விதியே என மலர்விழி அமர்ந்திருக்க, அவளின் கழுத்தில் நுனி விரல் கூட படாமல் தாலியை கட்டியிருந்தான் வெற்றி மாறன்.
சிந்துவுக்கு தன் தங்கையின் வாழ்க்கை எப்படியோ ஒரு நல்ல குடும்பத்தில் அமைந்து விட்டதே என நினைத்து சந்தோஷம் கொண்டாள்.
தாலி கட்டி அக்னியை அவசர அவசரமாக வலம் வந்தான் வெற்றிமாறன். மெதுவாக வலம் வர வேண்டிய அக்னி வலம், ஆட்டை தீர்த்தம் தெளித்து வெட்டுவதற்கு மூக்கனாங்கயிறை இழுத்து வருவது போல மலரின் பிஞ்சு விரல்கள் அவனது கைக்குள் மாட்டிக் கொண்டது. அத்தனை அழுத்தம் கொண்ட இந்த பிடித்தமே மலருக்கு அவனிடம் இருந்து ஓடி விட வேண்டும் என தோன்ற வைக்கும் போல..
பல்லவி வேகமாக அருகில் வந்து "வெற்றி இப்போ அம்மி மிதிச்சு அருந்ததி பார்த்திட்டு மண்டபத்துக்கு போகனும் டா" என கூற, தன் அன்னையை அழுத்தமாக பார்த்தவன். மலரின் கையை வெடுக்கென விட்டு, மாலையை பொற்கொடியிடம் தினித்தவன். "அம்மிய மிதிக்க கூடாது அதுக்கு பதிலா உன்னை.." என நிருத்தியவன். "என்னால மண்டபத்துக்கு வர முடியாது. வேலை இருக்கு. நீ பண்ண காரியத்துக்கு என பற்களை கடித்தவன். என வேகமாக கிளம்பி விட்டான் அனைவரையும் விட்டு விட்டு ..
"என்ன டி இவன் இப்படி சொல்லிட்டு போறான்? அய்யோ நான் இப்போ சிந்து கிட்ட என்ன சொல்லுவேன்? பொண்ணை வேற இப்படி விட்டுட்டு போயிட்டான்?" என பல்லவி வருத்தத்துடன் நின்றார். பொற்கொடியின் கணவன் பிரகாஷ் மாமியாரின் பக்கம் வந்தவன். "அத்தை அங்கே மண்டபத்தில் சொந்த பந்தம் எல்லாம் இருப்பாங்க. இளமாறன் பேரு தானே இருக்கும். அங்கே போனால் தேவையில்லாத பிரச்னை நமக்கும் மட்டுமில்லை பொண்ணு விட்டுக்கும் வரும் நம்ம இப்போ நேராக வீட்டுக்கு போறது தான் நல்லது" என்றார்.
அப்படியா மாப்பிள்ளை இப்போ என்ன பண்றது? என பல்லவி கேட்க, அம்மா நம்ம மலர்விழிய வீட்டுக்கு கூட்டிட்டு போயிடலாம் என பொற்கொடி கூறினாள். சிந்து மலரின் அருகில் நின்று கொண்டிருக்க, முரளி பழித்து பேசி அசிங்க படுத்தும் நோக்கத்துடன் அருகில் வந்தவன். என் தம்பியை வேணாம்னு சொன்ன உன் தங்கச்சி இதுக்கு மேலேயும் அனுபவிப்பா! என்றவன் மலர்விழியை பார்த்து உன் புருசன் என் தம்பி பக்கத்தில் நிக்க முடியுமா? என்னை விட ஒரு வயசுக்கு உன் புருசன் பெரியவனா இருக்கான் கிழட்டு பையன கட்டிக்கிட்ட ஆனால் என் தம்பி எந்த விதத்தில் குறைச்சல்? ஆனால் இதுக்கெல்லாம் நீங்க அனுபவிப்பீங்க" என சொல்லி விட்டு அவ்விடத்தை விட்டு நகர்ந்தான்.
மலர்விழி எதுவும் பேசாமல் அமைதியாக நிற்க, சிந்து தன் தங்கையின் கையை பிடித்து, மலரு இங்கே பாரு அவன் கிடக்கிறான். வெட்டி பையன் இவனுக்கு நான் கிடைச்சதே பெருசு. ஓசி சோறு தின்னுட்டு திரிகிறான். ஆனால் உன்னோட புருசன் அப்படி இல்ல டி அவரு ரொம்ப ஒழுக்கமானவர். பார்க்க 35 வயசு மாதிரியா தெரியுது. 28 வயசு பையன போல இருக்காரு. நீ அடுத்தவங்க சொல்றத மனசுல போட்டு குழப்பிக்காத என் புருசன் வயிதெரிச்சல்ல சொல்லிட்டு போறான் என்றாள்.
எதுக்கு கா இப்படி அவசரமா பண்ணனும்? எனக்கு இந்த கல்யாணத்தில் துளி கூட விருப்பம் இல்ல. நான் இவரை கணவரா நினைச்சது கூட இல்ல. என மலர்விழி அழுகையுடன் முடித்தாள். சிந்து அவளிடம் இந்த உலகத்தில் ஒரு ஆண்பிள்ளை தனியா வாழ முடியும்.ஆனால் பொண்ணாள முடியாது டி மலரு. நான் இந்த கல்யாணத்தை அவசரமா பண்ணாலும் நிதானமா யோசித்து தான் முடிவெடுத்தேன். அக்கா சொல்றத கேளு மலரு. என்ன டா இத்தனை வயசு வித்தியாசத்தில் பண்ணிட்டோம் அப்டின்னு நினைக்கிறயா? என சிந்து கேட்க, இல்ல கா மாறன் ஏமாத்திட்டு போனதை என்னால தாங்க முடியல என கூறினாள் மலர் விழி.
இங்கே பாரு இனி நீ மலர்விழி வெற்றி மாறன். இனி எக்காரணத்தை கொண்டும் அந்த இளமாறன் பத்தி நினைக்காத. எல்லாமே கொஞ்சம் கொஞ்சமா சரி ஆகிடும். வா என அழைத்து சென்றாள். அவர்களுடன் பல்லவி, பொற்கொடி, பிரகாஷ் மற்றும் அவர்களின் மகள் கனி மொழியை தூக்கி கொண்டு வீட்டுக்கு சென்றார்கள்.
முதன் முறையாக வீட்டுக்குள் நுழையும் போது மாப்பிள்ளை இல்லாமல் தனியாக காலடி வைப்பவள் மலர்விழியாக தான் இருக்க முடியும். பொற்கொடி ஆரத்தி தட்டை எடுத்து கொண்டு வர, பல்லவி மலர்விழியின் அருகில் நின்று கொண்டிருந்தார். வலது கால் எடுத்து வச்சு உள்ளே வா மா என பல்லவி கூற, மலர் வீட்டுக்குள் அடி எடுத்து வைக்கும் நேரம், தனக்கும் இந்த திருமணத்துக்கும் சம்பந்தமே இல்லை என்பதை போல வெற்றி அவர்களை கடந்து வெளியே சென்றான்.
டேய் வெற்றி! வெற்றி நில்லு டா! என பல்லவி அழைக்க, நீ யார்? என்பதை போல முறைத்து விட்டு வண்டியை கிளப்பி கொண்டு பறந்தான் வெற்றி மாறன். மலர் விழி நேற்று இரவில் இருந்து வீசும்பலுடன் இன்னும் அழுது கொண்டிருக்கிறாள். இந்த வீட்டு மருமகளாக சந்தோசத்துடன் அடியெடுத்து வைக்க நினைத்தாள். ஆனால் மருமகள் என்பதில் இந்த மாற்றமும் நடைபெற வில்லை. அங்கு நிற்கும் மனிதர்கள் முதற்கொண்டு எந்த பிரச்னையும் இல்லை. பழகிய அனைவரும் கண் முன் பல்லவியிடம் இருந்து ஆரம்பித்து கனிமொழி வரை அனைவரும் கண் முன் இருந்தார்கள்.
ஆனால் மலர்விழி இளமாறன் என்பதற்கு பதிலாக மலர்விழி வெற்றிமாறனாக இருக்கிறாள். இது விதியே என இருந்தாலும் அதில் ஒரு நியாயம் வேணாமா? பாவம் மலர் விழி.
மலர்விழியை அழைத்த பொற்கொடி விளக்கு ஏற்றனும் என அவளை பூஜை அறை அழைத்து சென்று சாமி கும்பிட வைத்தார்கள். கொஞ்சம் கொஞ்சமாக உறவினர்கள் அனைவருக்கும் விசயம் காட்டு தீயை போல வேகமாக பரவியது. அவர்களுக்கு விளக்கம் கொடுக்கும் பொறுப்பை பிரகாஷ் எடுத்துக் கொண்டான். பல்லவியின் அண்ணன் மகன் தான் பிரகாஷ். அதனால் பொற்கொடி எப்பொழுது தோன்றினாலும் வீட்டுக்கு வந்து விட்டு செல்வாள்.
மலர் அதே இடத்தில் ஆடாமல் அசையாமல் தன் வாழ்க்கையை எண்ணி அழுது கொண்டிருக்க, மலரு என அழைத்த பல்லவி அவளின் கையை பிடித்து, இளமாறன் இப்படி பண்ணுவான்னு நாங்க கூட நினைச்சு பார்க்கல மா! அவன் இந்த வீட்டு பையனே இல்லன்னு முடிவு பண்ணிட்டேன். என்னோட மூத்த பையன் வெற்றி ரொம்ப நல்லவன் இப்படி நான் சொல்றது தப்புன்னு தெரியுமா. ஆனால் வேற என்ன செய்ய முடியும் நீ கவலை படாத! எல்லாமே சரியாகிடும் இது உன்னோட வீடு. வெற்றி யார் கிட்டயும் ஒட்ட மாட்டான். எங்க வீட்டு காரர் இவனை போல தான். கடமை கண்ணியம் கட்டுப்பாடு ஒழுக்கம் அப்டின்னு இருப்பவன். கொஞ்சம் கொஞ்சமா சரி ஆகிடும் வாடா இந்தா டீ காபி குறிக்கிறயா? என கேட்டார்.
"எனக்கு பாத் ரூம் போகனும் அத்தை" என்றாள். ஒரு கண்ணு என பொற்கொடியை வரவழைத்து அனுப்பி விட்டார்கள். பொற்கொடியும் அப்படியே பல்லவியை போல இன்னொரு ராகம் பாடி அனுப்பினாள். சிந்து மாலை வரை இருந்து விட்டு தன் தங்கைக்கு நல்ல குடும்பம் கிடைத்த நிம்மதியில் கோகுலை தூக்கி கொண்டு சென்றாள்.
அத்தை மலர் தனியா இருக்குது. ரெஸ்ட் எடுக்க அனுப்பி விடுங்க என சொல்ல.. இதோ பிரகாசு என வெளியே வந்த பல்லவி நேராக மலரிடம் வந்தார். கண்ணு மலரு என அழைக்க, கண்ணை தேய்த்து கொண்டே மாமியாரை பார்த்தாள்.
வா மா இதோ இந்த ரூமில் ஓய்வு எடு இந்த நாலு நாள் உனக்கு சரியா தூக்கமே இருக்காது என சொல்லிக் கொண்டே வெற்றியின் அறைக்கு வந்து கதவை திறந்தார். இல்லை திறக்க முற்பட்டார். என்னாச்சு கதவு திறக்க மாட்டிக்கிது? என பல்லவி யோசிக்க, "அத்தை ரூமு பூட்டி இருக்கு" என மெல்லிய குரலில் கூறினாள் மலர்.
அட சண்டாள பாவி! இந்த பழக்கத்தை இன்னும் விடாமல் இருக்கானே! என பல்லவி அப்படியே நின்று கொண்டிருக்க, என்னாச்சு மா என பொற்கொடியும் வந்தாள்.
மலர் அங்கிருக்கும் மூவரையும் மாறி மாறி பார்க்க, பல்லவி பொற்கொடியிடம் மாத்து சாவி எடுத்திட்டு வாடி! என்னோட மானத்தை மறுமக முன்னாடி உன் அண்ணன் வாங்குறான். என முணுமுனுத்த படி கூறினார் .
மலரின் சிந்தையில் இது வேறயா? இப்படி அறைய பூட்டி வச்சிட்டு போகணுமா? அய்யோ கடவுளே! என்னை இப்படி வந்து சிக்க வச்சிட்டியே என வெற்றியை நினைத்து சேர்ந்து போனாள்.
இதோ இரு மா அஞ்சு நிமிடம் என சொல்லிக் கொண்டே இன்னொரு சாவியை எடுத்து வந்த பொற்கொடி கதவை திறந்து விட்டாள். போ மா உள்ளே போய் ரெஸ்ட் எடு. இன்னிக்கு ஒரு நாள் பொறுத்துக்க நாளையில் இருந்து உனக்கு தேவையான எல்லாத்தையும் தயார் பண்ணி கொடுக்கிறேன் என விட்டு சென்றார்கள்.
அந்த அறை கண்ணாடி போல பளிச்சென இருந்தது. டிசிபிளின் டிக்னிட்டி என்ற வார்த்தைக்கு அர்த்தம் இத்தனை வருடம் கழித்து இந்த அறைக்குள் வந்ததும் தான் புரிந்தது மலர்விழிக்கு. ஆனால் அதையெல்லாம் யோசிக்கும் நிலையில் இல்லை அவள். அறையின் அமைதியும் சுத்தமும் லைப்ரரியை நினைவு படுத்த.. இப்போதைக்கு உறக்கம் வேண்டும் என நினைத்தவள். எதையும் நினைக்காமல் கட்டிலில் படுத்து அப்படியே உறங்கி விட்டாள்.
சத்தம் கேட்டு மலர்விழி விழிக்கும் போது அவளுக்கு எதிரில் வெற்றி நின்றிருந்தான்.
மலர்..?
வருவான்

Author: Pradhanya
Article Title: அத்தியாயம்-2
Source URL: Pradhanya kuzhali novels-https://pradhanyakuzhalinovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.