மலரின் அருகில் வந்து படுத்தவன். அவளையே பார்த்தான் வைத்த கண் வாங்காமல்.. இரண்டு கன்னமும் இட்லி போல இருந்தது. அவளின் அருகில் நெருங்கியவன் நீண்ட நாள் கழித்து திருட்டு முத்தத்தை கொடுக்க ஆரம்பித்தான். சொர்க்கம் போல இருந்தது. "அட இது கூட நல்லாருக்கே!" என தோன்றியது. அவளை பார்த்த படியே உறங்கி போனான் ஒரு நிம்மதி பரவியது.
நீண்ட நேரமாக இயற்கை அழைப்பு வருவது போல இருந்தது. வியர்க்க விறுவிறுக்க எழுந்து அமர்ந்தாள் வயிற்றை பிடித்து கொண்டு மெதுவாக இறங்கினாள் படுக்கையில் இருந்து. ஒரு வழியாக அவளது வேலையை முடித்து விட்டு ஹப்பா என பாத் ரூம் கதவை திறந்தாள். அவளுக்கு எதிரில் வெற்றி.
இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள். மலர் தலையை குனிந்த படி படுக்கைக்கு சென்று விட்டாள். வெற்றி ரெஸ்ட் ரூம் சென்று விட்டு படுக்கையில் வந்து படுத்தான். அவளும் தூங்க வில்லை கண்களை மூடி கொண்டுருந்தாள் வெறுமனே.
வெற்றி புரண்டு புரண்டு படுத்தான். இனி கண்ணை குத்தினால் கூட தூக்கம் வர மாட்டேன் என்றது. அவள் புறம் திரும்பினான். மலர் கண்களை மூடிய படி அவன் புறம் திரும்பினாள்.
என்ன பண்ற? என வெற்றியின் குரல்..
என்னாச்சு? நான்.. என் என்ன பண்ணேன்? இங்கே இருந்து போகணுமா! உங்களுக்கு என்னை.. என அவள் பேச ஆரம்பிக்க..
டூ மச்சா பண்ணிட்டு இருக்க டி! பேபி இருக்கும் போது எழுந்து உட்கார்ந்து தானே டேர்ன் பண்ணனும்? ஆனால் நீ இப்போ என்ன பண்ண? என விளக்கினான்.
தெரியாம பண்ணிட்டேன். என மலர் மெதுவாக எழுந்து அமர்ந்து திரும்பி படுத்துக் கொண்டாள்.
மலர்!! என அருகில் நெருங்கினான்.
"ம்ம்" என மெதுவாக பதிலளித்தாள்.
"எனக்கு தோணுது டி!" என்றவன் அவளின் கழுத்தில் முத்தமிட்டான். நீண்ட நாள் கழித்து உணர்வுகள் உச்சம் பெற்றது.
அவள் கண்களை மூடி உணர்வுகளை அடக்கினாள். இதயம் பந்தய குதிரையை போல ஓடியது. பரவசம் பரவியது அனைத்திடங்களிலும். ஒரு சில நொடி அமைதியாக இருந்தது. தொடுதல் இல்லை. மெதுவாக கண்ணை திறந்து பார்த்தாள். அவளுக்கு எதிரில் நின்று கொண்டிருந்தான்.
நீ திரும்ப வேணாம் என மறு பக்கம் வந்து படுத்துக் கொண்டு முத்தமிட ஆரம்பித்தான். அவள் பக்கம் உணர்வுகள் அனைத்தும் கரை புரண்டு ஓடியது. எண்ணங்களை கட்டு படுத்த முடியாமல் வெடித்து சிதறினான். துடித்து அடங்கினான்.
மலர்!! மலர்!! என தன் மார்பில் கிடந்தவளை பார்த்தான்.
என்னாச்சு? கூப்டீங்களா? என்னங்க? என மலர்விழி அவனை புரியாமல் பார்த்தாள். லைட்டை போட்டு.
தனக்கு எதிரில் இருப்பவளை அதிர்ச்சியுடன் பார்த்த வெற்றி தன்னையே பார்த்துக் கொண்டான்.
என்னாச்சு? என மலர் கேட்க... தலையை அடித்துக் கொண்டான். வெற்றி அவள் இல்லாமல் நீ செத்திடுவ டா! என வேகமாக எழுந்து பாத் ரூம் சென்றான்.
மலர் குழப்பத்துடன் என்னாச்சு இவருக்கு? என மீண்டும் படுக்கையில் படுத்துக் கொண்டாள்.
குளியலறை சென்றதும் தன்னை தானே நொந்து கொண்டவன். குளிர்ந்த நீரில் குளிக்க ஆரம்பித்தான். Wet dreams வர அளவுக்கு காஞ்சு போயிருக்க வெற்றி! அவள் இல்லாம நீ அவ்ளோ தான்! அவள் சொல்றதும் சரி தானே! நீ மனசு கஷ்ட பட கூடாதுன்னு நினைச்சிருக்கா! என அவளுக்கே பரிந்து பேசியது சப்த நாடியும்.
அடுத்த இரண்டு நாட்களில் ஹாஸ்பிடல் செக் அப் வந்தது. பெரிய ஸ்கேன் ஒன்று இருக்கிறது. அதன் பிறகு மாதாந்திர பரிசோதனை மாத்திரை மருந்துகள் என அனைத்தையும் எடுத்துக் கொள்ள வேண்டும். இப்பொழுது டாக்டரை பார்க்க அமர்ந்திருந்தார்கள்.
சொல்லுங்க குழந்தை அசைவுகள் நல்லா தெரியுதா மலரு என மணிமேகலை கேட்க... அவள் புன்னகையுடன் தலை அசைத்தாள். சரியா டெலிவரி எப்போ ஆகிதுண்ணு சொல்ல முடியுமா? மணி என வெற்றி கேட்டான்.
மூணு டேட்ஸ் இருக்கு அண்ணா! அதுக்கு முன்னாடி பெயின் வந்தால் உடனே ஹாஸ்பிடல் கூட்டி வாங்க!
"சரி மா!"
இந்த மாதத்தில் இருந்து கொஞ்சம் வேலை செய்யு மலர். படி ஏறி இறங்கு ஆனால் கவனம் ரொம்ப முக்கியம். வேற வேலை என்ன செய்யனும் கா? டெலிவரிக்கு ஈசியா இருக்க மாதிரி சொல்லுங்க.
நீங்க ரெண்டு பேரும் இனி சேர்ந்து இருக்கலாம். அது குழந்தை பிறக்க ஹெல்ப் பண்ணும் என்றாள் மணிமேகலை.
என் கிட்ட சண்டை மட்டும் தான் போடுறா! என வெற்றி வாய் மொழியாக கூறினான்.
மலர் அவனை முறைத்து பார்த்தாள். மணிமேகலை சிரித்து விட்டு முடிஞ்ச வரைக்கும் வாரத்தில் அட்லீஸ்ட் ஒரு தடவையாவது இருங்க என்றாள்.
அப்போ மத்த நாளில் சண்டை போட்டால் சரியா? வெற்றி கேட்க... மலர் அவனது கையை பிடித்து கொஞ்சம் அமைதியா இருங்க என அதட்டி விட்டு "சரிங்க அக்கா நான் பார்த்து கொள்கிறேன்" என வெளியே வந்தாள்.
"என்னோட மானத்தை வாங்கிட்டீங்க?"என மலர் முகத்தை தூக்கி கொண்டு வந்தாள்.
இப்போ நான் என்ன சொல்லிட்டேன்? மணிமேகலை கேட்டதுக்கு பதில் சொன்னேன். நீ என் கிட்ட பேசினால் தானே சண்டை வரும்? அது கூட இப்போ வரதில்லை. அதை மணி கிட்ட சொல்ல மறந்துட்டேன் போய் சொல்லிட்டு வரேன் என்றான் வெற்றி.
மிஸ்டர் வெற்றி! அவங்க சொல்ற விசயம் நிஜமா புரியலயா? இல்ல புரியாத மாதிரி நடிக்கிரீங்களா? என மலர் கடுகடுத்தாள்.
"என்ன சொல்ற?"
"நம்ம ரெண்டு பேரையும் ரிலேசன்ஷிப் ல இருக்க சொன்னாங்க" என தயங்கி கொண்டே கூறினாள்.
நம்ம ரிலேசன் தான! நீ என்னோட பொண்டாட்டி நான் உன்னோட புருசன் என்றான் வெற்றி.
"அய்யோ அய்யோ பச்சை குழந்தை! ஒண்ணுமே தெரியாது!" என தலையில் அடித்து கொண்டாள்.
"என்னன்னு சொல்லு!" என வீடு வரும் வரை கேட்டான்.
மலர் ஒரு வார்த்தை கூட பேசாமல் முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு வந்தாள்.
மலர் சொல்லு என கையை பிடித்தான். நம்ம ரெண்டு பேரையும் நைட்டு சேர்ந்து இருக்க சொன்னாங்க! ஒண்ணா தூங்க சொன்னாங்க என தலையை குனிந்து கொண்டே சொன்னாள்.
"அப்டின்னா என்ன? புரியாம தானே கேட்கிறேன்? சொல்லு! நீ தான் டீச்சராச்சே!"
மலர் அவனை முறைத்து விட்டு வேகமாக உள்ளே சென்றாள்.
அவள் சென்றதும் வெற்றியின் முகம் மாற தொடங்கியது. உதட்டை கடித்து சிரிப்பை அடக்கினான். மலர் தவித்த அனைத்தும் மன கண்ணில் ஓடியது. வெகு நேரம் கழித்து வீட்டுக்குள் சென்றவன் நேராக அறைக்குள் சென்று சிரிக்க ஆரம்பித்தான்.
சரவணன் தொடர்ந்து வெற்றிக்கு அழைத்தான். இவன் எதுக்கு இத்தனை முறை கூப்பிடுறான்? என நினைத்த படி போனை எடுத்தான்.
டேய் இப்போ தான் மணி கால் பண்ணாள். என்ன டா நிஜமா உனக்கு எதுவுமே தெரியாம தான் மலரை மாசமாக்கினயா? என தன் சந்தேகத்தை கேட்டான் சரவணன்.
சட் அப் F* you என சொல்லிய படி போனை கட் செய்தான் வெற்றி.
வெற்றிக்கா தெரியாது? மாறன் மலரின் மேல் அம்பு எய்வதில் வல்லவன் ஆகிற்றே! அவளை சீண்ட வேண்டும் என்று தான் அலைகளித்தான்.
நினைத்து நினைத்து சிரித்தான் நீண்ட நாட்களுக்கு பிறகு. அதன் பின் சரவணனுக்கு அழைத்து வேலை விசயமாக பேசி விட்டு வைத்தான்.
இந்த வாரத்தின் இறுதியில் வளைகாப்பு செய்யலாம் என முடிவெடுத்தார்கள். சிந்துவிடம் வெற்றி ஏற்கனவே பேசி விட்டான். மலரை அனுப்ப மாட்டானாம். அதற்கு காரணம் ஒரு வேளை வனஜா சிந்துவின் வீட்டுக்கு வந்து எதுவும் பிரச்னை செய்தால் தேவையில்லாத சங்கடம். சிந்து வேலைக்கு செல்கிறாள் முரளி இப்பொழுது தான் திருந்தி அவனது வேலையில் ஒழுக்கமாக இருக்கிறான்.
டேய் இதை குடி என பாலை நீட்டியவர். மாறா நாளைக்கு குடல் எடுத்து செய்வோம். ஸ்ருதிக்கு மீன் செஞ்சு கொடுக்கணும். கூடவே கருவாடு செய்யணும் என நாளைக்கு என்ன வாங்க வேண்டும் என லிஸ்ட் போட்டார்.
சரி வாங்கிடுறேன் என தூங்க சென்றான்.
இரவு படுக்கை அறை விரிப்புகளை சரி செய்து கொண்டிருந்தாள் மலர்.
வாக்கிங் போனயா?
ம்ம்
"டேப்லெட் டானிக் எல்லாம் குடிச்சாச்சா?"
இப்போ தான் குடிச்சேன். என்றவள் படுக்கையில் அமர்ந்தாள்.
"ஹே என்ன வயிறு அசையுது?" என வெற்றி கேட்க..
நைட் மூவ்மென்ட் அதிகமா இருக்கும். எட்டி உதைக்கிறான். உங்க கைய கொடுங்க என்றவள் தயங்கி விட்டு வேணாம்னா விடுங்க என பின் வாங்க...
கதவை சாத்தி விட்டு திரும்பினான். லைட் ஆஃப் பண்ணிடுங்க என மலர் படுக்க செல்ல.. ஒரு நிமிசம் இரு என அருகில் நெருங்கியவன் இடையின் மேல் கை வைத்து வைத்து குழந்தையின் அசைவுகளை கவனித்தான்.
மலர் அவனது முகத்தை பார்த்தாள். என்னோட வரம் இந்த குழந்தை! புரியுதா! தேவையில்லாம பேசிட்டு இருக்காத! உனக்கு மட்டும் தான் அக்கறை இருக்கிற மாதிரி எனக்கு இல்லாத மாதிரி நடந்துக்க வேணாம் என கூறியவன் அவளின் வயிற்றில் முத்தமிட்டான்.
மலர் ஒரு வித சிலிர்ப்புடன் அமர்ந்திருந்தாள். அவனது முத்தம் கொஞ்சம் கொஞ்சமாக தரம் மாறியது. கூடவே சேர்ந்து தடமும் தான்.
அவள் நிமிர்ந்து பார்க்க, அவளின் உதட்டை நெருங்கி இருந்தான் வெற்றி.
என்ன பண்றீங்க?
"மணி சேர்ந்து இருக்க சொன்னாலே!"
"அப்போ உங்களுக்கு ஏற்கனவே தெரியுமா?" என கோபத்துடன் கேட்டாள்.
"தெரியாது!" என அவனது விரல்கள் நைட்டியின் ஜிப் மேல் சென்றது.
கையை பிடித்து கொண்டவள். அப்புறம் எப்டி? என அவனை வெறித்தாள்.
நெட் ல சர்ச் பண்ணேன்! என்றான் வெற்றி.
மலரின் முகத்தில் அப்பட்ட அதிர்ச்சி! அட பாவி மனுஷா! என அவளின் கண்கள் அவனை வேற்று கிரக ஜந்து போல பார்த்தது.
அதற்குள் உதட்டை பிடித்து முத்தமிட ஆரம்பித்தான் வெற்றி.
மலர் கொஞ்சம் திணறித்தான் போனாள்.
*
என் கிட்ட எதோ விசயம் சொல்லனும்னு சொன்ன? என்ன விசயம்? என வெற்றி அவளின் முகத்தை பார்த்தான்.
மலர்...?
தொடரும்

Author: Pradhanya
Article Title: அத்தியாயம்-39
Source URL: Pradhanya kuzhali novels-https://pradhanyakuzhalinovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.