மலர் ஒரு பெரு மூச்சை விட்டபடி கட்டிலுக்கு அடியில் அவளது பையை தேடினாள். எங்கே என்னோட துணி பையை காணோம்? என அவ்விடத்தை சுற்றி பார்த்தவள் கப்போர்டை திறக்க அங்கே உடை அனைத்தும் நேர்த்தியாக அடுக்கபட்டிருந்தது. எப்போ நடந்தது? இது எல்லாம் மாமாவோட வேலையா தான் இருக்கும் என நினைத்து சிரித்து கொண்டவள். புடவை கட்ட ஆரம்பித்தாள்.
முந்தியை சேப்டி பின் அணியாமல் மேலே போட்ட படி கீழே கொசுவத்தை மொத்தமாக அள்ளி பிளீட்ஸ் மடிப்பை எடுத்து இடையில் சொருகி கொண்டு மாராப்பு முந்தி மடிப்பை எடுக்க ஆரம்பித்தாள் மலர். கதவு சத்தம் கேட்டது.
அத்தை நான் புடவை... என சொல்லிக் கொண்டே அவள் வெடுக்கென திரும்ப, வெற்றி காந்த புன்னகையுடன் மலரின் முன் நின்றிருந்தான்.
என்ன பண்றீங்க? இப்போ எதுக்கு கதவை லாக் பண்ணீங்க? எனக்கு டைம் ஆச்சு? என மலர் வேகமாக கதவு பக்கம் செல்ல, விழி மா! உங்களுக்கு கொஞ்சம் கூட பொறுப்பு இல்ல. மெத்தனம்? என முகத்தை கோபமாக வைத்துக் கொண்டே கூறினான்.
"நான் என்ன பண்ணேன்?" என மலர் திடுக்கிட்டு பார்க்க, ட்ரெஸ் மாத்தும் போது லாக் பண்ணிட்டு மாத்தணும். உனக்கு டிசிப்ளின் இல்ல சொல்லி தரணும் போலயே! என அருகில் பொய் கோபம் கொண்ட படி நெருங்கினான்.
"எனக்கு தான் டிஸ்ப்லின் இல்ல சாரி சாரி!" என வேகமாக நிலை கண்ணாடியின் அருகில் இருக்கும் சேப்டி பின்னை எடுத்தாள். என்ன மாமா? எதுக்கு இப்படி குட்டி போட்ட பூனை மாதிரி பின்னாடியே வரீங்க? நகருங்க என மலர்விழி அங்கும் இங்கும் நடந்து தடுமாறினாள்.
"பூனை எதுக்கு வரும்?" என வெற்றி உதட்டுக்குள் சிரித்தபடி அவளை வளைத்து கட்டிலில் தள்ளினான்.
மாமாஆஆ! நீங்க பண்றது கொஞ்சம் கூட நல்லால்ல! எனக்கு டைம் ஆகுது என அவளின் முகம் கோபத்தில் சிவந்தது.
"நீயா போனால் பஸ் பிடிச்சு ஸ்கூல் போக எவ்ளோ நேரம் ஆகும்?"
"இதென்ன கேள்வி நீங்க நகருங்க!"
"சொல்லு டி!" என மொட்டை கிள்ளினான் வெற்றி.
"ஹவுச்!" என முகத்தை சுளித்தவள் "அரை மணி நேரம் ஆகும். நகருங்க நீங்க கேட்ட பதில் வந்திடுச்சு தானே!" என வலு கொடுத்து நகர முயற்சி செய்தாள் மலர்விழி.
"உன்னை இனி நான் டிராப் பண்றேன் அதனால உனக்கு 20 மினிட்ஸ் சேவ் காட் இட்"
"சரி நகருங்க! போலாம் அதுக்கு முன்னாடி நான் சாரி கட்டணும்" என மலர் எழுந்து கொள்ள முயற்சி செய்ய...
அதுல பத்து நிமிசம் எனக்கு கொடுத்திட்டு அப்புறம் கிளம்பு என்ற வெற்றி அவளின் உதட்டில் முத்தமிட்டுக் கொண்டே மெல்ல கீழிறங்கினான்.
மாமா இப்போ இது தேவை தானா? இதுக்கு தான் உங்களுக்கு காட்ட வேண்டாம்னு நினைச்சேன் நீங்க.. ஹ... என அவளை அடுத்த வார்த்தை பேச விட வில்லை வெற்றி.
மெல்ல மெல்ல அவளின் உதட்டை மொத்தமாக மிட்டாய் போல மென்று தின்றவன். அவளின் கழுத்துக்கு கீழ் ஆவேசமாக கொக்கிகளை கழட்டினான். அந்த உடுப்பு மொத்தமாக கிழிந்து போனது. சாரி டி என்னால கட்டு படுத்த முடியல என்றவன் பூனையாக மாறி இருந்தான்.
"போதும் வெற்றி ஒழுங்கா நகருங்க!" டென் மினிட்ஸ் இன்னும் முடியல என எட்சில் ஊறிய உதட்டுடன் பதில் மட்டும் வந்தது. அவள் அதற்கு மேல் தடுக்க வில்லை சரியாக பத்து நிமிடங்கள் கழித்து விட்டவன். மீதிய சாயங்காலம் பார்த்துக்கலாம் டி என கீழ் உதட்டை கவ்வி கடித்து விட்டு அவளுக்கு வேறு புடவையை எடுத்து கொடுத்து விட்டு உடையை அணிந்து கொண்டிருந்தான்..
மலர் அவனை முறைத்த படி புடவையை கட்டி கொண்டவள். அவனை எரித்து விடுவதை போல பார்த்து விட்டு கதவை திறந்து வெளியே சென்றாள். பூனை அறையை விட்டு வந்ததும் புலி போல பாவ்லா செய்தது.
"என்ன மலர் தலை வாறலயா?" என கேட்டுக் கொண்டே பல்லவி அவளின் முகத்தை பார்த்தார்.
அது மறந்துட்டேன் அத்தை எனக்கு பின்னி விடுங்களேன் என உணவை போட்டுக் கொண்டாள்.
"இரு வரேன்!" என அவர் உள்ளே சென்றார்.
"மலர்!!
மலர்!!
ஹே உன்னை தான் டி!
மலர் விழி!" என வெற்றி அழைத்துக் கொண்டிருக்க, அவன் பக்கமே திரும்ப வில்லை அவள்.
"கோபமா? மலர்?" என வெற்றி கேட்டுக் கொண்டிருக்கவே சீப்புடன் வந்து சேர்ந்தார் பல்லவி.
தன் அன்னை வந்ததும் வாயை மூடிக் கொண்டு உணவை சாப்பிட்டான் வெற்றி.
அவள் ஓர கண்ணால் மாமனின் அழகை ரசித்து பார்த்த படி, அதே சமயம் அவனை முறைத்து கொண்டே சாப்பிட்டாள்.
வெற்றி வண்டியில் காத்திருக்க, பல்லவி மலருக்கு உணவு பையை கொடுத்தவர். என்ன மலரு இன்னிக்கி லேட் ஆகிடுச்சு போல! கொஞ்சம் சீக்கிரமா கிளம்பலாம்ல மா! அவுதி அவிதியா அரக்க பறக்க எதுக்கு ஓடனும்? என அவளின் பின்னால் வந்தார்.
அது இனிமே அவரு கொண்டு போய் விடுறேன்னு சொல்லிட்டாரு அத்தை அது தான் நான் கொஞ்சம் தாமதமா கிளம்பினேன். என மலர் தலையை குனிந்த படி சொல்ல.. அடியே ராசாத்தி இதுக்கு எதுக்கு வெட்கம்? எனக்கு அம்புட்டு சந்தோஷமா இருக்கு. நீ போயிட்டு வா கண்ணு! இனி எல்லாமே நல்ல காலம் தான். என் புள்ளை சந்தோஷம் தான்.. இல்லல்ல என மறுமக சந்தோஷம் தான் எனக்கு முக்கியம் என்று சொன்ன படி வழி அனுப்பி வைத்தார் பல்லவி.
"மலர் விழி!" என கம்பீர குரலில் கத்தினான் வெற்றி.
போயிட்டு வரென் அத்தை என சொல்லிக் கொண்டே வெளியே வந்த மலர் அவனது புல்லட்டில் ஏறி கொண்டாள். கொஞ்சம் இடைவெளி விட்டு.
"ஹே கைய தோல் மேல் போடு டி!" என வெற்றி ஆசையுடன் சொல்ல, அது டிக்னிட்டி இல்ல என்றாள் மலர் முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு..
கோபமா மலர்! பேசு டி! என் கூட வர விருப்பம் இல்லையா? எதுக்கு இப்படி உட்கார்ந்திருக்க? என கேட்டவன் ஸ்பீட் பிரேக் போட்டான். ஸ்பீடாக... அவள் தடுமாற்றத்துடன் மோதிய படி வண்டியின் கம்பியை பிடித்தாள். ஹே இடுப்பை கட்டிக்கோ டி! என கைகளை வளைத்து பிடித்தான் வெற்றி.
"கைய விடுங்க வெற்றி"
"மரியாதை கொடு டி! நான் உன்னை விட பெரியவன்"
"கைய விடுங்கன்னு சொன்னேன்!" என மலர்விழி உதறினாள்.
"ப்ச்!! இப்படி யாரு மரியாதை கொடுக்க சொன்னா? நீ சரி இல்ல மலர்"
நீங்க சரியா? நீங்க பண்றது நல்லாருக்கா? என மூக்கு புடைக்க கேட்டாள்.
எனக்கு ரொம்ப நல்லாருக்கு என கடுவன் முகத்தில் சந்தோஷம் எட்டி பார்த்தது.
"ச்சீ உங்க எண்ணம் எங்கே போகுது?"
அங்கே தான் போகுது! இப்போ கூட என வெற்றி குறும்பாக சொல்ல... நாளையில் இருந்து நான் பஸ்லயே போயிக்கிறென் உங்க கூட வர மாட்டேன். என மலர்விழி முகத்தை தூக்கி வைத்துக் கொண்டாள். அதன் பின் பயணம் அமைதியாக சென்றது.
வெற்றி எதுவும் பேச வில்லை அவனது முகம் இறுகி போயிருக்க, பள்ளி வந்தது அவள் இறங்கிய அடுத்த நொடி புல்லட்டை முறுக்கிய படி கிளம்பி விட்டான். மலர்விழி அவனை புருவ முடிச்சுடுடன் திரும்பி பார்த்தாள். நான் தான் டா கோப படனும்? இவர் எதுக்கு கோபப்படுறார் லாஜிக்கே இல்லையே! என நினைத்தவள் ஒரு பெரு மூச்சை விட்ட படி பள்ளிக்குள் நுழைந்தாள்.
இங்கே வெற்றி தீவிர யோசனையுடன் இருந்தான். இவளை எப்படி சமாதானம் பண்றது. ஓவரா பண்றா! பஸ்ல போறாளாம்!! என்னை மீறி போயிடுவாளா? எப்டின்னு பார்க்கிறேன் என அனைத்து வேலைகளையும் துரிதமாக முடித்தவன் நினைவில் அவளது ஜாக்கெட்டை ஆவேசமாக கிழித்து வீசியது தான் சிந்தையில் ஓடியது. தன்னை தானே நொந்து கொண்டான். தப்பு தான் விழி மேலே நியாயமும் இருக்குது என நினைத்தவன். என்ன பண்ணலாம் என்ன பண்ணலாம் என குறுக்கும் நெடுக்குமாக நடந்தவன். அதுக்கு பதிலா வேற ஒரு ஜாக்கெட் வாங்கி கொடுப்போம். இல்ல இல்ல புடவையே வாங்கி கொடுத்திடலாம் என சிந்தையில் ஓட... இதோ கிளம்பி விட்டான் புடவை கடைக்கு.
கடைக்காரர் வெற்றியை பார்த்து விட்டு என்ன சார் வேணும்? எதுவும் கோட் ஷூட் பார்க்க வந்தீங்களா? என கேட்க, "இல்ல புடவை பார்க்கணும் என்னோட மனைவிக்கு!" என்றான் வெற்றி.
இதோ சார் கண்மணி அவரை புடவை செக்சன் கூட்டிட்டு போய் புடவை காட்டு மா! என அனுப்பி விட்டார்.
சார் இது சில்க் சாரி, பூனம், சிந்தட்டிக், இது காட்டன். இது செமி காட்டன், சிபான் புடவை என அனைத்தையும் காட்டினாள் அந்த பெண்.
வெற்றி அந்த புடவை அனைத்தையும் பார்த்தான். அத்தனையும் மலர் விழிக்கு அவ்வளவு அழகாக இருக்கும். இப்பொழுது எதை எடுக்க என நெற்றியை நீவியவன். பட்டு ரோஸ் கலர் வெள்ளை கற்கள் பதித்த சிபான் புடவையை எடுத்தான். இது வேணும்..
"சூப்பர் சார்! உங்க மனைவி எப்டி இருப்பாங்க சொல்லுங்க அப்போ தான் என அந்த பணிப்பெண் கண்மணி பேச வர... தேவையில்லை இது வேணும் அவ்ளோ தான் என கடுமையாக கூறினான்.
அந்த பெண் வாய் மூடிக் கொண்டாள். அடுத்ததாக குபேர பட்டு அரக்கு வண்ணத்தில் பச்சை கட்டங்கள் கூடவே பட்டு நூலில் புடவை பார்ப்பதற்கு அத்தனை அம்சமாக இருந்தது. இப்பொழுது வெற்றியின் கண்களில் மலர் விழி வந்து சென்றாள்.
இது வேணும் என வருடி பார்த்தான். மலர் விழியை தடவுவது போல தோன்றியது. வெற்றியின் உதட்டில் புன்னகை ததும்பியது. கடையின் பணிப்பெண் அவனை வினோதமாக பார்த்தாள். புடவைய நீவி சிரிக்கிறார்? லூசா இருப்பாரா? என தோன்றியது.
"பில் போடுங்க" என கவுண்டர் சென்று வாங்கி கொண்டு கிளம்பினான். மலர் விழியை சமாதானம் செய்ய...
பள்ளி முடிந்தது. மலர் ஒருவித எதிர் பார்ப்புடன் வருவாரா? காலையில் தேவையில்லாம கோபமா பேசிட்டோமா? அய்யோ என என நொந்து கொண்டு வெளியே வர அங்கே சிந்துவின் கணவன் மோகன் நின்று கொண்டிருந்தார்.

Author: Pradhanya
Article Title: அத்தியாயம்-15
Source URL: Pradhanya kuzhali novels-https://pradhanyakuzhalinovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.