Epi -2
“எல்லாத்துக்கும் காரணம் நீ தானே!” என கேட்டுக் கொண்டே வந்தார் சித்தார்த் ரவிசந்திரன். ( ரவிச்சந்திரன் என்பது தந்தையின் பெயர்)
மா என உருக்கத்துடன் அழைத்தவன். அப்படியே உறைந்து நின்றான் சைத்து.
இதன்யா மெல்ல திரும்பி தன் கணவனை பார்த்தாள். “உன்னால் தான் டி! உன்னோட முட்டாள் தனமான மூடநம்பிக்கை, கண் மூடிதனமான பாசத்தால் ஒருத்தன் தைரியமா எல்லா தப்பையும் செய்யறான். இன்னொருத்தன் அதை எப்படியாவது சரி பண்ண அவனோட மொத்த வாழ்க்கையையே பணயம் வச்சுட்டு சுத்திட்டு இருக்கான்” என்றார் சித்தார்த்.
மளமளவென இதன்யாவின் கண்களில் நீர் கொட்டியது.
ப்பா! அம்மாவை திட்டாதீங்க! என தன் அன்னையை இழுத்து ஸோபாவில் அமர வைத்து மடியில் தலை சாய்த்து கொண்டான் சைத்ரேஷ்.
சித்தார்த் பெரு மூச்சை விட்டபடி அவர்கள் இருவரையும் பார்த்து கொண்டே அமர்ந்தார்.
சைத்து குட்டி! நான் உன்னை ரொம்ப கஷ்ட படுத்திட்டு.. என அவள் சொல்ல ஆரம்பிக்க..
மா இல்ல எனக்கு எதுவும் கஷ்டம் இல்ல. என கண்களை துடைத்து விட்டான் சைத்ரேஷ்.
லுக் இதன்யா! நான் சொல்றத கேளு! சர்வேஷ்வரன் என்னோட பையன் தான் ஆனால் உன்னோட மூடநம்பிக்கை சைத்ரேஷ்வரனை பாதிக்கிது டி! அந்த ரதி திட்டம் போட்டு இப்படி உன்னை ட்விஸ்ட் பண்ணி விட்டுருகாங்க. என்னோட பேச்சை கேளு. நீ ஆயிரம் தான் அவனுக்கு நல்லது செஞ்சாலும் நம்ம அவனுக்கு முக்கியம் இல்ல. அதுக்கு காரணமும் நீ தான். ஆரவ் நிஷாவுக்கு அவனை தூக்கி கொடுத்தது நீ தானே! நீ நல்லது நினைச்சு தான் பண்ண! ஆனால் இப்போ பாரு! விஷம் மாதிரி வளர்ந்து நிக்கிறான் அந்த ராஸ்கல். அவனால் என் புள்ளை கஷ்ட படுறான் சைத்ரேஷ் நீ இப்போவே பிரஸ் மீட் வை! உன்னை எல்லாருக்கும் அறிமுக படுத்தனும் என்றார் சித்தார்த்.
இதன்யா பெரு மூச்சுடன் சரி அப்படியே செஞ்சிடலாம் என்றாள்.
சித்தார்த் நிம்மதி பெரு மூச்சுடன் போனை எடுக்க.. no டாட்!! என தடுத்தான் சைத்ரேஷ்.
சைத்ரேஷ் அப்பா சொல்றத கேளு! என சித்தார்த் ஆரம்பிக்க..
இதன்யாவின் கைகளை வருடிய சைத்து டாடி இப்போ நீங்க பண்ணா! என் மேலே இன்னும் அண்ணனுக்கு கோபம் வரும். No டாடி! அப்படி செய்ய வேணாம். எதோ ஒரு fate அதான் இப்படி நடக்குது. அதை நம்ம ப்ரேக் பண்ண வேணாம். அண்ணன் எதையும் வேணும்னு பண்ணல! அண்ணன் மேலே எந்த தப்பும் இல்ல என்றான் சைத்ரேஷ்.
அம்மா மகன் இருவரையும் முறைத்து பார்த்தார் சித்தார்த்.
மா நான் வீட்டுக்கு கிளம்புறேன் என சைத்ரேஷ் புறப்பட்டான்.
இதன்யா நேராக தன் கணவனின் பின்னால் சென்றவள். புத்தா என அழைத்தாள்.
நிறுத்து இதன்யா! எல்லாத்துக்கும் காரணம் நீ!! அவனை என்னோட புள்ளைன்னு சொல்லிக்க அசிங்கமா இருக்கு டி! அவனோட தப்பை எல்லாம் சைத்ரேஷ் ஏத்துட்டு இருக்கான். ஆனால் திருட்டு பூனை இன்னும் புலி மாதிரி நடமாடிட்டு இருக்கு. இன்னிக்கி பார்த்தல்ல! சர்வேஷ் பண்ண ஆக்சிடன்ட்! அதை அட்டன் பண்ண போனது என் புள்ளை.
அவனும் நம்ம புள்ளை தான புத்தா!
உனக்கு புரியுதா இல்லையா இதன்யா அந்த ரதி தேவி திட்டம் போட்டு சர்வேஷ்வரன் அடையாளத்தை மட்டும் அந்த பாய்சன் லேடி வெளியே நடமாட விட காரணம் என்னன்னு நீ யோசிக்கலயா டி!
இதன்யா அவனருகில் வந்து ரெண்டு பேரும் சேர்ந்து இருந்தால் அவங்க உயிருக்கு ஆபத்துன்னு ஜாதகத்தில் சொன்னாங்க புத்தா! எனக்கு என்னோட பசங்க உயிர் தான் முக்கியம். உங்களுக்கு மறந்து போச்சா? அந்த மாதேஸ்வரன் மலையில் இருந்து ரிட்டன் வரும் போது ஆக்சிடன்ட் ஆச்சே! அய்யோ என்னோட ரெண்டு பசங்க! என்னோட சர்வா! என்னோட சைத்து என கண்களில் நீர் கோர்த்து கொண்டது.
சித்தார்த் எதுவும் பேசாமல் அவ்விடத்தை விட்டு சென்றார். புத்தா என தன் கணவரின் பின்னால் சென்றார் இதன்யா.
சித்தார்த் கன்னட பழம்பெரும் நடிகர் குடும்பத்தின் முதல் வாரிசு. சித்தார்த்தின் தந்தை ரவிசந்திரன் அவருக்கு இரண்டு மனைவிகள் பவானி மற்றும் ரதி தேவி.
பவானிக்கு இரண்டு பிள்ளைகள் சித்தார்த், மற்றும் ராகினி.
ரதி தேவியை இரண்டாம் திருமணம் செய்து கொண்டார் ரவி. அவர்களுக்கு ஆரவ் என்று ஒரே மகன். ஆரவ் – நிஷாக்கு திருமணமாகி கிட்ட தட்ட மூன்று வருடங்களாக குழந்தை இல்ல. அந்த நேரத்தில் தான் ரதி தேவி தன் திட்டத்தை அரங்கேற்றி சித்தார்த்தின் இரட்டை ஆண் குழந்தையில் ஒன்றை சர்வேஷ்வரனை வாங்கி கொண்டார்.
அதே போல ஆரவ் மற்றும் நிஷா இருவருக்கும் சர்வேஷ் வந்ததும் ஸ்ருதி, ஆஷா என இரண்டு மகள்கள். ஆஷா பாரினில் படிக்கிறாள். ஸ்ருதிக்கு தன் அண்ணன் சர்வேஷ்வரன் என்றால் உயிர் ரதி தேவியின் மனதில் எப்படியும் ரவிசந்திரன் குடும்பத்தின் மொத்த சொத்துக்களும் தன் மகன் ஆரவ் ஆள போவதில்லை. ஆனால் ஆள போகும் வாரிசு தன் பேச்சை கேட்டு இருக்க வேண்டும் தனது கட்டு பாட்டில் இருக்க வேண்டும் என்ற குறிக்கோள் அதனால் தான் ரதி தேவி சிறு வயதிலேயே சர்வேஷ்வரணை திட்டமிட்டு சதி செய்து வளர்த்து கொள்ள தூக்கி சென்று விட்டார்.
பெரிய குடும்பம் என்றாலே அரசியல் அதிகம். அதனால் சித்தார்த்தை பேச விடாமல் இதன்யாவை திட்டம் தீட்டி கவுத்து குழந்தையை தூக்கி சென்றார்கள் சின்ன மாமியார் ரதி தேவி.
சோர்வுடன் வீட்டுக்கு வந்து சேர்ந்தான் சைத்ரேஷ்வரன். வீட்டுக்குள் நுழைந்ததும் நேராக குளிக்க சென்றான். ஆம் அண்ணன் தம்பி இருவரும் ஒரே வீட்டில் இருக்க வேண்டும் என்பது இதன்யாவின் ஆசை. சர்வேஷ்வரனின் குணம் பற்றி சித்தார்த்துக்கு தெரியும். அதனால் நிபந்தனைகள் மற்றும் கட்டாயத்தின் பெயரில் இருக்கிறான் சர்வேஷ்வரன்.
குளித்து முடித்து நேராக பூஜையறைக்கு சென்றான். அங்கே திருச்செந்தூரன் புன்னகையுடன் நின்றிருக்க.. என்னை மன்னிச்சிடு முருகா! தப்புக்கு துணை போவது பாவம் தான். ஆனால் என்னோட அண்ணனுக்கு துணையா நிக்கிறது தான் எனக்கு முக்கியம். ஏன்னா என்னோட அண்ணன் தான் எங்க அம்மாவுக்கு கவலை. அவனை பத்தி தான். என் அண்ணன் சீக்கிரம் மனசு மாறி எங்க அம்மா கிட்ட நல்ல படியா நடந்துக்கனும். என கூறி நெற்றியில் பட்டையை போட்டு கொண்டான்.
கடவுளிடம் பாரத்தை இறக்கி வைத்து விட்டு வெளியே வந்தவன் கண்களில் விழுந்தான் சர்வேஷ்வரன். ஆம் குடித்து விட்டு தள்ளாடி கொண்டே உள்ளே வந்த சர்வேஷ்வரன் உண்மையிலேயே கீழே விழுந்தான்.
அண்ணா!! என அழைத்து கொண்டே சைத்து அவனை தூக்க முயற்சி செய்ய.. you** don’t டச் மி!! அண்ணனா? அரை மணி நேரத்துக்கு முன்னாடி பொறந்திட்டா நான் அண்ணன் ஆகிடுவேனா? எப்போவுமே அம்மாவுக்கு முதல் பையன தான் புடிக்கும்ன்னு சொல்லுவாங்க. ஆனால் உன்னோட அம்மாகாரிக்கு உன்னை ஏன் பிடிச்சிருக்கு. எப்போ பாரு சைத்து! சைத்து!! சைத்து!! என கைகளை தட்டி விட்டான்.
சைத்ரேஷ்வரன் ஆற்றானையுடன் நான் ஒன்னும் உன்னை தடுக்கள அண்ணா!! என பேச வர..
போதும் நிறுத்து டா! நீ எதுக்கு டா என்கூட பொறந்த? நீ மட்டும் இல்லாம இருந்திருந்தால்? அவளுக்கு நான் மட்டும் தான் செல்ல மகனா!!.. இருந்திருப்பேன் என்னை கொஞ்சி… இருப்பா!!.. இதுக்கு நீ தான் பொறுப்பு! நீ மட்டும் தான் டா! நான் இதுக்கு மேலேயும் பண்ணுவேன்! உன்னோட அப்பன் உன்னோட பெத்தவ எல்லாருக்கும் நீ மட்டும் தானே முக்கியம் எல்லாரும் வேதனை படனும்!! என உளறியபடி அவனது அறைக்கு தள்ளாடி கொண்டே சென்று விட்டான் சர்வேஷ்வரன்.
சைத்ரேஷ்வரன் அதே இடத்திலேயே நின்றான். என்ன சொல்வது என தெரியவில்லை. வேதனை துக்கம் என அனைத்தும் தொண்டையை அடைத்தது. கருணை கடலே கந்தா போற்றி என சிறியவன் கடவுளை தேட.. மதுவை சரித்து கொண்டு மனகவலையை போக்க முயற்சி செய்தான் பெரியவன்.
ஒவ்வொருவரும் அவரவர் பிரச்சனையிலும் வேதனையிலும் இருக்க இதோ அடுத்த நாள் ஆரவாரத்துடன் விடிந்தது. அதிகாலையிலேயே சைத்ரேஷ்வரன் கிளம்பி விட்டான் கோவிலுக்கு. மண்டையே வெடிப்பது போல இருந்தது. அதனால் புறப்பட்டு விட்டான்.
நவகிரக அடி பிரதட்சனத்தை ஆரம்பித்து ஒன்பதாம் சுற்று சைத்து சுற்றி கொண்டிருக்க.. அவன் பின்னால் பீம் பாய்ஸ் சுற்றினார்கள். சர்வேஷ்வரனின் நகல் அது மட்டுமா? பவானி பவர், பவானி ரினியுபல் பேட்டரி கம்பனியின் CEO என்றால் சும்மாவா? பாதுகாப்பு பலமாக தானே இருக்கும்.
சிங்கார வேலனே தேவா! செந்தூரில் நின்றாடும் வேலா!.. திருசெந்தூரில் நின்றாடும் வேலா!! என பாடல் வரிகள் காற்றில் ரீங்காரமிட..
நவகிரகத்தை முடித்த சைத்ரேஷ்வரனின் எண்ண அலைகள் மொத்தமும் திருசெந்தூரில் நின்றாடும் வேலா என்ற பாடலின் மீது செல்ல.. கால்கள் தானாக சென்றது.
அழகிய மலர்கள் நிறைந்த சோலை வனத்துக்குள் நுழைந்தது போல ஒரு உணர்வு சைத்துவுக்கு. அத்தனை அழகு அவள். கண்கள் இரண்டும் ஆறடி ஆண் மகனை கட்டி போட்டது. பிரம்மன் பிராயாத்தனபட்டு உருவாக்கிய பெண் சிலை என்று சொன்னால் சரியாக இருக்கும்.
சைத்ரேஷ்வரன் வைத்த கண் வாங்காமல் அவளையே பார்த்தான். சிங்கார வேலனே அவளின் நர்த்தன நாட்டியத்தை பார்க்க இறங்கி வந்தாலும் ஆச்சரிய படுவதற்கில்லை. கண்கள் பேசலாம்! அவள் காதில் ஆடும் ஜிமிக்கி கூட பேசுமா என்ன? அவளுடன் சேர்ந்து குலுங்கி ஆடும் வளையல் பேசுகிறது.
என்ன சைத்து பண்ற? என அவனது மனசாட்சி கேட்க.. மெல்ல அவ்விடத்தில் இருந்து வேஷ்டியின் நுனியை பிடித்தபடி நகர்ந்து சென்றான் பிரகாரத்தை சுற்ற..
ஏனோ மனம் லேசானது போல ஒரு உணர்வு சிங்கார வேலனாலா? இல்லை சிங்கார பெண்ணாலா? அவனுக்கே வெளிச்சம். பிரகாரத்தை சுற்றி முடித்தாகி விட்டது. ஏனோ கால்கள் செல்ல மறுத்தது. ஒருமுறை அழகு மலரை கண் குளிர பார்த்து விட்டு செல்ல தோன்றியது.
ஆனால் மனம் மறுத்து விட்டது. அவ்விடத்தை விட்டு நகர்ந்த சமயத்தில் போன் வந்து விட உடனே அட்டென் செய்தான்.
பேசி விட்டு திரும்பும் போது அவளின் திவ்ய குரல் காதில் ரீங்காரமிட்டது.
தொடரும்..
யார் அவள்?
அடுத்து என்ன? கமென்ட் பண்ணுங்க பார்ப்போம்..











💬 Be the first to comment