எதேய் அத்தை ரூமுக்கு போறயா? என வெற்றி எழுந்து அமர்ந்தான்.
விளையாட்டு பண்ணிட்டு இருக்காத மலர்! என அவளை முறைத்து பார்த்தான்.
நீங்க தானே சொன்னீங்க? இது உங்களோட ரூம்ன்னூ! அதான் நான் அத்தை ரூமுக்கு போறேன்.
"இத்தனை நாள் எங்கே படுத்த?"
நீங்க இத்தனை நாள் எங்கே படுத்தீங்க? என மலர் அவனிடம் எதிர் கேள்வி கேட்டாள்.
"ப்ச் விதண்டாவாதம் பண்ணிட்டு இருக்காத மலர்! வந்து படு!"
"நான் பண்றது விதண்டாவாதம்ன்னா நீங்க பண்றது என்ன?"
எதிர்த்து பேசுறயா? என வெற்றி பற்களை கடித்தான்.
அவனது கோபத்தை பார்த்து சற்று அதிர்ச்சி அடைந்தவள். எதுவும் பேசாமல் முதுகு காட்டி படுத்து கொண்டாள்.
அதன் பின் மலர் அவனிடம் எதுவும் பேச வில்லை. தனக்காக மனம் இறங்கி வராமல் வீம்புக்கு நிற்பவனை என்ன செய்ய முடியும்? விட்டு விட்டாள். தான் செய்தது அவ்வளவு பெரிய குற்றமா? நான் என்ன தவறு செய்தேன்? என நெஞ்சம் குமுரியது.
கொஞ்சம் ஓவரா தான் பேசிட்டோமோ முதுகு காட்டி தூங்குறா! எப்படியும் நைட்டு அவளே பக்கத்தில் வருவா! என காத்திருந்தான் வெற்றி. ஆனால் வெற்றி விடிய விடிய தூங்காமல் விழித்தது தான் மிச்சம். மலர் அவனருகில் வர வில்லை. அதற்கு காரணம் மன்னவன் தான். இத்தனை நாள் தனியாக தூங்க பழகி இருந்தாள்.
முழித்து முழித்து அவள் அருகில் வருவாள் என எதிர்பார்த்த வெற்றி இறுதியில் ஏமார்ந்து போனது தான் மிச்சம்.
இப்படியே நாட்கள் சென்றது. ஸ்ருதிக்கு பிரசவ காலம் நெருங்கியது. வெற்றி இளமாறனுக்கு அழைத்திருந்தான்.
"அன்.. அண்ணா!"
"ஸ்ருதிக்கு பெயின் வர போகுது போல உன்னை ரொம்ப எதிர் பார்க்கிறா! நீ கிளம்பி வா!"
நான் இப்போதைக்கு வர முடியாது அண்ணா! என்னோட சூழ்நிலை அப்படி.
ஒரு பெரிய மூச்சை விட்ட வெற்றி. அவள் பண்ணது தப்பில்ல. நீ பண்ணதும் தப்பில்லை. நீ அதையே நினைச்சிட்டு இருக்காத! எப்போ பாரு அந்த பொண்ணு உன்னை தான் நினைச்சிட்டு இருக்கு. இதுக்கு மேலே உன்னோட இஷ்டம் என சொல்லி விட்டு போனை வைத்தான்.
ஸ்ருதியின் முகம் வீங்கி போயிருந்தது. பல்லவி மற்றும் மலர் இருவரும் தான் ஆறுதல் சொல்லி கொண்டிருந்தார்கள்.
என் மேலே அவருக்கு கோபம் போகல அத்தை! நான் இருக்கிறதே வேஷ்ட்! அவருக்கு என்னோட குழந்தை தான் வேணும் போல! என ஸ்ருதியின் கண்களில் நீர் கொட்டியது.
அடி விழும் பார்த்துக்க! என்ன பேச்சு பேசிட்டு இருக்க விருப்ப பட்டு தானே கல்யாணம் பண்ண? அதுவும் வற்புறுத்தி பண்ணிருக்க. இந்த மாதிரி பேசுறத முதலில் விடு. என பல்லவி அவளுக்கு அறிவுரை சொல்லி கொண்டிருந்தார்.
முகத்தை மூடி அழுதாள் ஸ்ருதி. மலருக்கு அவளை பார்க்க மிகவும் வேதனையாக இருந்தது. உடனே அவளது போனை எடுத்தாள். அவளின் முன்னாலேயே ஹலோ நான் மலர் பேசுறேன்.
என்னாச்சு மலர்!
எப்போ வர போறீங்க? நீங்க பண்றது கொஞ்சம் கூட சரி இல்ல ஸ்ருதி இங்கே உங்களால கஷ்ட பட்டுட்டு இருக்கா! என வருத்தத்துடன் கூறினாள்.
இளமாறன் எதுவும் பேசாமல் அமைதியாக இருக்க.. தப்பு இளமாறன் நீங்க பண்றது.. அவங்க ஒரு உயிர் இல்ல இப்போ ரெண்டு உயிர். எல்லாரையும் எதிர்த்துகிட்டு தானே கல்யாணம் பண்ணீங்க. அந்த பொண்ணை கஷ்ட படுத்துரீங்க! என கூறினாள்.
விடுங்க மலர் அவர் வர வேணாம் என சொல்லி கொண்டிருக்கும் போதே வலி அதிகமானது. அம்மா என ஸ்ருதி கத்தினாள். மலர் போனை கட் செய்து விட்டு உடனே வெற்றிக்கு அழைத்தாள்.
வெற்றி புருவத்தை சுறுக்கியவன் அவள் தானா! அவளே தான்! அழகி நியாபகம் வந்திருக்கும் என ஆசையாக எடுத்தான்.
என்னங்க ஸ்ருதிக்கு பெயின் வந்திடுச்சு சீக்கிரம் வாங்க என படபடப்புடன் போன் வைத்தாள்.
வெற்றி நிதானமாக கிளம்பியவன். நேராக வீட்டுக்கு வந்து சேர்ந்தான்.
மலர் பதட்டத்துடன் அங்கும் இங்கும் நடந்தாள். யாரும் போன் எடுக்க வில்லை. திடீரென வண்டி நிறுத்தும் சத்தம் கேட்டது.
வயிற்றை பிடித்து கொண்டு மெதுவாக கதவை திறந்தவள். என்ன நீங்க இங்கே வந்திருக்கீங்க? ஸ்ருதிக்கு என்னாச்சு யாரும் போன் எடுக்கலயே! என கேட்டாள்.
நீ தானே இங்கே வர சொன்ன? அது தான் இங்கே வந்தேன்! என்றான் வெற்றி.
மலர் அவனை பார்த்து முறைத்தாள். சரி போ போய் ரெஸ்ட் எடு! என வெற்றி உள்ளே நுழைந்தான்.
உங்களுக்கு கொஞ்சமாவது மனசாட்சி இருக்கா? உங்களோட வஞ்சனைய இப்படி தான் காட்டுவீங்களா? உங்களுக்கு மேலே இளமாறன் இருக்கார்! என மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க பேசி கொண்டிருந்தாள்.
வெற்றி ஒரு பெரு மூச்சை விட்டு பொண்ணு பிறந்திருக்கா! இந்த வீட்டு பிரின்சஸ். அண்ட் இளமாறன் நேராக அங்கே ஹாஸ்பிடல் போய்ட்டான். அவன் நேத்தே கிளம்பிட்டான். சோ வேற என்ன வேணும் உனக்கு என கடுமையான முகத்தை வைத்து கொண்டு பார்த்தான்.
மலர் இப்பொழுது தான் நிம்மதியாக அமர்ந்தாள். உடனே பிரகாஷிடம் இருந்து போன் வந்தது. அண்ணா என போனை எடுத்து பேசினாள்.
மலரு பாப்பா பிறந்திருக்கு! இளமாறன பார்த்ததும் தான் நார்மல் டெலிவரி ஆச்சு எல்லாமே ஆட்டம் கட்டிடாங்க என கூறினார்.
"சரி அண்ணா! நான் வரேன்" என மலர் சொல்ல.. மூணு நாள்ல அவங்க வீட்டுக்கு வருவாங்க நீ எங்கேயும் போக வேணாம் என வெற்றி கூறினான்.
மச்சான் அங்கே வந்துட்டாரா! சரி மா நீ பாரு என போனை வைத்தான்.
இளமாறன் மற்றும் பல்லவி இருவரும் ஹாஸ்பிடலிலேயே இருந்தார்கள். ஒரு நொடி கூட குழந்தையை விட்டு பிரியவில்லை. ஸ்ருதிக்கு இப்பொழுது தான் நிம்மதியாக இருந்தது.
வீட்டுக்கு குழந்தையை தூக்கி வந்ததும் ஒரு வாரம் கழித்து இளமாறன் கிளம்பி விட்டான். அதன் பின் மலர் எப்பொழுதும் குழந்தையிடம் தான் இருந்தாள். வெற்றியை மறந்து விட்டாள்.
அவர்கள் இருவரின் சாம்பாசனைகளை பார்த்த பல்லவிக்கு எதோ சரி இல்லை என்று தோன்றியது.
பல்லவி யோசித்து விட்டு நேராக ஸ்ருதியின் அறைக்கு சென்றார்.
"மலரு!"
"சொல்லுங்க த!"
கொஞ்சம் வெளியில் வா மா! வேலை இருக்கு. என அழைத்தார்.
இருங்க ஸ்ருதி! வரேன் என வெளியே சென்றாள்.
ஏழாவது மாசம் முடிய போகுது செக் அப்க்கு போகனும் தான! ஆமாங்க அத்தை! இன்னும் ரெண்டு நாள் இருக்கு.
சரி அப்புறம் இனி நீ வெற்றி கூட தூங்கு மா நான் ஸ்ருதி கூட படுத்துகிறேன். என்றார் பல்லவி.
"என்னாச்சு அத்தை?"
பல்லவி அவளின் அருகில் வந்து ஸ்ருதிக்கு தான் டெலிவரி கொஞ்சம் கஷ்டம் ஆகி போச்சு. கடைசியில் அந்த பொண்ணு ரொம்ப கஷ்ட பட்டுச்சு.
"அப்போ கஷ்டமா இருக்குமா த!"என்று பதட்டத்துடன் கேட்டாள் மலர்.
அதுக்கு தான் உன்னை வெற்றி கூட தூங்க சொல்றேன்.
மலர் பேந்த பேந்த முளித்தாள். பல்லவி ஒரு பெரு மூச்சை விட்ட படி அவன் கூட தூங்கு மா! ஒண்ணா சேர்ந்து... என்றவர் இதுக்கு மேலே எப்டி சொல்றது? குழந்தையே பெத்துக்க போற! என வெட்க சிரிப்புடன் கடந்து விட்டார்.
அய்யோ அப்படி வேற ஒன்னு இருக்கா? என்ன பண்றது? அவருக்கு விருப்பமில்லாமல் நம்ம பக்கத்தில் போறது நல்லாருக்காது! என யோசித்தாள்.
என்ன செய்வது என தெரிய வில்லை. இன்னும் டெலிவரிக்கு ரெண்டு மாசத்துக்கு மேலே இருக்கு. படி ஏறி பார்ப்போம். வேலை செய்யலாம் நாளையில் இருந்து என நினைத்தாள்.
வெற்றியோ சிரிப்பும் கோபமும் மறந்து சுற்றி வந்தான். அனைவரிடமும் எரிந்து விழுந்தான். காரணம் மலர் வாசனை இல்லை.. மஞ்சத்தை காலி செய்து சென்றிருந்தாள்.
மாலை வேலைகளை அனைத்தையும் முடித்து விட்டு வீடு திரும்ப நேரமாகி விட்டது. அவன் வருவதற்கு முன் நேரமே உணவை உண்டு விட்டு வாக்கிங் முடித்தவள் கட்டிலில் படுத்துக் கொண்டாள்.
அவன் வரும் போது தூங்கி இருக்க வேண்டும் என நினைத்தாள். பல்லவி அவரது வேலையை ஆரம்பித்தார். வெற்றி சிறிது நேரம் லிட்டில் பிரின்சஸ் முன் அமர்ந்து கொஞ்சி கொண்டே மலரை தேடினான்.
வெற்றி வா சாப்பிடலாம் என பல்லவி அழைத்தார்.
சாப்பாட்டை எதோ ஒரு யோசனையில் பிசைந்து கொண்டே இருந்தானே தவிர சாப்பிட வில்லை.
வெற்றி!!
மா!
உன்னோட கவனம் எங்கே டா இருக்கு! சாப்பிடு என அதட்டினார்.
கொஞ்சமாக சாப்பிட்டவன் வெகு நேர தயக்கத்துக்கு பிறகு.. மலர் சாப்பிட்டாளா?
ஓ இன்னிக்கி தான் அக்கறை வந்ததா? உங்க ரெண்டு பேருக்கு நடுவில் சண்டையா? என பல்லவி நேரடியாக கேட்டார்.
இல்ல மா! ஆளை காணோம் அது தான்! என்றான்.
அவள் நேரமே சாப்பிட்டு தூங்க போயிட்டா! அடுத்து ஒன்பதாம் மாசம் ஆரம்பிக்க போகுது. அதனால் வளைகாப்பு போடணும். நினைப்பு இருக்கா!
பண்ணிடலாம் மா! என்றவன் பாதி சாப்பாட்டில் எழுந்து கொண்டான்..
எனக்கு தெரியும் டா இப்போல்லாம் நீ சரியா சாப்பிடுவதே இல்ல.. இந்தா இந்த பாலை குடிச்சிட்டு போ! அப்புறம் அர்த்த ராத்திரியில் பசிக்கும் என கொடுத்தார்.
வெற்றி வாங்கி கொண்டான். முழுவதையும் குடித்து விட்டு உறங்க சென்றான். அவளை படுக்கையில் பார்த்ததும் ஒரு நிம்மதி
பரவியது. கதவை அடைத்து விட்டு வந்தவன். மறுபக்கம் சென்று படுத்துக் கொண்டான்.
அதிகாலை மாறனின் மஞ்சத்தில்..
மலர்விழி.
தொடரும்..

Author: Pradhanya
Article Title: அத்தியாயம்-38
Source URL: Pradhanya kuzhali novels-https://pradhanyakuzhalinovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.