Pradhanya

Active member
Staff member
Joined
Oct 6, 2024
Messages
120
வெற்றி மற்றும் மலர் இருவரும் அறைக்குள் சென்று விட இன்னொரு பக்கம் இளமாறன் ஸ்ருதியை சமாதானம் செய்து கொண்டிருந்தான்.

"மாமா" என மலர் அழைக்க.. "எனக்கு தூக்கம் வருது" என சொல்லி விட்டு படுக்க சென்றான் வெற்றி.

மாமா உங்க கிட்ட கொஞ்சம் பேசணும் என மலர் அவன் முன் போய் நின்றாள்.

நான் தான் சொல்றேன்ல தூங்கனுன்னு என பற்களை கடித்த படி கூறினான் வெற்றி.

மலரின் கண்களில் நீர் கொட்ட .. மாமா என் என்னை நீங்க சந்தேக படுறீங்களா என படபடத்தத இதயத்துடன் பார்த்தாள்.

உன்னை சந்தேக பட நான் யாரு? என்றான் வெற்றி ஒட்டாத குரலில்..

மாமா என மலர் உருக்கமாக அழைத்துக் கொண்டே அருகில் நெருங்கினாள்.

ஹே அழாத என் பேபி ஹெல்தியா இருக்கணும் என்றவன் படுக்கை விரிப்பை சரி செய்து ம்ம் தூங்கு நாளையில் இருந்து நான் சொல்ற டைம் டேபிள் ஃபாலோ பண்ணனும். இனி தேவையில்லாத பேச்சுக்கு இடம் இல்ல.. என்றவன் அவளை பார்த்து இன்னும் என்ன பார்த்திட்டு இருக்க? வந்து தூங்கு என அதட்டினான் வெற்றி.

மலர் தேம்பி தேம்பி அழுதபடி அவனை பார்க்க.. வெற்றி எதிரில் இருக்கும் சோபாவின் பக்கம் சென்றான்.

எங்கே போறீங்க? என மலர் கேட்க.. முறைத்து பார்த்தான் வெற்றி.

மாமா ந.. நான் எந்த தப்பும் செய்யல.. என்னை நம்புங்க என அழுதாள்.

சட் அப் என கர்ஜனையுடன் கத்தினான் வெற்றி.

அதில் அதிர்ந்து பயந்தவள் மெல்ல அவனை நடுங்கி கொண்டே பார்த்தாள்.

வெற்றி எதுவும் பேசாமல் படுத்துக் கொண்டான். மலர் அழுது வீங்கிய முகத்துடன் அவனை பார்த்தபடியே இருந்தாள்.

"ப்ச் லைட் ஆஃப் பண்ணலயா?"

அது வந்து எனக்கு பயமா இருக்கு லைட் வேணும் என கூறிக் கொண்டே அவனை பார்த்தாள்.

தண்ணி குடிச்சியா? யூரின் ப்ளூயண்டா போகனும் சோ இன்னும் யூரின் வரலையா? என வெற்றி எழுந்து அமர்ந்தான்.

இதோ போறேன் என மலர் மெதுவாக எழுந்து சென்றாள்.

பாத் ரூம் சென்றவளுக்கு இன்னும் அழுகை அதிகமானது. திட்டலாம். கேள்வி கேட்கலாம். நாலு அடி கூட அடித்து விடலாம் ஆனால் அதை விடுத்து இப்படி நடந்து கொள்ளும் முறை எப்படி பட்டது? தன்னை நம்புகிறாரா? இல்லை தன் மேல் கோபத்தில் இருக்கிறாரா? என்ன நிலையில் இருக்கிறார் என ஒன்றும் புரிய வில்லை மலருக்கு.

இன்னும் என்ன பண்ற? என வெளியில் இருந்து சத்தம் கேட்டது.

இதோ வந்துட்டேன் என வந்த வேலையை முடித்து விட்டு வெளியே வந்தவள். அவனை பார்த்தாள். அந்த சோபா அவனது உயரத்துக்கு வாகு இல்லை.. தூங்கவே மிகவும் சிரமபட்டான்.

மா.. மாமா! என மலர் அழைக்க.. கண் திறந்து பார்த்தான் இல்லை.

மாமா பிளீஸ் இது உங்க வீடு உங்க அறை இப்படி உடலை குறுக்கிட்டு படுக்கனுன்னு உங்களுக்கு அவசியம் இல்ல. நீங்க கட்டிலில் படுத்துகோங்க! நான் என மலர் ஆரம்பிக்க..

வெற்றி அவள் சொல்வதை கேட்க வில்லை அவளிடம் வேறு கேள்வி கேட்டான்.

நீ ஸ்கூலுக்கு போகணுமா? உன்னோட ஹெல்த் கண்டிசன் எப்டி இருக்கு என கேட்டான்.

மலர் அவனை ஏக்கத்துடன் பார்க்க.. கேட்ட கேள்விக்கு பதில் வரணும். உனக்கே டிசிப்லின் இல்ல நாளைக்கு என்னோட பேபிக்கு எப்படி டிசிப்ளின் இருக்கும்? என கேட்டான்.

மலருக்கு தெரிந்து விட்டது. தான் கேட்கும் எந்த கேள்விகளுக்கும் பதில் கொடுக்க மாட்டான். அவனுக்கு தேவையான விடயங்களை மட்டுமே கேட்கிறான். அதற்காக பேசுகிறான் என்று. இதெல்லாம் கேட்க கேட்க நெஞ்சு குமுறியது.

அவனை சோர்வுடன் பார்த்தவள். எதுவும் பேசாமல் படுக்கைக்கு செல்ல.. "நான் கேட்டதுக்கு இன்னும் பதில் வரல!" என வெற்றி அவளின் முகத்தை கூர்ந்து பார்த்தான்.

"என்ன கேட்டீங்க?" என மலர் கண்களை துடைத்த படி கேட்டாள்.

"அது ஸ்கூல் போயாகணுமா? ரொம்ப வீக்கா இருக்க? அதான் கேட்டேன்! என்னோட குழந்தை முக்கியம் எனக்கு!" என்றான் வெற்றி.

நான் முக்கியம் இல்லையா? என மலருக்கு நெஞ்சு குமிரியது. அதை அடக்கி கொண்டு "நான் என்ன பண்ணனும்னு நீங்களே சொல்லுங்க" என அவனது முகத்தை பார்த்தாள்.

லீவ் போட்டுடு பேபி பிறக்கர வரைக்கும். அதுக்கு அப்புறம் உன்னோட விருப்பம். ஏன்னா என் அம்மா இருக்காங்க பார்த்துக்க.. அண்ட் ஃப்ளாஷ்க் பாட்டில்ல தண்ணி இருக்கு குடிச்சிடனும் என சொல்லி விட்டு உடலை குறுக்கி கொண்டே முதுகு காட்டினான்.

மலர் கனத்த மனதுடன் படுக்க சென்றாள். உறக்கம் எப்படி வரும். அழுகை தான் அழுது அழுது வீங்கி போனது முகம். சிறிது நேரம் கழித்து உடல் சோர்வில் எப்படி உறங்கினான் என தெரிய வில்லை.

அதிகாலை நேரமே எழுந்து கொண்டான் வெற்றி. அறையில் இருந்து வெளியே வர சமையலறையில் இருந்து வந்தார் பல்லவி. அவன் வெளியே செல்ல போக, மனம் அழுத்துவது போல உணர்ந்த பல்லவி வெற்றி என அழைத்தார்.

"மா!"

"என்னை மன்னிச்சிடு பா! நான் உன்னை எல்லா விடயத்துக்கும் கட்டாய படுத்தி.."

அம்மா என அதட்டலுடன் அழைத்தான்.

பல்லவியின் கண்களில் நீர் கோர்த்து கொண்டது. அவர் சேலையின் தலைப்பால் முகத்தை மூடி அழுதார்.

உங்க வளர்ப்பு மேலே எனக்கு நம்பிக்கை இருக்கு..

கண்களை துடைத்துக் கொண்டே பல்லவி நிமிர்ந்து பார்க்க, "இளமாறன் உங்க வளர்ப்பு அவன் என்னோட தம்பி என்னைக்கும் இந்த மாதிரி காரியத்தை பண்ணிறுக்க மாட்டான். அப்படி பண்ணனும்னு நினைச்சிருந்தால் ஆதரவில்லாம இருக்க மலர அவன் கட்டிட்டு ஏமாத்தி இருக்கலாமே!" என கூறினான் வெற்றி தீர்க்கமாக..

இருந்தாலும் பாலை பூனைக்கு பக்கத்தில் வச்சிருக்க கூடாது.

டிஸ்கஸ்டிங் இங்கே யாரும் பால் இல்ல பூனையும் இல்ல எல்லாம் 5 அறிவு படைச்ச மனுஷங்க. என் பொண்டாட்டி மேலே எனக்கு நம்பிக்கை இருக்கு. மலர் அப்படி பட்ட பொண்ணில்ல ஆனால் நீங்க இப்படி நம்பிக்கை இல்லாம பேசுறது தான் கஷ்டமா இருக்கு. நாங்க இங்கே இருக்கிறது சங்கடமா இருந்தால் சொல்லுங்க என் பொண்டாட்டிய கூட்டிட்டு நான் போறேன் என்றான் வெற்றி.

"டேய் நான் நான் எப்போ டா அப்படி சொன்னேன்?" என பல்லவி திடுக்கிட்டு பார்த்தார்.

மலரை வேலைக்கு போக வேணாம்னு சொல்லிட்டேன். நீங்க அவள் மேல வச்சிருக்க அபிப்ராயத்தை பார்த்தால் எதுவும் சரியா வரும்ன்னு தோணல நான் சரவணன் இருக்கும் அபார்ட்மென்ட் பக்கம் ஒரு 1BHK வாங்கற ஐடியாவில் இருந்தேன். நாங்க அங்கே மூவ் ஆகிறோம். நீங்க இங்கே இருங்க. என்றான் தெளிவான குரலில்..

"வயித்துல குழந்தை இருக்கும் போது வீடு மாத்த கூடாது. எனக்கு நம்பிக்கை இல்லன்னு நான் சொல்லல. மலர் அப்படி பட்ட பொண்ணில்ல ஆனால் இந்த மாறன் அதாவது இளமாறன் பொண்டாட்டி பண்றது தான் என்னால.. நான் தெளிவா இருந்தால் கூட அவள் பண்ற விசயம் எல்லாம் பயத்தையும் சந்தேகத்தையும் கொடுக்குது"

வெற்றி தன் அன்னையை பார்த்து விட்டு சீக்கிரம் எல்லாத்துக்கும் விடிவு காலம் வரும். நான் பார்த்துக்கிறேன். நீங்க எதை பத்தியும் கவலை படாதீங்க என்றவன். அடுத்து என்ன செய்ய வேண்டும் என யோசித்திருந்தான்.

மலர் தூங்கி எழும் போது மணி பத்தை தொட்டிருந்தது. எழுந்து அமர்ந்து சுற்றிலும் பார்த்தாள். ஏனோ நெஞ்சம் எல்லாம் அடைப்பது போல இருந்தது. துக்கம் தொண்டையை அடைத்தது.

வெற்றி சொன்னது போலவே பல்லவி அனைத்தையும் ஓரம் கட்டினார். தேவையில்லாத சந்தேகம் எதற்கு இத்தனை நாள் பழகி இருக்கிறாள். கண்டிப்பாக அவள் மேல் தவறு இருக்காது என உறுதியாக நம்பினார். மலர் என அழைத்துக் கொண்டு உள்ளே வந்தார்.

அத்தை என கண்ணீரை துடைத்தாள் மலர்விழி.

பல்லவிக்கு அவளை பார்க்க பாவமாக இருந்தது. என்ன மலரு முகமெல்லாம் வீங்கி இருக்கு? அழுதியா மா! இந்த மாதிரி நேரத்தில் இப்படி இருப்பாங்களா? சந்தோஷமாக இருக்கணும் கண்ணு.

அத்தை என கையை பிடித்துக் கொண்ட மலர். சத்தியமா தப்பா எதுவும் நடக்கல அத்தை. இளமாறன் என் கிட்ட மன்னிப்பு கேட்டார் அவ்ளோ தான். நாங்க பத்து நிமிடம் கூட பேசல மோதிரத்தை அவர் கிட்ட ஒன்னு கொடுத்திட்டு நான் ஸ்ருதி மோதிரத்தை வாங்கிட்டு வந்துட்டேன். அந்த வீடியோ எங்க ரெண்டு பேரையும் தப்பா காட்டுது. என முகத்தை மூடி அழுதாள்.

இல்ல கண்ணு அழாத மா! எனக்கு தெரியும். இது குழப்பத்தில் இருக்கு. கவலை பட வேணாம். வெற்றியே உன் மேலே நம்பிக்கையா இருக்கான். நீ எதை பத்தியும் கவலை படாத ஹீட்டர் போடுறேன் குளிச்சிட்டு வா கண்ணு உன்னை கிளம்பி இருக்க சொன்னான். ஸ்கூல்க்கு போயி லீவ் சொல்லிட்டு வரணுமாம். உன்னை புறப்பட சொன்னான். பதினொரு மணிக்கு வரானாம் என சொல்லி விட்டு பல்லவி சென்றார்.

மலர் ஒரு பெரு மூச்சை விட்டு எழுந்தவள். குளிக்க சென்றாள். ஸ்ருதி கூட அப்பொழுது தான் எழுந்தாள். இளமாறன் அவளின் பின்னால் சுற்றி கொண்டிருந்தான். சமாதான படுத்த..

ஸ்ருதி வெளியே இருப்பதை பார்த்ததும் சமையல் அறை சென்று உணவை வாங்கி கொண்ட மலர் நேராக அவளின் அறைக்குள் சென்று அமர்ந்தாள்.

10.30 க்கு வீட்டுக்கு வந்தான் வெற்றி. நேராக அறைக்குள் நுழைய அங்கே மலர் உணவை சாப்பிட்டு கொண்டிருந்தாள்.

என்ன பண்ணிட்டு இருக்க நீ? அதுவும் இங்கே? என மிரட்டல் தொனியில் கேட்டான்.

அது அது வந்து சாப்பாடு!

"படுக்கை அறையில் சாப்பிடுறது சரியா? நீ படிச்ச பொண்ணா! கெட் அப் போ டைனிங் டேபிள் போயி சாப்பிடு! ம்ம்!"

அது அது வந்து அங்கே என தயங்கினாள் மலர்.

வெற்றி எகத்தாலமாக பார்த்தவன். அப்போ பயம் அப்படி தானே! ஓகே சீக்கிரம் சாப்பிட்டு வா! இனி உனக்கு மூணு வேலையும் உள்ளேயே உணவு வரும்.

அடுத்த நொடி எழுந்த மலர் நேராக உணவு மேஜையில் இருந்தாள்.

ஸ்ருதிக்கு எதிரில் சாப்பிட்டு கொண்டிருந்தாள் மலர்.

வெற்றி டீப்பாயின் பக்கம் அமர்ந்து போனை நோண்டிய படி கவனத்தை உணவு மேஜையின் மீது பதித்தான்.

வருவான்.
 

Author: Pradhanya
Article Title: அத்தியாயம்-34
Source URL: Pradhanya kuzhali novels-https://pradhanyakuzhalinovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

Usha

New member
Joined
Oct 8, 2024
Messages
21
அச்சோ இந்த வெற்றி என்ன பன்றேன் ஒன்னுமே புரியலையே ஆனா தரமான சம்பவம் இருக்கு ஐ அம் வைட்டிங் 😘😘😘
 

Magi

New member
Joined
Oct 6, 2024
Messages
24
Strict officer avar velaiya start pannitaru enna nenachi malar Mela kovama irukkanum therla 😮‍💨 but na perusa expect panren.... malaru teacher pavam athum ippo baby oda 🥲 I think ivanga prblm seemantham function varai needikum pola🥲apd irukka koodathu kaduvuleyy🥺
 

kalairaghu

New member
Joined
Oct 16, 2024
Messages
6
Very nice. Waiting for your next episode. Keep writing. A story cannot be written by all with lots of twists and It's going on interesting. It's your talent. Don't stop writing . So keep writing.
 

vedha

New member
Joined
Oct 7, 2024
Messages
18
அவன் எது பண்ணாலும் அதுல ஒரு புரிதல் கண்டிப்பா இருக்கும் மலரு, கவலை படாத நீ மாறன் உன்கிட்ட பேசுனத சொல்லாம விட்டது தான் அவனுக்கு வருத்தமா இருக்கும்.
 
Top