Pradhanya

Active member
Staff member
Joined
Oct 6, 2024
Messages
120
சமையலறையில் இருந்து தயக்கத்துடன் வெளியே வந்த மலர்விழி, "இப்போ மறுபடியும் பேக் டூ ஸ்ட்ரிக்ட் மூடுக்கு போயிருவாரா? அய்யோ!!" என அறையின் பக்கம் சென்றாள்.

பல்லவிக்கு அறைக்குள் சென்றதும் சந்தோஷம் தாள வில்லை. நம்ம மகன் வெற்றியா இது? என நினைத்தவர் கண்கள் சடுதியில் கலங்கி போனது. என்னங்க நீங்க ஆசைப்பட்டது இன்னிக்கு நடந்திடுச்சு! வெற்றிய நினைச்சு தானே அந்த விரக்தியில் உயிரை விட்டீங்க. அவன் சந்தோஷமா இருக்கான். என சேலையின் தலைப்பால் கண்களை துடைத்துக் கொண்டு தன் கணவனின் படத்தை பார்த்தார். சீக்கிரம் வீட்டில் நல்ல சேதி வந்ததுனா போதும். என அவரின் எண்ணங்கள் எங்கெங்கோ சென்றது.

பாண்டியனின் நட்பு வட்டத்தில் நெருங்கிய தோழனின் பெண்ணை தான் வெற்றிக்கு பேசி முடித்தார்கள். அந்த பெண்ணும் விருப்பம் இருப்பதை போல காட்டிக் கொண்டு சரியாக வெற்றியை விட்டு சென்று விட்டாள். வெற்றிக்கு அனைவர் முன்பும் அவமானமாகி போனது. அதே விரக்தியுடன் பட்டாளம் சென்றுவிட்டான்.

பொற்கொடியின் திருமணத்துக்கு தான் வீடு வந்து சேர்ந்தான். பாண்டியனுக்கு தன் பெண்ணின் திருமணம் ஒரு பக்கமும், தனது மகனின் வாழ்க்கை இப்படி ஆகி விட்டதே என விரக்தியில் பொற்கொடி, பிரகாஷ் திருமணம் நடந்த மூன்று நாட்களில் உயிரை விட்டார். பல்லவி நிலை குலைந்து போக, தன் அன்னையை பார்த்து கொள்ளவும் அப்பா நடத்தி கொண்டிருந்த செக்யூரிட்டி ஆபிசை இன்னும் விரிவாக்கி அதனுடன் பத்திர ஆபிசையும் சேர்த்து நடத்தி வந்தவன். குடும்ப பொறுப்பு மொத்தத்தையும் அவனே ஏற்று கொண்டான்.

பொற்கொடியின் வளைகாப்பு, புது வீடு கட்டி குடி புகுந்தது, இளமாளனின் படிப்பு செலவு என மொத்தத்தையும் சீரும் சிறப்பாக அனைத்தையும் முடித்தான். இதையெல்லாம் நினைத்த படி நீண்ட நாள் கழித்து நிம்மதியுடன் உறங்கி போனார் பல்லவி.

எப்படி உள்ளே போறது? அச்சோ அத்தை வேற இப்படி ஒரு நிலையில எங்களை பார்த்துட்டாங்களே! என அவர்களது அறை வந்திருந்தாள்.

அவள் கழுத்து செயினை முறுக்கி கொண்டே கடித்துக் கொண்டே பதட்டத்துடன் எட்டி பார்க்க, திடீரென இரும்பு கைகள் அவளை உள் இழுத்து கொண்டது. ஹக் என துள்ளிக் கொண்டே அவனை விதிர்விதிர்த்து பார்த்தாள். "எவ்ளோ நேரம் மலரு வெயிட் பண்றது? இவளோ நேரம் என்ன பண்ணிட்டு இருந்த? இன்னும் கொஞ்சம் லேட் பண்ணிருந்த! நான் அங்கேயே வந்திருப்பேன் டி!" என சொல்லிக் கொண்டே அவளுடன் படுக்கையில் விழுந்தான்.

ம.. மாமா! இது நீங்க தானா? அத்தை நம்ம ரெண்டு பேரையும் பார்த்திட்டாங்க! உங்களுக்கு பிரச்னை இல்லையே! என மலர் கேட்க, எப்படியும் ஒரு நாள் தெரிஞ்சு தானே ஆகணும்! ம்ம் என அவளின் முகமெல்லாம் ஆவேசமாக முத்தமிட்டான் வெற்றி.

அவனது வேக தாக்குதலில் கொஞ்சம் தடுமாறினாள் மலர்.

"வெயிட்டா இருக்கேனா?" என மெதுவான குரலில் கேட்டவன் கட்டிலில் புரண்டு அவளை அவனுக்கு மேல் கொண்டு வந்தான்.

இல் இல்ல... என அவளின் பார்வை வெட்கத்தில் உருண்டது.

"எதுவும் பேசு மலரு!"

....அமைதி...

ஹே மலரு உன்னை தான் டி பிடிக்கலயா என தனக்கு மேல் பூ குவியலாக கிடப்பவளை பார்த்து கேட்டான் வெற்றி.

அது வெட்கமா இருக்கு என அவனை கட்டிக் கொண்டாள்.

அவளின் விரல்களை பிடித்து முத்தம் வைத்தவன். சரி சொல்லு எனக்கு கொடுக்க நிறைய இருக்குன்னு சொன்ன? என்ன தர போற! என கேட்டுக்கொண்டே அவளின் முகத்தை நிமர்த்தினான்.

ம்ம் ஹிம் மாட்டேன் என அவனிடம் இருந்து உருண்டபடி வெற்றிக்கு முதுகு காட்டினாள்.

மலர் என அருகில் நெருங்கி அவளை சுருட்டி அணைத்துக் கொண்டான். அவளின் கழுத்தில் முத்தமிட்டு கொண்டே கேட்டான். என்ன தர போற! சீக்கிரம் தாடி! என கேட்டுக்கொண்டே அவன் கைகள் மலரின் உடலில் பயணம் செய்தது. வெற்றியின் கண்கள் சிவந்து கிடந்தது. மோகமும் தாபமும் கரை புரண்டது.

"அப்போ நான் மேலே போறேன்!"

மாமாஆ! என அவன் பக்கம் வெடுக்கென திரும்பினாள்.

நீ சீட் பண்ற! உன்னோட பிராமிசை காப்பாத்தனுன்னு உனக்கு ரெஸ்பான்சிபிலிட்டி துளி கூட உனக்கு இல்ல என எழுந்தான்.

போகாதீங்க! லை டவுன் என இழுத்து கொண்டாள். ஆனால் இழுத்த இழுப்புக்கு வளைந்து கொடுக்கும் ஆளா வெற்றி. அவனது இரண்டு கைகளும் கர்லா கட்டையை போல இருக்கும். கட்டு மஸ்தான உடல் தான். ஆண்மைக்கு இலக்கணம் அது வெற்றி மாறன் தான். தன் கணவன் பேரழகன் என்பதில் மலருக்கு பெருமையும் கர்வமும் உண்டு.

"விடு விழி!" என்றான் வெற்றி.

விழியா? என விழி விரித்து பார்த்தாள் மலர்விழி.

நீ பேச்சை மாற்றாத விடு நான் போறேன். என வெற்றி நகர, சரி ஸ்ட்ரிக்ட் ஆபிசர் கோப பட வேணாம். என கெஞ்சும் தொனியில் பார்த்தவள். மாமா முரண்டு புடிக்காதீங்க! என்றவள் அவனை நெருங்கி படுத்தாள்.

ஒரு கழித்து படுத்துக் கொண்டான் வெற்றி.

மாமா! இந்த பக்கம் என்னை பாருங்க என அவள் அழைக்க, திரும்ப வில்லை வெற்றி. மெதுவாக எழுந்து கொண்டு மறுபக்கம் வந்து அவனுடன் ஒட்டி படுத்துக் கொண்டாள்.

மாமா!

மாமாஆ! என கொஞ்சும் மொழியில் அழைத்தவள். அவனது கைகளுடன் கோர்த்து கொண்டாள்.

"தூங்கலாம்" என அவள் புறம் திரும்பி கொண்டான். அப்போ வேணாமா? என அவனது கைகளை எடுத்து முன்னழகு அன்னத்தில் வைத்தாள்.

வெடுக்கென கண் விழித்தான் வெற்றி.

"ம்ம் எனக்கு தூக்கம் வருது....தூங்குவோம்" என அவனுக்கு முதுகு காட்டி படுத்தாள் வேண்டுமென்றே...

விழி மா! பிளவரு! என் மலரு என சொல்லிக் கொண்டே ஒரே பிடியில் அவன் பக்கம் திருப்பினான் வெற்றி.

"என்ன மாமா பண்றீங்க? எனக்கு தூக்கம் வருது! விடுங்க.. நாளைக்கு ஸ்கூல் போகனும்" என நெளிந்தாள்.

அவளின் உதட்டில் மென் முத்தத்தை கொடுத்தவன். என்னை ஏமாத்தாத ஏங்கி போயிடுவேன் என்றவன். ஒரு சில நொடியில் அவளின் நெஞ்சு குழியில் முகம் புதைத்தான். கொஞ்சம் பிடித்தான். சுகித்தான் அவளை...

மலர்! என கொஞ்சலுடன் கொஞ்சினான். அவள் வலியுடன் சிணுங்கி கொண்டே "விடுங்க வெற்றி... போதும் தெரியாம காட்டிட்டேன். ஹா..."

நான் பார்க்கவே இல்லையே! டாப்பை கலட்டு டி! என அவளை மேலாக படுக்க வைத்து வெற்றி வாகாக படுத்துக் கொண்டான்." போதுமே..." என மலர் சினுங்க..

"இனி டெய்லி வேணும் ரெண்டு பக்கமும்" என விடிய விடிய அவளின் நெஞ்சை மஞ்சமாக்கி படுத்தி விட்டான்.

அதிகாலை முத்தத்துடன் உதட்டை கவ்வி கடித்து குருதி சுவைத்து அவளின் நெஞ்சத்தில் மொட்டுகளை வெடித்து பூக்க வைக்குன் முயற்சியில் இறங்கினான் வெற்றி. ஆனால் அவள் சூடியிருந்த மல்லி சர மொட்டுகள் பூவானதே தவிர அவளின் இரு மொட்டிகளும் இன்னும் மலர அடம் பிடித்தது. அவளை ஒரு வழி ஆக்கி விட்டு உதட்டை துடைத்துக் கொண்டு காலை உடற்பயிற்சி செய்ய சென்று விட்டான்.

மலர் தாமதமாக தான் எழுந்தாள். எழுந்ததும் குளிக்க சென்றாள். அவளை உருட்டி கட்டிக்கொண்டு உறங்கினானே! அதனால் குளித்து முடித்து கொண்டையிட்ட படி வெளியே வந்தாள். அங்கே வெற்றியின் முன்னால் சிந்து இருக்க, பல்லவி அனைவருக்கும் டி காபி போட கிச்சன் சென்று விட்டார்.

அவர் சென்றதும் சிந்து பேச வர, என்னால கம்ப்லைன்ட்ட வாபஸ் வாங்க முடியாது. அதுக்கு தானே வந்திருக்கீங்க? என வெற்றி அதே கம்பீரத்துடன் மிடுக்கு குறையாமல் கூற..

சிந்து புன்னகைத்த படி எக்காரணத்தை கொண்டும் "நீங்க வாபஸ் வாங்க வேண்டாம் அதை சொல்ல தான் வந்தேன்."

அக்கா என மலர் விழி வேகமாக வந்து அருகில் அமர்ந்து கொண்டாள். சிந்து தன் தங்கையின் கையை பிடித்து என்னை மன்னிச்சிடு மலரு நான் வாக்கபட்டு போன இடத்தில் இருந்து உனக்கு பிரச்னை வந்திடுச்சு. என்றாள் கண்ணீர் மல்க..

அக்கா அந்த பொறுக்கி நாய் பன்னதுக்கு நீ என்ன பண்ணுவ! சரியான நேரத்துக்கு இவர் வந்து என்னை காப்பாத்திட்டார். நீ எதை நினைச்சும் கவலை படாதே! என சிந்துவை சமாதானம் செய்ய முயற்சி செய்தாள்.

என்ன சிந்து அழுதிட்டு இருக்க என்னமா? தங்கச்சிய பிரிஞ்சி இருக்க முடியலையா? என பல்லவி கேட்க, அவங்க ரெண்டு பேருக்கும் ஆயிரம் பேச இருக்கும். அது உனக்கு எதுக்கு மா! போங்க! அபாபா தனியா இருக்கட்டும் என என பிரச்சனையை பற்றி அம்மாவுக்கு தெரிய கூடாது என்பதில் உறுதியாக இருந்தான் வெற்றி.

பாரு மா சிந்து இப்படி தான் பண்றான். நான் ஒன்னு சொல்றதுக்கு இல்ல என குறை பட்டு கொண்டே சென்றார்.

வெற்றி அவர்களுக்கு தனிமை கொடுத்து குளிக்க சென்று விட்டான். மலர் என கட்டியணைத்து அழுதாள் சிந்து.

அக்கா நீ நினைக்கிற மாதிரி ஒண்ணுமே நடக்கல.. நீ தேவையே இல்லாம வறுத்த படாத! எனக்கு உன்னை நினைச்சு தான் கஷ்டமா இருக்கு. என மலர் கூற..

என்னை நினைத்து நீ எதுக்கு கஷ்ட படுர? என சிந்து கேட்க, அங்கே மோகன் மாமா, உங்க மாமியார் ரெண்டு பேரும் பேயாட்டம் ஆடுவாங்களே! அந்த முரளி கழுதைய ஜெயிலில் புடிச்சு கொடுத்த பிரச்னை இனி தான் வளரும் அதை நினைச்சு தான் என்றாள் வருத்தத்துடன்.

சிந்து மலரின் கையை பிடித்துக் கொண்டு நீ நினைக்கிற மாதிரி ஒன்னும் இல்ல எல்லாமே ஓகே! அதுங்க தான் என்னோட சம்பாத்தியாத்தை நம்பி இருக்குங்க என பெரிதாக அலட்டி கொள்ளாமல் கூறியவள். உன்னோட சந்தோஷம் தான் எனக்கு முக்கியம். வெற்றி கண்ணுல உனக்கான உணர்வுகளை பார்த்தேன். எனக்கு அது ஒன்னு போதும் அவரு உன்னை நல்லா பார்த்துபாரு. சரி நான் கிளம்பறேன் என எழுந்தாள்.

அடுத்த முறை கோகுல கூட்டிட்டு வந்திருக்களாமே என மலர் சொல்ல, அடுத்த முறை கூட்டிட்டு வரேன். எனக்காக அந்த முடிச்சவிக்கி ஃபேமிலி வெயிட்டிங் நான் இன்னொரு நாள் வரேன் டி! இனி வெளியே போகும் போது அவர் கூடவே போ! என சொல்லிவிட்டு கிளம்பினாள்.

என்ன மா வந்ததும் போற? சாப்பிட்டு போலாமே என பல்லவி கூறினார்.

பையன் வீட்டில் இருக்கான் மா! நான் இன்னொரு நாள் வரேன் என சிந்து கிளம்பி விட, மலரு சாப்பாடு ரெடி நீ புறப்படலையா மா? என கேட்டு கொண்டே
பல்லவி கிச்சன் செல்ல..

இதோ சாரி கட்டிட்டு வரேன் அத்தை என அறைக்குள் சென்றாள் மலர்.

வருவான்...
 

Author: Pradhanya
Article Title: அத்தியாயம்-14
Source URL: Pradhanya kuzhali novels-https://pradhanyakuzhalinovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top