Pradhanya

Active member
Staff member
Joined
Oct 6, 2024
Messages
120
மலர்விழி பள்ளி முடிந்ததும் வெற்றியைப் பற்றி நினைத்துக் கொண்டு வந்திருப்பாரா? இல்ல வரமாட்டாரா? கொஞ்சம் ஓவரா பேசிட்டோமோ? நான் பேசினதுல என்ன தப்பிருக்கு? அவர் பண்ணதும் தப்புதான். என் பிளவ்ஸ்!! என நினைத்தவள் கண்களில் வெற்றி மோகம் மின்னும் கண்களில் ஆவேசமாக கொக்கிகளை பிய்த்து எரிந்தது தான் திரும்ப திரும்ப காட்சிகளாக ஓடியது.

எல்லாம் கிழிஞ்சிடுச்சு அது என்னோட ஃபேவரட் சாரி என்று நினைத்தவள். இருந்தாலும் இத்தனை அவசரம் ஆகாது மாமாவுக்கு. என தன்னவனை நினைத்து தேகம் சிலிர்க்க உள்ளம் குளிர, நல்ல மனநிலையுடன் வந்தாள்.

அவள் பள்ளி நுழைவு வாயில் நெருங்கும் போது தான் அந்த உருவத்தை கண்டாள். மோகன் அவளை பார்த்து பேசுவதற்காக வெகு நேரமாக காத்து கொண்டிருந்தான்.

அவனைப் பார்த்ததும் இவ்வளவு நேரமும் இருந்தால் சந்தோஷம் ஒரே நிமிடத்தில் வடிந்து விட்டது மலர் விழிக்கு.

மலரு என மோகன் மிகவும் பாவமாக முகத்தை வைத்துக்கொண்டு நின்றிருந்தான். அய்யோ! இப்போ பார்த்துட்டு பார்க்காத மாதிரி போக முடியாது. என்ன பண்றது? சரி வேற வழி இல்ல பேசி தான் ஆகணும். என்று நினைத்தபடி நடந்தாள். மோகனுக்கு மரியாதை கொடுக்க ஒரே காரணம் சிந்து தான்.

அவள் வெளியே வந்ததும் மலரு என்று அழைத்துக் கொண்டே மோகன் அருகில் வந்தான்.

சொல்லுங்க மாமா! நல்லா இருக்கீங்களா? என்று மரியாதை நிமித்தமாக அவள் பேச...

"நான் நல்லா இருக்கணும்னா! அது உன் கையில தான் அம்மா இருக்கு என்று அழுவது போல முகத்தை வைத்துக் கொண்டு கூறினான் மோகன்.

என்ன மாமா சொல்றீங்க? எனக்கு புரியல என்று பதிலளித்தாள் மலர்.

கொஞ்சம் எட்ட இந்த பக்கம் வரியா? என்று மோகன் அழைக்க, மலர்விழி அவனை வித்தியாசமாக பார்த்தாள்.

உன் மேல எந்த தப்பான அபிப்பிராயமும் எனக்கு இல்ல மா! தயவு செஞ்சு வாம்மா சிந்துவுக்கு தங்கச்சின்னா நீ எனக்கும் தங்கச்சி மாதிரி தான் என்று மோகன் மிகவும் பவ்யமாக பேச, ஒரு பெருமூச்சு விட்டபடி மலர்விழி பள்ளியில் இருந்து கொஞ்சம் தள்ளி வந்தாள்.

சொல்லுங்க மாமா? என்ன விஷயம்? எனக்கு டைம் ஆகுது? என்று அவள் மோகனை பார்க்க...

திடீரென மோகன் அவளின் முன் கையெடுத்து கும்பிட்டவன். " ப்ளீஸ் மலரு தயவு செய்து மன்னிச்சிடு! முரளிக்காக நான் உன்கிட்ட மன்னிப்பு கேட்டுக்குறேன். அவன் இப்போ ஜெயில்ல இருக்கான். அவன் ஏதோ குடிச்சிட்டு அந்த மாதிரி பண்ணிட்டான். கண்டிப்பா என் தம்பியை பத்தி எனக்கு தெரியும். அந்த மாதிரி குணமெல்லாம் அவனுக்கு இல்ல. கூட இருந்த காளி பசங்க தான் அவன தூண்டிவிட்டு, அவங்க தான் எல்லாத்தையும் பண்ணி இருக்காங்க. அவனுக்காக நான் உன் கிட்ட மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். அவன் மேல இருக்க கம்ப்ளைன்ட் மட்டும் உன்னோட புருஷனை வாபஸ் வாங்க சொல்லிடு மலர்! ப்ளீஸ் மலரு கெஞ்சி கேட்கிறேன்! என் தம்பி அவனோட வாழ்க்கையில அடியெடுத்து வைக்கவே இல்ல.. ப்ளீஸ் மலரு!!.." என்று மோகன் மன்றாடிக் கொண்டிருந்தான்.

மாமா எனக்கு சத்தியமா இதை பத்தி தெரியாது போலீஸ் புடிச்சிட்டு போனாங்கன்னு மட்டும் தான் தெரியுமே தவிர! கேஸ் இருக்குற விஷயம் எல்லாம் எனக்கு தெரியாது மாமா!! அதுவும் இதுல நான் சம்பந்தப்படல என்று மலர்விழி ஒரே பேச்சுடன் முடிக்க முயன்றாள்.

அய்யோ மலரு கொஞ்சம் மனசு வை மா! நீ சொன்னா உங்க வீட்டுக்காரர் கண்டிப்பா கேட்பாரு! எப்படியாவது அவன வெளியே கொண்டு வரணுமா! கேஸ் எல்லாம் போட்டா அவனோட வாழ்க்கை மோசம் ஆகிடும் மா! அவனோட எதிர்காலத்தை நினைச்சா எனக்கு வேற பயமா இருக்கு. என் பையன் பாவம் மலரு. வயசு பையன் அடி தாங்க மாட்டான். ஒருத்தரோட வாழ்க்கையை அழிச்ச பாவம் உனக்கு சேரணுமா? அவன் நம்ம குடும்பம் இல்லையா என்று மோகன் அவளை பார்த்து சொன்னான்.

என்ன? என மலர்விழி அவனை முறைத்துப் பார்த்தாள்.

"இல்லம்மா அப்படி இல்ல.. உங்க அக்காவோட குடும்பத்துல அவனும் ஒருத்தன். நீ மனசு வச்சா எல்லாம் நடக்கும். இனிமே சத்தியமா சொல்றேன் மா! இனிமே அவன் உன் பக்கமே வரமாட்டான். நான் அவனை துபாய்க்கு வேலைக்கு அனுப்ப போறேன். கேஸ் இருந்தால் சிக்கல் ஆகிடும். கொஞ்சம் வந்து கேச வாபஸ் வாங்குமா! மலரு அவன் வாழ்க்கை உன்னோட கையில் தான் மா இருக்கு. கம்ப்ளைன்ட் மட்டும் வாபஸ் வாங்கிட்டா என் தம்பி வெளிய வந்துடுவான்." என்று மோகன் கூறிக் கொண்டிருக்கும் போதே.... புல்லட் சத்தம் கேட்டது.. அடுத்த நொடி மலர்விழி திரும்பி பார்க்க, அவன் தான் அவனே தான் இறுகிப்போன முகத்துடன் கடுமையான பார்வையை மோகன் மீது வீசிக்கொண்டே புல்லட்டில் வந்தான் வெற்றிமாறன்.

மலரின் பார்வை மாற்றத்தை அறிந்து கொண்ட மோகன். மலரு!! என அழைத்துக் கொண்டு திரும்ப.. என்னங்க என வெற்றியை அழைத்தபடி அவன் பக்கம் சென்றாள் மலர் விழி.

மலரு என மோகன் திரும்ப அங்கே வெற்றி மாறன் ஆர்மியில் இருந்து இறங்கி வந்தவனை போல இருந்தான். என்னாச்சு? அவரை வீட்டுக்கு கூப்பிட்டு பேசலாமே! இங்கே நடு ரோட்டில் பேசுற? என்ன விசயம் என வெற்றியின் பார்வை மோகன் மீது இருந்தது.

அய்யோ இவன் வேற முறைக்கிறான். வேற வழி இல்ல பேசி தான் ஆகணும் என நினைத்தவன். சகளை என அழைத்துக் கொண்டு சென்றான்.

சொல்லுங்க வீட்ல எல்லாரும் நல்லாருக்காங்களா? என கேட்டான் வெற்றி நக்கல் தொனியில்.

மலர் விழிக்கு சிரிப்பு வர அடக்கி கொண்டாள். சகலை அது தம்பி வந்து எதோ குடிச்சிட்டு தெரியாம பண்ணிட்டான் நீங்க கொஞ்சம் மனசு வச்சீங்கன்னா! அவன் வெளியே வந்திடுவான். என மோகன் பொறுமையாக எடுத்துக் கூறினான்.

ஒன்னும் பண்ண முடியாது மிஸ்டர் என இழுத்து உங்க பேர் என்ன என வெற்றி கேட்க..

மோ... மோகன் என்றான்.

ஓ மோகன் இங்கே பாருங்க! அங்கே ஒரு cctv footage இருந்திருக்கு அதுல மொத்தமும் ரெகார்ட் ஆகி இருக்கு. போலீஸ் ரெக்கவர் பண்ணிட்டாங்க. இப்போ proof எல்லாம் அவங்க கையில இந்த கேசுக்கும் என் பொண்டாட்டிக்கும் எனக்கும் எந்த சம்மந்தமும் இல்ல. பப்ளிக் பிளேஸ்ல நடந்ததால டிராபிக் போலீஸ் உங்க தம்பி மேலே கேஸ் file பண்ணிட்டாங்க. சோ நீங்க போலீஸ் கிட்ட தான் போய் கேட்கணும் என டக்கு டக்கென பதிலளித்தான் வெற்றி.

இப்படி நடக்கும் என மோகன் நினைக்கவே இல்லை.என்ன சொல்றீங்க? என பதட்டத்துடன் கேட்டான்.

ஆமா இனி கேஸ் கோர்ட்டுக்கு போகும் பெனால்டி கூடவே தண்டனையும் இருக்கும். போலீஸ் கிட்ட தகுந்த ஆதாரங்கள் இருக்கு. சோ நேராக நீங்க அங்கே போய் கேட்டுக்கோங்க என்றான் வெற்றி.

மோகன் அடுத்த என்ன செய்வது என தெரியாமல் விழி பிதுங்கி நின்றான். சரி எங்களுக்கு லேட் ஆகுது. ஒரு நாள் வீட்டுக்கு வாங்க சாவகாசமாக பேசுவோம். என்ற வெற்றி ம்ம் ஏறு என கண் காட்டினான்.

மலர்விழி ஜம்பமாக வண்டியில் ஏறி கொண்டாள். வெற்றி சைட் மிரர் வழியாக மோகன் முகத்தை பார்த்து திருப்தி பட்டுகொண்டவன். வண்டியை வீட்டை நோக்கி விட்டான்.

மலர் மெதுவாக அவனது தோல்பட்டையில் கைகளை வைத்தாள்.

"பதில் இல்லை கூடவே பார்வையும் இல்லை"

கொஞ்சம் கொஞ்சமாக நெருங்கி அமர்ந்தாள் மலர். பார்ப்பான் இல்லை வெற்றி. விறைப்பு அத்தனை முறுக்கு.

அய்யோ இந்த மாமா! என நினைத்தவள் காலையில் வெற்றி சொன்னது நினைவுக்கு வர, ம்ம் இடுப்ப கட்டுக்கணும் இப்போ என உதடு கடித்து சிரித்தவள். மெதுவாக வெற்றியின் இடையை கட்டி கொண்டாள்.

"டீச்சருக்கு டிக்னிட்டி இல்லையா?" என்ற வார்த்தையை உதிர்த்து விட்டு சாலையில் கவனம் செலுத்தினான் வெற்றி.

எனக்கும் கைக்கும் சம்மந்தம் இல்லை. உங்க கை காலையில் எப்படி வேகமாக என்னை என்னோட.... அது போல இந்த கை சொல்றத கேட்காமல் கட்டிக்கிச்சு இதோ இப்போவே எடுத்திடுறேன் என்றவள் அவனது தோல்பட்டையை பிடித்து கொண்டாள். வெற்றியின் கண்கள் சிரித்தது. உதட்டுக்குள் சிரிப்பை அடக்கியவன். வண்டியில் கவனம் செலுத்தினான்.

"உங்க கிட்ட ஒரு விசயம் கேட்கணும்?"

"சொல்லுங்க டீச்சர்"

"மாமாஆ!"

"டீச்சர்ர்ர்" என அவனும் இழுத்தான் வெற்றி.

"சரி உங்களை அப்புறம் பார்த்துக்கிறேன். சரி சொல்லுங்க எப்படி ஸ்டேஷனுக்கு அந்த cctv footage எல்லாம் போச்சு?" என மலர் கேட்க...

"எனக்கு என்ன தெரியும்?"

"இல்லல்ல நீங்க பொய் சொல்றீங்க! எனக்கு தெரியும். நீங்க வரிசையா மோகன் மாமா கிட்ட லைனா சொன்னீங்க. அதனாலே உண்மைய சொல்லுங்க"

"வெயிட் வெயிட்! மாமாவா?" என வண்டியை நிறுத்தினான் வெற்றி.

அவள் குழப்பத்துடன் என்ன சொல்றீங்க? என கேட்க.. இப்போ யாரையோ மாமா சொன்னியே? என அவளை மிரர் வழியாக பார்த்தான் வெற்றி. கண்களை ஒரு மாதிரி உருட்டியவள். பின்ன எப்படி எங்க அக்கா வீட்டுகாரரை கூப்பிடுவாங்க?

"ஓ அவன் தான் உனக்கு மாமா! ம்ம்" என வண்டியை ஸ்டார்ட் செய்தான்.

இல்ல அது வந்து சரி எப்படி கூபூடனும்? நீங்களே சொல்லுங்க! என மலர்விழி பார்க்க,

என் முன்னாடி அந்த 420ய மாமான்னு கூப்புடாத! அவனுக்கும் எனக்கும் அப்புறம் என்ன வித்தியாசம்?

சரி இனி கூப்பிடல. நீங்க நான் கேட்டதுக்கு பதில் சொல்லுங்க என மலர்விழி மீண்டும் அதே இடத்துக்கு வந்து நின்றாள்.

"நான் தான் கலெக்ட் பண்ணி கொடுத்தேன். போதுமா!" என வீட்டுக்கு வந்து நிறுத்தினான் வண்டியை.

"எப்படி?"

நீ கேட்டதுக்கு பதில் சொல்லிட்டேன். இதுக்கு மேலே கேட்காத என இறங்கினான்.

ஓகே என்றவள் அவன் அருகில் வந்து நீங்களும் 420 தான்! என்றவள் மெதுவாக நடந்தாள்.

மலரு என அழைத்துக் கொண்டு வேகமாக அவளை பிடிக்க பாயிந்தான் வெற்றி.

ஹே பதில் சொல்லிட்டு போடி! இன்னிக்கு உன்னை விட மாட்டேன். என வெற்றி வேகமாக வீட்டுக்குள் நுழைந்தவன் நிலவு கதவை சாத்தினான்.

எதுக்கு கதவை சாத்தரீங்க? அத்தை! அத்தை என கத்தினாள் மலர் விழி.

மலரே எங்க அம்மா தங்கையின் வீட்டுக்கு சென்று விட்டார். இன்று இரவு நானும் இந்த வீடும் மட்டும் தான் என கண்ணை சிமட்டினான் வெற்றி.

மலர் விழி எட்சிலை விழுங்கிய படி அவனை பார்க்க...

"மலரே மவுனமா!

மலர்கள் பேசுமா.....!" என வெற்றி பாடிக்கொண்டே அவளை நோக்கி ஒவ்வொரு அடிகளாக நெருங்கினான்.
மலர்விழி ஆச்சரியமாக அவனை பார்த்தவள். இதயம் படபடக்க மெதுவாக பின்னால் நகர்ந்தாள்.

வருவான்.
 

Author: Pradhanya
Article Title: அத்தியாயம்-16
Source URL: Pradhanya kuzhali novels-https://pradhanyakuzhalinovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top