Pradhanya

Active member
Staff member
Joined
Oct 6, 2024
Messages
120
நான் இந்த வீடு அண்ட் நீஈஈஈ! மட்டும் தான் இருக்கோம். அம்மா கனி வீட்டுக்கு போயிட்டாங்க!" என இரு புருவமும் தூக்கி கொண்டே அவளை நோக்கினான் வெற்றி.

இதயம் படபடக்க, மலர்விழி அவனை பதட்டத்துடன் பார்த்தாள்.

"எதுக்கு டி என்னை 420ன்னு சொன்ன? இப்போ அதுக்கு விளக்கம் கொடுக்குற! இல்லன்னா நான்" என நிறுத்தி விட்டு அவளின் அருகில் நெருங்கினான்.

"என்ன செய்வது? அய்யோ இவர தூண்டி விட்ட போல ஆகி போச்சே!" என யோசித்தவள்.

வெற்றி அருகில் நெருங்குவதற்குள் அவர்களது அறை பக்கம் ஓடினாள். உங்களால் என்னை பிடிக்க முடியாது. நான் மாட்ட மாட்டேன் என கதவை பார்த்தாள். பூட்டி இருந்தது.

அய்யோ இதை எப்படி மறந்தேன். என மலர் திரும்ப அதற்குள் வெற்றியின் மூச்சு காற்று அவளின் கழுத்தில் வீசியது.

ரூம் பூட்டி இருக்கு. இந்தா கீ!! என அணைத்த படி நின்றவன். அப்படியே நீட்டினான்.

மலர் வேக மூச்சுடன் வெடவெடத்த கோழி போல நின்றாள். உள்ளங்கை வியர்த்து கொட்டியது.

"ம்ம் திற மலரு! அப்படியே நின்னா? என்ன அர்த்தம்? எப்படி உள்ளே போக?" என வெற்றி கண்ணத்துடன் கன்னம் உரசினான்.

அவள் எப்படி திறப்பாள்? டேய் இதையெல்லாம் ரூமு உள்ளே போய் பண்ண கூடாதா என வெற்றியின் மனசாட்சியே கேட்டது.

"சாவி கொடு" என்றவன் அவளின் கையில் இருந்து வாங்கி மெதுவாக பூட்டை திறந்தான். வேகமாக அறைக்குள் ஓடினாள்.

மலரின் முந்தியை இழுத்தவன் அவளை ஒரே பிடியில் கை வலைவுக்குள் கொண்டு வந்தான்.

"மாமா விடுங்க" என மலர் சினுங்க..

"விட்டால் போச்சு! ஆனால் அதுக்கு முன்னாடி என்னை 420ன்னு எதுக்கு சொன்ன? எனக்கு உன் மேலே கோபம்! " என புடவை முந்தியை விட்டான் வெற்றி. அவன் புறம் திரும்பியவள். "அச்சோ மாமா நான் தப்பா சொல்லல. நீங்க மாங்கா மண்டை மாமா! போங்க மாமா! உங்களுக்கு இது கூட புரியாதா?"

ஆமா எனக்கு புரியாது தான்! ஏன்னா உனக்கும் எனக்கும் ரொம்ப தூரம். என்னை பார்த்தால் உனக்கு அப்படி தான் தெரியும். என வாய்க்கு வந்த படி வெற்றி பேசினான்.

அய்யோ மாமா என அருகில் நெருங்கினாள்.

"விடு மலரு!"

யோவ் மாமா! இந்த விசயத்தில் நீ 420 மாதிரி நடந்துக்கிற ன்னு சொன்னேன் யா! இப்போ புரியுதா? இல்ல இப்போது கூட புரியலயா?

எந்த விசயம்? என வெற்றி கேட்க..

"பச்சை குழந்தை மாதிரி பண்ண தெரியும் ஆனால் பச்சை குழந்தை என்ன பண்ணுச்சுன்னு சொன்னால் அதை புரிஞ்சுக்க தெரியாது அப்படி தானே!"

"பச்சை குழந்தை என்ன பண்ணும்?" என வெற்றி கேட்டான்.

அவனை முறைத்து பார்த்தவள். "சரி ஓகே பச்சை குழந்தை என்ன பண்ணும்னு உட்கார்ந்து யோசித்து வையுங்க நான் போய் குளிச்சிட்டு வரேன். மாங்கா மாமா!" என வாய் மொழியாக கூறியவள் அங்கிருந்து குளிக்க சென்றாள்.

"பச்சை குழந்தை என்ன பண்ணும்? எனக்கு தெரியலையே! நான் பேசுறேன்! பிறந்த குழந்தை பேசாது. அப்புறம் நான் நடக்கிறேன். நான் டிசிப்ளினா இருக்கேன். இதெல்லாம் பிறந்த குழந்தை பண்ணாதே! இந்த மலர் ஏன் இப்படி சொல்லிட்டு போனா?" என தீவிரமாக யோசித்த வெற்றி இதற்கு மேல் முடியாது என எண்ணி சரவணனுக்கு போன் செய்தான்.

சந்தேகத்தை தீர்த்து கொள்ள வேண்டுமே! அதற்காக தான்.

"சொல்லு டா! வீட்டுக்கு போனதுக்கு அப்புறம் ஆபிஸ் சம்பந்தமா போன் பண்ண மாட்டியே! ஆனால் இன்னிக்கி என்ன திடீர்னு போன் பண்ணிருக்க? என்ன விசயம் என கேட்டான் சரவணன்.

"டேய் பிறந்த குழந்தை என்ன டா பண்ணும்?"

வாட்? என்ன கேட்ட? என சரவணன் புரியாமல் மீண்டும் வினவினான்.

"அது தான் டா பர்த் பேபி என்ன பண்ணும்? இப்போ சொல்ல போறியா இல்லையா?" என வெற்றி தீவிரமாக கேட்டான்.

என்னாச்சு இவனுக்கு? என சரவணன் யோசித்து கொண்டிருக்க,

டேய் சரவணா! உன் கிட்ட தான் கேட்டுட்டு இருக்கேன். லைன்ல இருக்கியா? என அதட்டலுடன் கேட்டான் வெற்றி.

டேய் இர்ரா என்ற சரவணன் தலையை பிடித்த படி, பொறந்த குழந்தை எப்போவும் தூங்கிட்டு தான் இருக்கும். அப்புறம் பசி எடுத்தால் அழும். அவங்க அம்மா கிட்ட பால் குடிக்கும், அப்புறம் இயற்கை அழைப்புகளை அட்டன் பண்ணும். இது தான் டா ரொட்டின். தூங்கும், பால் குடிக்கும் வேற என்ன பண்ணும்? என அவன் சொல்லி முடிக்க வில்லை.

போனை கட் செய்தான் வெற்றி. அவனது உதட்டில் புன்னகையும் கள்ள தனமும் குடி கொண்டது. தலையை கோதிய படி அவளுக்கு எடுத்த புடவையை படுக்கையில் வைத்தான்.

இரவு உடைக்கு மாறி வெளியே வந்தாள் மலர் விழி.

"என்ன கண்டு பிடிச்சிடீங்களா? இல்ல இன்னும் யோசிச்சிட்டு இருக்கீங்களா?" என மலர் விழி.

அவளை கண்டு கொள்ளாமல் குளிக்க சென்றான் வெற்றி.

ஹலோ உங்களை தான்! என மலர்விழி அழைக்க, அவன் சென்று விட்டான்.

கோபத்தில் ஒன்னும் குறைச்சல் இல்ல. என்று திரும்பியவள் கண்களில் கட்டிலின் மேல் இருந்த புடவை பெட்டிகள் தெரிய தயக்கத்துடன் சென்றாள்.

புடவையை பார்த்தவள் கண்கள் ஆச்சரியத்திலும் ஆசையிலும் விரிந்தது. மூன்று புடவைகளும் அத்தனை அழகாக இருந்தது. வேகமாக மேலே போட்டு பார்த்தாள். கண்ணாடிக்கு அருகில் சென்று.

சிறிது நேரம் கழித்து ஆள் பாதி ஆடை பாதியாக வெளியே வந்தான் வெற்றி.

இந்த சாரி எனக்கா? என கண்கள் மின்ன மலர்விழி கேட்க... உனக்காக தான் வாங்கினேன். ஆனால் என்னையே காரணமே இல்லாம 420ன்னு சொன்ன உனக்கு இந்த புடவையை தரலாமா வேணாமா அப்டின்னு யோசனையாக இருக்கு என தலையை துவட்டி கொண்டே கேட்டான்.

"அப்போ நான் என்ன சொல்ல வந்தேன்னு உங்களுக்கு அர்த்தம் தெரியல? நீங்க இன்னும் கண்டு பிடிக்கலல்ல!" என அவனை பார்த்தவள். எடுத்த புடவையை அதே இடத்தில் வைத்தாள்.

அவளை பின்னால் இருந்து அணைத்துக் கொண்டான் வெற்றி.

"விடுங்க மிஸ்டர் வெற்றி"

மிசஸ் வெற்றி மாறன் அளவுக்கு எனக்கு எதுவும் தெரியாது தான். ஆனாலும் என்றவன் மலரின் முகத்தை திருப்பி முத்தமிட ஆரம்பித்தான்.

மலர்விழி உணர்வுகள் வெடிக்க உறைந்து நின்றாள். மெல்ல மெல்ல முத்தங்கள் ஆவேசத்துடன் எல்லை மீறியது. அவனது உயரத்துக்கு கால்களை எக்கி நின்று கொண்டிருந்தவளை அப்படியே தூக்கி கொண்டான். முத்தம் மட்டும் நிற்க வில்லை.

"ம்ம் மாமா! ஹம் விடுங்க" என துள்ளினாள்.

விடவா பிடிச்சிருக்கேன்! என்றவன் அவளின் உதட்டில் உள்ள ரேகைகளை மொத்தமாக முழுங்கினான்.

மெதுவாக அவளை படுக்கையில் கிடத்தினான்.

"புடவை!!"

அவையெல்லாம் கட்டிலுக்கு அடியில் வரிசையாக அடுக்கி இருந்தது.

"மலர் விழி"

மெதுவாக கண்களை விழித்தாள். ஆனால் வெட்கமாக இருந்தது.

மலரே என கீழ் உதட்டை கடித்து இழுத்தான்.

"ம்ம்" என சினிங்கினாள்.

மேலாடை மாறனாக மாறி இருந்தது. அவளின் ம்ம் என்னும் வார்த்தை மந்திரத்தில்.

"என்ன பண்றீங்க? மாமா விடுங்க! நான் சமைக்கணும். சாப்பிடலாம்!"

"420 வேலைய பண்ண விடு டிஇஇ!" என்றவன் பச்சிளம் குழந்தையாக மாறி இருந்தான்.

அவ்வளவு தான் மோகத்தை மொத்தமாக உறிஞ்சி கொண்டிருந்தான்.

"அப்போ கண்டு புடிச்சீடீங்களா?" என அவனை உற்று பார்த்தாள்

உன் கிட்ட இன்னும் எதாவது இருக்கான்னு தேடிட்டு இருக்கேன் என்றவன் அவளின் நெஞ்சு குழியில் முத்தமிட்டு அவளை சிவக்க வைத்தான். கண்களை மூடி கிறங்கினாள் மலர்விழி.

"மலரே!"

ம்ம் என உதட்டை கடித்துக் கொண்டே அவனது தலையை கோதி கொடுத்தாள்.

"உன்னை கஷ்ட படுத்துறேனா?"

"நான் அப்படி சொன்னேனா?" என மெல்லிய குரலில் கூறினாள்.

"நிஜமா?" என வெற்றி அவளின் பூ முகத்தை பார்த்தான்.

அவனை இழுத்து உதட்டுடன் ஒட்டி முத்தம் வைத்தவள். என்னை காப்பாத்தி இருக்கீங்க! என்னாச்சு உங்களுக்கு? என புருவம் சுறுக்கினாள்.

வெற்றியின் உணர்வுகள் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்க அவனது செயல் எல்லாம் வேகமாக இருந்தது. அதற்கு மேல் அவனால் அவனது உணர்வுகளை கட்டு படுத்த முடிய வில்லை. மெதுவாக அவளிடம்.. "மலர் எனக்கு நீ வேணும் டி! இப்போ உடனே!" என சொல்ல வர,

"மாமா நகருங்க!" என அவளின் முகம் வியர்த்து போனது.

"என்னாச்சு"

மாமா கொஞ்சம் நகருங்க என அவள் வேகமாக பாத்ரூம் பக்கம் ஓடினாள்.

"மலரு!! ஹே என்ன டி ஆச்சு?" என அவனுக்கு ஏகத்துக்கும் பதற்றம் அதிகரித்தது.

மெதுவாக வெளியே வந்தவள். அவளின் பையில் இருந்து நாப்கினை எடுத்தாள்.

"என்னாச்சு டி!" என அலைப்புறும் கண்களுடன் கேட்டான்.

"அது எனக்கு பீரியட்ஸ் மாமா!" என வாடிய பூ போல் ஆகி விட்டாள் ஒரு சில நொடியில்..

சரி மலரு போயிட்டு வா ஒன்னும் பிரச்னை இல்ல என அவன் பாத் ரூம் வெளியே காத்திருந்தான்.

கதவை திறந்து கொண்டு வந்தவள். மீண்டும் உடை எடுத்துக் கொண்டு குளிக்க சென்றாள்.

என்ன டி பண்ற?

குளிக்கணும் மாமா! இந்த மாதிரி டைமில் என மெல்ல கூறினாள் மலர்.

ஹே ரொம்ப டயர்டா இருக்க போல தெரியுதே! இரு நானும் வரேன். உன்னை குளிக்க வைக்க,

"அச்சோ மாமா! அதெல்லாம் தப்பு!"

"ஒன்னும் தப்பில்லை நீ கீழே விழுந்துட்டா என்ன பண்றது? நீ டையர்டா இருக்க டி!" என்ற வெற்றி வருவேன் என ஒற்றை காலில் நின்றான்.

"மாமா பிளீஸ் அப்புறம் சொல் பேச்சு கேட்கல அடிப்பேன்"என மிரட்டினாள்.

பரவால்ல உனக்காக ஓகே தான் என்றான். அவனை இழுத்து முத்தம் வைத்தவள். பிளீஸ் மாமா நீங்க இங்கேயே இருங்க சமத்து குட்டியா நான் போய் குளிச்சிட்டு வரேன். என மலர்விழி எடுத்துக் கூற... ஓகே ஆனால் கதவை திறந்து வை! என்றான் விடா பிடியாக.

இந்த வார்த்தைகளில் சுத்தமான அன்பு மட்டுமே இருந்தது.

அவனை முறைத்து விட்டு வேறு வழி இல்லாமல் கதவை திறந்து வைத்துக் கொண்டே குளித்தாள்.

வெற்றியும் - மலரும் வாழ்க்கையில் அடுத்த கட்டத்துக்கு செல்லும் நேரம் மாறன் வந்தான்.

வருவான்.
 

Author: Pradhanya
Article Title: அத்தியாயம்-17
Source URL: Pradhanya kuzhali novels-https://pradhanyakuzhalinovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top