Pradhanya

Active member
Staff member
Joined
Oct 6, 2024
Messages
120
மலர் அவளின் புடவை மாராப்பை சரி செய்த படி அவனை பார்த்தவள். என்ன கேட்டீங்க? இப்போ கேளுங்க சொல்றேன்.

அது வ.. உனக்கு டிஸ்ப்லின் இல்லையான்னு கேட்டேன். என தடுமாறி கொண்டே வெற்றி கூறினான்.

அவளின் முகத்தை பார்க்க வில்லை வேறு புறம் திரும்பி கொண்டான்.

மலர் அவனது அருகில் வந்து நின்றவள். இப்போ மட்டும் டிசிப்லின்க்கு என்ன அவசியம் வந்தது? எனக்கு முத்தம் கொடுக்கும் போது உங்க டிசிப்லின் எங்கே போச்சு? என்னை கட்டி பிடிச்சிக்கும் போது..

போதும் மலர் நீ தேவையில்லாம பேசுற?

யாரு நானா? நான் தேவையில்லாம பேசுறனா? அன்னிக்கு மாடி மேலே அதுவும் மொட்டை மாடியில், எந்த தடுப்பும் இல்லாம வெட்ட வெளியில், முத்தம் கொடுத்து என் மடியில் படுத்துகிட்டு ஒரு வேலை பண்ணீங்களே இந்த டிக்னிட்டி டிசிப்லின் எல்லாம் எங்கே போச்சு! என மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க கூறியவள். உங்களுக்கு நான் இங்கே இருக்கிறது சிரமமா இருந்தால் சொல்லுங்க! நான் அத்தை ரூமுக்கு போறேன். என்றவள் கண்கள் கலங்கி போனது.

மோகத்தில் ஆரம்பித்து சோகத்தில் முடித்திருந்தாள் மலர்.

நீ.. நீ பண்ணது சரியா? என வெற்றி கேட்க... மலர் விழி சிரித்த படி நான் என்ன தப்பா பண்ணேன்? சொல்லுங்க! நானா இளமாறன் கிட்ட போயி பேசல அதை முதலில் புரிஞ்சுக்கோங்க! அவர் தான் என் கிட்ட பேச வந்தார். அதுக்கும் எனக்கும் எந்த சம்மந்தமும் இல்ல.

"அப்புறம் ஏன் என் கிட்ட நீ ஷேர் பண்ணல!"

நம்ம ரெண்டு பேருக்கு நடுவில் அந்த விசயம் எதுக்குன்னு நினைச்சு தான் நான் உங்க கிட்ட சொல்லல.

வெற்றி அவளையே உற்று பார்த்தான். மலர் அவனை பார்த்து இவ்வளவு தூரம் பேசுறீங்களே நீங்க என் கிட்ட என்ன சேர் பண்ணிருக்கீங்க? ஒன்னு சொல்லுங்க பார்ப்போம். நீங்க கஞ்சி போட்டு அயன் பண்ண மாதிரி விறப்பா சுத்தனும் என் கிட்ட எதையும் பகிர்ந்துக்க மாட்டீங்க. நான் பேசணும். நான் மட்டும் தான் பேசணும் நீங்க கேட்டுகிட்டே இருப்பீங்க அப்படி தானே!

சேர் பண்ற அளவுக்கு என் கிட்ட என்ன இருக்கு?

ஒன்னும் இல்ல! பெருசா உங்களுக்கு என்ன இருக்க போகுது! என்றவள் கண்களில் நீர் கோர்த்துக் கொண்டது.

இப்போ எதுக்கு அழற! பாப்பா! என வெற்றி ஆரம்பிக்க..

வேண்டாம் சாமி நான் அழ மாட்டேன் உங்க பாப்பாவுக்கு எதுவும் ஆகாது. பாப்பா மேலே இருக்க அக்கறை கூட என் மேலே இல்ல. எனக்கு தேவையும் இல்ல என்றவள் அவனை முறைத்தாள்.

வெற்றி அவளின் பேச்சில் ஒரு நொடி ஆடித்தான் போனான். இன்று தான் அவள் இத்தனை கருத்தாக பேசி பார்த்திருக்கிறான்.

அவ்விடத்தை விட்டு வெற்றி நகர, மலர் அவன் முதுகை வெறித்து பார்த்தாள். அடுத்ததாக ஸ்ருதியின் வளைகாப்பு வீட்டிலேயே எளிமையாக நடத்த பட்டது. ஸ்ருதி அவ்வளவு அழகாக இருந்தாள் ஆனால் முகம் வாடித்தான் போனது.

மலர் அவளின் அருகில் வந்து ஃபீல் பண்ணாதீங்க! கண்டிப்பா அவர் உங்களை புறிஞ்சுக்குவார். நீங்க பண்ணது சரி தான் அவங்க மேலே நீங்க அவ்ளோ காதல் அன்பு பாசம் எல்லாமே வச்சிருக்கீங்க என்றாள்.

ஸ்ருதி அவளின் கையை பிடித்து சாரி என தேம்பி தேம்பி அழுதாள். அழ வேணாம் ஸ்ருதி பாப்பா இருக்கே! கண்டிப்பா அவர் மனசு மாறும். என தேற்றினார்.

பாபு வந்து அனைத்தையும் செய்வதற்கு பணம் கொடுத்தார். அதற்கு காரணம் ஸ்ருதிக்கு அன்னை இல்லை. அதனால் தான் இந்த அளவுக்கு செல்லம்.

வெற்றி தான் அனைத்து வேலைகளையும் செய்தான். இளமாறனால் வர முடிய வில்லை. இதுவே தவறு செய்த ஸ்ருதிக்கு பெரிய தண்டனை. ரொம்ப நன்றி என்றார் பாபு.

எதுக்கு? என வெற்றி அவரை பார்த்தான்.

என் பொண்ணு வாழ்க்கையை நீங்க தான் காப்பாற்றி இருக்கீங்க. நான் உங்களை தப்பா நினைச்சுட்டேன் நீங்க மட்டும் அன்னிக்கு பேசுலன்னா என வருந்தினார்.

அவன் கல்யாணம் செஞ்சிட்டு வந்தப்பவே வீட்டை விட்டு வெளியே போ அப்டின்னு சொல்ல எனக்கு உரிமை இல்ல. இதுல எனக்கு என்ன உரிமை இருக்கோ அந்த அளவுக்கு அவனுக்கும் இருக்கு. அவனோட வாழ்க்கையை அவன் தீர்மானிக்க உரிமை இருக்கு. ஆனால் என் அம்மா சங்கட படுற மாதிரி ஒரு நிலை வந்ததால் தான் அன்னிக்கு நான் அப்படி பேசிட்டேன். என்றான் வெற்றி.

பிளீஸ் வெற்றி டெலிவரி அப்போவாவது இளமாறன வர சொல்லுங்க நீங்க சொன்னால் அவர் கேட்பார்.

வருவான் நீங்க போயிட்டு வாங்க என்றான் வெற்றி.

நிம்மதியுடன் பாபு கிளம்பினார். அவர் இளமாறனுக்கு கட்டி கொடுக்க காரணமே குடும்ப சூழல் தான் தன் பெண் பாதுகாப்பான இடத்தில் இருக்க வேண்டும். தனக்கு பிறகு அவளை பார்த்து கொள்ள ஒரு நல்ல குடும்பம் இருக்க வேண்டும். ஏன் என்றால் பாபுவுக்கு வெற்றியின் அப்பா கபிலனை இதற்கு முன்னாலே தெரியும். அதனால் தான் ஸ்ருதி விரும்புகிறேன் என சொன்னதும் உடனே திருமணத்தை நடத்தி வைத்தார்.

பல்லவி ஸ்ருதியுடன் படுத்துக் கொண்டார். இன்று காலையில் இருந்து மலரானவளை பார்க்க முடிய வில்லை. பிள்ளையை சுமந்து கொண்டு கொழு பொம்மை போல சுற்றி கொண்டிருந்தாள்.

முன்பெல்லாம் ஏக்க பார்வையை வெற்றி மீது படற விடுவாள். ஆனால் இப்பொழுது அது இல்லை. மறந்து விட்டாலோ! என வெற்றிக்கு சந்தேகம் வேறு வந்தது.

இரவு சுடு நீரில் குளித்து முடித்து நைட்டி அணிந்து படுக்கைக்கு வந்தாள். வெற்றி அறைக்குள் வந்தான். மலரின் முகம் வாட்டமாக இருந்தது.

அருகில் சென்றவன். என்னாச்சு? உன்னோட முகமே சரி இல்லையே!

"ஒன்னும் இல்ல"

சொல்லு எதுவும் பண்ணுதா? என வெற்றி அவளின் அருகில் அமர்ந்தான்.

இல்ல நான் நல்லாருக்கேன்! என காலை நீட்டினாள்.

வெற்றி அவளின் காலை பிடித்துக் கொண்டான்.

என்ன பண்றீங்க? விடுங்க என மலர் தட்டி விட.. இல்ல உனக்கு கால் வலிக்குது எனக்கு தெரியும். என்றவன் மெல்ல பிடித்து விட்டான்.

"நீங்க எப்போ என் கிட்ட பேசுவீங்க?"

பேசிட்டு தானே இருக்கேன்! என்பது போல அவன் பார்வை இருந்தது.

எனக்கு என்னோட மாறன் மாமா வேணும் என்றாள் மலர்விழி.

கொஞ்சம் டைம் எடுக்கும். நிறைய செலவாகும் என்றான் வேண்டும் என்றே!

அப்டியா எவ்ளோ டைம்?

ஏன் என் கிட்ட சொல்லல! உனக்கு நான் எந்த அளவுக்கு முக்கியம்? என வெற்றி முதலில் இருந்து கொஞ்சம் வித்தியாசமாக ஆரம்பித்தான்.

மலர் அவனை முறைத்து பார்த்தவள். சரி ஓகே நீங்க எவ்ளோ டைம் வேணாலும் எடுத்துக்கோங்க நான் அது வரைக்கும் எங்க அக்கா வீட்டுக்கு போறேன். சாரி முரளி மாமா வீட்டுக்கு போறேன் என்றாள்.

அங்கே எதுக்கு? என வெற்றி கொஞ்சம் கடுமையாக கேட்டான்.

இனி அத்தை ரொம்ப பிசியா இருப்பாங்க. ஸ்ருதிக்கு டெலிவரி டைம் வந்திடுச்சு. அவங்களுக்கு அம்மா இல்ல. சோ அத்தை தான் பார்த்துக்குவாங்க. எனக்கான விடயங்களை நானே தான் பார்த்துக்கணும். அத்தைய தொந்தரவு பண்ண கூடாது. இங்கே நாலு சுவத்தை பார்த்துக்கிட்டு தனியா பினாத்திகிட்டு என்னால இருக்க முடியாது. நான் சிந்து வீட்டுக்கு போறேன். அங்கே சிந்து, கோகுல், முரளி மாமா இருப்பாங்க.

எல்லா பிரச்சனைக்கும் அந்த ஆள் தான் காரணம் என காட்டமான குரலில் எகிரினான் வெற்றி.

எங்க மாமா இப்போ அக்காவை கூட்டிட்டு தனி குடித்தனம் போயிட்டாரு. இப்போ வேலைக்கு போறாரு. முன்ன மாதிரி இல்ல. எங்க அக்காவை மகாராணி போல பார்த்துக்கலன்னா கூட இத்தனை நாள் செஞ்ச தப்புக்கு மன்னிப்பு கேட்டு அழுதிருக்கார். இப்போ ஒழுக்கமா இருக்கார். எங்க அக்கா சந்தோசமா இருக்கா! அதனால் நீங்க நினைக்கிற மாதிரி இல்ல.

எப்படி இருந்தாலும் சரி நீ போக கூடாது.

எனக்கு போகனும். என்னால தனியா இருக்க முடியாது.

"என்ன தனியா இருக்க? எல்லாரும் இருக்கோம். இந்த நேரத்தில் கவனமா இருக்கணும்."

எல்லாரும் இருக்காங்க சரி தான்! என் பையன் கூட எனக்கு துணை தான். என் பையன் வரட்டும் அப்புறம் யாரும் எனக்கு தேவையில்லை.

எந்த பையன்? என வெற்றி புரியாமல் முளித்தான்.

எந்த பையனா? இதோ என் ஸ்டோமக்ல இருக்கானே அவனை சொல்றேன். வயிறு தெரியலயாம். அப்படி இருந்தால் பையன்னு அத்தை சொன்னாங்க எங்க அக்காவும் சொன்னா! என மலரின் முகத்தில் அத்தனை சந்தோஷம். என் பையன் வந்துட்டா அதுக்கு அப்புறம் எல்லாரும் ரெண்டாம் பட்சம் தான். யார் துணையும் தேவையில்லை என மலர் சொல்லி முடித்தாள். "ஸ்ஸ்ஸ் ஹாஆ!" என்ன பண்றீங்க?

தெரியாமல் பண்ணிட்டேன் சாரி அப்புறம் நீ பெரிய டாக்டர் மாதிரி கற்பனை பண்ணிட்டு இருக்காத! பிறந்ததும் குழந்தை பேசாது அழ தான் செய்யும்! என காலை சரியாக இணைத்து வைத்தான்.

ஓ அப்படியா? சரி! லைட் ஆஃப் பண்ணிட்டு குட்டி லைட் போடுங்க என படுக்கையில் படுத்துக் கொண்டாள்.

வெற்றி இன்னொரு பக்கம் வந்து படுத்தான்.

என்ன பண்றீங்க?

பார்த்தால் எப்படி தெரியுது? தூங்க போறேன்.

மலர் உதட்டுக்குள் சிரித்தவள். நீங்க சோபாவில் தானே தூங்குவீங்க? புதுசா என்ன இந்த பக்கம்.

நான் எதுக்கு சோபாவில தூங்கனும்? இது என்னோட ரூம். என்னோட பெட்!

ஓ அப்படியா? சரி நான் அத்தை ரூமுக்கு போறேன் என எழுந்தாள் மலர்.

எதேய் அத்தை ரூமுக்கு போறயா? என வெற்றி எழுந்து அமர்ந்தான்.

மலர்விழி..?

தொடரும்.
 

Author: Pradhanya
Article Title: அத்தியாயம்-37
Source URL: Pradhanya kuzhali novels-https://pradhanyakuzhalinovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

vedha

New member
Joined
Oct 7, 2024
Messages
18
எதுக்கு சாரே இந்த வெட்டி வீராப்பு 😂
 

Magi

New member
Joined
Oct 6, 2024
Messages
24
Strict officer eyy kathara vidra intha malaru uhh😂 I think paiyan thaan porakka poran dignity officer innum padatha paadu aaga poraru😂..... (my mind voice be like: oorukkey paruppu aanalum veettukku thodappakatta than😹)but enga vetri mass ah ethavathu pannuvaru I'm waiting 💥🤣
 

Usha

New member
Joined
Oct 8, 2024
Messages
21
இது தேவையா 🤦‍♀️🤦‍♀️, இதுக்கு எதுக்கு இந்த பந்தா குப்புற விழுந்தாலும் மீசைல மன்னு ஒட்டுல போல இருக்கே 🫣😜😜😜
 
Top