என்னங்க!! என்னங்க்அஅ!! என தட்டி கொண்டே அவனை தூக்க முயற்சி செய்தவள் கலைத்து போயி அவன் மேல் அப்படியே சாய்ந்து படுக்கையில் அவனை சாய்த்தாள்.
ரகுவரன் ஆழ்ந்த தூக்கத்துக்கு சென்றிருந்தான். சீதாவின் மனதில் அந்த கண்ணு இப்படி வீங்கி இருக்கிறதுக்கு காரணம் தூக்கமில்லாமையா? அப்போ அவர் தூங்கலையா? நம்ம நேத்து மட்டும் தான் தூங்கல. ஆனால் இவர்? இவர் கிட்ட தட்ட ஒரு வாரம் தூங்காம இருந்திருக்கார். தெரிஞ்சு போச்சு என்றவள் மனம் அவன் பால் ஈர்த்தது.
அவனது முகத்தை இமை வெட்டாமல் பார்த்து கொண்டிருந்தவள் அவனது கம்பீரத்தில் கொஞ்சம் ஈர்க்க தான் செய்கிறான் அவளை..
கருகருவென கேசம், அடர்த்தியான தாடியும் மீசையும். இதோ தலையில் ஆங்காங்கே வெள்ளை முடி!! அழகான புருவம். அதே போல தடித்த உதடுகள்.உதடு நன்றாக சிவந்து இருந்தது. இதோ ஃபேன் காற்றில் பறந்து கொண்டிருந்தது. கையில் ஆங்காங்கே வெட்டு காய தழும்புகள். அழகான முகம் தான் அதை அழுக்கான முகமாக வைத்திருக்கிறான். தாடி மீசையை சவரம் செய்து, அவனது கேசத்தை சரியாக திருத்தம் செய்து, கேசுவல் சேர்ட் பேன்ட் இடுப்பில் பெல்ட் என அக்மார்க் அம்பி போல இருந்தால் எப்படி இருக்கும் என யோசித்தாள். சத்தியமாக ரகுவரன் அத்தனை அழகு. உடனே அவளது போனை எடுத்தவள் அவனை போட்டோ எடுக்க முனைந்தாள்.
அச்சோ தூங்கும் போது போட்டோ எடுக்க கூடாதுன்னு அம்மா சொல்லிருக்காங்க என தனக்கு தானே சொல்லி கொண்டவள். தூங்கி எந்திரிக்கட்டும் என அவனுடன் அவழும் படுத்து கொண்டாள்.
அந்த நேரம் பார்த்து அவனது போன் சிணுங்க . அதில் கிரி என சேவ் செய்திருந்தான்.
இவரா!! என அட்டன் செய்தாள்.
டேய் ரகு எங்கே இருக்க? சாப்பிடும் நேரம் உன் மாமன் பொண்ணு மாளவிகா உனக்காக சாப்பாடு என கிரி கூற வர..
நானும் அவரும் சாப்பிட்டோம். என சீதா குரல் கொடுத்தாள். .
தங்கச்சி மா!! என கிரி உற்சாகத்துடன் பதில் கொடுக்க..
அவரை போன் பண்ணி கூப்பிட வேணாம். அவரு தூங்கிட்டு இருக்கார். வர மாட்டார். அவருக்கு சாப்பாடு கொடுக்க நான் இருக்கேன். வச்சிடரேன் என போனை வைத்தாள் சீதா.
மாமா பொண்ணு மாளவிகாவா!! தூங்கி எழுந்ததும் எல்லாத்துக்கும் ஒரு தீர்மானம் பண்ணனும். பேசணும் பேச வேண்டியது நிறைய இருக்கு. என தனக்கு தானே சொல்லி கொண்டவள் கண்கள் சொக்கி கொண்டு வர மெல்ல ஒரு குட்டி உறக்கத்தை உறங்க ஆயத்தமானாள்.
அவனது அருகில் படுத்து கொண்டு உறங்கினாள். இருவரும் விடிய விடிய உறங்கினார்கள் உணவு மறந்து தாகம் மறந்து கிடந்தார்கள். நடுசாமத்தில் விழிப்பு வந்தது இருவருக்கும்..
என்னங்க மணி என்ன? என கண்களை தேய்த்து கொண்டே எழுந்தாள்.
"ரெண்டு"
ரெண்டு மணி தான் ஆகுதா? ரெண்டு மணி நேரம் தான் தூங்கினோமா? எனக்கு என்னமோ அடிச்சு போட்ட மாதிரி ஒரு ஃபீல் என கொட்டாவி விட்டாள்.
ரகுவரன் நமட்டு சிரிப்புடன் நடுசாம ரெண்டு மணி என்றான்.
என்ன? மிட் நைட்டா? இத்தனை நேரம் தூங்கி இருக்கோமா? என அவளுக்கு அதிர்ச்சி!!
ரகுவரன் எழுந்து பாத்ரூம் செல்ல.. நான் போறேன் பிளீஸ் என உள்ளே ஓடினாள்.அவள் வந்ததும் ரகுவரன் சென்றான்.
வயிற்றை பிடித்தபடி சீதா நின்று கொண்டிருக்க..
என்னாச்சு?
எனக்கு பசிக்குது!!
"வா கீழே போலாம் சாப்பிட்டு வரலாம்"
இல்ல ப்ரஷ் பண்ணிட்டு குளிச்சிட்டு போலாம்.
காலையில காலேஜ் இருக்கு உனக்கு சாப்பிட்டு வந்து தூங்கு என ரகுவரன் கூற..
இல்ல நாளைக்கு சனிக்கிழமை என்றவள். எனக்கு குளிக்கணும் என்று ஹீட்டர் போட்டாள்.
சரி நீ குளி! நான் சாப்பிட எடுத்திட்டு வரேன் என சென்றான்.
ஹலோ நீங்களும் குளிக்கணும் என சீதா சொல்ல..
சரி குளிக்கிறேன் என்று விட்டு கீழே சென்றான்.
என்ன மாமா பண்ற? தூங்கலயா என மாளவிகாவின் குரல்..
தூங்கணும் என சொல்லி கொண்டே கிச்சன் சென்றான்.
என்ன வேணும்னு சொல்லு மாமா நான் எடுத்து தரேன்! என மாளவிகா கூற..
தோசை ஊத்தனும் ஊத்தி கொடு என ரகுவரன் வேலையை கொடுக்க..
மாளவிகா தோசை மாவு எடுத்து கலக்கி ஊற்ற கல்லை அடுப்பில் வைத்தாள்.
கிச்சனில் லைட் எரியும் வெளிச்சம் தெரிய மெல்ல வெளியே வந்து பார்த்தார் சுமதி. பார்த்ததும் சந்தோஷம் பொங்கியது. இத்தனை நாள் வீட்டுக்கு வராமல் இருந்த என் பையனை மாளவிகா மனசு மாத்தி கூட்டிட்டு வந்ததும் இல்லாம இப்போ அவன் கூட சேர்ந்து சமைச்சு கொடுக்கிரா. அப்போ நம்ம நினைச்சது சீக்கிரம் நடக்கும் போலயே!! என உற்சாகத்துடன் படுக்கைக்கு வந்தார்.
தக்காளி சட்னி செய்ய என்ன தேவை என ரகு கேட்க..
மாளவிகா சிரித்தபடி நானே செஞ்சு தரேன் என தேவையான அனைத்தையும் போட்டு கால் மணி நேரத்தில் தோசை தக்காளி சட்னி என இரண்டையும் எடுத்து கொண்டு நகர்ந்தவன். தூங்கு இவ்வளவு நேரம் முழிச்சிட்டு இருக்காத என கூறி கொண்டே மேலே சென்றான்.
சீதா முகத்தை துடைத்து கொண்டே வெளியே வந்தாள். ரகுவரன் உள்ளே வரவும் அவள் துண்டை கட்டி கொண்டு உடையை ஆராயவும் சரியாக இருந்தது. அவன் வந்ததும் வேக வேகமாக உடையை கொண்டு மறைத்தாள்.
ரகுவரன் நேராக டீப்பாயில் தட்டை வைத்து விட்டு நான் குளிச்சிட்டு வரேன் நீ சாப்பிடு என துண்டை எடுத்து கொண்டு சென்றான்.
சீதா வேகமாக உடையை அணிந்து கொண்டாள். ரகுவரன் கால் மணி நேரம் கழித்து வெளியே வந்தான்.
"நீ இன்னும் சாப்பிடலயா!!"
நீங்களும் வாங்க என அவள் அழைக்க..
ம்ம் வந்துட்டா போச்சு!! என ரகுவரன் அவளுக்கு எதிரில் அமர்ந்தான்.
சீதா தோசையை சாப்பிட்டவள் புருவத்தை உயர்த்திப் பார்க்க, என்னாச்சு நல்லா இல்லையா?
செம்மையா இருக்கு? இதெல்லாம் செய்ய தெரியுமா? டேஸ்டா இருக்கு என நீங்க கை வசம் நல்ல சமையல் வேலை வச்சிருக்கீங்க! கிரேட் என்றாள்.
ரகுவரன் சாப்பிட்டு கொண்டே நல்லா தான் செஞ்சிருக்கா என சாப்பிட்டான்.
சீதா சாப்பிட்டு கொண்டே யாரு செஞ்சது? என கேட்க..
மாளவிகா தான் செஞ்சு கொடுத்தா என்றான் இயல்பாக..
மாளவிகா என்ற பெயரை கேட்டதும் சட்டென புரை ஏறியது. இந்த நடு சாமத்தில் அவளுக்கு என்ன வேலை? அவள் எதுக்கு வந்து செஞ்சு கொடுக்கணும்? என வேகமாக புரை ஏறிட.
ஹே என்னாச்சு? மெதுவா மெதுவா தண்ணி குடி என அவளுக்கு தலையை தட்டி விட்டான்.
ஒன்னும் வேணாம் என முகத்தில் கோபம் அப்பி கொள்ள.. வேகமாக எழுந்தாள் இரும்பி கொண்டே..
என்னாச்சு? சீதா!! என ரகு எழுந்து கொள்ள.. அவள் இருன்பி கொண்டே ஒன்னுமில்லை என தன்னை நிலை நிறுத்தி கொண்டாள்.
ஹே சீதா ஓகே தான என ரகுவரன் அருகில் வர.. ம்ம் சரி ஆகிடுச்சு என தொண்டையை சரி செய்தாள்.
சரி வா வந்து சாப்பிடு!
எனக்கு வேணாம். என அவள் முகத்தை திருப்பி கொள்ள..
ஹே பசிக்கும் சாப்பிடு டேஸ்டா தான இருக்கு என அவளுக்கு தட்டை நகர்த்தினான்.
எனக்கு தான் வேணாம்ன்னு சொல்றேன்ல என அவள் மூக்கு புடைக்க பேச..
ரகுவரன் எதுவும் பேசாமல் அமைதியாக பார்த்தான். சீதா ஒரு சில நொடிகள் கழித்து தயக்கத்துடன் சாரி எனக்கு வேணாம்.
ரகுவரன் அவளின் அருகில் வந்து உனக்கு பசிக்கும். நீ பசி தாங்க மாட்டல்ல ஆ போட்டுக்கோ என ஊட்டி விட்டான்.
சீதாவின் முகம் கொஞ்சம் கனிய அவனுக்கு ஆ காட்டினாள்.
ரகுவரன் அவளின் கோபத்தை மிகவும் விரும்பினான். அவ்வளவு சீக்கிரம் சட்டென கோபப்பட மாட்டான் ரகுவரன். அப்படியே கோபம் வந்தால் அது மிகவும் அழமானதாக இருக்கும்.
சீதா சிறிது நேரம் அமர்ந்திருந்தவள் மெல்ல இரண்டு தலையணை வைத்து சாய்ந்து கொண்டாள்.
சரி சீதா நான் கிளம்பவா?
"எங்கே போறீங்க வாங்க தூங்கலாம்!"
"எனக்கு தூக்கம் வரல! நான் புறப்படுறேன்."
இந்த நேரத்தில் எங்கே போறீங்க? என் கூட இருங்க நம்ம தூங்கலாம்.
"இதுக்கு மேலே எனக்கு தூக்கம் வராது. என்னால இங்கே இருக்கவும் முடியாது. நீ தூங்கு சீதா"
ஏன் என சீதா கேட்க..
ரகுவரன்..?
தொடரும்..