Episode - 1
இரவு திருமண சடங்குக்ககாக இரண்டு அறைகளை தயார் செய்து கொண்டிருந்தார்கள் கல்யாண வீட்டில் இருப்போர். சமையல் அறையில் சீதா பரபரப்புடன் இருந்தார். இன்னொரு பக்கம் உறவினர்களின் களுக் களுக் சிரிப்பு சத்தம் என கல்யாண வீடு ஜெக ஜோதியாக இருக்க, இன்னொரு பக்கம் இரண்டு புது பெண்களை சொல்ல போனால் அக்கா தங்கைகள் இருவரும் முதலிரவுக்கு தயாராகி கொண்டிருந்தார்கள்.
அக்கா வான்மதியின் முகத்தில் வெட்கம் ஒரு பக்கம் தாண்டவம் ஆடியது. அதே போல தான் வானதி கூட தன் கணவனை எண்ணி பூரித்து போனாள். வான்மதி தனது சொல்ல பட்ட காதல் நிறைவேறியதை நினைத்து சந்தோசத்தில் தன் மணாளன் உள்ளம் கவர்ந்த கள்வன் சஞ்சயை நினைத்து பூரித்து அமர்ந்திருந்தாள்.
தோழிகள் அனைவரும் சஞ்சய் கூட கொஞ்சம் சிரிக்கிறார். ஆனால் வானதி புருசன் மிஸ்டர் ஜீவா MBBS சிரிக்கவே காசு கொடுக்கணும் போலயே என அனைவரும் கிண்டலடிக்க, ஹே என் தங்கச்சியை கிண்டல் பண்ணாதீங்க என வான்மதி வரிந்து கட்டிக் கொண்டு வந்தாள்.
வானதி வெட்கத்துடன் கீழே குனிந்து கொண்டாள். வானதியுடய புருஷன் யாரு பா? அவன் தான் ஜீவா! இந்த வீட்டின் மூத்த வாரிசு டாக்டராக இருக்கிறான். பெரிய அறுவை சிகிச்சை நிபுணன்.ஒரு மென்பொருள் தொழில் நுட்ப நிறுவனத்தில் டீம் லீடராக இருப்பவன் தான் சஞ்சய். இவர்கள் இருவரும் எப்படி வான்மதி மற்றும் வானதி இருவரையும் திருமணம் செய்து கொண்டார்கள்?
சஞ்சய் டீம் லீடாக வேலை செய்து கொண்டிருக்கும் அதே அலுவலகத்தில் தான் வேலை செய்கிறாள் வான்மதி. இருவரும் முதலில் முட்டிக் கொண்டு அதன் பின் மோதல் காதலில் உருவாகி சஞ்சய் மெல்ல வீட்டில் சொல்ல உடனே சஞ்சய்யின் தாய் சீதா விடாப்பிடியாக "ஜீவா கல்யாணம் பண்ணா தான் நீ கட்டிக்கணும் இந்த முடிவில் இருந்து நான் மாறவே மாட்டேன். அவன் கல்யாணம் பண்ணட்டும் அப்புறம் பார்ப்போம்." என சீதா கடந்து விட சிவராமனும் மனைவி சொல்லே மந்திரம் என கடந்து விட்டார்.
அப்போ எப்படி சஞ்சய் கல்யாணம் நடந்தது? நம்ம கல்யாணம் நடக்காது போல வானு என சோகமாக கூறினான் சஞ்சய். என்ன சஞ்சய் இப்படி சொல்றீங்க? என வான்மதி வருத்தத்துடன் கேட்க, ஆமா என் அண்ணன் கல்யாணம் பண்ணா தான் நமக்கு கல்யாணம் ஆகும் அம்மா உறுதியா சொல்லிட்டாங்க. அம்மா பேச்சுக்கு எங்க வீட்டில் மறுபேச்சு இல்ல. என தலையை கோதி கொண்டே கூறினான் சஞ்சய்.
அப்போ உங்க அண்ணனுக்கு கல்யாணம் பண்ண ஏற்பாடு பண்ணுங்க ஒரே மண்டபத்தில் ரெண்டு கல்யாணம் பண்ணிடலாம் ஈஸி என வான்மதி சுலபமாக கூற, அதில் ஒரு சிக்கல் என்றான் சஞ்சய்.
என்ன சிக்கல்? எதுவும் லவ் ஃபேளியரா என வான்மதி கேட்க..
காரணம் என்னன்னு தெரியல. மெடிக்கல் காலேஜ் சேர்ந்ததில் இருந்து இப்படி தான் இருக்கான் ஒரு மிசின் மாதிரி என சஞ்சய் சொல்ல, அப்போ உன் அண்ணனுக்கு எதுவும் கெட்ட பழக்கம் இருக்கா?
அய்யோ நீ வேற அவன் டீடோட்டளர் என்றான் சஞ்சய்.
அப்போ லவ் பேலியரா! அதுவா தான் டா இருக்கும்.
அப்படி நடக்க வாய்ப்பே இல்ல. நம்ம காதலுக்கு எங்க அம்மா சம்மதம் தான் சொன்னாங்க அப்போ அவனோட காதலுக்கும் இங்கே தடை இல்ல என்றான் சஞ்சய்.
அப்போ வேற என்ன சஞ்சு பிரச்னை? என வான்மதி கேட்க..
சஞ்சய் ஒரு பெரு மூச்சை விட்ட படி, கல்யாணத்தை மேல் ஆர்வம் இல்லாம இருக்கான் என கூறினான்.
அப்படியா சொல்றீங்க? என யோசித்தவள். பட்டென சஞ்சு சஞ்சு என அவனை கட்டிக் கொண்டாள்.
என்ன டி நீ வேற பக்கத்தில் வந்து tempt ஏத்தாத என சஞ்சய் சலித்து கொள்ள, உங்க அண்ணனை ஏன் என்னோட தங்கச்சிக்கு கட்டி வைக்க கூடாது என கேட்டாள் வான்மதி.
அட போடி நீ வேற அவன் முன்னாடி ரதி தேவியே வந்தாலும் திரும்பி பார்க்க மாட்டான். மெல்ல எழுந்த வான்மதி தெளிவான முடிவுடன் சிரித்துக் கொண்டே நீங்க ஆன்டி கிட்ட சொல்லுங்க நான் போன் பண்றேன் என கிளம்பினாள்.
ஹே என்னன்னு சொல்லிட்டு போடி இப்படி அந்தரத்தில் விட்டு போகாத வானு எனக்கு பைத்தியம் பிடிக்கிறது என சஞ்சய் சொல்ல, வான்மதி தன் காதல் கண்ணாலனை பார்த்து உங்க அண்ணா கிட்ட ஆண்டிய விட்டு பேச சொல்லுவேன்.
எங்க அண்ணன் ஒத்துக்க மாட்டான் என சஞ்சய் சொல்ல, முதலில் பொண்ணு போட்டோவை பார்க்கட்டும். நேரில் வந்து அட்லீஸ்ட் பெண் பார்க்கட்டும் அப்பவும் பிடிக்கலன்னா அதுக்கு அப்புறம் யோசிக்கலாம் சஞ்சு இது வெறும் முயற்சி தான் என இருவரும் முயற்சி எடுத்தார்கள்.
வான்மதி நினைத்ததை போலவே
வானதியை திருமணம் செய்து கொள்ள சம்மதம் என சென்று விட்டான் ஜீவா.
சஞ்சய்க்கு தலை கால் புரிய வில்லை. சீதா மற்றும் சிவராமன் என இருவருக்கும் அத்தனை சந்தோஷம். அதன் பின் ஒரு காதல் மட்டும் போனில் வளர்ந்து கொண்டிருந்தது. சஞ்சய் வான்மதி தான் அந்த ஜோடிகள். ஆனால் வானதி? இதுவரை ஜீவா அவளுக்கு ஒரு முறை கூட போன் செய்தது இல்லை.
அப்படி இப்படி என இரண்டு ஜோடிகளுக்கும் பிரச்னை இல்லாமல் திருமணம் விமர்சையாக நடந்தது. வான்மதியின் குடும்பத்தில் நான்கு பிள்ளைகள். மூன்று பெண் பிள்ளைகள், அதில் வான்மதி இரண்டாவது பெண், வானதி தான் வீட்டின் கடை குட்டி. வானதி B.Sc நர்சிங் படித்திருக்கிறாள். அவர்களை தந்தைக்கு நிகராக பாசம் கொட்டி வளர்த்தது வானதியின் அண்ணன் செழியன் தான். தந்தை கணேசன் சிறு வயதிலேயே இறந்து விட்டார். இரண்டு பெண்களையும் பெண் கேட்டு வரவும் குடும்பத்தை விசாரித்து இரண்டு தங்கைகளையும் திருமணம் செய்து வைத்து விட்டான் செழியன்.
இப்படி அனைவரும் ஒவ்வொரு பக்கம் பூரிப்பிலும் பாசிட்டிவ் வைப்ரேஷனில் சுற்றிக் கொண்டிருந்தார்கள். இதோ தன் தங்கைக்கும் தன்னுடன் நல்ல மணவாழ்க்கை கிடைத்து விட்டது. தன் தங்கை தன்னுடன் இருக்க போகிறாள் என்ற மகிழ்ச்சியில் காதலும் கை கூடிய நிம்மதியில் வான்மதி சஞ்சய் இருக்கும் அறையில் நுழைந்தாள்.
சஞ்சய் அவழுக்காகவே காத்திருந்தவன் போல கதவை தாளிட்டு இயல்பான வெட்கம் கூச்சம் காதல் என அனைத்து உணர்வுகளும் பூக்க இல்லற வாழ்க்கையை ஒரு புறம் இனிமையாக தொடங்கி இருக்க, வானதி இன்னொரு பக்கம் இருக்கும் அறைக்குள் நுழைந்தாள். தனது மணவாளனை சந்திக்கும் முனைப்பில்.
பூக்களால் அலங்கரிக்க பட்ட முதலிரவு அறையில் கண்ணாடியை போட்டுக் கொண்டே போனை ஸ்குரோல் செய்து கொண்டிருந்தான் ஜீவா. இதோ வந்து விட்டாள் வானதி புத்தம் புது சிவப்பு ரோஜா போல இருந்தாள். மின்னும் காந்த கண்கள், கொஞ்ச சப்பையான மூக்கு தான். நாவல் பழ நிற உதடுகள், ஆனால் தேகம் பளிங்கு கற்கள் போல மின்னியது. கழுத்தில் ஜீவா கட்டிய புது தாலி மின்ன கனவுகளும் எதிர்பார்ப்புகளும் ஒரு பக்கம் எல்லையை கடந்து கொண்டிருக்க, தன் கண்ணாலனிடம் பல கேள்விகளை கேட்க வேண்டும் என லிஸ்ட் போட்டு வைத்திருந்தவள் மெல்ல அறைக்குள் நுழைந்தாள்.
வானதியின் எதிரில் அலங்கரிக்கபட்ட பஞ்சு மெத்தையில் ஆஜானுபாகுவாக பாகுபலியின் உடற்கட்டை ஒத்திருந்த தோற்றத்தில் அமர்ந்திருந்தான் ஜீவா. கால் கொலுசு சத்தம் கேட்கவும் மெல்ல நிமிர்ந்தான். எதிரில் புது மனைவி வானதி! இனி அவள் வானதி ஜீவா இல்லை ஜீவாவின் வானதியா?
அவளை பார்த்ததும் எதுவும் பேசாமல் மீண்டும் போனில் தலை கவிழ்த்தான் ஜீவா. வானதி தலையில் அடித்துக் கொண்டவள் கதவை சாத்தாமல் வந்துட்டோம் அதனால் இப்படி இருக்கார் என கதவை அடைத்தவள். அவன் முன் சென்று பாலை நீட்டினாள்.
என்.. என்னங்க? என தயக்கத்துடன் வானதி அழைக்க, எனக்கு பால் பிடிக்காது என்றான் ஜீவா.
சரி சாரி என கண்ணகுளி தெரிய ஒரு சிரிப்பை உதிர்த்தவள் அதை அருகில் இருக்கும் டேபிலில் வைத்து விட்டு ஆசிர்... என வானதி சொல்ல வர, எதிக்ஸ் எனக்கு பிடிக்காது என கூறி கொண்டே போனை அருகில் இருக்கும் டேபிளின் மேல் வைத்தபடி கண்ணாடியை மூக்குக்கு தள்ளிக் கொண்டே முன்னால் இருப்பவளை வெற்று பார்வை கூடவே வேற்று பார்வை பார்த்தான் ஜீவா.
அவனது பார்வையின் அர்த்தம் புரியாமல் கைகளை பிசைந்த படி மெதுவாக தலையை நிமிர்த்தி பார்த்தாள் வானதி.
ஜீவாவின் பார்வை மாறாமல் இருக்க, வானதி அவனது பார்வையில் நெளிந்தவள். என்ன அப் அப்படி பார்க்கிரீங்க? இப் இப்படி பார்த்தால் எப்டி பேச முடியும் என்னால? என திக்கி திணறி அந்த வாக்கியத்தை சொல்லி முடித்தாள்.
எந்த பதிலும் ஜீவாவிடம் இல்லை. வானதி பொய் கோபத்துடன் அக்காவுக்கு மாமா கால் பண்ணி பேசினார்களே! எனக்கு ஏன் நீங்க போன் பண்ணி பேசல என வானதி ஒரு வழியாக கேட்டு முடித்தவள் அவனது பதிலை எதிர்பார்த்து காத்திருந்தாள்.
ஜீவா அமைதியா இருக்க, என் கிட்ட பேசணும்னு உங்களுக்கு என வானதி ஆரம்பிக்க, இது உன் அண்ணன் அம்மா அக்கா விருப்ப பட்டு நிச்சயிக்க பட்ட கல்யாணம் தானே! உன்னோட விருப்பத்தின் பேரில் நடக்கலல்ல என எகத்தாள பார்வையுடன் கூறினான்.
ஏன் ஜீவா இப்படி பேசுறீங்க? ஜீ.. ஜீவா சொல்லலாம் தானே! என வானதி கேட்க.. என்னை காதலிச்சு கல்யாணம் பண்ண மாதிரியான உரிமை எங்கிருந்து வந்தது? வானதிக்கு என அடுத்த சொல் அம்புகளை அவள் மீது எய்தினான்.
வானதியின் முகத்தில் வியர்வை முத்துக்கள் சரசரவென சரிந்து கொட்டியது. அவனை பொருள் புரியா பார்வையுடன் நோக்கினாள்.
ஜீவா அவளை தலை முதல் கால் வரை மேயுந்தான். வானதி பேச வர, நீயும் நானும் கணவன் மனைவி அந்த உரிமையில் நடந்துக்கிட்டா போதும் அதுக்கு மேலே எதையும் என் கிட்ட எதிர்பார்க்காதே என்றான்.
அவளுக்கு ஒன்றும் புரிய வில்லை. என்ன சொல்றீங்க? என வானதி பார்க்க, ஒரு கணவன் மனைவி கிட்ட எடுத்துக்கிற எல்லா உரிமையும் நான் உன் கிட்ட எடுத்துக்குவேன். நீயும் மனைவி என்கிற முறையில் எதை வேணாலும் கேட்கலாம் ஒன்லி மனைவி என்று நிறுத்தியவன். இப்போ என அவனது பார்வை ஜீவாவின் வதனத்தை வருடியது.
ஜீவாவுக்கு என்னாச்சு?
வானதிக்கு ஜீவாவை முன்னாடியே தெரியுமா?
அடுத்து
என்ன நடக்கும்?
தொடரும்..

Author: Pradhanya
Article Title: Episode-1
Source URL: Pradhanya kuzhali novels-https://pradhanyakuzhalinovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.