Pradhanya

Well-known member
Staff member
Joined
Oct 6, 2024
Messages
426
இருக்காது அப்படி இருக்க வாய்ப்பே இல்லை.. எப்படி? எப்படி கொஞ்சம் கூட வாய் கூசாமல் இவ்வாறு சொல்கிறார்கள் என சீதாவின் சிந்தையில் ஆயிரம் எண்ணங்கள் தோன்ற..

முருகேசன் fir காப்பியை காட்டி "புரோபர் கம்ப்லைன்ட் கொடுத்திருக்கார் மாதேஸ்வரன். இனி உங்க பையன் தப்ப முடியாது."

"கல்யாணம் ஆகி பொண்டாட்டி இருந்தும் பொறுக்க தான் உங்க பையனுக்கு சொல்லி கொடுத்து வளத்தீங்களா? அதுவும் குடும்பத்துல இருக்க பொண்ணு மேலேயே பாஞ்சு இருக்கான்" என முருகேசன் இஸ்டத்துக்கு பேச.. பாயிந்து கொண்டு சட்டையை பிடித்தார் சதாசிவம்.

டேய் உன்னை கொல்லாம விட மாட்டேன். தேவையே இல்லாம என் விசயத்தில் ஓவரா தலையிடுற!! என கழுத்தை நெரித்தார்.

அங்கே இருக்கும் கான்ஸ்டபிள் மற்றும் SI என அனைவரும் ஐயா விடுங்க யா பிளீஸ் விட்டுடுங்க என சதாசிவத்தை விலக்க போராடினார்கள்.

அந்த நேரம் பார்த்து அங்கே கார் வர அதிலிருந்து ரகுவரன் இறங்கினான். பின்னால் இருந்து பாக்கியம் இறங்க..

அனைவரின் பார்வையும் ரகுவின் மீதும் பாட்டியின் மீதும் சென்றது. ரகு வேகமாக அப்பா என்ன நடக்குது இங்கே? என கேட்ட படி பையுடன் வர..

வாடா டேய் எங்கே அங்கே போற? எங்கே மாளவிகா பொண்ணு? அவளை என்ன பண்ண? என அனைவரும் கேட்க..

அங்கே ஒரு கார் வந்ததும் மாலையும் கழுத்துமாக மாளவிகா இறங்கினாள்.

சீதாவின் கண்களில் நீர் திரண்டிருக்க.. வேகமாக வீட்டுக்குள் ஓடினாள். அதற்கு மேல் ஒரு நொடி கூட அங்கு நிற்க பிடிக்க வில்லை.

மாதேஸ்வரன் கோபமாக தன் மகளை பார்த்து அறிவு கெட்டவளே! கல்யாணம் ஆன ஒருத்தனை மறுபடியும் கல்யாணம் கட்டிட்டு வந்திருக்க? என்றவர் முருகேசன் பக்கம் திரும்பி சார் ஸ்டெப் எடுங்க சார்!! என சொல்ல..

என்ன டா ரகு இப்படி? என அவர் கேட்க..

மாதேஸ்வரன் வேகமாக பாய்ந்து கொண்டு மாளவிகாவை அடிக்க சென்றார்.

"என் பொண்டாட்டி மேலே இருந்து கைய எடுங்க" என ஒரு குரல்..

அனைவரின் பார்வையும் மாளவிகா பக்கம் செல்ல ரகுவரனை அதிர்ச்சியுடன் பார்த்தார் சதாசிவம்.

பாக்கியம் தன் பேரனின் கைகளை பிடித்து என் பேரன் என்னைக்கும் ராமன் தான்!! என்று கூற..

மாளவிகாவின் அருகில் கிரி வந்து நின்றான். அனைவருக்கும் அதிர்ச்சி. ரகு எதுவும் தெரியாதது போல அனைவரையும் பார்த்தான்.

இருங்க மாமா என மாளவிகா கிரியை பார்த்து கூற..

யாருக்கு யாரு டி மாமா? இந்த அனாதை பையல கட்டிக்க தான் உன்னை பாதாம் பிஸ்தா முந்திரி பால் எல்லாம் கொடுத்து வளர்த்து வச்செனா? ஒழுங்கா அந்த தாலியை கழட்டி வீசிட்டு வாடி! இல்ல உன்னை கொன்னு புதைப்பேன் என மாதேஸ்வரன் அவளின் முடியை பிடிக்க போக..

அப்பா நீங்க தாத்தா ஆகிட்டிங்க! என சத்தமாக கூறினாள் மாளவிகா.

இது அங்கிருக்கும் அனைவருக்கும் அதற்கு மேல் ஷாக்.

முருகேசன் ஒன்றும் புரியாமல் பார்க்க.. மாதேஸ்வரன் கிரியை அடிக்க பாயிந்தார். .

அவர் மேலே கைய வச்சீங்க மரியாதை கெட்டிடும் என வேகமாக அவரை விலக்கி விட்டாள் மாளவிகா.

இன்ஸ்பெக்டர் இவன ஜெயிலில் புடிச்சு போடுக என காட்டு கத்தளாக மாதேஸ்வரன் கூற..

ஹலோ இன்ஸ்பெக்டர் நான் மேஜர்! விருப்ப பட்டு தான் அவரை கல்யாணம் செஞ்சுகிட்டென். தேவையில்லாம பிரச்னை பண்ற வேலை வேணாம். அதையும் மீறி கை வச்சீங்க? கலப்பு திருமணத்துக்கு எதிராக இருந்தீங்கன்னு உங்க மேல கம்ப்லைன்ட் பண்ணுவேன் என்றாள் மாளவிகா.

முருகேசன் மாதேஸ்வரணை முறைத்து விட்டு அங்கிருந்து புறப்பட்டார். சுமதி மாளவிகாவை பார்த்து என்ன டி இப்படி ஒரு காரியம் பண்ணிட்டு வந்து நிக்கிற? ஏன் டா கிரி உண்ட வீட்டுக்கு இப்படி ரெண்டகம் பண்ணிட்டு வந்திருக்க? இப்படி பாவம் பண்ணிறுக்க நீங்க நல்லா இறுப்பீங்களா? என கொந்தளித்தார்.

மாளவிகா பெரு மூச்சை விட்டபடி "நான் ரகு மாமாவ பிடிக்கும். அது புடிக்கும் மட்டும் தான். கல்யாணம் பண்ணிக்கனும்னு நான் என்னைக்கும் நினைச்சதில்லை. எனக்கு கிரிய சின்ன வயசுல இருந்து புடிக்கும். அதான் கட்டிகிட்டேன்."

கிரி அமைதியாக இருக்க.. மாதேஸ்வரன் தள்ளாடிய படி இந்த ஒன்னுமில்லாதவனை கட்டிகிட்டு நீ பிச்சை தான் எடுப்ப! ஒழுங்கா என் கூட வந்திடு!! என கையை பிடித்து இழுத்தார்.

என்னால வர முடியாது. என உதறி விட்டவள் நீ என்னை அந்த முத்துராஜுக்கு கல்யாணம் பண்ணி வைக்க திட்டம் போட்டது எல்லாம் எனக்கு தெரியும். எனக்கு இன்னிக்கி கல்யாணம் ஆகல எனக்கு ரிஜிஸ்டர் மேரேஜ் பண்ணி ஒரு வருசம் ஆக போகுது. போ என கத்தினாள்.

மாதேஸ்வரன் அதிர்ச்சி தாளாமல் நடுக்கத்துடன் நின்றவர் ரகுவின் பக்கம் திரும்பி இதுக்கு எல்லாம் நீ தான டா உடைந்தை!! பாரு டா உன் அப்பன் என் தங்கச்சி மனசை கெடுத்து சீரழிச்சான். நீ என் பொண்ணு வாழ்க்கைய சீரழிச்சுட்டல்ல நீ எப்படி நல்லா வாழ போறன்னு பார்க்கிறேன் டா!! என சொல்லிய படி புறப்பட்டார்.

ப்பா எனக்கும் இதுக்கும் என ரகுவரன் ஆரம்பிக்க..

ஐயா ரகுவுக்கும் இதுக்கும் எந்த சம்மந்தமும் இல்ல. நானும் எவ்வளவோ விலகி போனேன். மாளவிகா சாக துணிஞ்சிட்டா அதான் கட்டிகிட்டென் என்றான் கிரி.

சுமதி மாகவிகாவை பார்த்து இவனே கஞ்சிக்கு இல்லாம படுக்க இடம் கூட இல்லாம கஷ்ட பட்டிட்டு இருக்கான். இவனை எதுக்கு டி கட்டிகிட்ட? என் அண்ணனை இப்படி ஏமாத்திட்டு போயிட்டியே!! என அழுதார்.

உன் புத்திய விட நான் ஒன்னும் கேவலம் இல்ல அத்தை எந்த விதத்திலும் கிரி குறைஞ்சவர் இல்ல.

என்ன டி என் புத்தி?

மாளவிகா சதாசிவத்தின் பக்கம் திரும்பி மாமா என்னைய அத்தை இங்கே கூட்டிட்டு வந்ததுக்கு காரணமே ரகு மாமாவை வளைச்சு போட தான். அதை சொல்லி தான் கூட்டிட்டு வந்தது. அத்தைக்கு சீதாவை பிடிக்கல என கூறினாள்.

சுமதியின் முகம் ரத்தபசை இழந்து போக.. சந்துரு தன் அம்மாவை பாவமாக பார்த்தான். சதா சிவம் சுமதியை அடிக்க கை ஓங்கிட..

ப்பா விடுங்க என ரகு கையை பிடித்து தடுத்தான்.

கிரி நேராக சதாசிவம் முன் போய் நிற்க.. ரகு இவங்களுக்கு தங்க ஏற்பாடு பண்ணு என்றார் சதா.

வேணாம் ஐயா இனி நான் உங்களுக்கு பாரமா இருக்க விரும்பல!! கேஸ் ஏஜென்சி டெண்டர் எடுத்தேன் மாளவிகா பேரில். கடவுள் புண்ணியத்தில் கிடைச்சிடுச்சு. இவளும் படிச்சு முடிக்க போறா! நாங்க ரெண்டு பேரும் இனிமே வேலையை பார்க்க போறோம். எல்லாமே கூடி வந்திடுச்சு. என் வாழ்க்கையை புடிப்பா மாத்தினதே மாளவிகா தான். இது வரைக்கும் இந்த அனாதை பையல வளத்தி விட்டதுக்கு நன்றி கடன் பட்டிருக்கென் என கையெடுத்தான் கிரி.

படவா ராஸ்கல் அடி வாங்க போற? என்ன பேச்சு பேசுற? என மிரட்டினார் பாக்கியம்.

உள்ளே வா கிரி!! என சதாசிவம் உள்ளே அழைக்க..

இல்லிங்க மாமா வீட்டுக்கு பால் காய்ச்சனும் வேலை இருக்கு நீங்களும் வாங்க எல்லாரும் வாங்க என மாளவிகா கூற..

சதாசிவம் ஆசிர்வாதம் செய்து அனுப்பினார். மாளவிகா ரகுவை பார்த்து ஒரு சின்ன தலை அசைப்புடன் புறப்பட.. சந்துரு பரதனை அழைத்து கொண்டு தனியாக சென்றான்.

பார்த்தியா பரதா? இவன் கேஸ் ஏஜென்சில டெண்டர் எடுத்திருக்கானாம் நம்ம முன்னாடி கை கட்டி வேலை செஞ்சவன் இன்னிக்கு முதலாளியா மாறிட்டான் இது எனக்கு சரியா படல!! இப்போ நம்ம அப்பாவுக்கு கூஜா தூக்கிட்டு இருக்கோம். அடுத்து அண்ணனுக்கு தூக்கனும். நம்ம முதலாளி ஆக அண்ணனும் விட மாட்டான் அப்பாவும் விட மாட்டார்.

என்ன டா இப்படி சொல்ற? அப்படி எல்லாம் அப்பா விட மாட்டார் நம்மள என பரத் கூற..

நீ வேணும்னா பாரு மொத்த சொத்தையும் அப்பா அண்ணன் பேருக்கு மாத்த ஸ்டெப் எடுக்கும். அப்போ நீயா என்னை தேடி வருவ என கடை குட்டி சந்துரு குட்டையை குழப்பி விட்டு சென்றான்.

வீட்டுக்குள் சென்றதும் பலார் என ஒரு அரை...

சுமதி திருகி கொண்டு விழ.. சிந்து, உஷா இருவரும் கப் சிப்பென பார்த்து கொண்டிருந்தார்கள்.

பாக்கியம் அமைதியாக இருக்க ரகுவரன் தன் அன்னையை கை தாங்குதலாக பிடித்து கொண்டான்.

ப்பா! கொஞ்சம் அமைதியா இருங்க என சொல்லி கொண்டிருக்கும் போது கை பையுடன் மேலிருந்து இறங்கினாள் சீதாலட்சுமி.

ரகு..?

தொடரும்..
 

Jeni Shiva

Member
Joined
Oct 29, 2024
Messages
93
Idhu ipo enna kirukku choli paarka poghudho? Sumadhi ku pota adi maadhiri onnu potu avala ulla thallu da Raghu... Chumma kelambitta
 

Revathipriya

Active member
Joined
Oct 14, 2024
Messages
136
Achooo intha Seetha vera muzhusa yenna nadanthathu nu paarkamaley kimabarala😖😖😖😯😒. Raghu thaan rombavey paavam avanum yethana pera thaan samaalipaano🤗😌. Kadakutti chandru vera kedithanama yosichu yentha prachanaila poi maata porano theriyalayeh😒.Malavika escape aagita paavam Namma Raghu thaan maatitu muzhikraan Sister😌. Avana konjam save pannidunga Sis🤗😊.
 
Top