இந்த கல்யாணத்துக்கு என்னால் சம்மதிக்க முடியாது நானும் அவளும் ஒரே வயசு தானே அப்படி பார்த்தால் அரை மணி நேரம் தான் அவளுக்கும் எனக்கும் வித்தியாசம். அதனால் அவளை முதலில் கட்டிக்க சொல்லுங்க..” என்று கோபத்துடன் இமையாள் திருமணத்துக்கு தயாராகமல் ஓரிடத்தில் அமர்ந்தாள்.
மாதவி அங்கும் இங்கும் பதட்டத்துடன் நடந்து கொண்டே “இப்படி கடைசி நிமிசத்தில் எதுக்கு டி மாத்தி பேசுற! படிக்க போகும் போது கல்யாணத்துக்கு ஓகே தானே சொல்லிட்டு போன? ஆனால் திரும்பி வந்ததும் இப்படி மாற்றி பேசுற! மாப்பிள்ளை வீட்டில் இதுக்கு எப்படி ஒத்து கொள்வார்கள்? அதை விட உமையாள் இதுக்கு சம்மதம் சொல்லவே மாட்டாள்”
“அக்கா ரெடியா?” என்று தாவணி பாவாடையில் அழகு ஓவியமாக உமையாள் வந்து நின்றாள். மாதவி சோகமாக நின்று கொண்டு இருக்க..
தன் அம்மாவின் அருகில் சென்ற உமையாள் “என்ன மா!” என்று கேட்க .. அவர்கள் சொன்ன விசயத்தை கேட்டதும் கொஞ்சம் அதிர்ச்சியுடன் தன் அக்காவை பார்த்தாள்.
“அட இன்னும் என்ன பண்றீங்க? சீக்கிரம் வாங்க அங்கே நிச்சய புடவை வாங்க பொண்ணை வர சொல்றாங்க! காலையில் கல்யாணம் இன்னும் என்ன சாலாக்கு!”என்று கேட்டு கொண்டே சந்திரன் வந்தார்.
மாதவி கண்கள் கலங்கி அமர்ந்து இருக்க.. ஆனால் இமையாள் எந்த சலனமும் இல்லாமல் கால் மேல் கால் போட்டு கொண்டே போனை நோண்டி கொண்டு இருந்தாள்.
“இமையா என்ன பண்ற? உமையாள் சீக்கிரம் அக்காவை கூட்டி வா!. என்று சந்திரன் சொல்ல
“அப்பா அக்காவுக்கு இந்த கல்யாணத்தில் சம்மதம் இல்லையாம்!” என்று உமையாள் கூறினாள்.
சந்திரன் கோபத்துடன் அருகில் வந்து இப்போ கிளம்பி வந்து புடவையை வாங்குற இல்ல நடப்பதே வேற! மாதவி அப்போவே தலை பாடா அடித்து கொண்டேன். இப்போ இவளை படிக்க அனுப்பி என் மானத்தை வாங்க வந்து விட்டாள். என்ன பண்ணுவியோ ஏது பண்ணுவியோ இப்போ உடனே அவள் வந்தாகனும்! என்று சென்று விட்டார்.
இமையாள் எழுந்து கொண்டு என்னால் ஒத்துக்க முடியாது. அதையும் மீறி எதுவும் செய்தால் நான் மணமேடையில் ஏறி அந்த மாப்பிள்ளையை வேண்டாம் என சொல்வேன். என்று அவர்களை பார்த்தாள்.
உமையாள் ஒரு ஓரமாக நின்று கொண்டு இருக்க மாதவி தன் பெண்ணின் அருகில் சென்றார். உமையா! மணமேடை வரைக்கும் வந்த கல்யாணத்தை நிறுத்தினால் நம்ம குடும்ப மானம் போயிடும் அதை விட மாப்பிள்ளை வீட்டுகாரங்க சாபம் நம்மை சும்மா விடாது. நீ கட்டிக்க தங்கம் சிவா மாப்பிள்ளை ரொம்ப நல்ல பையன்!
உமையாள் அதிர்ச்சி ஆகி என்ன மா! என்று தன் அம்மாவை தனியாக அழைத்து வந்தவள். மா உனக்கு தெரியாதா! நான்! என்னோட மனசுல ஏற்கனவே அபினந்தன் இருக்காரே உங்களுக்கு தெரியும் தானே! அவருக்காக தானே காத்திருக்கேன். நீ தானே எங்க கல்யாணத்தை நடத்தி வைக்கிறேன்னு சொன்ன இப்போ என்ன மா இப்படி பேசுற! மனசுல ஒருத்தரை வச்சுகிட்டு நான் எப்படி சிவா மாமாவை கட்டிக்க முடியும்! பிளீஸ் மா! என்னால் முடியாது.
மாதவி தன் பெண்ணின் கையை பிடித்து கொண்டு பிளீஸ் டா தங்கம் நான் என்ன பண்ணுவேன்! வேற வழி தெரியல.. சிவா தான் உன்னோட அண்ணன் உயிரை காப்பாற்றி உன் அப்பாவுக்கு வேலையும் வாங்கி கொடுத்து அந்த கடங்காரியை படிக்க அனுப்பி இருக்கான், இப்போ நம்மலே வழிய போய் தானே உன்னோட அக்காவுக்கு மாப்பிள்ளை கேட்டோம்! நாளைக்கு கட்டி வச்சதுக்கு அப்புறம் பிரச்னை வந்து அவரோட வாழ்க்கை வீணாகி போனால் அந்த பாவம் நம்மல சும்மா விடாது டா! என்று அழுது கொண்டே கூறினார்.
உமையாள் கலங்கி கொண்டே மா முடியாது மா! என்னோட அபி நாளைக்கு வந்தால் நான் என்ன பதில் சொல்வேன்! என்று அப்படியே அமர்ந்து அழ ஆரம்பித்தாள்.
மாதவி கண்ணை துடைத்து கொண்டே சரி இதுல உனக்கு என்ன சம்ந்தம்! இந்த கல்யாணத்தை எதாவது ஒரு விதத்தில் நிருத்தனும். அதுக்கு காரணமா நானாகவே இருந்திட்டு போறேன். என்று வெளியே சென்றார்.
இமையாள் அங்கு நடப்பதை வேடிக்கை பார்த்து கொண்டே அமர்ந்து இருந்தாள். உமையாள் வேகமாக அங்கிருந்து பாத் ரூம் சென்று அழ தொடங்கினாள். கண்ணம் எல்லாம் சிவந்து வீங்கி போனது. அவள் கண்ணை மூடியதும் மாதவி சொன்னது நினைவுக்கு வர வேகமாக அவரை தேடி சென்றார்.
அங்கே மாதவி செய்யும் காரியத்தை பார்த்து உமையாள் அவருடைய காலை கட்டி கொண்டு மா என்ன மா பண்ற? எதுக்கு மா சுருக்கு போட போறீங்க? என்று நடுங்கி கொண்டே பார்த்தாள்.
மாதவி ஜடத்தை போல எனக்கு உன்னோட வாழ்க்கை முக்கியம் பொண்ணு! தரணிய உன் அப்பாவை ரெண்டு பேரையும் நல்லா பார்த்துக்க என்று சொல்லி கொண்டே அவர் புடவையை கழுத்தை சுற்றி போட்டு கொள்ள...
உமையாள் துக்கம் தொண்டையை அடைக்க எனக்கு சம்மதம்! எனக்கு இந்த கல்யாணத்துக்கு சம்மதம் என்று தேம்பி கொண்டே கூறினாள். அடுத்த நாள் காலை அங்கு கூடி இருக்கும் அனைத்து உறவுகளும் ஒருவருக்கு ஒருவர் மண மேடையை பார்த்து பேசி கொள்ள.. அருகில் இருப்பவளை பார்க்க பார்க்க பற்றி கொண்டு வந்தது.
சந்திரன் மற்றும் தரணி இருவரும் என்ன செய்வது என்று தெரியாமல் கொஞ்சம் தர்ம சங்கடத்துடன் நின்று கொண்டு இருக்க..
தன் வீட்டு மரியாதையை காப்பாற்றிய மகளின் வாழ்க்கை நல்ல படியாக அமைய வேண்டும் என்று கடவுளிடம் வேண்டி கொண்டு நின்றார்.
உமையாள் ஒரு ஜடம் போல சிவாவின் அருகில் அமர்ந்து இருந்தாள். அய்யர் மந்திரங்கள் ஓதி மாங்கல்யத்தை பூட்டுங்கோ கெட்டி மேளம் கெட்டி மேளம் என்று கூறிட... சிவா தாலியை அவளின் கழுத்தில் கட்டி கொண்டே என்னை பிளான் பண்ணி கட்டிக்கிட்ட உனக்கு இனி நரகம் அப்படின்னா என்னன்னு காட்ட போறேன் என்று சொல்லி கொண்டே நேராக அமர்ந்தான்.
எதிர்பாரா திருமணத்தில் இணைந்த சிவா - உமையாள் வாழ்க்கை பயணத்தை இந்த கதையில் காண்போம்!