அதிகாலை ஐந்து மணிக்கு உள்ளுக்கு சேவல் போல எழுந்தான் வெற்றி. உள்ளுக்குள் எதோ ஒரு உணர்வு கட்டுபடுத்த முடியாத கிளர்ச்சி வேக மூச்சுடன் தன்னை சமநிலை படுத்த முயன்று தோற்று போனவன் ac காற்றிலும் முகம் முத்து முத்தாக வியர்க்க மெல்ல கண் விழித்தான்.
வழக்கம் போல மதில் சுவர் செங்கல்களான பஞ்சு தலையணைகள் அனைத்தும் தரையில் கிடக்க அவனது நெஞ்சை முட்டிக் கொண்டு உடற்பஞ்சு தலையணை இரண்டும் மென்மையாக முட்டிக் கொண்டிருக்க, ஹாஸ்டலில் தூங்கிய பழக்க தோஷத்தில் வெற்றியின் இடையின் மேல் காலை வளைத்து உறங்கி கொண்டிருந்தாள் மலர் விழியாள்.
அவள் தலையில் சூடியிருந்த மல்லிகை மொட்டுகள் ac காற்றில் குளிர்ந்து அந்த அறை முழுவதும் லேசான வாசனையுடன் சுண்டி இழுக்க.. அவளை பார்த்ததும் எண்ணங்கள் தறிகெட்டு ஓட தொடங்கியது.
சின்ன கண்கள், அழகான மூக்கு முழி, சிறிய கன்னங்கள், பிறை நெற்றி, செர்ரி பழம் போல உதடுகள். பெயருக்கு ஏற்றது போல புது மலராக அவளது சிரிப்பும் முகத்தில் வெளிப்படுத்தும் உணர்வுகளும் அழகாக தான் இருந்தது. கட்டு கோப்பான உடல்வாகு கொண்ட வெற்றியின் அருகில் மலர் நின்றால் சிறு பெண்ணாக தான் தெரிவாள். தேவையில்லாத சதை கொஞ்சம் கூட இல்லை. வெற்றியின் ஒரு கைக்குள் அடங்கி விடும் அவளின் இரண்டு மணி கட்டுகளும் அந்த அளவுக்கு இருந்தது. மெல்ல வெற்றியின் எண்ணங்களும் உணர்வுகளும் அவளின் உடைக்குள் மேயவும் அவளின் வதனத்தை தளுவவும் துடித்தது. எட்சில் கூட்டி விழுங்கியவன்.
"ச்ச எனக்கு ஏன் இப்படி தோணுது?" என வெற்றி வேகமாக அவ்விடத்தை விட்டு எழுந்து செல்ல முயற்சி செய்தான். இப்பொழுது இங்கிருந்தால் விவகாரமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என உள்ளுக்குள் உணர்வுகள் ஒரு பக்கம் கரை புரண்டு ஓடிட கட்டு படுத்திக் கொண்டவன். எழ முயற்சி செய்ய மலர்விழி நெண்டிக் கொண்டே அவனது நெஞ்சில் முகம் புதைத்தாள். "மாறனின் மஞ்சத்தில் மலர்விழி" அய்யோ இவளை என் அவசரம் புரியாமல் டென்ஷன் பண்றா! என கஷ்ட பட்டு அவளை புரட்டி போட முயற்சி செய்தான் வெற்றி.
இப்பொழுது மலர்விழி mid night கனவில் மிதந்து கொண்டிருக்கிறாள். பெண்களுக்கு எப்பொழுதுமே அதிகாலை தான் அசுர தூக்கம் வரும். அது போல மலர் நல்ல உறக்கத்தில் இருந்தாள். அய்யோ மலர்! ஹே மலர் என அதட்டலுடன் அழைத்தான். அவளிடம் எந்த எதிர்வினையும் இல்லை. மாறாக ac குளிரில் அவனது கைக்குள் வந்து ஒட்டி புகுந்து கொண்டாள். இருவரின் உதடுகளும் உரசி கொள்ள கொஞ்ச இடைவெளி இருக்க, இதற்கும் முடியாது என விலகினான். விலகத்தான் முயற்சி செய்தான். ஆனால் வெற்றியின் உடலில் கீழே வலது பக்கம் வலி எடுக்க அவளின் அருகாமை இன்னும் பாடு படுத்த இதுக்கு மேலே முடியாது எழுந்து போயிடனும் என நகர மலரின் உதடுகள் அவனது கன்னத்தில் மோதிய நொடி கண்களை மூடி பெரு மூச்சை விட்டவன் அவள் பக்கம் திரும்பி உதட்டுடன் உதடு பொருத்திக் கொண்டான். ம்ம் இது இதுதான் பரவசம் இன்று தான் on cloud nine க்கு அர்த்தம் தெரிகிறது.
வெற்றியின் மூச்சு வேகமானது. உள்ளுக்குள் இருக்கும் 34 வருட உணர்வுகளுக்கு வடிகால் ஒருத்தி மட்டுமே! இத்தனை நாள் ஏன டா திருமணம் செய்து கொள்ளாமல் இருந்தோம் என தோன்றியது. அந்த முத்தத்திலேயே சொர்க்கம் சென்று வந்தவன். கொஞ்சம் மேல் உதடு கீழ் உதடு என மொத்தமாக மென்மை முத்தத்தை கொடுத்துக் கொண்டிருந்தான். திருடன் போல, அவள் விழித்து விட்டால் தனது நிலை என்னாவது? தனது ஒழுக்கம்? என யோசித்தவன் வேகமாக விலகினான்.
பின் என்ன நினைத்தானோ இல்ல தப்பில்லை என முத்தம் இன்னும் கொடுக்க சொன்னது அவனது உதடுகள். இன்னும் இரண்டு முத்தங்களை கொடுத்தான் வெற்றி இந்த முறை அவனது கைகள் அவளின் இடையை பிடித்திருந்தது. நேற்று மலர்விழி ஒரு ஆட்டம் ஆடினாலே ஹாலில் அதில் ஒரு இஞ்ச் இடை பதமாக வெளியே தெரிந்தது. இந்த டாப் அண்ட் பாட்டம் இரவு உடையில்.மெத்து மெத்தென்னு இருக்கு என நினைத்தவன். மெல்ல அவளிடம் இருந்து விலகி குளியலறை சென்று குளித்து விட்டு வந்தான்.
மலர் விழி உறங்கி கொண்டிருக்க உள்ளுக்குள் குற்ற உணர்வு ஏற்பட்டது. இனி இப்படி நினைக்கவே கூடாது. என நினைத்தவன் அப்பொழுதே அவனது செக்யூரிட்டி ஆபிஸ் கிளம்பி விட்டான் வெற்றி. காலையில் சோம்பல் முறித்துக் கொண்டே கட்டிலை பார்த்தாள். வெற்றியை காண வில்லை. அறையை பார்த்தாள் தலையணை எல்லை தாண்டாமல் இருக்க அடுக்கி வைக்க பட்டிருந்தது.
அப்பாடா இன்னிக்கு தப்பிச்சோம் நம்ம எல்லையே தாண்டலயே என நினைத்தவள். எழுந்து வெளியே வந்தாள். இந்தா மலரு காபி என நீட்டினார் பல்லவி. அத்தை எத்தனை தடவை சொல்றேன்? நீங்க எனக்கு செய்ய கூடாது என்றாள் மலர். இல்ல டா மா அப்படி இல்ல நீயும் நானும் தான் இருக்கோம் உனக்கு செஞ்சு கொடுக்க எனக்கு எந்த பிரச்னையும் இல்ல என கூறினார்.
மலர் சிரித்த படி காபியை வாங்கி கொண்டாள். அந்த நேரம் பிரகாஷ் கறி எடுத்து கொண்டு வந்தான். அத்தை நீங்க சொன்னது போல வெட்டிட்டு வந்துட்டேன் என அவன் வைத்து விட்டு போக, மதியம் வந்திடு பிரகாசு பொற்கொடியை கூட்டிக்கிட்டு என்றார் பல்லவி.
இல்ல அத்தை இன்னிக்கி வெளியே வேலை இருக்கு. பொற்கொடிய விட்டு போறேன் என மலர் விழியை பார்த்து சின்ன புன்னகையுடன் கிளம்பி விட்டான்.
இங்கே 24ஹார்ஸ் செக்யூரிட்டி ஏஜென்சியில் யோசனையுடன் அமர்ந்து கொண்டிருந்தான் வெற்றி மாறன். அவனது எண்ணங்கள் மொத்தத்தையும் மலர்விழியாளே ஆக்கிரமித்து இருந்தாள்.
எப்பிடியும் இன்னிக்கி சாரு பத்திர ஆபிஸ் போயிட்டு தான் இங்கே வருவாரு. அதனால் நமக்கு கொஞ்சம் நேரம் இருக்குது பா என நடுத்தர வயது ஆண்கள் மற்றும் அரசு ஓய்வு பெற்ற ஊழியர்கள் என செக்யூரிட்டி வேலையில் இருக்கும் அனைவரும் பேசிக் கொண்டு உள்ளே நுழைய அங்கே வெற்றி மாறன் அமர்ந்திருந்தான். இவ்வளவு நேரமும் சிரிப்பும் கும்மாளமும் என இருந்த அந்த ஆட்கள் கூட்டம் இப்போது வெற்றியை பார்த்த அடுத்த நொடி வாய் மூடி கொண்டார்கள்.
அவர்களை பார்த்ததும் வெற்றியின் முகம் கடுமையை தத்தெடுத்து கொண்டது. இது தான் நீங்க நேரத்தில் வரும் லட்சணமா? உங்களுக்கு டிசிப்லின் இருக்கா? என ஆளுமையுடன் லெஃப்ட் அண்ட் ரைட் வாங்கிக்கொண்டிருந்தான்.
சார் அது எப்போவும் வர நேரம் தான் நீங்க தான் சீக்கிரமா வந்துட்டீங்க? பாருங்க நேரத்தை என காட்டினார்கள்.
இல்ல நீங்க 2 நிமிஷம் லேட் இப்படி இருந்தால் அங்கே வேலை செய்யும் இடத்துக்கு போக இன்னும் லேட்டாகும் என்றான் வெற்றி. அனைவரின் முகமும் மாறி போய் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்.
இது தான் ஃபர்ஸ்ட் அண்ட் லாஸ்ட் வார்நிங். யார் யாரு எங்கே போறீங்க? சரியா இன்பார்ம் பண்ணிட்டு உங்களோட வேலை செய்யும் இடத்துக்கு போனதும் லொக்கேஷன் சரியா share பண்ணனும் என கூறி விட்டு எழுந்தான் வெற்றி. அடுத்த பத்து நிமிடங்களில் அடுத்த ஷிப்ட் ஆட்கள் அனைவரும் அவரவர் வேலை செய்யும் இடத்துக்கு சென்றார்கள்.
அங்கிருந்து அவன் பக்கத்து தெருவில் இருக்கும் பத்திர ஆபிசுக்கு சென்றான். வெற்றி வர வில்லை என தெரிந்ததும் நடுத்தர வயது லட்சுமி அம்மா அவரது போனில் ரீல்ஸ் பார்த்துக் கொண்டிருந்தார். என்ன லட்சுமி அம்மா சத்தம் அதிகமா இருக்கு? உங்க டாக்குமெண்ட் எல்லாம் அடிச்சு முடிச்சுட்டீங்களா? என கேட்டார் ராதா.
ஆமா அந்த வெற்றி பையன் இன்னும் வரல, நமக்கு தான் நேரம் இருக்கே. கொஞ்சம் இந்த கம்ப்யூட்டரையும் டைப் ரைட்டரையும் தட்டி தட்டி காப்பு காய்ச்சி கொஞ்சம் பின்னால் கொஞ்சம் சாஞ்சுக்கிட்டு கொஞ்சம் ஆசுவாச படுத்திக்கிறேன் இங்கே வா ராதா இந்த கோபாலை பாரு? இங்கே பவ்யமாக இருந்திட்டு அவன் மனைவியோட ரீல்ஸ் பண்றான் பாரு என காட்டினார் லட்சுமி.
பத்திர ஆபிஸில் வேலை செய்யும் கோபால் அவனது மனைவி கீதாவுடன் சினிமா பாடலில் வரும் உடை அணிந்து கொண்டே ஆடி அதில் லைக் வாங்குவது தான் அவர்களின் வேலை. ராதா மற்றும் லட்சுமி இருவரும் கோபால் இமிடேட் செய்தார்கள் அழகாக இருந்தது. அந்த கோபால் பொண்டாட்டி கீதா படத்தில் மதுபாலா போட்ட ட்ரெஸ் போட்டிருக்க ட்ரெஸ் நகையல்லாம் போட்டிருக்கா அழகா இருக்குல்ல. என சிரித்துக் கொண்டிருக்க, தொண்டை கணைக்கும் சத்தம் கேட்டது.
இரு பெண்மணிகளும் மொத்த கவனத்தை ரீல்சில் வைத்திருக்க, வெற்றி மாறன் அங்கு வந்ததை அறிய வில்லை. ரெண்டு பேரும் மொத்தமா வேலைய விட்டு போய் ஜோடியா பாட்டுக்கு டான்ஸ் ஆடி போடுங்களேன். என குரல் கேட்டது.
லட்சுமி மற்றும் ராதா இருவரும் விலவிலத்து கொண்டே எழுந்து நின்றார்கள். சார் என பதட்டத்துடன்.
வெற்றி அவர்களை பார்வையில் துளைத்தவன். வேகமாக அவனது இடத்துக்கு சென்று இந்த பட்டா இந்த டாக்குமெண்ட்ல மொத்தமா தப்பு பண்ணி வச்சிருக்கீங்க. இந்த கன்ஸ்யூமர் என் கிட்ட வந்து ஏர் ஏறுன்னு ஏறிட்டு போறான்.
சார் அது வந்து நீங்க கொடுத்த விசயத்தை தான் நான் மேக் பண்ணேன் என லட்சுமி சொல்ல, அப்படியா என டாக்குமெண்ட் டை நீட்டி வேகமாக அவனது கண்கள் அனைத்து தவறயும் வட்டமிட்டு நீட்டியது.
சார் அது வீட்ல கொஞ்சம் பிரச்னை. அதை.. என லட்சுமி சொல்ல வர, நீங்க மட்டும் op அடிக்கிறது இல்லாம கூட சேர்க்கை வேற.. ஹான் தாராளமா என்டர்டெயி்மென்ட் பண்ணுங்க ஆனால் இது எல்லாம் என்னோட ஆபிஸில் வேணாம். இதுவே லாஸ்ட் வார்நிங் என மிரட்டி விட்டு சென்றான் வெற்றி.
அய்யோ என டாக்குமெண்ட் காப்பியை பார்த்த லட்சுமி அம்மாவுக்கு மலை போல இருந்தது. வெற்றி அவரது பக்கம் பார்வையை திருப்பியவன் இன்னும் அரை மணி நேரத்தில் அட்வக்கேட் வருவாரு. எல்லாத்தையும் க்லியர் பண்ணிக்கோங்க. என் கிட்ட வந்து நிக்காதீங்க. அதே போல நீங்க கால விரயம் பண்ணதுக்கு நீங்க தான் பொறுப்பு எடுத்துக்கணும் என சென்று அவனது இடத்தில் அமர்ந்தான் வெற்றி.
அக்கா நான் தப்பிச்சேன் என ராதா கண் காட்ட, வினோத் என உரக்க அழைத்தான் வெற்றி. சார் என அடித்து பிடித்து சென்றான் வினோத்.
இதை ராதா மேடத்து கிட்ட கொடுத்திடுங்க என நீட்டினான்.
வினோத் வெளியே வர, என்ன டா என ராதாவின் முகம் பார்க்க, இது உங்களுக்கு என நீட்டினான்.
அக்கா இனி உங்க கூட பேசவே மாட்டேன் என ராதா நொந்து கொண்டே வேலைக்கு தயாரானார்.
அனைவரும் வெற்றியை மனதில் அர்ச்சித்து கொண்டே லேப் டாப்பில் தட்டும் சத்தம் கேட்டது. உடனே அனைவரையும் கண்காணித்து விட்டு அவனது போனை எடுத்த வெற்றி அவனது போனில் கூகுளில் உன் உதட்டோர செவப்பு என நேற்று மலர்விழி இன்று ராதா மற்றும் லட்சுமி என அனைவரும் கேட்ட பாடலை ஹெட் செட் வைத்து கேட்க ஆரம்பித்தான்.
என்ன டா வெற்றி இப்படி இறங்கிட்டான்?
வருவான்.

Author: Pradhanya
Article Title: அத்தியாயம்-6
Source URL: Pradhanya kuzhali novels-https://pradhanyakuzhalinovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.