Pradhanya

Active member
Staff member
Joined
Oct 6, 2024
Messages
120
ஹாரிகா நம்ம மோஹித்தை அந்த அளவுக்கு லவ் பண்றா! நீங்க இதே போல யோசிச்சு கிட்டே இருந்தீங்கன்னா! அப்புறம் ரெண்டு பேரும் அடுத்த கட்டத்துக்கு போயிடுவாங்க பா! என லாவண்யா ஏர்போர்ட் கிளம்பும் முன் தன் தந்தை ராமசந்திரனிடம் கூறிக் கொண்டிருந்தாள்.

இல்ல மா நீ சொல்ற மாதிரி எடுத்தோம் கவுத்தோம்ன்னு பண்ண முடியாது. விசாரிக்கணும் என சொல்லிக் கொண்டே சுதா வந்தார்.

என்ன மா யோசிக்க வேண்டி இருக்கு? என லோகேஷ் வந்து சேர்ந்தான். எல்லாம் உன்னால வந்தது டா என ராமச்சந்திரன் மற்றும் சுதா இருவரும் லோக்கேஷை முறைத்தார்கள். தன் அக்காவின் குழந்தைகளை ஒரு பக்கம் கொஞ்சிக் கொண்டிருந்தான் ரோஹன்.

பழம் பெரும் தயாரிப்பாளர் குடும்பத்தில் இருந்து வந்த ராம சந்திரன் மற்றும் சுதா இருவருக்கும் மொத்தம் நான்கு பிள்ளைகள். மூத்த மகள் லாவண்யா பெரிய பிஸ்னஸ் மேனின் மூத்த வாரிசு சாப்ட்வேர் என்ஜினியர் சரவணனை திருமணம் கொண்டு லண்டனில் செட்டில் ஆகி விட்டாள்.

அடுத்து மூன்று மகன்கள் லோகேஷ், மோஹித், ரோகன். லோகேஷ் தனது தந்தையின் தொழிலை பின் பற்றி தயாரிப்பு நிறுவனம் வைத்து விளம்பர படங்கள், மற்றும் தன் தம்பி மோஹித் எடுக்கும் படங்களையும் தயாரிக்கிறான். லோகேஷ் பார்த்த மாத்திரத்திலேயே மாடலிங் துறையில் தன்னை கவர்ந்த அமலாவின் மீது காதல் வயப்பட்டு வீட்டில் வற்புறுத்தி திருமணமும் செய்து கொண்டான். அவளும் சாதாரண குடும்பம் இல்லை. வசதி படைத்த குடும்பத்தின் முதல் வாரிசு. அமலாவின் சொந்த தங்கை தான் ஹாரிகா. லோகேஷ், மோஹித் இருவரும் அண்ணன் தம்பி என தெரிந்ததும் இரண்டு மகள்களையும் ராமச்சந்திரன் வீட்டு மருமகள் ஆக்கி விட வேண்டும் என ஜனார்த்தனன் அதாவது அமலாவின் அப்பா முடிவுடன் இருக்க, அதற்கு சிறப்பாக குலைந்து ஒத்துழைத்தாள் ஹாரிகா. வளர்ந்து வரும் நாயகி. மோஹித்தை பார்த்ததுமே அவனை பசை போல ஒட்டிக் கொண்டாள். அவளை வைத்து படம் வேறு இயக்கி இருக்கிறான்.. சொல்லவா வேண்டும். அந்த அளவுக்கு மோகித் பைத்தியம் ஹாரிகாவிற்கு.


மோஹித் பற்றி சொல்ல வேண்டும் என்றால் அழகு, ஆண்மை என 64 ஆய கலைகளும் பொருந்தும் ஒருவன். எல்லாவற்றிலும் வித்தைக்காரன். அனைத்து பெண்களையும் கட்டி இழுக்கும் பேரழகன். படிக்கும் பிராயத்தில் இருந்து மோஹித் மோஹித் என இளம் சிட்டுகள் அவனை வட்டமிடும். அவன் இயக்குனர் ஆன பின்பு இரண்டாம் கதாநாயகி ஹாரிகாவை காதலித்து வருகிறான். என்ற செய்திகள் பரவியதும் பெண்களுக்கு அவன் மீது கோபமும் ஹாரிகாவின் மீது பொறாமையும் ஒட்டிக் கொண்டது. அவள் மோஹித்துக்கு துளி கூட பொருத்தமே இல்லை என அனைத்திடங்களிலும் காசிப் தான்.

கடை குட்டி ரோஹன் கல்லூரியில் இறுதி ஆண்டு படிக்கிறான். Visual communication. மோஹித் ஒரு வித ஆண்மை நிறைந்த அழகு

எனக்கு என்னமோ இது சரியா வரும்ன்னு தோணல மோஹிக்கு ஹாரிக்கா பொருத்தம் இல்ல டி லாவண்யா என்றவர் லோகேஷ் பக்கம் திரும்பி உன் பொண்டாட்டி கிட்ட சொல்லி குழந்தையோட வீட்டுக்கு எப்போ வராள்ன்னு கேட்டு சொல்லு. முதலில் அவளோட வாழ்க்கையை வாழட்டும் அப்புறம் அவளோட தங்கச்சிய பத்தி யோசிக்கட்டும் என்றார் சுதா.

ஆம் லோகேஷ்க்கு ஆறு மாத ஆண் குழந்தை ஜிஸ்னு ஜனார்த்தனன் வீட்டில் இருக்கிறாள் அமலா. தங்கையின் கல்யாண செய்திக்காக காத்திருக்கிறாள். மாடலிங் துறையை விட்டு விட்டு லோகேசின் காதலில் ஒன்றி போய் குழந்தைக்கு தாயாகி விட்டாள்.

லோகேஷ் மற்றும் லாவண்யா இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ள, உள்ளே வந்த ரோஹன் அக்கா பிளைட்டுக்கு டைம் ஆகிடுச்சு என்று அழைத்தான். ரோஹன் லண்டனில் உள்ள இம்பீரியல் காலேஜில் தான் படித்துக் கொண்டிருக்கிறான்.

ராம சந்திரன் இன்னும் குழப்பமாகவே இருக்க, லாவன்யா தனது தம்பியை பார்த்து இதுக்கு மேலே நான் சொன்னா சரி பட்டு வராது தம்பி. நீ அமலாவையே கேட்க சொல்லு, இல்லன்னா உன் மாமனாரை வந்து பேச சொல்லு என கிளம்பி விட்டாள்.

லோகேஷ் அவர்கள் இருவரிடமும் வந்து ப்பா அம்மா என அழைக்க, சுதா பேச வர, ஒரு நிமிசம் இரு சுதா நான் பார்த்துக்கிறேன் என சொன்ன ராமச்சந்திரன். சரி அவங்க வீட்டில் இருந்து ஜாதகத்தை கொடுக்க சொல்லு என்றார்.

இதை கேட்டதும் லோகேஷ் முகம் பிரகாசிக்க,
என்னங்க என சுதா கொந்தளித்தார். இல்ல சுதா லாவண்யா சொல்றதும் சரி தான். முதல்ல மோஹித் வீட்டுக்கு வரட்டும். அடுத்த கட்டமாக ரெண்டு பேருக்கும் நிச்சயம் பண்ணிட்டு சீக்கிரமா கல்யாணம் பண்ணிடலாம். பெத்தவங்க சொல்லி பிள்ளைகள் கேட்கும் காலம் போய் பிள்ளைங்க சொல்லி பெத்தவா கேட்கும் காலம் வந்திடுச்சு. என பெரு மூச்சை விட்டவர். எப்படியோ நடக்கட்டும் என அந்த இடத்தை விட்டு சென்று விட்டார்.

இந்த சந்தோசமான விசயத்தை உடனே அமலாவிடம் சொல்ல வேண்டும் என வேகமாக அவளுக்கு அழைத்து விவரத்தை கூறினான் லோகேஷ். டாடி! டாடி நம்ம நினைச்சது நடக்க போகுது. ஹாரிகாவுடய ஜாதகத்தை என் மாமனார் வாங்கிட்டு வர சொல்லி இருக்கார். என வந்திறங்கினாள் அமலா. அவளின் குழந்தையை கேர் டேக்கர் பார்த்து கொள்கிறார். குழந்தைக்கு தாய் பால் கூட அவள் கொடுப்பது கிடையாது. இந்த மாதிரி குணநலன்கள் கொண்ட ஒரு அழகான பேய் வீட்டில் இருக்கும் போது அதே போல இன்னொரு ராட்சஸி எதற்கு என ராமசந்திரன் மற்றும் சுதா இவர்களின் எண்ணம். அவள் சாதாரண பேய் இல்லை குடும்பத்தை கெடுக்கும் ஒண்ட வந்த பிடாரியாக ஹாரிகா வந்து சேர போகிறாள். மோஹித்தின் மணைவியாகும் கனவுடன்.

பார்ப்போம் அது நடக்கிறதா? இல்லையா என்று.

பச்சை பசேல் என காடுகளும் மரங்களும் உரசிகொள்ள அதில் மூலிகை வாசம் காற்றில் பரவ, மெலிதாக தூறிய மழையில் ஜோடி குருவிகளும் பறவைகளும் தன் இணையின் ரெக்கையில் கதகதப்பாக கட்டி அணைத்துக் கொண்டிருக்க அந்த ரம்யாமான காட்சியில் இன்னும் அழகை கூட்டும் விதமாக புடவையிலேயே ரவிக்கையாக்கி அங்கம் மறைத்து அள்ளி விரிந்த கூந்தலுடன் பால் வண்ணம் பளபளக்க, கழுத்திலும் காதுகளிலும் அவர்களின் ஊர் வழக்கப்படி நகைகள் எப்பொழுதும் ஒட்டிக் கொண்டிருக்க, நெற்றியில் சிவப்பு நிறமாக காய்ச்சபட்ட வேங்கை பொட்டை அழகாக வைத்திருந்தவள். உதடு கடித்த படி மாட்ட கூடாது மாட்டவே கூடாது என தண்ணீருக்குள் குதித்தாள்.



யாரவள்? தேனருவி.. பெயருக்கு ஏற்ப தேன் பேச்சு..பூரித்த அழகு தான். அவளுக்கு 18 வயது தொட இன்னும் நான்கு நாட்களே இருக்க, அவர்களின் குல வழக்கப்படி மூக்குத்தி மற்றும் காதுகளில் இன்னும் அல்ல தோடு குத்தி சாமியிடம் வேண்டிக்கொண்டு திருமணத்துக்கு தயாராக வேண்டும். மூக்கு குத்தினால் வலிக்கும் என அவளின் தோழி முல்லை கூறி இருக்கிறாள். அதனால் தீவிர திட்டம் தீட்டி இப்படி யார் கண்ணிலும் படாமல் பறந்து மறைந்து விளையாடிக் கொண்டிருக்கிறாள் தேனு.

தேனு எங்கே இருக்க கையில் மாட்டின அவ்ளோ தான் டி! என அவளின் தோழிகள் அனைத்து பக்கமும் தேடிக்கொண்டிருக்க.. இங்கிருந்தால் வேலைக்கு ஆகாது. ஹான் நம்ம போய் எதுவும் சின்ன காயம் பட்டுக்கிட்டு வயக்காட்டில் இருக்கும் மரவீட்டில் போய் பதுங்கி இருப்போம். பொழுது சாயும் நேரம் வரும் போது அடி பட்ட கைய அய்யன் கிட்ட வந்து காட்டிக்கலாம் என திட்டம் தீட்டியவள் விதியை நோக்கி ஓடினாள்.

ஆறடி உயரத்தில், உடற்பயிற்சியின் திறனில் உருண்டு திரண்ட உடலில் நெருங்கி வளர்ந்திருந்த தாடியில், தனது கூலர்சை கழட்டிக் கொண்டே இயற்கை காட்சியை ரசித்த படி மலை பாங்கான இடத்தை ரசித்துக் கொண்டே மரவீட்டை நோக்கி கைடுடன் வந்தான் மோஹித். யானை, சிறுத்தை எதுவும் வருமா? என கேட்டுக் கொண்டே நடந்தான். இல்லைங்க சாமி அதெல்லாம் வராது. இந்த பக்கம் அதிகமா எங்க ஊர் காரங்க தான் சாமி இருப்பாங்க. எங்க இடத்தையெல்லாம் பார்க்கணும்னு சொன்னீங்களே நாளைக்கு வந்து கூட்டிட்டு போறேன் சாமி என்றான்.

ம்ம் என்று ஒற்றை பதில் அளித்தவன். அங்கிருக்கும் மர வீட்டை பார்த்தான். அங்கே மேலே போலாமா?

ம்ம் தாராளமா சாமி என அந்தகன் பதிலளிக்க.. சரி என அந்த இடத்தை தன் கேமரா கொண்டு போட்டோ எடுத்துக் கொண்டே சென்றான். இருவரும் tree ஹவுஸ் மேலே ஏறிக்கொண்டார்கள். அரை மணி நேரம் இயற்கை காட்சியை ரசித்த படி தனது கற்பனையை அலைய விட்டான் மோஹித். அங்கதன் வானத்தை பார்க்க நன்கு இருட்டி இருக்க, சாமி பலத்த மழை வர மாதிரி இருக்கு வாங்க போயிடலாம் என அழைத்தான்.

நீ போ! எனக்கு கொஞ்சம் போட்டோஸ் எடுக்கணும் இன்னும் கொஞ்ச நேரம் இருந்திட்டு வரேன் என அங்கதனையும் ஒரு படம் எடுத்தான் மோகித்... சரிங்க சாமி என அசடு வழிந்து கொண்டே தலையை சொரிந்த படி இறங்கி சென்று விட்டான் அங்கதன்.

இடி மின்னலுடன் மழை தூரத்தில் இருந்து வர ஒருத்தி அதனுடன் போட்டி போட்டுக் கொண்டு ஓடி வந்து கொண்டிருந்தாள். அனைத்தையும் போட்டோ கிளிக் செய்த மோகி மழை வருவதை வீடியோ எடுக்கலாம் என திருப்பினான்.

அவன் பார்த்
த காட்சியில்...?

வருகிறாள் தேனருவி

வருவாள்...
 
Top