Pradhanya

Active member
Staff member
Joined
Oct 6, 2024
Messages
121
வெற்றி பேசி முடித்த சில மணி நேரத்திலேயே அவளின் உறக்கம் சீரானது. அவனும் உறங்க ஆரம்பிக்கும் நேரம் இதோ தலையணை ஒவ்வொன்றும் நகர ஆரம்பித்தது. கண்களை மூடி இருந்தவனுக்கு மெல்ல மெல்ல உதட்டில் சிரிப்பு வந்து ஒட்டிக் கொண்டது.

அவனது இதயம் வேகமாக துடிக்க ஆரம்பிக்க, அவளின் நெருக்கத்துக்கு தவித்து கிடந்தான் வெற்றி மாறன். இந்த உணர்வை சொல்ல வார்த்தைகள் இல்லை. அவள் மொத்தமாக நெருங்கி அவனது மார்பில் தலையை புதைத்து கொண்டு உறங்க ஆரம்பிக்க, இன்னொரு கையில் அவனது போனை எடுத்து பார்த்தான். மணி 10 ஐ தொட்டிருந்தது.

இன்னும் கொஞ்ச நேரம் வெயிட் பண்ணுவோம். என நேரத்தை பார்த்துக் கொண்டிருந்தான். மணி 12 ஐ தாண்ட மலரின் முகத்தை நிமிர்த்தியவன் மெல்ல மெல்ல அவனது விரக தாபத்தையும் வேட்கையையும் காட்ட ஆரம்பித்தான். உணர்வுகள் அவளுக்குள் சங்கமிக்க துடியாய் திடுத்துக்கொண்டிருக்க மொட்டு மலர்ந்த மல்லிகையின் வாடை மன்னவனை மயக்கியது. உதடுகளின் ஒற்றல் ஆரம்பித்ததும் வெற்றியின் கைகள் அவளின் சிறுத்த இடையை தழுவி கொண்டது.

உதட்டில் இருந்து உணர்வுகள் அவளின் கழுத்துக்கு தாவ மெல்ல முத்தமிட்டான் கழுத்து வளைவில், உதட்டில் இத்தனை உணர்வுகளா? உடலெல்லாம் எது எதோ மந்திரமும் தந்திரமும் செய்ய அவளை தனக்கு கீழ் கொண்டு வந்து மொத்த வேட்கையையும் அடக்கி கொள்ளும் வெறி உள்ளுக்குள் தோன்றியது. மலர் விழியின் முகத்தை பார்க்க பார்க்க உள்ளுக்குள் மோகம் வெடித்தது. எனக்கு ஏன் இப்படி தோணுது டெய்லி இதே போல தோணுதே! இவளை பக்கத்துல வச்சிக்கிட்டு சும்மா இருக்க முடியலயே என்றவன் அவளின் நெற்றியில் அழுத்தமாக முத்தமிட்டு விட்டு அங்கும் இங்கும் நடந்தான். தனக்குள் ஏற்படும் உணர்வுகள் அவஸ்தையாக இருந்தாலும் அதை செய் என மனம் பாடாய் படுத்துகிறது.

இதுக்கு சீக்கிரமே ஒரு முடிவு கட்டணும்? என மீண்டும் வந்து படுத்துக் கொண்டவன் அவளுக்கு முதுகு காட்டி ஒரு சில நொடிகள் தான் படுத்திருப்பான். மலரின் கால் அவனை சுற்று போட திரும்பி மீண்டும் முத்த வேட்கையை மொத்தமாக முடித்து விட்டு அவளை அணைத்துக் கொண்டு உறங்கி விட்டான்..

அடுத்த நாள் ஆரவாரத்துடன் விடிந்தது. இன்று முதலில் எழுந்தது மலர்விழி.அய்யயோ என வாயை பொத்திக் கொண்டு வெற்றியை பார்த்தாள். எப்படி இவ்வளவு பக்கத்தில் வந்தேன்? இதை அவர் பார்த்தால் என்ன ஆகிறது? என நினைத்தவள் வேகமாக அவனிடமிருந்து விலகி பாத் ரூம் ஓடினாள்.

அப்போ வெற்றி எனக்கு கனவில் முத்தம் கொடுத்ததை நினைச்சுக்கிட்டு அவர் பக்கத்தில் போயி படுத்துட்டேன் அய்யயோ என தலை தலையாக அடித்துக் கொண்டாள். ஹே மலரு புள்ளை அது கனவு இல்ல நிஜம் தான் டி!! என்பது வெற்றிக்கு மட்டும் தான் தெரியும்.

அய்யோ என இதயம் வேகமாக துடித்தது. வெளியே வந்ததும் அங்கும் இங்கும் நடந்தாள். அந்த நாள் மொத்தமும் அவனது கண்ணில் மலர் படவே இல்லை. என்னாச்சு இவளுக்கு என வெற்றி கண்டு கொள்ள வில்லை அவனும் அதே நிலையில் தான் இருந்தான்.

மலர் நேரமே பள்ளிக்கு கிளம்பினாள். பல்லவி உணவை எடுத்துக் கொண்டு வந்தவர். எல்லாமே பேக் பண்ணிட்டியா மா என சுறத்தே இல்லாத குரலில் கேட்டார்.

ம்ம் தேவையான எல்லாம் எடுத்திக்கிட்டென் அத்தை என மலர் வெளியே வந்தாள். சரி நான் உன்னை பஸ் ஸ்டாப் வரைக்கும் கொண்டு வந்து விடுகிறேன் வா போலாம் என அழைக்க, டெய்லியும் போறது தானே புதுசா என்ன இருக்கு நீங்க வீட்ல இருங்க.. சாயந்திரம் பார்ப்போம் என நகர்ந்தாள்.

என்ன சாயந்திரமா? என பல்லவி கேட்க, ஆமா அத்தை என கண்ணை சிமட்டினாள் மலர்.

அப்போ நீ நீ வாரம் ஒரு தடவை வர மாட்டியா? என பல்லவி கேட்க, இல்ல இனி டீச்சர் வேலையை மட்டும் பார்க்கலாம்னு முடிவு பண்ணிட்டேன் என்றாள் சிரித்துக் கொண்டே ...

"அடியே ராசாத்தி ரொம்ப நல்லது" என நெட்டி முறித்தார் பல்லவி. அவரது மன கணக்கில் அப்போ எல்லாமே கை கூடி வரும் கடவுளே எனக்கு என் மருமகளும் மகனும் சேர்ந்து இருக்கணும் என நினைத்தவர் புன்னகையுடன் உனக்கு என்ன வேணும் சொல்லு நைட்டு நான் செஞ்சு வைக்கிறேன் என கேட்டார்.

மலர் அவரை பார்த்து எனக்கு தினமும் நீங்க கொடுக்குற காபி ரொம்ப பிடிக்கும் த... எனக்காக எங்க அக்கா அம்மாவுக்கு அடுத்து நீங்க தான். எங்க அம்மா பாசம் எனக்கு அதிகமா கிடைச்சது இல்ல. உங்க கூட இருக்கும் போது எனக்கு ஒரு மாதிரி மனசுக்கு நிறைவாக இருக்கு என்றாள்.

பல்லவியின் கண்கள் நீர் கோர்த்துக் கொள்ள அவள் ஆதூரமாக கையை பிடித்து அனுப்பி வைத்தாள்.

எல்லாம் நன்றாக சென்றது. கிட்ட தட்ட ஒரு மாதம் ஓடி விட்டது. கொஞ்சம் கொஞ்சமாக பேசி வெற்றி மற்றும் மலர் இருவரும் சகஜமாக பேசும் நிலைக்கு வந்திருந்தார்கள். ஆனால் இரவில் வெற்றியின் திருட்டு தனம் இன்னும் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. அந்த திருட்டு முத்தத்துக்கு அடிக்ட் ஆகி விட்டான். டிக்னிட்டி வார்த்தைக்கு டிக்ஸ்னரியாக விளங்க கூடியவன்.

அன்றொரு நாள் வேலை விசயமாக வெற்றி பள்ளிக்கு வருவதை இரண்டு மூன்று முறை கவனித்தாள் மலர். ஆனால் பேச வில்லை இருவரும்.. அவள் கவனிப்பதை போலவே ஹேமாவும் அடிக்கடி வெற்றியை பார்த்து கொண்டிருந்தாள்.

அதே நேரம் வெற்றி மூன்று ஆட்களை சலித்து செக் செய்து மூன்று நுழைவு வாயிலிலும் இவர்கள் நிற்பார்கள் என சொல்லி விட்டு அதற்குண்டான பிராசாஸ் முடித்து விட்டு வெளியே வர அவனுக்கு எதிரில் மலர் அவனை பார்த்தவாறே நடக்க அங்கு சம்பந்தமே இல்லாமல் நடுவில் புகுந்தாள் ஹேமா.

வெற்றியின் பார்வை முழுவதும் மலரின் மீது இருக்க ஹேமா மனதில் வெற்றி தன்னை தான் பார்க்கிறான் என நினைத்துக் கொண்டே இதுக்கு மேலே காலம் தள்ள கூடாது என அவனை தடுத்து நிறுத்தினாள் ஹேமா..

"என்னங்க உங்க கிட்ட கொஞ்சம் பேசணும்" என முடியை காதுக்கு ஒதுக்கி கொண்டே ஹேமா வெற்றியிடம் சொல்ல, மலரின் பார்வை மொத்தமாக விரிந்து அவளிடம் இவர் கிட்ட என்ன பேச போற? என கேட்டாள்.

அது கொஞ்சம் பெர்சனல் என மலரிடம் சொன்ன ஹேமா. இன்னிக்கி ஈவ்னிங் உங்களுக்காக வெளியே வெயிட் பண்றேன். பிளீஸ் வாங்க இது ஸ்கூல் டைம் அது தான் பெர்சனல் பேச கூடாது. நீங்க வருவீங்களா? என கேட்டாள் ஹேமா.

எனக்கு வேலை இருக்கு வர முடியாது என அந்த இடத்தை விட்டு நகர்ந்தான் வெற்றி.

இல்லன்னா நான் 24 ஹவர் செக்யூரிட்டி ஏஜென்சி பக்கம் வரவா என கேட்டாள் ஹேமா.

மலருக்கு குழப்பமாக எதுக்கு இவள் அங்கே போறா? இவரை எதுக்கு முதல்ல பார்க்கணும்? என ஆயிரம் கேள்வி மனதை குடைந்தது. சரி வாங்க என சொல்லி விட்டு அந்த இடத்தை விட்டு நகர்ந்து சென்று விட்டான்.

ஹே என்ன பேச்சு அவர் கிட்ட? அதுவும் அந்த செக்யூரிட்டி ஏஜென்சி பக்கம் அவரை எதுக்கு வர சொல்ற என கேட்டாள் மலர்.

ஏன்னா அது அவரோடது அண்ட் இது என்னோட பெர்சனல்.. சோ இது சக்சஸ் ஆனதும் சொல்றேன் என சிரித்துக் கொண்டே ஓடி விட்டாள் ஹேமா.

மலர் நீ ஒரு தத்தி முண்டம் இதை கூட தெரிஞ்சு வச்சுக்காம இருக்க? அய்யோ இது தெரியாம நான் இத்தனை நாளாக வாய பிளந்து பார்த்திட்டு இருந்திருக்கேன். நம்ம ஸ்கூல்க்கு செக்யூரிட்டி விசயமா பேச வந்தாரா இந்த மனுசன் அதுவும் இத்தனை நாளும்? எனக்கு இது தெரியாம போச்சே! என நினைத்தவள் இந்த ஹேமா எதுக்கு அவரை பார்க்க போறா! என யோசித்து கொண்டே சென்றாள் காலையில் இருந்து மலருக்கு ஒரு வேலை கூட ஓட வில்லை.

மாலையும் ஆனது ஹேமா உற்சாகத்துடன் கிளம்பி விட்டாள். மலருக்கு தான் உள்ளுக்குள் பிரளயம் வெடித்தது. என்னவா இருக்கும்? என வீட்டுக்கு செல்ல நினைத்தவள் மனம் கேட்காமல் செக்யூரிட்டி ஆபிஸ் சென்றாள். ஹேமா ஆர்வத்துடன் வெற்றியிடம் எதோ பேசி கொண்டிருப்பது தெரிந்தது. வெற்றி சுறத்தே இல்லாமல் பதில் கொடுத்தவன் இறுதியில் தீவிரமாக பேச ஆரம்பித்தான்.

அவன் பேசுவதை கேட்க கேட்க ஹேமாவின் முகம் நொடி பொழுதில் மாறி போனது. அவனை பெரு மூச்சுடன் பார்த்தவள் அவ்விடத்தை விட்டு நகர்ந்தாள். அவள் சென்றதும் ஆவேசமாக வெற்றியை நோக்கி வந்தாள் மலர்.

ஹலோ உங்களை தான் என அழைத்தாள் மலர்.

நீ இங்கே என்ன பண்ற?

அவள் உங்க கிட்ட என்ன பேசினாள்?

"ஒன்னும் இல்ல சும்மா"

அது தான் என்ன பேசினாள்? என மலர் கோபத்துடன் கேட்க,

என்னை கல்யாணம் பண்ணிக்க விருப்பமாம் அதை வந்து சொன்னா! என்றான் வெற்றி.

மலர் அவனை விழி விரித்து கோபத்துடன் பார்த்தாள்.

"நான் எனக்கு கல்யாணம் ஆவிடுச்சுன்னு சொல்லிட்டேன்" என்றான் வெற்றி.

மலர் அவனை முறைத்து பார்த்தாள்.

நான் என்ன பண்ணேண்ணு என்னை இப்படி பார்க்கிற? அவள் யாருன்னு எனக்கு தெரியாது என வெற்றி அவளின் முகத்தை பார்த்துக் கொண்டே கூறினான்.

ஒன்னும் இல்ல என முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு அந்த இடத்தை விட்டு நடக்க ஆரம்பித்தாள்.

அடுத்த ஒரு சில நொடிகளில் வண்டியுடன் அவளின் அருகில் வந்து நின்றான் வெற்றி. அவள் நகர்ந்து செல்ல, மலர் உனக்கு காது கேட்களையா? கண்ணு தெரியலயா? என அவன் வண்டியை முறுக்க.. அவனை திரும்பி முறைத்து பார்த்தவள் நடந்து சென்றாள்.

ஹே நில்லு மலர் டிசிப்லின் இருக்கா உனக்கு நீ பாட்டுக்கு போற? என வெற்றி அவளின் அருகில் வண்டியை வளைத்து நிறுத்திவிட்டு கையை பிடித்தான்.

உனக்கு என்னாச்சு?

எனக்கு என்ன? ஒன்னும் இல்ல

ஹே சொல்லு!

என்ன சொல்லணும் கைய விடுங்க என வெடுக்கென உதற முயற்சி செய்தாள்.

"ஹே டென்ஷன் பண்ணாத"

அவள் எதுக்கு உங்களை வந்து கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொல்றா? என மலர் கேட்க..

எனக்கு எப்படி தெரியும்? என வெற்றி பார்த்தான்.

இல்ல நீங்க தான் இதுக்கு காரணம் அந்த பொண்ணோட மனசுல சபல எண்ணங்களை உண்டாக்கி இருக்கீங்க என வெடுக்கென கூறினாள்.

வெற்றி அவளை ஆழ்ந்து பார்த்தவன். உன்னோட மனசுல என் மீதான ஈர்ப்பை உருவாக்க முடியாத நான் எப்படி அவள் மனசுல அப்படி ஒரு எண்ணத்தை உருவாக்க முடியும்? என்று கூறி விட்டான்.

என்ன? என்ன சொல்றீங்க? என இதயம் வேகமாக துடித்தது.

எதுவும் சொல்ல வேணாம் வா வீட்டுக்கு போலாம். என அவன் விடாப்பிடியாக நிற்க, வேறு வழி இல்லாமல் வண்டியில் ஏறி கொண்டாள்.

வீடு வந்ததும் அவளை இறக்கி விட்டான். அவள் வேகமாக உள்ளே செல்ல வெற்றியும் அவளை பின் தொடர்ந்து சென்றான்.

மலர் என கரகரத்த குரலில் அ
ழைத்தான். அவள் வேகமாக பூட்டை திறந்து கொண்டு உள்ளே சென்றவள் கதவை அடைத்துக் கொண்டாள்.

வெற்றி...?
வருவான்
 

Author: Pradhanya
Article Title: அத்தியாயம்-9
Source URL: Pradhanya kuzhali novels-https://pradhanyakuzhalinovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top