மலர் விழி ஒரு பக்கம் பல்லவிக்கு உதவி செய்த படியே அவருடன் சுற்றி திரிந்தாள். இந்த நாள் அவளின் வாழ்க்கையில் மிகவும் மோசமான அனுபவத்தை கொடுத்தாலும், இதே நாளில் தான் வெற்றி அவளின் கண்ணுக்கு ஹீரோவாக ஒரு பாதுகாவலனாக அவனது உண்மையான தோற்றம் அவளின் முன் தென்பட்டது. உள்ளுக்குள் சொல்ல முடியா எண்ணங்கள் ஒரு பக்கம் அவளை ஆட்கொண்டது.
எதுக்கு மலரு நீ காத்திட்டு இருக்க? நீ போட்டு சாப்பிடு நான் வெற்றி வந்ததும் பரிமாறிட்டு சாப்பிடுறேன் என பல்லவி சொல்ல.. இல்லங்க அத்தை வீட்டில் இருக்கிறது மூணு பேரு! அவரும் வரட்டுமே சேர்ந்து சாப்பிடலாம் என கூறினாள்.
இதை கேட்டதும் பல்லவிக்கு சந்தோசமாக இருக்க, அப்போ அந்த பாலும் மல்லிகை பூவும் வேலை செஞ்சிருக்குமா? எதுக்கும் அக்கா கிட்ட ஒரு வார்த்தை கேட்கணும் என உள்ளே சென்றார்.
அவன் வருவானா? என வழி மேல் விழி வைத்து காத்திருந்தாள் மலர் விழி. இதோ வண்டி சத்தம் கேட்டது. உள்ளுக்குள் உணர்வுகள் ஆர்பரிக்க ஓடி சென்று கதவை திறந்தாள். அவன் தான்.. வெற்றி மாறன்.
அவளை பார்த்து இரண்டு கண்களையும் சிமட்டினான். உள்ளுக்குள் வசந்த காலம் ஆர்ப்பரித்து கொண்டிருந்தது இருவருக்கும் எப்பொழுது வேண்டுமானாலும் குளிர் காலம் ஆகலாம்.
எதுவும் பிரச்னை இல்லையே? நல்லா தானே இருக்க? என வெற்றி கேட்க..
என்ன பிரச்னை?
நான் நல்லாருக்கேன் வாங்க உள்ளே என கதவை திறந்தாள் மலர்.
அவளின் கன்னத்தில் பட்டும் படாமல் முத்தம் பதித்தான் வெற்றி.. ஹக் என துள்ளிக் கொண்டே அவள் முறைத்து பார்க்க, அழகாக சிரித்தான் வெற்றி.
"உங்களை!" என முட்டை கண்களை மிரட்டுவது போல காட்டினாள்.
வெற்றி அறைக்குள் நுழைந்தான். வண்டி சத்தம் கேட்டதே வந்துட்டானா மா? என பல்லவி கேட்டார்.
"ஹான் வந்துட்டார் அத்தை உள்ளே அறையில் இருக்காரு"... சரி நீ சாப்பாடு எடுத்து வை மா! நான் இதை காய்ச்சிட்டு வரேன்! என பாலை ஸ்டவில் வைத்தார்.
எதுக்கு அத்தை டெய்லி கொடுக்கிறீங்க? இதை குடிச்சிட்டு வாக்கிங் வேற நடக்குறாரு! என மலர் விழி சலித்து கொள்ள, எல்லாம் நல்லதுக்கு தான் என்றார் பல்லவி.
என்ன நல்லது என யோசனையுடன் மலர் பார்த்தாள். இவன் கம்மியா சாப்பிடுறான் மா! பத்து வருஷத்துக்கு முன்னாடி எப்படி இருப்பான் தெரியுமா? பார்க்கவே அவ்ளோ கம்பீரமாக இங்கே அது என்ன பேரு? அது எப்படி சொல்ல படிகட்டு மாதிரி பசங்களுக்கு வருமே! அதென்ன? என தீவிரமாக பல்லவி யோசிக்க, சிக்ஸ் பேக்கா? என மலர் கண்கள் விரிய கேட்க, அதே தான் அப்படி இருப்பான். இப்போ சரியா சாப்பிடுறது இல்ல ஒல்லியாக போயிட்டான். கொஞ்சம் குட்டி தொப்பை வேற வந்திடுச்சு என இஷ்டத்துக்கு வாய்க்கு வந்த படி பேசினார் பல்லவி.
சரி சரிங்க அத்தை என மலர் விழி வேலையை தொடர்ந்தாள்.
வெற்றி நல்ல குளிர்ந்த நீரில் தலைக்கு குளித்து முடித்து விட்டு இடையில் துண்டை கட்டிக் கொண்டே வெளியே வந்தான். ஆண்களுக்கு குளிர்ந்த நீரில் குளிப்பது மிகவும் நல்லது. தண்ணீர் சொட்ட சொட்ட அவனது போனை எடுத்து மலருக்கு அழைத்தான்.
அட பாவி பெட் ரூமில் இருந்துகிட்டு ஹாலுக்கு போனா? இவரை என்ன பண்றது? என சலித்து கொண்டே அறைக்குள் நுழைந்தாள் மலர். கதவுக்கு அருகில் நின்றிருப்பான் போல அதை மலர் அறிய வில்லை.
அவள் உள்ளே வந்ததும் கதவு சாத்த பட்டது. என்னங்க என்ன இது? என மலர் அவனை பார்த்ததும் வேறு புறம் திரும்பி கொண்டாள். ஹே என்ன அதுக்குள் அந்நியமாகிட்டேனா? மாமா சொல்லு டி! என அருகில் நெருங்கி குளிர்ந்த நீர் சொட்ட சொட்ட அவளின் கழுத்தில் முத்தமிட்டான்.
அப்.. அப்படி இல்ல.. அத்தை வெளியே இருக்காங்க! நீங்க ட்ரெஸ் போட்டுட்டு வாங்க அப்புறம் பார்த்துக்கலாம் என மலர் சொல்ல, ஈரத்துடன் அவளை அணைத்துக் கொண்டான் வெற்றி.
என்ன இவ்வளவு ஜில்லுன்னு இருக்கு காய்ச்சல் வந்திட போகுது அச்சோ என்ன மாமா நீங்க கொஞ்சம் கூட பொறுப்பு இல்ல. உங்களுக்கு என அவனை கட்டிலில் அமர வைத்து துண்டில் துவட்டினாள் மலர்.
வெற்றிக்கு அவளின் நெஞ்சம் இரண்டும் முகத்தில் மோத அவளை வளைத்து கட்டிக் கொண்டான்.
மாமாஆஆ! விடுங்க அத்தை வெளியே இருக்காங்க என சிணுங்கி கொண்டே அவனை பார்த்தாள்.
உன்னை பார்த்தால் ஒரு நிமிசம் கூட சும்மா இருக்க முடியல! எவ்ளோ கஷ்டமா இருக்குன்னு நீ வெற்றி மாறனா பிறந்திருந்தால் தெரிஞ்சிருக்கும் அவஸ்தை டி.. உன்னை பார்க்க பார்க்க என பேசி சிவக்க வைத்தான் மலரை.
"ஹான் நம்பிட்டேன்! போதும் போதும் ட்ரெஸ் பண்ணிட்டு வாங்க! அத்தை வரத்துக்குள் போகனும் நான் என உணர்வுகளை கட்டு படுத்திக் கொண்டு ஓடி விட்டாள் மலர்.
வெற்றி இன்னுமா குளிக்கிற? சீக்கிரம் வாடா ஆறிட போகுது என பல்லவி கத்திக் கொண்டே அழைக்க, ஹான் வந்துட்டேன் மா என இலகுவான உடையில் வெளியே வந்தான்.
ம்ம் வா வா வந்து உட்காரு என பல்லவி அவனுக்கு பரிமாறினார். பல்லவி அவனது செய்கையை பார்த்து டேய் எதுக்கு இத்தனை வேகமா சாப்பிடுற? எதுவும் ரேசுக்கு போக போறியா?
இனிமே தான் வேலையே ஆரம்பம் என்றான் வெற்றி.
மலருக்கு உடனே புரை ஏறியது.
கவனத்தை எங்கே வச்சிட்டு சாப்பிடுற? சீக்கிரம் சாப்பிடு என அதட்டினான் வெற்றி. எல்லாத்துக்கும் காரணம் நீ தான் டா மாமா என அவனை முறைத்து பார்த்தாள் மலர்.
டேய் எப்போ பாரு நாய் மாதிரி வல்லு வல்லுன்னு இப்படி குலைச்சிட்டு இருப்பியா? அவள் உன் பொண்டாட்டி டா! அப்படியே மிரட்டுற? சரி இல்ல வெற்றி. எல்லாமே ஒரு அளவுக்கு தான் என கடிந்து கொண்டே சாப்பிட்டார் பல்லவி.
அவசர அவசரமாக சாப்பிட்டு விட்டு நேராக மாடிக்கு சென்றான் வெற்றி. இயற்கை காற்று அதனுடன் சாப்பிட்ட அடுத்த நொடியே படுக்க கூடவே கூடாது. பல்லவி மனதில் என்ன இந்த பையன் இப்படி பண்றான்? நான் பண்ற முயற்சி எல்லாம் வீண் தானா? அய்யோ கடவுளே அவனுக்கு ஒரு நல்ல புத்திய கொடு சாமி என் மருமகள் புள்ளை கூட அவன் சேர்ந்து சந்தோஷமா வாழணும் என மனதுக்குள் வேண்டி கொண்டு மலரை அழைத்தார் பல்லவி.
அத்தை என சொல்லிக் கொண்டே உள்ளே வந்தாள். வழக்கம் போல நாசியை மயக்கும் மல்லிகையை சூடி விட்டார். அதன் கூடவே கையில் பால் டம்ளரை கொடுத்தார்.
சரிங்க அத்தை என வாங்கிக் கொண்டு அறைக்கு சென்றவள். அங்கே சுற்றிலும் பார்க்க ஆளை காண வில்லை. எங்கே ஆளை காணோம் என தேடி கொண்டே வெளியே வந்தவள் போன் செய்தாள்.
எங்கே இருக்கீங்க? என செய்தியை தட்டி விட்டாள்.
"மேலே வா மலரு"
பாலையும் எடுத்துக் கொண்டு மேலே சென்றாள் மலர்விழி.
"இங்கே என்ன பண்றீங்க? ஓ வாக்கிங்கா? ஆனால் சாப்பிட்டு வாக்கிங் போக கூடாது"
இல்ல கொஞ்சம் காத்து வாங்க வந்தேன். உன் கைல என்ன? என அருகில் வந்தான் வெற்றி.
"பால் தான் அத்தை கொடுத்து விட்டாங்க. ம்ம் வாங்கிகோங்க" என நீட்டினாள்.
"உனக்கு?"
எனக்கு வேணாம் வயிறு ஃபுல் என்றாள்.
"கோழி கொத்துற மாதிரி சாப்பிடுற? நல்லா சாப்பிடணும் டி!" என்றவன் வாங்கி ஒரே மூச்சில் மொத்தத்தையும் குடித்து மாடியின் லைட்டை ஆஃப் செய்தான்.
என்ன பண்றீங்க? என மலர் கேட்க.... அதற்குள் அருகில் வந்தவன். கொஞ்சம் முத்தம் வேணும். என அவளை வளைத்து அப்படியே மடியில் அமர வைத்துக் கொண்டான் வெற்றி.
என்னங்க இது? தப்பு வெளியே இப்படி பண்ண கூடாது. வாங்க கீழே போலாம். என அவள் எவ்வளவோ எடுத்து கூற, இல்ல இப்போ வேணும் நீ என்ன கொடுக்கிறது நானே கொடுத்துப்பேன் என அவளின் தலையை சாய்த்து முத்தமிட ஆரம்பித்தான் வெற்றி.
ம்ம்ப்.. மிம்.. என முனகி கொண்டே மூச்சு வாங்கியவள். பிளீஸ் மாமா விடுங்க என அவள் எழுந்து கொள்ள முயற்சி செய்ய, விடா கண்டனாக பிடித்தான் அவளை.
ஹே இப்படி அநியாயம் பண்ணாத! என அவளின் உடையில் கைகள் அலை பாயிந்தது. மாமா கொஞ்சம் பொறுங்க கீழே போலாம் இங்கே வேணாம் என மலர் சினுங்க..
வெற்றி கைகளை கட்டிக் கொண்டு அதே இடத்தில் அமர்ந்திருந்தான். மாமா வாங்க! என மலர் அழைக்க, அவன் அசையவே இல்லை.
"மாமா! என்ன இது சின்ன குழந்தை மாதிரி வாங்க மாமா என அருகில் சென்றவள். இப்போ வர போறீங்களா இல்லையா?"
"முத்தம் தானே கொடுத்தேன் அதுக்கே இப்படி பண்ற? நான் வரல.."
"இப்போ நீங்க கீழே வந்தீங்கன்னா! உங்களுக்கு கொடுக்க நிறைய இருக்கு." என்றாள் மலர் வெட்கம் மறைத்து.
நீ இப்போ முத்தம் குடு நான் வரேன்! இல்லன்னா நீயே போடி என்றான் வெற்றி.
அப்புறம் உங்க இஷ்டம் மாமா! நஸ்டம் உங்களுக்கு தான் நான் போறேன்! என அவள் கிளாசை எடுத்துக் கொண்டு படிகட்டின் பக்கம் சென்றாள். அப்படி என்ன தர போற? சொல்லேன் டி என வெற்றி அவளின் பின்னால் சென்றான்.
இல்ல உங்களுக்கு கிடைக்காது. சொல்லும் போது நீங்க வரலல்ல இனி உங்களுக்கு இல்ல தர மாட்டேன் என அவள் படியில் இருந்து வேகமாக இறங்கினாள்.
"மலர் நில்லு" என பின்னால் ஓடினான் வெற்றி.
போங்க மாமா! என சிரித்துக் கொண்டே வந்த மலர் ஸ்டன் ஆகி அப்படியே நின்றாள்.
"ஹே உன்னை விட மாட்டேன் டி! பிடிச்சு...!!" என வெற்றி ஒரு பக்கம் அப்படியே சிலையானான்.
அவர்களின் முன்னால் பல்லவி தான் நின்றிருந்தார். அவரது கண்ணை அவராலேயே நம்ப முடிய வில்லை இமைக்க மறந்து இருவரையும் பார்த்தார்.
மலர்விழிக்கு மிகவும் கூச்சமாக போக, வேகமாக கிளாசை கழுவி வைக்க கிச்சன் சென்று விட்டாள்.
பல்லவிக்கு சந்தோஷம் ஒரு பக்கமும் ஆர்வமும் சேர்ந்து கொள்ள.. இது என் பையன் தானா? என நினைத்தவர். எதுவும் பேசாமல் தண்ணீர் பாட்டிலை நிரப்பி கொண்டு நமட்டு சிரிப்புடன் சென்று விட்டார்.
மலர் மனதில் அய்யோ இப்போ அவர்
எப்படி நடந்துபார்ன்னு தெரியலையே என நகத்தை கடித்துக் கொண்டு அறையின் பக்கம் வந்தாள்.
வெற்றி மாறன்...?
வருவான்.

Author: Pradhanya
Article Title: அத்தியாயம்-13
Source URL: Pradhanya kuzhali novels-https://pradhanyakuzhalinovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.