Pradhanya

Well-known member
Staff member
Joined
Oct 6, 2024
Messages
410
சீதா பதட்டத்துடன் அவனது முகத்தை பார்த்தாள். அவள் கேட்க வேண்டிய கேள்வியை அவன் கேட்டான்.

உனக்கு என்னாச்சு? எதுக்கு இன்னிக்கி காலேஜ்க்கு போகலன்னு சொன்னியாம் உடம்புக்கு எதுவும் பிரச்சனையா? காய்ச்சலா? என்ன பண்ணுது? என ஆயிரம் கேள்விகளை கேட்டான் ரகு.

எனக்கா எனக்கு எந்த பிரச்னையும் இல்ல! உங்களுக்கு என்னாச்சு? கண்ணெல்லாம் சிவந்து வீங்கி கிடக்குது? உங்களுக்கு உடம்புக்கு முடியலயா? என அவன் முகத்தை பார்த்தாள் சீதா.

ரகுவரன் சட்டென திரும்பி கொண்டான் வேறு புறம்.

உங்களை தான் கேட்டுட்டு இருக்கேன். என்னாச்சு? தண்ணி குடிங்க உட்காருங்க டாக்டர் கிட்ட போலாமா? என சீதாவின் கண்கள் பதட்டம் நன்றாகவே தெரிந்தது.

இருக்காதா பின்ன? ரகுவரன் அப்படி ஒரு நிலையில் தான் இருக்கிறான். கிட்ட தட்ட அவளை விட்டு பிரிந்து சென்ற இந்த ஒரு வாரத்தில் இருந்து சரியாக தூங்க வில்லை. தூக்கம் வரவில்லை. அத்தனை கவலை. தன்னை சீதாவுக்கு பிடிக்கவில்லை என்பது தெரியும். ஆனால் இந்த அளவுக்கு மோசமாகவும் தனக்கு பிடித்த பெண் கேவலமாகவும் சித்தரிக்க படும் போது எப்படி தூக்கம் வரும். இத்தனை வருடங்கள் கழித்து அவனுக்கு கிடைத்த பொக்கிஷம் அவள். அப்படி இருக்கையில்.. அவள் தன்னை ஒதுக்கும் போது?..

ரகுவரன் நெற்றியை தேய்த்து கொண்டு "எனக்கு ஒன்னுமில்லை. சரி நீ சாப்ட்டியா? உனக்கு ஒண்ணுமில்ல தானே!" என முதுகை காட்டி கொண்டு பேசினான்.

எனக்கு ஒன்னுமில்லை. நான் நல்லாருக்கேன். அசந்து தூங்கிட்டேன் அதான் காலேஜ் போகல மத்த படிக்கு எதுவும் இல்ல என்றாள் சீதா.

அப்ப சரி என அவன் நகர..

"என்னங்க!! இந்த பக்கம் பாருங்க? எதுக்கு அந்த பக்கம் திரும்பி நிக்கிறீங்க!" என அவன் பக்கம் முன்னால் வந்து நின்றாள்.

ஒன் ஒன்னுமில்லை சீதா! நீ ரெஸ்ட் எடு என அவ்விடத்தில் இருந்து அவளை தாண்டி செல்ல போனவனை கைகள் பிடித்து நிறுத்தினாள்.

என்ன பண்ற நீ? போய் ரெஸ்ட் எடு. எனக்கு வேலை இருக்கு சீதா! என முகத்தை வேறு புறம் திருப்பி கொண்டு கூறினான்.

அவனது பாரா முகம் மனதை பிசைய.. ஒரு வாரமா வேலையா? என்னை பார்க்க தோணலயா? என சீதா கேட்க..

சட்டென ஒரு பார்வை பார்த்தான். அவளின் பார்வை தாழ்ந்து கொண்டது. விடு எனக்கு வேலை இருக்கு என கைகளை உதறி கொள்ளாமல் நின்றான்.

நான் வந்து எதோ கோபத்தில் சொல்லிட்டேன். அதுக்காக வீட்டுக்கே வராமல் இருப்பீங்களா? எனக்கு இங்கே யாரை தெரியும்? உங்களை மட்டும் தானே தெரியும். எனக்கு பேசி பழக கூட ஆள் இல்லை.

உனக்.. என எதோ சொல்ல வந்தவன். அமைதியாகி விட்டான்.

என்ன சொல்லுங்க?

உனக்கு தான் என்னை பிடிக்கலயே அப்புறம் பேச என்ன இருக்கு? நான் பக்கத்தில் வந்தாலும் உனக்கு பிடிக்காது. உன்னை வற்புறுத்தி கல்யாணம் பண்ணிக்கிட்டேன்னு தான் நீ நினைக்கிற! என்னோட அப்பா யாருக்கோ 1 கோடிய தூக்கி கொடுக்க ஒத்துக்க நாட்டார். அதனாலே தான் உன்னை கல்யாணம் பண்ணேன்.

அதுக்காக மட்டும் தானா? என சீதா அவனது முகத்தை பார்க்க..

"என்னோட பதில் உனக்கு பிடிக்காது. இப்போ தெரியுது. நீ எப்டி இருக்க? நான் எப்டி இருக்கேன்? உனக்கும் எனக்கும் ஏணி வச்சா கூட எட்டாது." என்றவன் மெல்ல அவள் பக்கம் பார்த்தான்.

சீதாவின் கண்களில் தாரை தாரையாக கண்ணீர்.. "ப்ச் இப்போ எதுக்கு அழுதிட்டு இருக்க நீ? என்ன பண்ணாங்க உன்னை?"

"நான் எதோ கோபத்தில் பேசிட்டேன். எனக்கும் கொஞ்சம் கேப் வேணும் தான! உங்களை பத்தி நினைக்க.. எனக்கு கொஞ்சம் டைம் கொடுத்தீங்களா? பிளீஸ் டக்குன்னு என்னோட வாழ்க்கை மாறி போச்சு. எல்லாமே புதுசா இருக்கு நீங்க சொல்லி தான் நான் கல்யாணம் பண்ணேன். என்னோட சம்மதம் கேட்டு தான் என்னை நீங்க கல்யாணம் பண்ணீங்க அதனால நான் தான் கொஞ்சம் சின்ன பிள்ளை தனமா நடந்துக்கிட்டென்."

இதுக்கு அர்த்தம் என்ன? என ரகுவரன் அவளை பார்த்து கேட்க..

தெரியாத மாதிரி நடிக்காதீங்க! நான் நைட்டு முழுக்க தூங்கவே இல்லை என சீதா கூற..

ரகுவரன் அவளை இமை வெட்டாமல் பார்த்தான். அவன் ஒரு வாரம் தூங்க வில்லையே!!

பிளீஸ் சாரி என சீதா கூற..

சரி தூங்கு!! என ரகுவரன் நகர.. "எங்கே போறீங்க?"

"எனக்கு வேலை இருக்கு!"

போங்க என கைகளை இறுக்கி மடக்கி கொண்டு படுக்கையில் அமர்ந்தாள்.

ஒரு சில நிமிடம் கழித்து அவன் நடந்து வரும் அரவம் கேட்டது. மெல்ல நிமிர்ந்து பார்த்தாள்.

நீ இன்னும் சாப்பிடல போல வா சாப்பிடலாம் என அழைத்தான்.

சீதா அவனை பார்த்ததும் தேம்பி அழுதாள்.

இப்போ என்ன சொன்னேன்? சாப்பிட தானே சொன்னேன்! அதுக்கு எதுக்கு அழுகிற? என ரகுவரன் கேட்டான்.

முகத்தை துடைத்து கொண்டு வந்தாள். அவனே பரிமாறினான்.

சாப்பிட்டு கொண்டே கேட்டாள். இப்போ உங்களுக்கு வேலையா?

ஆமா!!

நைட்டு வீட்டுக்கு வருவீங்களா இல்ல மாட்டீங்களா?

உனக்கு நான் வரணுமா? வேணாமா? என ரகுவரன் அவளை பார்க்க..

சாப்பாட்டில் இருந்து சட்டென எழுந்து கொண்டவள் வேகமாக கை கழுவி விட்டு படுக்கையில் விழுந்தாள்.

"சீதா என்ன பண்ற நீ? வந்து சாப்பிடு!!"

சீதா அவனை கண்களில் நீர் கோர்க்க பார்த்தவள். "இதுக்கு நீங்க என் கிட்ட பேசாமலே இருந்திருக்கலாம்."

ரகுவரன் உதட்டில் புன்னகை பரவ, சரி வந்து சாப்பிடு அப்புறம் பேசிக்கலாம்.

"எனக்கு வேணாம்ன்னு சொல்லிட்டேன் பிளீஸ் போங்க!"

"அப்போ போகவா?"

ம்ம் என் கிட்ட எதுக்கு சொல்லிகிட்டு நீங்க தானே எனக்கு வாழ்க்கை பிச்சை போட்டிருக்கீங்க! எனக்கு ரொம்ப அவமானமா இருக்கு வேதனையா இருக்கு போதும் என கலங்கினாள்.

ஒரு சில நொடிகள் கழித்து கட்டிலின் மேல் வந்தான் ரகு.

முகத்தை திருப்பி கொண்டாள். "எழுந்திரு சாப்பிடு"

ப்ச் சாப்பிடு! சாப்பிட்டு பேசலாம். வா எழுந்து உட்காரு. என அவளுக்கு ஊட்டி விட்டான்.

சாப்பிடு!! என அனைத்தையும் ஊட்டி விட்டான்.

சீதா வேறு புறம் திரும்பி கொண்டாள். ரகுவரன் அதன் பின் சாப்பிட்டான். சீதா குத்து காலிட்டு அமர்ந்து இருந்தாள்.

அவளின் எதிரில் வந்து அமர்ந்தான். சீதா மெல்ல நிமிர்ந்து பார்க்க சட்டை காலரில் வாயை துடைத்து கொண்டவன். சொல்லு என்ன பண்ணலாம்? என்ன பிரச்னை உனக்கு?

"நீங்க வீட்டுக்கு வரணும்!"

"அது கஷ்டம்!"

ஏன் என மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கினாள்.

"நான் வீட்டுக்கு வந்தால் சும்மா இருக்க முடியாது."

"அப்டின்னா?"

"உன்னை பார்த்திட்டு என்னால சும்மா இருக்க முடியாது. நான் அப்படியே பயலுங்க இருக்கிற இடத்தில தூங்கிக்கிறேன்."

"என்னை பார்த்திட்டு சும்மா அப்டின்னா?"

ரகுவரன் அவளை பார்க்க,

"என்ன?"

"நிஜமாவே தெரியலையா?"

"நிஜமா தெரியல!! சொல்லுங்க!"

அதான் கட்டிக்கறது முத்தம் அப்புறம் படுக்கையில் என ரகு அவளை பார்க்க.. சீதாவின் முகம் சிவந்து போனது. வெட்கம் வேறு வந்து தொலைந்தது.

"அதுக்கு தான் நான் சொல்றேன். நான் வரல நீ படி! நிம்மதியா தூங்கு காலேஜ் போ! உன்னோட லைஃப்ப பாரு!"

சீதாவின் இதயம் படபடவென துடிக்க.. இல் இல்ல நீங்க வாங்க!

"நான் தான் சொல்றேன்ல!" என ரகு ஆரம்பிக்க..

நீங்க இங்கே இல்லன்னா எனக்கு தனியா இருக்க மாதிரி பயமா இருக்கு. நான் கொஞ்சம் முன் கோபக்காரி. அப்படி தான் இருப்பேன். என்றவள் தலையை குனிந்து கொண்டு எனக்கு என.. எனக்கு அது அதுக்கு ஓகே தான் என்றாள்.

எதுக்கு? என ரகுவரன் அவளை பார்க்க..

அதுக்கு தான் அதுக்கு!! இதெல்லாம் எனக்கு புதுசா இருக்கு. எனக்கு என்றாள் தயக்கத்துடன்..

நிஜமாவா!!

ம்ம் நிஜம் தான் கோபபட மாட்டேன். கொஞ்சம் கொஞ்சமா எனக்கு பிடிக்கும்.

என்ன பிடிக்கும்? என ரகுவரன் புருவம் உயர்த்த..

உங்களை தான் என தயக்கத்துடன் கூறினாள்.

ரகுவரன் அவளின் கைகளை பிடித்தவன். "என்னை வேணாம்னு சொல்ல மாட்டியே! புடிக்கலன்னு சொல்ல மாட்ட தானே!!"

எனக்கு இனிமேல் பிடிக்கும் உங்களை.. அதை எனக்கு சொல்ல தெரியல. ஆனால் நீங்க இல்லாம என்னால இங்கே இந்த வீட்ல இருக்க முடியல பிளீஸ் என்னை விட்டு போகாதீங்க என்றாள் பாவமாக..

சரி போகல!! என ரகுவரன் சொல்ல..

நைட்டு எப்போ வருவீங்க? என சீதா கேட்க..

இல்ல நான் இப்போ போகல! இங்கே தான் இருப்பேன். என்றான்.

அப்பாடி என அவனது கைகளை இறுக்கி பிடித்தாள்.

ரகுவரன் அவளின் முகத்தை பார்க்க சீதா படபடத்து கொண்டே தலையை தாழ்த்தி கொண்டாள்.

அவளின் முகத்தை பிடித்தவன் உதட்டில் முத்தமிட்டான். சீதா எந்த எதிர்ப்பும் காட்டாமல் அப்படியே அமர்ந்திருக்க.. இன்னொரு முத்தம் மென்மையாக கொடுத்தவன் அவளை அணைத்து கொண்டான்.

சீதா தயக்கத்துடன் அணைத்து கொண்டாள்.

"சீதா!!"

"ம்ம்!!"

எனக்கு தூக்கம் வருது தூங்கலாமா? என ரகு கேட்க..

ம்ம் தூங்கலாமே என அவள் சொல்லி கொண்டிருக்கும் போதே அவன் உறங்கி இருந்தான் அணைத்தபடி..

சீதா...?

தொடரும்...
 

Revathipriya

Active member
Joined
Oct 14, 2024
Messages
129
Unmaiya sollanumna Seetha thaan rombavey koduthu vechirakanum Raghu kidaika his love seems to be deep and true love💞💞💞💞💞💞like our Sisubalan Sister 👌👌👌👌👌👌🔥🔥🔥🔥🔥🔥🔥👍😍.
 

Jeni Shiva

Member
Joined
Oct 29, 2024
Messages
83
Unmaiya sollanumna Seetha thaan rombavey koduthu vechirakanum Raghu kidaika his love seems to be deep and true love💞💞💞💞💞💞like our Sisubalan Sister 👌👌👌👌👌👌🔥🔥🔥🔥🔥🔥🔥👍😍.
Sisu va Naa romba miss panren sis... Neenga avana nyabagam pannitinga
 

Jeni Shiva

Member
Joined
Oct 29, 2024
Messages
83
Neenga epdi sis indha characters behaviour ellam design pannuringa? Indha udla saptutu apdiye shirt collar la thodaikkuradhu... Romba casual ah ellarum pannuvanga... Adha oru character behaviour ah .... Happa... Chance eh illa
 
Top