Pradhanya

Active member
Staff member
Joined
Oct 6, 2024
Messages
120
அந்த மல்லிகை பூக்களால் அலங்கரிக்கப்பட்ட அறையை பார்த்த சிவாவுக்கு பத்தி கொண்டு வந்தது. இத்தனை நாட்களும் இமையாள் தான் தன் மனைவியாக வருவாள் என்று நினைத்தவனுக்கு இன்று உமையாள்! பெயரில் இருவருக்கும் ஒரு எழுத்து தான் வித்தியாசம்.

என்ன செய்ய? என்ன செய்ய? எவ்வளவு தைரியம் இருக்கும்? என் பக்கத்தில் வந்து உட்கார்ந்து தாலி கட்டிக்கிறா? இவளை சும்மாவே விட கூடாது. இனி இந்த சிவா யாருன்னு காட்ட போறேன். என நினைத்து கொண்டே விடிய விடிய முழித்து இருந்தான். எப்பொழுது தூங்கினான் என அவனுக்கே தெரிய வில்லை. அடுத்த நாள் பரபரப்புடன் விடிந்தது.

மறு வீடு அழைக்க சந்திரன் மற்றும் மாதவி இருவரும் வந்திருக்க.. மூர்த்தி மற்றும் சித்ரா இருவரும் பேச வரும் நேரம்.. சிவா அவனுடைய அறையில் இருந்து டிப் டாப்பாக வெளியே வந்தவன். இன்னும் என்ன பேச வேண்டி இருக்கு! சொல்லுங்க! என கேட்டான்.

மாதவி தயங்கி கொண்டே மாப்ளை இதுல உமையாள் என சொல்ல வர..

என்னை மன்னிச்சிடுங் மாப்ளை! பொண்ணு ஆசை பட்டாள் அதனால் தான்! என மூர்த்தி சமாதானம் செய்ய முன் வர..

உங்களுக்கு இது விளையாடுற விசயமா இருக்கலாம். ஆனால் எனக்கு அப்படி இல்ல..

மூர்த்தி, சிவா போதும் விடு!..

ப்பா! நீங்க கம்முன்னு இருங்க! என சொன்ன சிவா, சரி அது எப்டியோ போகட்டும். நான் கிளம்புறேன் மா என அவனுடைய பேக் எடுத்து கொண்டு வர..

மூர்த்தி, என்ன டா சிவா!

மாதவி, மாப்ளை உங்களை மறுவீடு அழைக்க வந்திருக்கோம்!

சித்ரா இதை கேட்டு விரக்தி புன்னகை சிந்தி இருக்கிற கொஞ்ச மானத்தையும் எங்களால் கப்பல் ஏத்த முடியாது.

சந்திரன் தயக்கத்துடன் அக்கா! என அழைக்க..

போதும் சந்திரா! ஏற்கனவே பண்ணது மனசு குளிர்ந்து போச்சு! என சொல்லி விட்டு சித்ரா எதுவும் பேசாமல் தன் கணவனை முறைத்தார்.

மூர்த்தி எதையும் கண்டு கொள்ளாமல் சிவா உன் பொண்டாட்டியையும் கூட்டிட்டு போற தான!

மாதவி, சந்திரன், சித்ரா என அனைவர் பார்வையும் உமையாள் மீது விழ..

சிவா, ஆமா மா! அவளும் தான்! இந்த கல்யாணம் எனக்கு விளையாட்டு இல்ல.. என உள்ளுக்குள் எல்லாம் உங்களுக்காக தான்! இவளை பார்க்க பார்க்க பத்திக்கிட்டு வருது! ச்ச எல்லாம் என் நேரம் அவளை திட்டி கொண்டே வெளியில் பணிவுடன் கூறினான்.

மூர்த்தி தன் மகனை பற்றி தெரியாதவரா என்ன? ஆனாலும் வெளி காட்டி கொள்ளாமல் சரி கிளம்பு பா! பத்ரம் என சொல்லி விட்டு எழுந்தார்.

சிவா தன் அத்தையை அழைக்க அவருடன் முகம் எல்லாம் அழுது சிவந்து பார்ப்பதற்கே மிகவும் பாவமாக வந்து நின்றாள் உமையாள்.

மாதவிக்கு தன் பெண்ணை பார்த்ததும் சப்த நாடியும் ஆட்டம் கண்டது. அவர் அழுகையை அடக்கி கொண்டே உமையாள்! தங்கம்! என தன் பெண்ணிடம் செல்ல சித்ரா மற்றும் சிவா இருவரும் அவர்களை முறைத்து தள்ளினார்கள்.

மூர்த்தி, நல்ல வேலை நீங்க வந்ததும் நல்லதா போச்சு! சரி ரெண்டு பேரையும் வழி அனுப்பி வச்சிடுங்க..

மாதவி, அண்ணா ஒரு தடவை ரெண்டு பேரும் வீட்டுக்கு வந்தால் நல்லாருக்கும்.

வேணாம்! எனக்கு லேட் ஆகிது! அப்படி கூட்டிட்டு போறதா இருந்தால் உங்க பொண்ணு மட்டும் வரட்டுமே! என்ன நான் சொல்றது? என சிவா சொல்ல இதை கேட்டதும் சந்திரன் வேணாம் வேணாம் மாப்ளை! நீங்க அவளை கூட்டி போங்க! இன்னொரு நாள் நாங்க சீரோட வீட்டுக்கு வரோம்!

அய்யோ நீங்க பண்ணதே பெரிய சீர் இதுக்கு மேல வேணுமா மா! என சித்ரா பக்கம் திரும்பி சிவா கேட்க.

சித்ரா, விடு டா கண்ணா! எப்டி இன்னிக்கே கிளம்பி போற? .

எனக்கு இனி நிறைய வேலை இருக்கு! நான் போறேன் மா!

மூர்த்தி, சிவா!

பா போயிட்டு வரோம்! என சொல்லி விட்டு அவன் உமையாள ஒரு பார்வை பார்க்க...

மாதவி, என்னை மன்னிச்சிடு! மாப்ளை உன்னை பார்க்கிறார். எதுவா இருந்தாலும் போன் பண்ணு டி!

சரி மா! என அவள் அழுது கொண்டே சிவா பின்னால் வர..

சிவா, உன் அப்பா வாங்கி கொடுத்த போனை அவர் கிட்டயே கொடுத்திட்டு வா!

உமையாள் ஒரு வித பதட்டத்துடன் அவனை பார்க்க ..

சொன்னது புரியலயா!

மூர்த்தி, சிவா உன் கிட்ட கொஞ்சம் பேசணும் கொஞ்சம் வர முடியுமா!

சிவா, சொல்லுங்க கேட்கிறேன்.

கொஞ்சம் உள்ளே வாடா! என வேகமாக சென்றார். சிவா அவரின் பின்னால் சென்றான். இருவரும் ஒரு சில நிமிடம் கழித்து வெளியே வந்தார்கள்.

சித்ரா தன் கணவரை ஏகத்துக்கும் முறைத்து தள்ள..

அதை அவர் கண்டு கொள்ள வில்லை. சிவா நேராக உமையாள் அருகில் சென்று வா அம்மா அப்பா கிட்ட ஆசிர்வாதம் வாங்கணும் என மூர்த்தி மற்றும் சித்ரா ஒருவரிடமும் ஆசிர்வாதம் வாங்கி அதே போல சந்திரன், மாதவியிடம் வாங்கினார்கள்.

அதன் பின் நேராக சிவா முன்னால் செல்ல.. மாதவி, உன் மாமனார், மாமியார் கிட்ட சொல்லிட்டு போடா பொண்ணு! என சொல்ல

உமையாள் நேராக மூர்த்தி கிட்ட சொல்ல. மூர்த்தி, அவனை கொஞ்சம் பொறுத்துக்க மா! அவன் வைரம் மாதிரி!
சரிங்க மாமா! என தலை ஆட்டினாள்.

உமையாள் சித்ராவின் அருகில் வர உடனே சித்ரா வேகமாக உள்ளே சென்று விட்டார்.

மாதவிக்கு மிகவும் வருத்தமாக போக.. வெளியில் காட்டி கொள்ள வில்லை. மூர்த்தி, சரி நீ போ மா அவன் வெளியே வெயிட் பண்றான்! என சொல்ல..

உமையாள் அங்கு இருக்கும் அனைத்து பைகளையும் சிரம பட்டு எடுத்துகொண்டு காருக்கு சென்றாள். .

ம்ம் சீக்கிரம்! என சிவா அதட்ட..
உமையாள் பயந்து கொண்டே அனைத்தையும் உள்ளே வைத்தாள். அதன் பின் தன் அம்மாவை திரும்பி பார்த்து கொண்டே காரில் ஏற..

மகா ராணி வாங்க வாங்க! இன்னும் மெதுவா வாங்க! ஹே சீக்கிரம் ஏறு டி என அவன் அதட்ட..

உமையாள் கண்கள் கலங்க டாட்டா சொல்லி கொண்டே ஏற கார் கிளம்பியது.

மாதவி நெஞ்சம் பதைக்க சாமி என் பொண்ணு அவளை நீ தான் பக்கத்தில் துணை இருந்து காக்கணும் என நினைத்தாள்.

ஆறு மணி நேர பயணத்துக்கு பின் சென்னை வந்து சேர்ந்தார்கள். அவர்கள் இருக்கும் அப்பார்ட்மென்ட் சொசைட்டி யை ஒரு ரவுண்ட் அடித்து விட்டு வந்து அவனுடைய பார்க்கிங்ல வந்து நிறுத்தினான்.

உமையாள் தூங்கி கொண்டிருந்தாள். மகா ராணி! வந்தாச்சு! என சத்தம் வர வெடுக்கென முளித்தாள்.

சிவா, C3 706 வந்திடு என சொல்லி விட்டு அவளை அதே இடத்தில் விட்டு வேகவேகமாக சென்று விட்டான். உமையாள் ஒரு பெரு மூச்சை விட்டு அனைத்து பைகளையும் எடுத்து கொண்டு குட்டி வாத்து போல தத்தி தத்தி நடந்து மூச்சு வாங்க சென்றாள்.

அங்கே வீட்டுக்கு சென்றதும் காலிங் பெல் அடிக்க கிட்ட தட்ட அரை மணி நேரம் அவன் திறக்கவே இல்லை. உமையாள் களைப்புடன் திரும்ப திரும்ப அடிக்க..

ஹே அறிவு கெட்டவளே என கோபத்துடன் கதவை திறந்தான். இல் இல்லங்க அத் அது வந்து! என தயங்கி கொண்டே அவள் பேச அதற்குள் உள்ளே சென்று விட்டான்.

உமையாள் அனைத்து பைகளையும் எடுத்து கொண்டு உள்ளே வந்தவள். அந்த பையில் இருக்கும் அனைத்தையும் எடுத்து தனித்தனியாக எடுத்து வைத்து செட்டிள் செய்தாள்.

சிவா குளித்து முடித்து வெளியே வந்தவன். ஹேய்!

அவள் வெடுக்கென திரும்ப..

சமைக்க தெரியுமா?

உமையாள் அப்படியே பார்க்க..

ஹே வாயை திறந்து சொல்லு எனக்கு இப்படி இருக்கிறது எல்லாம் சுத்தமா பிடிக்காது.

ஹான் த் தெரியும்!

சிவா, சரி இந்தா காசு கடைக்கு போய் மட்டன், சிக்கன், மீனு எல்லாம் வாங்கிட்டு வந்து மட்டனை கொழம்பு வச்சு கறி அறிச்சு வருத்துடு, சிக்கனை செமீ கிரேவி பண்ணு, மீனை பொறுச்சிடு!. நான் முக்கியமா வெளியே போகனும். வீட்டுக்கு வந்ததும் இது எல்லாம் ரெடியா இருக்கணும்! என கிளம்பி விட்டான்.

ஒருவேளை உமையாள் அவன் கிட்ட தெரியாதுன்னு சொல்லி இருக்கலாம். ஆனால் அதுக்கும் தலைவன் பிளான் வச்ச்சிருப்பான்.

உமையாள் ஒரு பெரு மூச்சை விட்டு குளித்து முடித்து நடந்தே ரொம்ப தூரம் சென்றவள். அவன் சொன்ன அனைத்தையும் வாங்கி கொண்டு கால் வலிக்க நடந்து வந்தாள். காய்கறி என அனைத்தையும் வாங்கி வந்து சமையல் அறையை சுத்தம் செய்து சமைக்க மாலை ஆறு ஆகி விட்டது. வேக வேகமாக சமைக்கும் போது அவள் நினைவு அப்படியே கொஞ்சம் சிந்தையில் மூழ்கியது.

(நினைவில்)

அபி, யாழினி( உமையாள்) வீக் என்ட் மட்டும் என்னோட சமையல் உனக்கு ஓகேவா!

ஏன் வீக் எண்ட் மட்டும்? என உமையாள் கேட்க..
அபி புன்னகையுடன் அந்த ரெண்டு நாள் உனக்கு ரெஸ்ட் மட்டும் தான்! சோ என் யாழினி பேபிய நான் அப்படி பார்த்துப்பென்.

யாழினி, அப்போ டெய்லி இல்லையா நந்து!.

அபிநந்தன், டெய்லி உனக்கு கிச்சன் ல என்னால் முடிஞ்ச சின்ன சின்ன வேலை செஞ்சு கொடுப்பேன்.

என்ன வேலை?

மம்ம் யாழினி கன்னத்தில் முத்தம், இடுப்பை கட்டிக்கிட்டு பின் கழுத்தில் ஒரு முத்தம் என அபி சொல்ல..

யாழினி, இது ஹெல்பா ப்ராடு!

தர கூடாதா! அப்போ உன்னை பெட் ரூம் தூக்கிட்டு போயி! என சொல்ல வர..

இங்கே நனவில் கதவு காலின் பெல் ஓயாமல் அடித்தது.

உமையாள் கண்ணீரை துடைத்து கொண்டே கை கழுவி விட்டு சாதம் விசில் வந்தால் போதும் என கதவை திறக்க..

அங்கே சிவா சுதியுடன் நின்று இருந்தான்.

உமையாள், வாங்க எல்லாமே சமைச்சிட்டென். என அவள் உள்ளே செல்ல..

சிவா, கொஞ்சம் நிதானத்துடன் உள்ளே வந்து கதவை சாத்தி விட்டு நேராக படுக்கைக்கு சென்றான்.

ஹே இங்கே வாடி? என சத்தம் கேட்க ..

உமையாள் அவன் இருக்கும் திசை பக்கம் சென்றாள்.
 
Top