Pradhanya

Active member
Staff member
Joined
Oct 6, 2024
Messages
120
மலர் உணவை சாப்பிட்டு கொண்டிருக்க, ஸ்ருதி அடுத்த நொடி வயிற்றை பிடித்த படி எழுந்தாள்.

ஏன் மா என்னாச்சு? என பல்லவி கேட்டுக்கொண்டே வந்தார். இளமாறன் ஸ்ருதியை பார்த்து இன்னும் சாப்பிடவே இல்ல நீ உட்காரு ஸ்ருதி என அவளின் கையை பிடித்தான்.

ஸ்ருதியின் பார்வை மலரின் மீது இருக்க... "என்ன மா பார்க்கிற?"

எனக்குன்னு ஒரு தகுதி இருக்கு. அதை விட என் புருஷனை கைக்குள்ள போட்டுக்க நினைச்ச இவள் என் முன்னாடி வந்து சாப்பிடுறது எனக்கு பிடிக்கல. நான் என்னோட குழந்தைக்காக மட்டும் தான் இங்கே இருக்கேன் என கூறினாள்.

மலரின் கைகள் நடுங்க கண்களில் நீர் கொட்டியது. இதுக்கு மேலே? அவமானம் தாங்காமல் எழுந்து நின்றாள்.

ஸ்ருதி உனக்கு எத்தனை தடவை சொல்றது? அவங்கள தப்பா பேசாத! நீ நினைக்கிற மாதிரி ஒன்னும் நடக்கல.. என இளமாறன் எவ்வளவோ கூறினான்.

இது அனைத்தையும் அமைதியாக அமர்ந்து பார்த்துக் கொண்டிருந்தான் வெற்றி.

எனக்கு போதும் அத்தை என சமையலறை பக்கம் மலர் நகர.. இதற்கு மேல் அமைதி நல்லதல்ல என உட்காரு மொத்தமும் சாப்பிட்டு தான் எகுந்துக்கணும் என வெற்றி அவ்விடத்துக்கு வந்து சேர்ந்தான்.

இனி ஒரு நிமிசம் இந்த வீட்டில் என்னால இருக்க முடியாது என கத்தி விட்டு ஸ்ருதி நகர... போகலாம் போகலாம் ஆனால் போறதுக்கு முன்னாடி ஒரு படத்தை பார்த்திட்டு போவோம் என வெற்றி டிவியை ஆன் செய்தான்.

என்ன என ஸ்ருதி திரும்பி பார்க்க, கேமராமேன் வைத்திருந்த ட்ரோன் ஷாட்டில் இளமாறன் மற்றும் மலர் அறையில் இருந்து வெளிவந்த நிகழ்வு இயல்பாக இருந்தது. பார்க்க போனால் அது இயல்பு தான். அதை ஸ்ருதி ஊதி பெரிதாக்க காரணம் என்னவென இப்பொழுது ஓட போகிறது.

என்ன டா இது? என பல்லவி கேட்க..

இது அந்த ஹோட்டல் ரூமுக்கு வெளியே இருக்க கேமராவில் இருந்து எடுத்தது என்ற வெற்றி ஓட விட்டான். அதில் மலர் அறையின் கதவை திறந்து கொண்டு உள்ளே சென்றது. அதன் பின் கதவு சாத்த பட்டது. மலர் கதவை திறந்து வைத்து கொண்டு பையை நோண்டியது. சிறிது நேரத்தில் இளமாறன் அறைக்கு வந்தது. இருவரும் நின்று பேசி கொண்டிருந்தது. அதன் பின் மோதிரம் கொடுத்தது என 8 நிமிடங்கள் மட்டுமே இருவரின் உரையாடலும் இருந்தது. அதன் பின் இளமாறன் நேராக ஸ்டேஜ் சென்றான்.

மலர் நேராக பொற்கொடியின் அருகில் வந்து நின்றாள்.

இதுல தப்பு எங்கே இருக்கு? சொல்லுங்க ஸ்ருதி? என திரும்பினான் வெற்றி.

இடம் பொருள் ஏவல் பார்க்காமல் மலர் வெற்றியை அணைத்து கொண்டாள்.

ஸ்ருதியின் முகம் முத்து முத்தாக வியர்த்து போனது. இளமாறன் தன் மனைவியின் பக்கம் திரும்பி சத்தியமா இது தான் நடந்தது. நீ என் மேலே ஓவர் பொசசிவா இருக்க! அது தான் அவங்க கிட்ட நான் செஞ்ச தவறுக்காக மன்னிப்பு கேட்டேன். இது தான் நடந்தது என்றான்.

ஸ்ருதி அவ்விடத்தை விட்டு திரும்ப, இன்னொரு வீடியோ கூட இருக்கு அதையும் பார்த்திட்டு போங்க என்றவன். ஓட விட்டான். அதில் வனஜா மற்றும் ஸ்ருதி இருவரும் நின்று கொண்டிருந்தது.

இளமாறன் ஸ்ருதியின் பக்கம் திரும்பி அன்னிக்கே வந்து என் கிட்ட கேட்டிருக்க வேண்டியது தானே! அந்த வனஜா கிட்ட என்ன பேசிட்டு இருந்த? சந்தேகம் வரணும்னு வேற ஒரு டைமன்சன்ல அப்போ இந்த வீடியோவை பிளான் பண்ணி insert பண்ணியா என உச்சஸ்தானியில் கத்தினான்.

அ அது வ.. வந்... து மாறன் என ஸ்ருதி தயங்கி கொண்டே நிற்க... கோபத்தில் ஓங்கி விட்டான் ஒரு அரை...

என்ன டா பண்ற? பிள்ளை வயித்து காறி டா! என பல்லவி இளமாறனை ஆவேசமாக தள்ளி விட்டார்.

வேணாம் மா! இவள் எனக்கு வேணாம் என சொன்ன இளமாறன் நேராக அவனது அறைக்கு சென்று பத்திரங்களை மொத்தமாக ஸ்ருதியின் முன் நீட்டி இதை கொடுத்து தானே என்னை அடிமை மாதிரி உங்க அப்பாவும் நீயும் என்னை மாத்தினீங்க? என்னைக்கு பதவிக்கும் பணத்துக்கும் ஆசை பட்டு மலரை விட்டு உன்னை ஏத்துகிட்டனோ என் மேலே பாவம் அதிகமாகி போச்சு. ஒரு அப்பாவி பொண்ணை மணமேடை வரை வர வச்சு ஏமாத்திட்டென் ஆனால் அவளுக்கு நல்ல இணையா என் அண்ணன் அமைஞ்சிருக்கார். பேராசை பட்ட எனக்கு தான் சூழ்ச்சி புத்தி கொண்ட உன்னை மாதிரி ஒருத்தியை கட்டி என் வாழ்க்கை என்னோட நிம்மதி என்னோட மரியாதை எல்லாமே போச்சு. தப்பு என் மேலே தான். எனக்கு பணம் காசு பதவி வேணாம். என்னை விரும்பின உன்னால எப்படி என்னை இப்படி சித்தரிச்சு? ச்ச்சீ நினைக்கவே அசிங்கமா இருக்கு ஒழுங்கா இது எல்லாத்தையும் எடுத்திட்டு போயிடு. எனக்கு வேணாம் ரிஜிஸ்டர் ஆபிஸ் வந்து சொத்து மொத்தத்தையும் உன் பேருக்கே மாத்தி கொடுத்திடுறேன். டைவர்ஸ் வாங்கிக்கலாம். என்னால சந்தேக பாம்பு கூட வாழ முடியாது. குழந்தைய கூட என் கிட்ட கொடுத்திடு என் அம்மா வளர்த்துப்பாங்க என பேசி முடித்தான்.

ஸ்ருதி அழுது கொண்டே அவனது காலில் விழுந்தவள் சாரி இளா பிளீஸ் நான் முட்டால் தணமா பண்ணிட்டேன். பிளீஸ் இளா என கெஞ்சினாள்.

இளமாறன் வேகமாக போனை எடுத்து பாபுவுக்கு அழைத்தவன். உங்க பொண்ணை வந்து கூட்டிட்டு போங்க என்று விட்டு அவனறைக்கு சென்று விட்டான்.

ஸ்ருதி அதே இடத்தில் அமர்ந்து அழ ஆரம்பித்தாள். வெற்றி அவனது அறைக்கு செல்ல.. மலர் பின்னாலேயே சென்று அவனை பின்னோடு அணைத்து கொண்டாள். மாமா! என முத்தமிட..

மரகட்டையாக நின்றான் வெற்றி.

மாமா எனக்கு தெரியும். நீங்க.. என்னோட மாமா என அழுது கொண்டே முத்தமிட்டாள்.

எனக்கு வேலை இருக்கு! நகரு என வெட்டி பேசினான்.

மாமா! என உருக்கமாக மலர் அழைக்க.. உன்னோட சீன் கிரியேசன் கொஞ்சல் எல்லாம் இங்கே என் கிட்ட வேணாம் என்றான் வெற்றி.

மாமா ஏன் இப்படி பேசுறீங்க? நான் என்ன பண்ணேன்? நீங்க என்னை.. .

உன்னை சந்தேக பட நான் யாரு? அந்த அளவுக்கு நான் முட்ட்டால் இல்ல என்றான்.

அப்டின்னா ஏன் என் கிட்ட பேச மாட்டிகிரீங்க?

உன் கிட்ட பேச என்ன இருக்கு? என்றவன் அறையை விட்டு செல்ல போக.. மறைக்கும் விதமாக நின்றாள் மலர்.

"நகரு மலர்விழி!"

என் கிட்ட பேச உங்களுக்கு ஒண்ணுமே இல்லையா?

இல்ல..

"ஆனால் எனக்கு இருக்கு மாமா உங்க கிட்ட ஒரு விசயம் சொல்லணும்"

பெருசா என்ன சொல்லிட போற? உன்னை பத்தி எனக்கு எல்லாமே தெரியுமே? தெரியாத விசயம். நீ என் கிட்ட சொன்ன காதல் வெறும் வாய்வார்த்தையா? இல்ல உணர்வு பூர்வ வார்த்தையா என்ற விசயம் என்றான்.

மலர் கண்களில் நீர் கோர்த்து கொள்ள.. மாமா..

பிளீஸ் அப்படி கூப்பிட வேணாம் என்றான் முகத்தில் அடித்தார் போல..

முகத்தை மூடி அழுதவள் என்னோட காதல் உண்மை மாமா! என்னோட மனசுல நீங்க தான் இருக்கீங்க எதுக்கு இப்படி பேசுறீங்க? என்றாள்.

மெதுவாக குரலில் ஆனால் அழுத்தமாக அவளை கண்கள் சிவக்க பார்த்தவன். இப்போ வரைக்கும் நடந்தது வந்தது போனது தின்னது அப்டின்னு சகலமும் சொன்ன நீ! இளமாறன் வந்து உன் கிட்ட மன்னிப்பு கேட்ட விசயத்தை என் கிட்ட சொல்லனும்னு உனக்கு இது வரைக்குமே தோணலல்ல என கேட்டு விட்டான்.

"அது வந்து! நான் நீங்க என்னை தப் தப்பா நினைச்சுக்க கூடாதுன்னு தான்"

"அப்போ உன் கண்ணுக்கு நான் அயோக்கியன் போல தெரியுறேன். என்னை மனசார நீ லவ் பண்ணல" என வேகமாக மூச்சை விட்டான்.

இல் இல்ல மாமா சத்தியமா இல்ல.. .

அப்போ ஏன் சொல்லல? இந்த விசயத்தை உன் கிட்ட கேட்க எனக்கு சுத்தமா பிடிக்கல.. எதுவும் வேணாம் மலர்விழி.

"பிளீஸ் மாமா தப்பு தான் என்னை மன்னிச்சிடுங்க! நான் உங்களை உயிருக்கு உயிரா". ...

போதும் இந்த காதல் என்ற உணர்வு. அதை வார்த்தையால் வெளிபடுத்துறதுக்கு முன்னாடி நூறு தடவை யோசிக்கணும். ஏன்னா most dangerous word அது தான். அதையே திரும்ப திரும்ப பண்ணும் போது ஒவ்வொருத்தருக்கும் புதுமைய ஒரு மிகப்பெரிய விலை மதிப்பில்லாத மதிப்பை கொடுக்கும். ஒருத்தர் அந்த வார்த்தையை திரும்ப திரும்ப பயன்படுத்தும் போது மதிப்பே இல்லாத குப்பைக்கு போயிடும். அதனால் இதை விட்டுடு.

நீயும் நானும் ரூம் மெட்ஸ் அண்ட் அது நம்ம குழந்தை.. உனக்கு நான் டெட்டி பியர் பொம்மை மாதிரி நீ கட்டிட்டு இருக்கிர மாதிரி விரும்பல. நான் ரொம்ப சென்சிடிவ். இனி இப்படி தான் போகும். நான் உன்னை விட்டு எப்போவும் போக மாட்டேன். உன்னோட வேலையை நீ பார்க்கலாம். நம்ம குழந்தையை சந்தோசமா வளர்க்கலாம். ஆனால் நீயும் நானும் என வரும் போது என்னால இதை அக்சப்ட் பண்ணிக்க முடியல என சொல்லி விட்டு சென்றான்.

தப்பு பண்ணிட்டேன்! சொல்லிருக்கணும் நான் என அழுதவள் அவனை சமாளிக்க வழி தெரியாமல் திணறி கொஞ்சம் மெலிந்து விட்டாள்.

வெற்றி மாறன் கரைவானா?

மலர் அவனது கல் மனதை கரைப்பாளா?

பார்ப்போம்
வருவான்..
 

Author: Pradhanya
Article Title: அத்தியாயம்-35
Source URL: Pradhanya kuzhali novels-https://pradhanyakuzhalinovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

Usha

New member
Joined
Oct 8, 2024
Messages
21
🫰🫰சூப்பர், வெற்றி சொல்றதும் கரெக்ட் தான் ஆனா மலர் பாவம் இந்த வெற்றி க்கு அதிரடி தான் cotrect மலர் k va
 

Magi

New member
Joined
Oct 6, 2024
Messages
24
I feel sorry for malar🥺 and vetri Asusual you handled the situation very well.......but malar oda love ahh pathi apd pesi irukka vendam🥺
 

vedha

New member
Joined
Oct 7, 2024
Messages
18
இப்பவும் இந்த விஷயத்தை அவனா கேட்கவும் மன்னிப்பு கேட்குறா. முதல்லயே சொல்லிருக்கலாமே மலரு
 
Top