Pradhanya

Active member
Staff member
Joined
Oct 6, 2024
Messages
120
இங்கே மலருக்கு அந்த ஒரு வாரமும் உடல் மிகவும் சோர்வாக இருந்தது. பிசித்தால் சாப்பிட தோன்ற வில்லை. சாப்பிட்டால் குமட்டுவது போல இருந்தது படுக்கையை கண்டால் தன்னையே சுருட்டி கொள்ள வேண்டும் போல தோன்றியது. அந்த அளவுக்கு அவளின் நிலை ஒரு பக்கம் இருந்தது.

அவளின் முகத்தை பார்த்த வெற்றி கவலையுடன் என்னாச்சு மலர் நீ இந்த ஒரு வாரமா சரி இல்ல என கேட்டான்.

தெரியல மாமா! அது முன்ன மாதிரி சாப்பிட முடியல. ஒரு வேளை சத்து குறைபாடா இருக்குமோ என்னவோ என்றாள் மலர்.

அப்படியா இருந்தாலும் ஒரெட்டு ஹாஸ்பிடல் போயிட்டு வந்திடனும் என்றான் வெற்றி.

ம்ம் போலாம் மாமா! இன்னிக்கி சாயங்காலம் போலாமா? என மலர் கேட்க.. "இல்ல இன்னிக்கு லீவ் போட்டுட்டு ஓரெட்டு போலாமே!"

இல்ல மாமா! இன்னிக்கி ஸ்கூல் போயே ஆகணும் முக்கிய வேலை இருக்கு ஏற்கனவே லீவ் போட்டுட்டேன் என கூறினாள் மலர்.

"சரி வா உன்னை கொண்டு போய் விடுறேன்." என வெற்றி மலரை பள்ளிக்கு அழைத்து சென்றான்.

"மலரே!"

"மாமா!" என மலர் திரும்பி தன் கணவனை பார்த்தாள்.

சாயங்காலம் வரைக்கும் பொறுத்துக்க முடியுமா? இல்ல நான் வந்து இப்போவே சிஸ்டர் கிட்ட வந்து பேசட்டுமா? என வெற்றி துடித்தான்.

அய்யோ மாமா என அவன் முன் கொஞ்சம் இயல்பாக வைத்துக் கொண்டு நான் நல்லாருக்கேன். நீங்க போயிட்டு வாங்க ஈவ்னிங் பார்க்கலாம் என்றவன். மீண்டும் திரும்பி என் பிரென்ட் சரவணன் அவனோட மிசஸ் ஹாஸ்பிடல்ல கயனகாலஜிஸ்ட்டா இருக்காங்க. நான் இப்போவே போன் பண்ணி சொல்றேன் என தவிப்புடன் கிளம்பினான்.

மலர் தன் கணவனை எண்ணி பூரித்து போய் சந்தோசத்துடன் கிளம்பினாள். ஆனால் இந்த சந்தோஷம்? இது இரட்டிப்பாக மாறினால் இன்னும் சந்தோஷம் ஆனால் அதன் கூடவே இன்னல்களை சந்திக்க வேண்டுமே! பார்ப்போம்.

வெற்றிக்கு ஆபீஸில் வேலையே ஓட வில்லை. செக்யூரிட்டி ஆபிஸ் மற்றும் பத்திர ஆபிஸ் என மாறி மாறி நடந்து கொண்டிருந்தவன் மலருக்கு அழைக்கலாம் என போனை எடுத்தான். இப்போ என்ன டைம் என மலரின் பள்ளியின் வகுப்பு கால அட்டவணையை போனில் வைத்திருக்கிறான். இப்போ ஃப்ரீ டைம் தான் என போனை எடுத்து டயல் செய்தான்.

சார் என லட்சுமி அம்மா அழைத்தார்.

வாங்க என வெற்றி அவரை பார்க்க, உங்களை பார்க்க யாரோ வந்திருக்காங்க..

யாரது?

தெரியல சார் அது தான் நான் முன்னாடி வந்து சொல்லிட்டு இதை கரெக்சன் பண்ணிட்டு போலாம்ன்னு தான் என்றார்.

சரி நானே வரேன் என அவரின் டாக்கு மென்டை சரி பார்த்தவன். இப்போ ஓகே இருந்தாலும் ஒரு தடவை செக் பண்ணிடுங்க சரவணனை வர சொல்றேன் கூடவே கிளைன்ட் வந்ததும் ரிஜிஸ்ட்ர் பண்ற புரோசஸ்சை ஸ்டார்ட் பண்ணிடுவோம். என எழுந்தான்

லட்சுமி நிம்மதி பெரு மூச்சுடன் வெளியே வர, அவரின் பின்னால் வெற்றியும் வந்தான். அங்கு நின்று கொண்டிருப்பவனை பார்த்ததும் புருவம் சுருங்கியது வெற்றிக்கு.

மோகன் புன்னகையுடன் அருகில் வந்தவன். என்ன சார் அப்புறம் மேரேஜ் லைஃப் எப்படி போகுது? என்ன சார் நீ எப்படி வெளியே வந்தன்னு யோசிக்கிரீங்களா? எனக்கும் பெரிய ஆள் பழக்கம் இருக்கு என்றவன் உங்க கிட்ட முக்கியமான விசயம் பேசணும் என்றான்.

எதுவா இருந்தாலும் இங்கேயே சொல்லு என வெற்றி அவனை எரித்து விடுவது போல பார்த்தான்.

உன் பொண்டாட்டி விசயம் தான் என்றவன் சுற்றிலும் பார்வையை பதித்தான். கிட்ட தட்ட 30க்கும் மேற்பட்ட ஆட்கள் பணிபுரியும் இடம் அது. மோகன் இளனமாக சிரித்த படி என்ன இங்கேயே சொல்லணுமா? சொல்றதுக்கு நான் ரெடி தான் என்றவன் சொல்ல வர, வெற்றி அறையின் பக்கம் நடந்தான்.

வெற்றியின் பணியாட்கள் அனைவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள். யார் இவன் பார்த்தாலே தறுதலை மாதிரி இருக்கான்? நல்லா மாட்டிக்கிட்டான் ஸ்ட்ரிக்ட் ஆபிசர் இவனை துடைச்சு எடுக்க போறாரு என பேசிக்கொண்டார்கள்.

உள்ளே சென்றதும் வெற்றி கோபமாக தேவையில்லாம என் கிட்ட அடி வாங்கி செத்துடாத என உருமினான். அய்யோ உனக்கு நல்லது பண்ணவும் எச்சரிக்கை செய்யவும் வந்தால் என்னை தப்பா நினைக்கிற? இட்ஸ் ஒகே என்னமோ பண்ணு என்றவன். இப்போ உன்னோட தம்பி வீட்டுக்கு வந்திட்டாதா கேள்வி பட்டேன்.

"ஹே!" என வெற்றி கோபமாக அவனை பிடிக்க வர.. மோகன் அவனை பார்த்து கொஞ்சம் ரிலாக்ஸ் டென்ஷன் ஆகாத அப்புறம் எதுவும் அசம்பாவதம் நடந்திடுச்சின்னா என்ன பண்றது.

நீ ரொம்ப தேவையில்லாம பேசிட்டு இருக்க என வெற்றி கோபத்தை கட்டு படுத்தி கொண்டு பார்த்தான்.

உன் பொண்டாட்டிய பத்தி நான் தப்பா சொல்லல. ஆனால் நீ ஏமாற கூடாதுன்னு சொல்ல வந்தேன். உன் பொண்டாட்டி மலர் அவளை தானே முதலில் உன் தம்பி பார்க்க வந்து அவன் விட்டு போயி தானே நீ கட்டிக்கிட்ட... உனக்கும் மலருக்கும் வயசு வித்தியாசம் பத்து வருடம்.

அதை பத்தி உனக்கு என்ன டா போடா! என வெற்றி சொல்ல.. எனக்கு என்ன பிரச்னை? என சிரித்தவன் இப்போ ஒரே வீட்டில் ரெண்டு பேரும் இருக்காங்க! உன் பொண்டாட்டிய உன் தம்பி பார்க்கும் போது அவங்க ரெண்டு பேரும் பேசினது தானே நியாபகத்துக்கு வரும். அவளுக்கும் அதே ஃபீல் தானே இருக்கும். எதுக்கு சொல்றேன்னா? தப்பா எதுவும் நடந்திட கூடாதில்லை.. அதுக்கு காரணம் உங்க கல்யாணம் கருணை அடிப்படையில் நடந்தது. உனக்கு தெரியாம உன் பொண்டாட்டி அவன் கூட என மோகன் முடிக்க வில்லை. கன்னத்தில் பளாரென்று அறைந்து கழுத்தை நசுக்கி தூக்கினான் வெற்றி.

நீ எனக்கு கேட்டது பண்ணிக்கோ! ஆனால் நான் சொன்னது நடக்கும் டா! என மூச்சுக்கு தவித்து கண்கள் இருட்டு கட்டியது மோகனுக்கு..

சரவணன் கதவை திறந்து கொண்டு உள்ளே வர வெற்றி இருக்கும் அவதாரத்தை பார்த்ததும்.. வெற்றி வெற்றி என கத்திக் கொண்டு அருகில் சென்றான்.

டேய் விடுடா! டேய் சொல்றத கேளு! என வலுக்கட்டாயமாக தள்ளி விட்டான் சரவணன்.

வேகமாக புரை ஏறியது மோகனுக்கு.. ஒழுங்கா இங்கே இருந்து ஓடிடு! இன்னும் நீ அடங்களையா டா! அவன் கண்ணில் முடிஞ்ச வரைக்கும் படாமல் இரு இல்லன்னா உன்னை கொன்னு போட கூட தயங்க மாட்டான் போடா என சரவணன் கத்த.. வந்த வேலை முடிந்தது போல மோகன் கிளம்பி விட்டான்.

வெற்றி மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க சிவந்த கண்களுடன் ருத்ர மூர்த்தியாக இருந்தான். அவனை இயல்பு நிலைக்கு கொண்டு வரவே பெரும்பாடாகி போனது சரவணனுக்கு.

"நான் வீட்டுக்கு போறேன் நீ பார்த்துக்க" என வெற்றி கிளம்ப... வேணாம் டா சொல்றத கேளு இப்போதைக்கு நீ போனால் உன்னோட கோபமும் உன்னோட சிவந்த கண்ணும் எனக்கே திகில் கொடுக்குது இதுல வீட்டுக்கு போய் உங்க அம்மாவை, தங்கச்சிய எல்லாரையும் பயமுறுத்திறயா! கம்முன்னு இங்கேயே இரு என கட்டு படுத்திதான்.

மோகன் சொன்னது கிறுக்கு தனமாக இருந்தாலும் எல்லா விசயங்களையும் மீறி வெற்றியின் நெஞ்சில் சிறு கலக்கத்தை கொடுத்தது. இல்ல என் மலர் என்னைக்கும் எனக்கு துரோகம் செய்ய மாட்டாள். அவளுக்கு என்னை தவிர வேறு எதுவுமே தெரியாது என உறுதியாக இருந்தான்.

மதியம் உணவை தவிர்த்தான். மாலை நேராக அவளை பள்ளியில் இருந்து அழைக்க சென்று விட்டான். மலர் சோர்வுடன் வந்தவள் அவனை பார்த்ததும் கொஞ்சம் தெளிந்தாள். பசி வயிற்றைக் கிள்ளியது. மாமா என அவசரமாக வண்டியில் ஏறினாள்.

இப்போ எப்படி இருக்கு? என வெற்றி கேட்க... இப்போ கொஞ்சம் பரவாயில்லை. என்னமோ கொடையுற போல இருக்கு வீட்டுக்கு போய் தூங்கணும் போல இருக்கு என்றாள் மலர்.

வீட்டுக்கு போறோம்! நீ ஃப்ரெஷ் ஆகிற! அங்கிருந்து நேராக ஹாஸ்பிடல் போலாம் சரியா?

"இல்ல எனக்கு பசிக்குது"

"அப்டியா உனக்கு ஐஸ் கிரீம் பிடிக்குமே வாங்கி தரவா?"

"நாக்குக்கு பிடிக்கல மாமா?"

வேற என்ன வேணும்? சிக்கன் பிரியாணி மட்டன் என ஆரம்பிக்க...

"ம்ம் ஹிம் அதெல்லாம் நாக்குக்கு பிடிக்கல"

அப்போ வேற என்ன வேணும்?

எனக்கு தக்காளி தொக்கு வேணும், அப்புறம் வேற என்ன? ஹான் தோசை, அப்புறம் உரைப்பா சட்னி வேணும் இட்லி வேணும் என்றாள்..

என்ன டி இது? என வெற்றி அவளை விநோதமாக பார்த்தான்.

எனக்கு தெரியும் இந்த மாதிரி நான் எதுவும் சொன்னால் இப்படி என்னை கிண்டலா பார்ப்பீங்க அதான் நான் எதுவும் சொல்லாம இருந்தேன் என்றாள் மலர்.

சரி டி சும்மா சொன்னேன். நான் இப்போவே அம்மா கிட்ட சொல்றேன். செஞ்சி வைக்க சொல்லி..போனதும் நீ குளிச்சிட்டு சாப்பிடு நம்ம கிலம்புவோம் என கூறினான்.

சரி என இருவரும் வீட்டுக்கு சென்றதும் அவளுக்காக பல்லவி ஏற்கனவே செய்து வைத்திருந்தார். மலர் வந்ததும் நேராக குளிக்க சென்று விட்டாள். கொஞ்சம் ஃப்ரெஷ் ஆனதும் வெளியே வர வெற்றி ஆபிஸ் வேலையாக பத்திர டாக்கு மெண்டை சரி பார்த்து கொண்டிருந்தான். இன்று காலையில் இருந்து எந்த வேலையும் ஓட வில்லை.. மலர் விழியை பார்த்ததும் தான் கொஞ்சம் புத்துணர்வு கிடைத்தது அனைத்தையும் மறந்து வேலை செய்தான்.

மலர் வா மா! இப்போவெல்லாம் நீ சரியா சாப்பிடுறதே இல்ல அதட்டி கொண்டே அனைத்தையும் வைத்தார். ஆரம்பம் எல்லாம் நன்றாக தான் சென்று கொண்டிருந்தது. ஆனால் உணவு கொஞ்சம் உள்ளே சென்றதும் குமட்டி கொண்டு வர... வேகமாக ஓடியவள் மொத்தத்தையும் வெளியே கக்கினாள். வெற்றி என பதட்டத்துடன் பல்லவி அழைத்தார்.

என்ன மா என்னாச்சு? என வெற்றி வெளியே ஓடி வந்தான்.

அந்த சத்தம் கேட்டு ஸ்ருதி, இளமாறன் இருவரும் வெளியே வந்தார்கள்.

டேய் வெற்றி அவள் சாப்பிட்ட மொத்தத்தையும் வாமிட் பண்ணிட்டா! என பல்லவி பதட்டத்துடன் கூற... இதோ இப்போவே ஹாஸ்பிடல் கூட்டிட்டு போறேன் மா! என வெற்றி புறப்பட்டான்.

பல்லவி அவளிடம் வந்து இது மாதிரி எவ்ளோ நாள் பண்ணுச்சு என அவளின் முகத்தை ஆராய்ந்தார்.

ஒரு ரெண்டு வாரமா அத்தை! என மலர் சோர்ந்து போயி கூற.. பல்லவியின் முகத்தில் சந்தோஷம் அப்போ அப்போ இதுக்கு அர்த்தம்? என முகம் மலர்ந்து வெற்றி அப் அப்பாவாக போறான். என நினைத்தவர் மலரின் அருகில் வந்து இந்த மாசம் தள்ளி போயிருக்கா? என கேட்டார்.

இப்பொழுது தான் யோசித்தாள். ஆமா அத்தை தள்ளி போயிருச்சு. அதனால் தான் குமட்டி கிட்டு வருது. உடம்பெல்லாம் வலிக்குது என மலர் இன்னும் புரிந்து கொள்ளாமல் சொல்லி கொண்டிருந்தாள்.

பல்லவி அவளின் நெற்றியில் முத்தமிட்டு இனி பத்து மாசம் கழிச்சு தான் வரும் என கூறினார்.

அப்போ பெரிய பிரச்சனையா? அத்தை? என மலர் கண்கள் விரிய கேட்டாள்...

அடி மண்டு என்ன மா உன்னை சொல்றது? நீ அம்மா ஆக போற! என பல்லவியின் கண்கள் விரிந்தது.

மலர் முகம் சந்தோசத்தில் பிரகாசித்தது. மாமா கிட்ட சொல்லணும்! என தன் வயிற்றை வருடி பார்த்தாள்.

பல்லவி சக்கரை எடுத்து வாயில் போட்டு விட்டவர். ஹாஸ்பிடல் போய் செக் பண்ணிட்டு வாங்க எல்லாம் நல்லதுக்கே நடக்கும் என நெற்றியில் குலதெய்வ திருநீற்றை பூசி விட்டார்.

நல்லது நடக்கும்

ஆனால் வாழ்க்கை என்பது நாணயம் போல நல்லது இருந்தால் அது கூடவே கெட்டதும் இருக்கும். பார்ப்போம் அது என்னவென்று.

அந்த நேரம் ஸ்ருதி இளமாறன் வரவேற்பு ஆல்பம் வந்து சேர்ந்தது.

வருவான்.
 

Author: Pradhanya
Article Title: அத்தியாயம்-31
Source URL: Pradhanya kuzhali novels-https://pradhanyakuzhalinovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

Usha

New member
Joined
Oct 8, 2024
Messages
21
சூப்பர் தினம் தினம் எதிரார்ப்பு அதிகமாகிட்டே இருக்கு, கொஞ்சம் பெருசா போட்ட நல்லா இருக்கும்
 
Top