங்கே தனியா அன்.. அங்.. அங்கே த தண்டவாலத்தில் கிடக்கிறத பார்த்தேன். அது தான் கை கால் நடுங்கிடுச்சு. ஆமா நான் எப்படி இங்கே வந்தேன்?” என பியூன் ரத்தினத்தை பார்த்தாள். 

“உன்னை தாசில்தார் ஐயா தான் பார்த்து கூட்டிட்டு வர சாரதா மேடத்தை அனுப்பி வச்சிருக்கார் அவங்க கூட நீ ஜீப்ல் வந்துட்ட.. இப்போ இறங்கி வா மா!” என ஜீப்பில் இருக்கும் அவளை அழைத்தார் 

“அய்யோ சாரி சார்! எனக்கு கைகால் எல்லாம் கிடு கிடுன்னு ஆடிடுச்சு! அதான்” என அவள் டீயை எடுத்துக் கொண்டு வண்டியில் இருந்து இறங்க..

அப்பொழுது தான் வேலையை முடித்து விட்டு சிசுபாலன் கேட் என்ட்றன்ஸ் நுழைந்தான். 

“வணக்கம் சார்” என இரத்தினம் சிசுவுக்கு வணக்கம் வைக்க.. அதை தொடர்ந்து அனைவரும் வணக்கம் வைத்தார்கள். 

மது பிரியா பதட்டத்துடன் சிசுவை பார்த்தவள். “அய்யோ வந்த முதல் நாளே இப்படி மயங்கி விழுந்து பெரிய அஃப்சியல்ஸ் முன்னாடி நின்னுட்டு இருக்கியே பிரியா!” என தன்னை தானே கடிந்து கொண்டவள் நேராக சிசுவுக்கு நன்றி சொல்ல பின்னால் சென்றாள். 

“குட் மார்னிங் சார்! அண்ட் தேங்க் யூ சார்” என புன்னகையுடன் நின்றாள். 

“ம்ம்” என ஒற்றை பதிலுடன் முடித்துக் கொண்டான் சிசு. 

அதன் பின் அங்கிருக்கும் அனைவருடனும் நட்பு பாராட்டி நின்றவள் நேராக ஆடரை கொடுத்து வேலையில் சேர்ந்தாள். 

“ஆடிட்டிங் வருது வேலை இந்த ரெண்டு மாசம் ரொம்ப அதிகமா இருக்க போகுது. எல்லா அக்கவுன்ட்சும் சரியா மெயின்டெய்ன் பண்ணனும்.” என அனைவரும் பேசி கொண்டிருப்பது அவளின் காதுக்கும் விழுந்தது. 

மாலை நேரமாக ஒவ்வொருவராக கிளம்பினார்கள். “அண்ணா சில்லறை கிடைக்குமா? ரெண்டு 500 நோட்டா இருக்கு!” என எஞ்சி உள்ள ஆட்களிடம் கேட்டாள். 

“என்கிட்ட பஸ்சுக்கு தான் சில்லறை இருக்கு மா” என ஒரு சிலர் கூற..

 “100 ரூபாய் வாங்கிட்டு போ மா நாளைக்கு கொடு” என சாரதா கூற.. 

மறுத்து விட்டாள் பிரியா. 

“கொடு மா நான் சில்லறை தரேன்” என ரத்தினம் வாங்கி சென்றார் தாசில்தார் ரூமுக்கு.. 

அடுத்த சிறிது நேரத்தில் இரண்டு 500 தாளுக்கு சில்லரையுடன் வெளியே வந்தார். 

ப்ரியாவின் முகத்தில் சந்தோச ரேகைகள் மின்ன..

“ மூர்த்தி!;” அழைத்தார் 

“கிளார்க் மேடம் உங்க வீடு எங்கே?” என விவரம் கேட்டவர். “வாங்க மா சார் கலெக்டர் ஆபிஸ் வரைக்கும் போறார். நீங்க மாட்டு சாலைகிட்ட இறங்கிக்கோங்க.” என அழைக்க.. 

அவள் வேண்டாம் என மறுக்கும் நேரம் சிசுபாலன் வெளியே வந்தான். அவனது பார்வை அவளின் மீது படிய “சார் தேங்க்ஸ்” என அவனிடம் கூறி விட்டு பின்னால் அமர்ந்து கொண்டாள். 

மாட்டு சாலை பக்கம் மூர்த்தி வண்டியை நிறுத்தி விட இறங்கி கொண்டவள். சிசு பாலனுக்கு ஒரு வணக்கம் வைத்து விட்டு சென்றாள். அங்கிருந்து நேராக மூர்த்தி கலெக்டர் ஆபிஸ் செல்ல.. 

“அண்ணா வண்டிய எடுத்திட்டு கிளம்புங்க நான் நாளைக்கு நேராக ஆபிஸ் வந்துடறேன்” என சிசு கூறி விட மூர்த்தியும் கிளம்பி விட்டார். 

பிரியா அவளது வீட்டுக்கு நடந்தே சென்றாள் உற்சாகமாக.. தன் அன்னைக்கு போன் செய்து அம்மா இன்னிக்கு அது நடந்தது இது நடந்தது. என ஆர்வம் பொங்க பேச.. ரமணி அம்மாவுக்கு மிகவும் சந்தோசமாக இருந்தது. தன் மகள் இந்த இரண்டு வருடத்தில் இன்று தான் சந்தோசமாக பேசுகிறாள். இந்த வேலை அவளுக்கு ஒரு அடையாளத்தையும் அங்கீகாரத்தையும் கொடுத்திருக்கிறது என உள்ளுக்குள் நிம்மதி தோன்றியது. 

“சரி பிரியா! இன்னிக்கி அப்பாவும் உன்னை ஆசிர்வதிச்சிருப்பார். உண்மையாவே எனக்கு சந்தோசமா இருக்கு. நீ எதை பத்தியும் நினைச்சு கவலை படாத தங்கம். இனி உனக்கு எல்லாமே நல்லதா நடக்கும் டா கண்ணு. வீட்டுக்கு போயிட்டு ஒரு போன் போடு தங்கம்” என்று விட்டு போனை வைத்தார். 

“சரி மா” என நிம்மதியுடன் பிரியா வீட்டை நோக்கினாள். போனை வைத்த ரமணியின் கண்களில் நீர் கொட்டியது. 

“கல்யாணம் ஆனதும் ஒரு பொண்ணு சந்தோசமா இருந்தாலும் சரி கவலையா இருந்தாலும் சரி அம்மா கிட்ட சொல்றதுக்கு முன்னாடி அவளோட மனசு புருஷனை தேடும். ஆனால் என் பொண்ணு? அவள் என்னை தேடுறான்னா அவளோட  வாழ்க்கை? நான் என்ன பாவம் பண்ணேன்? என் பொண்ணுக்கு கல்யாண வாழ்க்கை இப்படி இருக்கே! அவசரப்பட்டு கட்டி வச்சுட்டெனா?” என நெஞ்சு குமுற அமர்ந்திருந்தார் ரமணி. 

இவ்வளவு நேரமும் வீட்டுக்கு செல்லலாம் என்ற எண்ணமே அவளுக்கு வரவில்லை. காரணம் நிம்மதி இல்லை. இன்று அவளுக்கு நடந்த அனுபவங்களை ஹரியிடம் சொல்லி சிரித்து பேச வேண்டும் என்ற ஆவல் உள்ளுக்குள் தோன்ற… எதோ ஒரு நம்பிக்கையில் சென்றாள். 

வீட்டுக்கு நுழைந்த அடுத்த நொடி வேதநாயகி அவளிடம் “இனி மதியத்துக்கும் சமைச்சு வச்சுட்டு போ! அந்த வேலைக்காரிக்கு சாதம் கூட வடிக்க தெரியல முள்ளு மாதிரி இருந்தது எனக்கு கொஞ்சம் கூட இறங்கள! நாளைக்கு வாழதண்டு பொரியல் பண்ணி வாழ பூ சாம்பார் செஞ்சிடு. இப்போ குருமா செஞ்சு இட்லி பண்ணிடு எனக்கு பிரண்டை சட்னி செய், ஹரிக்கு தக்காளி சட்னி செஞ்சிடு” என வேலைகளை வரிசை படுத்தி வைத்தாள் வேதநாயகி. 

இதோ அத்தை என ஒற்றை வார்த்தையில் முடித்து விட்டு குளிக்க சென்றவள் உடல் அழுப்புடன் அனைத்து வேலையையும் செய்ய ஆரம்பித்தாள். இரவு உணவு சமைத்து  முடித்தவள் வாழைப்பூ எடுத்து வைத்து அமர.. 

“என்ன இந்த நேரத்துல இதை உட்கார்ந்து கட் பண்ற? உன்னை காலையில தானே கட் பண்ண சொன்னேன்?” என வேத நாயகி விஷம் கொண்ட நாக்குடன் வந்து நின்றார். 

“காலையில்!!” என பிரியா ஆரம்பிக்க.. 

“ம்ம் க்கும் ஒரு நாள் கூத்து வேலைக்கு போனதும் கொம்பு முளைச்சிடுச்சா என்ன? இப்போவே செஞ்சு வச்சா காரல் அடிக்காதா என்ன? பிள்ளைகளோட போராட வேண்டிய வயசுல இப்போ வேலைக்கு போறா! ஒன்னுக்கும் வக்கில்ல! யார் யாரோ செஞ்ச பாவம் எல்லாம் என் பையன் வாழ்க்கையில் பிடிச்சு ஆட்டுது” என உள்ளே சென்று விட்டார். 

கண்களில் நீர் வழிய அனைத்து உணவுகளையும் உணவு மேஜையின் மீது எடுத்து வைத்தவள் சேலையின் தலைப்பால் முகத்தை துடைத்துக் கொண்டு வேகமாக அவளரைக்கு சென்று படுத்துக் கொண்டாள். 

“கடவுளே நான் என்ன பாவம் பண்ணேன் முருகா? இதுக்கு பேசாமல் என்னை கொண்ணுடு!” என என்ன என்னவோ பிதற்றி கொண்டு படுத்தவள் அப்படியே உறங்கி போனாள். 

பத்து மணிக்கு மேல் ஹரி வீட்டுக்கு வந்தான். அவள் அறையில் படுத்திருக்க.. புடவை விலகி இடை தெரிந்தது. நீண்ட நாள் கழித்து அவள் மேல் மயக்கம் தோன்றியது. நெண்டி கொண்டே படுத்திருந்தாள். 

“ஹே பிரியா! ப்ச்ச் பிரியா!” என தட்டி எழுப்பினான் ஹரி. 

கண்களை தேய்த்தபடி எழுந்தவள் “எப்போ வந்தீங்க?” என அவனை பார்க்க, வா என மெல்ல அவளின் உடையை விலக்கினான். 

“ஹாங்” என அவள் விழிக்க அவளது உடை மேலே மட்டும் களைந்திருந்தது. அவனது உடை கீழே விடுதலையாகி இருக்க.  வளையல் குலுங்கும் சத்தத்துடன் முகத்தை சோகமாக வைத்திருந்தாள். 

“செய்ய பிடிக்கலயா” என அவளின் மொட்டு வாயை பார்த்தான். 

“அப்படி இல்ல” என தரையை பார்த்தாள். நான்கு நிமிடங்கள் கழித்து வாயை துடைத்துக் கொண்டு விலகினாள். 

குடித்திருக்கிறான் போல.. அது தான் இப்படி  இந்த காமம் அவனுக்கு மட்டும். அவள் கசங்க வில்லை அவனுக்கு தேவையான விசயத்தை அவளை ஆட்டுவித்து அனுபவித்து உறங்க சென்றான். 

வாயை கழுவி கொண்டு வெளியே வந்தாள். “ஹே சாப்பிடாம தூங்கி என்னோட தூக்கத்தை கெடுத்திடாத! போய் சாப்பிடு அண்ட் ரூம் கதவை சாத்திட்டு போ!” என கூறி விட்டு உறங்க ஆரம்பித்தான் ஹரி. 

சாப்பாடு இறங்கவில்லை உணர்வுகள் அனைத்தும் தகித்து கொண்டிருந்தது. 

என்ன வாழ்க்கை? என சமையலறையில் நின்றவள் அதே தரையில் படுத்து விட்டாள். 

** 

“அழகா இருக்க மது!” என வேக மூச்சுவிடும் சத்தம் அந்த அறையில் ஒலித்தது. மெல்ல தளர்ந்து போனான் அவன். 

அடுத்த நாள் காலை ஆரவாரத்துடன் விடிந்தது. இன்றும் மயங்கி சரிந்தாள் அவன் மேல். மூர்த்தி அண்ணா ஜீப்ப ஹாஸ்பிடல் விடுங்க என சிசு பாலன் அவளை அழைத்து சென்றான். 

என்ன இன்னிக்கும் மயக்கமா? 

தொடரும்.. 

Leave a Comment

Follow Me

Top Selling Multipurpose WP Theme

Newsletter

About Me

பிரதன்ய குழலி நாவல் தளத்துக்கு அனைவரையும் அன்புடன் வரவேற்கிறேன்.

இந்த தளத்தில் இருக்கும் அனைத்து கதைகளும் பிரதன்ய குழலி அவர்களால் எழுதப்பட்டது. அனைத்து கதைகளும் கற்பனையே. கொஞ்சம் ஊடல், அதிகமா காதல். என உணர்வுகளின் குவியலை படிக்கலாம்.