Pradhanya

Well-known member
Staff member
Joined
Oct 6, 2024
Messages
307
ராணா நான் உங்க தியா!” என சொல்லிக் கொண்டே அவனது கழுத்தை சுற்றி வளைத்து உதடு பதிக்க நெருங்கினாள் திவ்யா.

ரானாவுக்கு தலை எல்லாம் சுற்ற கண்கள் இரண்டும் கிறங்கி கொண்டு வந்தது. கொஞ்சம் கூட தன் சுய கட்டுபாட்டில் மூளையும் இல்லை மனதும் இல்லை மெதுவாக திவ்யா ஆளுமையான தன் கணவனை வளைத்து பிடித்து முதல் முத்தத்தை உதட்டில் கொடுக்க, அந்த முத்தம் மிகவும் அறுவருக்க தக்க விசயமாக மாறி போனது ஒரு சில நொடியில். இது என் தியா இல்லை. என சுயத்தில் இல்லை என்றாலும் எதோ ஒரு உள்ளுணர்வு தோன்ற வேகமாக அவளிடம் இருந்து விலகினான்.

கைக்கு எட்டிய பொருள் சுவைக்கும் போது பாதியிலேயே பிடுங்கி கொண்டது போல ஒரு உணர்வு ஏற்ப்பட ஆக்ரோசமாக முளித்தாள் திவ்யா. சுற்றிலும் அவனை தேடினாள். “ராணாஆஆஆ!!” என ஆக்ரோசமாக கத்தினாள் திவ்யா. கன்வி எழுந்திருக்க வாய்ப்பில்லை வேக வேகமாக ரோப் உடையை அணிந்து கொண்டு அறையை விட்டு வெளியே வந்தவள் சுற்றிலும் தேடினாள். “ராணா! ராணா!” என மோகினி பிசாசை போல அங்கும் இங்கும் பைத்தியக்காரி போல அலைந்தாள்.

இங்கே ராணா அவர்களின் அறைக்கு அருகில் இருக்கும் ஸ்டடி ரூம் பக்கம் சென்றவன் உள்ளே சென்றதும் தலையை பிடித்த படி வேகமாக சென்றவன் புக் செல்பை பக்கம் நகர்த்தினான். அது மெல்ல நகர்ந்து மிருதியா இருக்கும் வீட்டின் மாஸ்டர் பெட் ரூம் டிரெஸ்ஸிங் டேபிள் வட்டமாக சுற்றியது. அவன் இந்த பக்கம் வந்து விட்டான். மீண்டும் அதை சரியாக சாத்தினான். உள்ளுக்குள் ஒரு பக்கம் போதை தொந்தரவு செய்ய இன்னொரு பக்கம் ஹார்மோன்ஸ் ஆட்டம் கட்டியது. போதையுடன் சேர்த்து உணர்வுகளை எக்க சக்கமாக தூண்டி விட்டது அந்த மருந்து அவனை நன்றாகவே தூண்டி விட ஆரம்பிக்க... “தியா! தியா” என கத்த ஆரம்பித்தான்.

அவர்களின் வீட்டை சுற்றி காவலர்கள் இருந்தார்கள். வீட்டின் அனைத்து இடங்களிலும் சல்லடை போட்டு தேடினாள் திவ்யா. ஆனால் அவனை கண்டறிய முடிய வில்லை. “எங்கே போய்ட்டான்?” என நகத்தை கடித்த படி கைகள் நடுங்க மீண்டும் தேடினாள். “சரி இனி இங்கேயே தானே இருக்க போறோம். எப்படியும் அவனோட குழந்தைய என்னோட வயிற்றில் எப்படியாவது சுமப்பேன்” என ஓங்கி சுவற்றில் குத்தியவள் அங்கிருந்து வேகமாக நடந்தாள்.

இங்கே மிருதியா நேராக கிச்சன் சென்று வெதுவெதுப்பான நீரை கெட்டிலில் காய்ச்சி குடித்தவள் முகத்தை கழுவி கொண்டே மீண்டும் அவளின் அறைக்கு நடந்தாள். இங்கிருந்து தப்பிக்க முடியாது. அது நன்றாக தெரிந்து விட்டது. தன்னை தானே நிலை படுத்திக் கொண்டே எது எதோ மனதில் யோசித்துக் கொண்டு வந்து சேர்ந்தாள்.

அறைக்குள் நுழைந்ததும் அங்கே ராணா இருக்க அவள் அதை சற்றும் எதிர் பார்க்க வில்லை. “அசுரன் எப்படி இங்கே வந்தான்? நானும் அதே வழியில் தானே மேலே வந்தேன்” என குழப்பமாக யோசித்தாள் மிருதியா. “இப்பொழுது என்ன செய்வது?” என தெரிய வில்லை. ஆனால் அவனிடம் இருந்து முனகல் சத்தம் கேட்டு கொண்டிருக்க, “என்ன பிதற்றுகிறான்?” என தெரிந்து கொள்ள அருகில் சென்றாள். பசி கொண்ட சிங்கத்துக்கு எப்படி மானின் வாசம் தெரியுமோ? அவள் அருகில் வந்த அடுத்த நொடி பாய்ந்து அவளை பிடித்து இழுத்தவன். சுயத்த்தில் இருக்கும் பொழுது கடிவாளம் கொண்டு மறைந்திருந்த உண்மை முகத்தை அவளிடம் காட்டிக் கொண்டிருந்தான்.

“தியாஅஅ!” என உயிரை உறுக்கும் குரலில் அழைத்தவன். “பொறுத்துக்கோ டி! நீ வேணும் என்னோட கடைசி நாள் வரை” என திக்கி திணறி போதையில் உளறினான். அவனது குரலுக்கு தான் ஏன் இப்படி இசைந்து கொடுக்கிறேன் என இது வரை தெரிய வில்லை தியாவுக்கு. அய்யோ மிருதியாவுக்கு. உள்ளுக்குள் சப்த நாடியும் இப்பொழுது மகுடிக்கு கட்டு பட்டது போல வெட்கமே இல்லாத இந்த உடல் அவனுக்காக “ஏங்கி தவிக்கிறதா?” உடல் சுகம் உனக்கு வேணுமா என ஆயிரம் கேள்வி அவளை குடைந்து எடுக்க கழுத்தில் இச் இச் என சத்தத்துடன் மீசை முடி குறுகுருக்க அவளின் கழுத்து எலும்பை கடித்து மட்டும் தான் விழுங்க வில்லை அவன். அந்த அளவுக்கு மோகம் கரை புரண்டு ஓடிக் கொண்டிருந்தது. “மோகம் மட்டுமா என கேட்டால்? இல்லை” என்பது தான் பதில் இந்த மோகத்தை தாண்டி இருவரின் நடுவிலும் தீராத பந்தம்.

என்ன என இது வரை அவளுக்கு தெரிய வில்லை. அவனும் அனைத்தையும் சேர்த்து வைக்கும் கியூப் ஸ்கொயர் பசில் போல அனைத்தையும் தேடி விட்டான். ஆனால் விடை இன்னும் தெரிய வில்லை. ஏன் என்றால் மர்ம முடிச்சு தியாவில் அடங்கி இருக்கிறது கேள்வி பதில் அனைத்தும் தியா வாயை திறந்தால் தெரிந்து விடும். அதையும் திறக்க வைப்பான் ராணா.

அவளின் நெஞ்சை மஞ்சமாக்கி தலையை புதைத்து ஓயாமல் நாடி உள்ளுக்குள் இருக்கும் ஹார்மோன்களை ஒட்டு மொத்தமாக செயல் பட வைத்துக் கொண்டிருந்தான் ராணா. கண்கள் அனைத்தையும் மீறி அவன் முன் சொக்கி தான் கிடந்தாள் மிறுதியா. தவறு என்று மூளைக்கு உணர்த்தினாலும் அவளின் மனம் அடியோடு அவனை வெறுக்க முயற்சி செய்தாலும் இந்த பாலாய் போன உடம்புக்கு கேட்கிறதா. எவ்வளவோ முயற்சி செய்தும் எண்ணத்தை கட்டு படுத்தினால் கூட தன் உடலை மொத்தமும் கிரகித்து கொள்ளும் அவன் பார்வை, அவனது ஆளுமை பிடிக்க தான் செய்தது. ஆனால் இது தப்பு தான் ஒரு வேசி போல அவன் தொடுதலுக்கு குலைந்து நிற்கிறோம் என உள்ளுக்குள் தோன்றியது.

தியா! தியா என இரவு முழுக்க கட்டிலில் இருக்கும் நட்டு போல்ட் கலன்டு கீழே விழும் அளவுக்கு கட்டில் போர் தொடர்ந்தது. மெல்ல மெல்ல அவனது போதை குறைய எதிரில் இருக்கும் பெண்ணவளை பார்த்தான் ஒரே நாளில் சில இடங்களுக்கு செய்த மசாஜ் நன்றாக வேலை காட்டி இருக்க இன்னும் எடுத்துக்கொள் பிடித்துக் கொள் கடித்துக் கொள் என்பது போல அழைத்தது அவனை.. அழகு லாவன்யங்களை கைகளில் ஸ்பரிசிக்க நினைத்தவன் எட்சிள் படுத்தும் நோக்கத்துடன் அவளின் மார்பு பக்கம் குனிந்தான்.

மிருதியாவை பார்க்க பார்க்க பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும் என தோன்றியது அவனுக்கு. “ச்ச அவள் கிட்ட என்ன இருக்கு ராணா? என உள்ளுக்குள் மனம் கூப்பாடு போட்டது. அது தான் தெரிய வில்லை. இவள் ஒன்றும் திவ்யாவை விட பேரழகி இல்லை. ஆனால் வசீகரம் செய்கிறாள். “எப்படி? எப்பிடி இருந்தால் என்ன? என்னை சோதிப்பவள் என்னருகில் இருக்க வேண்டும்.” என நினைத்தான்.

உடல் அசதியில் உறங்கி கொண்டிருந்தாள் பெண்ணவள். சடுதியில் அவனது பொறி தட்ட வேகமாக பாத் ரூம் சென்றவன் டாக்டரை அழைத்தான். “சொல்லுங்க சார்” என மருத்துவர் கேட்க.. ராணா விவரமாக அனைத்தையும் கூற “ஓகே சார் நாங்க கலெக்ட் பண்ணி ரிசல்ட் சொல்றோம்” என அடுத்த அரை மணி நேரத்தில் அனைத்தையும் செய்து முடித்து விட்டு வந்தவன். களைத்து உறங்கி கொண்டிருக்கும் மிருதியாவை பார்த்து ஆசை தீர ரசித்தவன் நேராக வந்து அவளின் நெற்றியில் முத்தம் பதித்தபடி போர்வையை நன்கு போர்த்தி விட்டு அவ்விடத்தை விட்டு கிளம்பினான்.

திவ்யா இருக்கும் ஸ்டடி ரூமில் இருந்து வெளியே வந்தான். அறையில் கன்வியுடன் உறங்கி கொண்டிருந்தாள். உடை மாற்ற பட்டிருந்தது. திவ்யா!! திவ்யா! என அழைத்தான். சட்டென எழுந்து அமர்ந்தாள். கண்களை தேய்த்த படி நிமிர்ந்து பார்க்க, அங்கே ராணா அவளை பார்த்தவாறு நின்றிருந்தான்.

“ர.. ராணா! எங்கே போயிட்டீங்க நைட் முழுக்க?” என பதட்டத்தில் எழுந்தவள் வேகமாக அவன் அருகில் வந்து கட்டி அணைத்தாள். அவளின் உரசும் தேகம் உள்ளுக்குள் பொசுக்கி விடும் அனலை கக்கியது. “ஆமா நைட் நீ என்னை. தேடினயா? அண்ட் ரோப் ட்ரெஸ்ல இருந்த நீ மார்னிங் இந்த ட்ரெஸ் I மின் சாரிக்கு எப்டி வந்த? நம்ம ரெண்டு பேருக்கும் நடுவில் என்ன நடந்தது? நான் பால் குடிச்சதும் போதை ஏறி போன மாதிரி ஒரு ஃபீல்.” என அனைத்தையும் தொகுத்து கூறினான்.

கேட்டதுக்கு பதில் சொல்லு திவ்யா? என அதிகாரமாக கேட்டான் ராணா.

திவ்யா....?
 
Top