Pradhanya

Active member
Staff member
Joined
Oct 6, 2024
Messages
120
வானதி கீழே வரும் வரை உணவு மேஜையில் போனை நோண்டிய படி அமர்ந்திருந்தான் ஜீவா. சீதா அவனருகில் வந்து ஜீவா சாப்பாடு வைக்கட்டுமா?

"நீங்க அப்பாவை மட்டும் கவனிச்சுக்கோங்க" என முடித்து விட்டான்.

அத்தை நான் வந்துட்டேன் என வானதி புன்னகையுடன் இறங்கினாள்.

அவளை திரும்பி ஒரு பார்வை பார்த்தான். எவ்ளோ பேசினாலும் கொஞ்சம் கூட அதை முகத்தில் காட்டாமல் மீண்டும் மீண்டும் தன்னை நாடி தனது அன்பை நாடி வருபவளை எண்ணி ஒரு பக்கம் காதலும் இன்னொரு பக்கம் இன்னும் எவ்வளவு தூரம் தனக்காக வருவாள் ? என அவளை சோதிக்க வேண்டும் எனவும் தோன்றியது.

கண்ணாடியை மூக்குக்கு தள்ளி கொண்டு நேராக அமர்ந்தான் ஜீவா. செய்து வைத்த அனைத்தையும் பரிமாறினாள். நீயும் உட்காரு! என அவளையும் அழைத்தான். சரிங்க என எந்த மறுப்பும் சொல்லாமல் அருகில் அமர்ந்து கொண்டாள்.

இருவரும் ஒன்றாக சாப்பிட்டார்கள். வானதி மெதுவாக கோழி கொத்துவதை போல உணவை சாப்பிட்டாள். எப்படி திருப்தியாக சாப்பிட முடியும். அவளின் நிம்மதியை சில்லு சில்லாக உடைக்கவே இருக்கிறான் அவளின் காதல் கணவன் ஜீவா.

ஜீவாவின் மொத்த கவனமும் உணவில் இல்லை.. வானதியின் மீது தான் இருந்தது. கைகளை கழுவி விட்டு எழுந்து அறைக்கு சென்று விட்டான். வானதி வாயை துடைத்த படி வெளியே வந்தவள். அத்தை மாமா நீங்க ரெண்டு பேரும் சாப்பிட்டீங்களா? என கேட்டாள்.

உன்னோட புருசன் சாப்பிடும் வரை நான் வெளியே வரவே மாட்டேன்னு சொல்லிட்டார். அங்கே கேளு என சிரித்துக் கொண்டே சைகை காட்டினார் சீதா.

என்ன மாமா? அப்படியா? என வானதி பார்க்க, ஆமாம் மா! அவன் கிட்ட யாரு திட்டு வாங்க? சீதா சொல்ற மாதிரி அவன் பண்றது எல்லாமே எங்க அம்மா போல தான் இருக்குது என்றவர். சீக்கிரம் எடுத்து வை சீதா எனக்கு பசிக்குது என உணவு மேஜையில் அமர்ந்தார்.

என்ன இது? இன்னிக்கு ஐட்டம் நிறைய இருக்கு போலயே என சீதா சொல்ல, அப்போ கட்டாயமா நீ பண்ணிருக்க மாட்ட. என சிவராமன் சொல்ல, ஆமா உங்களுக்கு நான் எதுக்கு இத்தனையும் பண்ணி தருவேன் என முறைத்தார் சீதா.

என்ன இது சின்ன குழந்தை மாதிரி ரெண்டு பேரும் சண்டை போடுறீங்க? உட்காருங்க நான் பரிமாறுனேன். என வானதி உணவுகளை எடுத்து வைத்தாள்.

அத்தை உங்களுக்கு? என வானதி சீதாவுக்கு உணவுகளை எடுத்து வைக்க

வானதிஇஇ! என வீடே அதிரும் படி கத்தினான் ஜீவா.

சீதா மற்றும் சிவராமன் இருவரும் ஒரே நேரத்தில் நீ மேலே போமா நாங்க பார்த்துக்கிறோம் என கூற... வானதி இருவரையும் உற்று பார்த்தவள் ஒன்னும் சொல்றதுக்கு இல்ல. அவருக்கு நீங்க ஏன் இப்படி பயப்படுறீங்க என கேட்டுக் கொண்டே மேலே சென்றாள்.

வானதி அறைக்குள் நுழைந்ததும், நான் தான் மேலே வந்துட்டேன்ல அப்புறம் உனக்கு கீழே என்ன வேலை? என கண்ணாடியை மூக்குக்கு தள்ளி கொண்டே கேட்டான்.

இங்கே என்ன வேலை இருக்கு? அது தான் கீழே இருந்தேன். என வானதி அவனை பார்த்து கூறினாள்.

"என் கூட இருக்க தான் உன்னை கல்யாணம் பண்ணி கொடுத்தாங்க." என்றான் ஜீவா.

வானதி அவனை சோர்வுடன் பார்த்தவள். சொல்லுங்க என்ன வேணும்? எதுக்கு வர சொன்னீங்க?

"எனக்கு தூக்கம் வருது!"

அதுக்கு?

"நீ என்னை தூங்க வை "

உங்களுக்கு தூக்கம் வந்தால் நான் என்ன பண்ண முடியும்? படுத்து தூங்குங்க! எனக்கு கீழே கொஞ்சம் வேலை இருக்கு என வானதி ஓரடி எடுத்து வைத்தாள்.

"வானதி!"

நான் தான் சொல்லிட்டெனே! திரும்ப திரும்ப என்னை தொந்தரவு பண்ணாதீங்க என அலட்சியமாக நடந்தாள்.

"வா மார்னிங் டிரை பண்ணலாம்! ட்ரெஸ் கழட்டு"

வானதி அவனை திரும்பி ஒரு பார்வை பார்த்தாள். இந்த ஒரு வாரமும் என்ன பண்ணான்? என நினைவு வந்தது. ஒன்றும் செய்ய வில்லை. சும்மா வேண்டும் என்று தன்னை எதாவது ஒரு வகையில் அவனருகில் வைத்துக் கொள்ள வேண்டும். அதற்கு தான் இந்த குழந்தை சாக்கு!

என்ன அப்படி பார்க்கிற? வான்னு சொன்னேன்.

இதோ வரேன்! என அவனது அருகில் வந்தாள். கண்களில் கொஞ்சம் கூட வெட்கமோ கூச்சமோ இல்லை. உடைகளை கழட்டி விட்டு அவன் அருகில் வந்து படுத்தவள் கண்களை மூடிக் கொண்டாள்.

ஜீவா அவளின் அருகில் நெருங்கி வைத்த கண் வாங்காமல் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தான். வானதி எதுவும் பேச வில்லை. கண்களும் மூடி இருந்தது. வானதியை பார்க்க பார்க்க, பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும் போல தோன்றியது. ஒரு காலத்தில் வானதியின் அருகில் நிற்கவும் அவளின் சுண்டு விரலை தொடுவது கூட அவனுக்கு வரம் தான். அதை விட அவளின் பார்வை தன் மீது பட்டால் உள்ளுக்குள் சொல்ல முடியாத பரவசம்.. அப்படி இருந்த ஜீவா இன்று ஏன் இவ்வாறு நடந்து கொள்கிறான். (கூடிய சீக்கிரம் உங்களுக்கு தெரிய வரும்)

ஜீவா மெல்ல அவளின் முகத்தில் முத்தமிட்டவன் மெதுவாக உதட்டில் முத்தமிட்டான் அழுத்தமாக. இந்த ஏழு நாட்களில் அவனது முத்தத்தில் உணர்வுகள் மொத்தத்தையும் பிரதிபலிக்கும் அவளின் கண்களும் முகமும் இனி எந்த உணர்வும் இல்லாமல் படுக்கையில் கிடந்தாள்.

"வானதி! என்ன டி தூக்கமா? கண்ணை திற? என ஜீவா அதட்டி கொண்டே அவளை கை வளைவுக்குள் கொண்டு வந்தான்.

என்னங்க நிறுத்திட்டீங்க? சீக்கிரம் அடுத்த கட்டத்துக்கு போங்க எவ்ளோ நேரம் இப்படியே பார்த்துட்டு இருப்பீங்க? என்றாள் மென்மையுடன்..

எப்போ பாரு ஜீவா ஜீவான்னு கூப்பிடும் அவள் இன்று அவளின் செய்கையில் அவளின் சொல்லில் இத்தனை வித்தியாசம் என ஜீவாவின் கண்கள் கூர்மையானது.

வானதி! அதுக்கு நீயும் கொஞ்சம் எதுவும் செய்யணும்? அதை விட்டு மரக்கட்டை மாதிரி இருந்தால் என்ன அர்த்தம்? ஒரு வேளை உன்னோட கல்யாணம்? என நிறுத்தி விட்டு அவளை பார்த்தான் ஜீவா.

இப்போ என்ன பண்ணனும்? சொல்லுங்க என அருகில் நெருங்கியவள் வெற்று பார்வையுடன் அவனது உதட்டுக்கு அருகில் வந்து முத்தம் கொடுக்கணுமா? என கேட்டாள்..

"எனக்கு முத்தம் வேணும்!" என்று கேட்பவள் இன்று முத்தம் கொடுக்கணுமா என்கிறாள்.

"எத்தனை வித்தியாசம்? கோபமாக வந்தது. உன்னை பார்த்தால் எனக்கு கொஞ்சம் கூட மோட் பில்ட் அப் ஆகவே மாட்டிக்குது? என்ன பண்றது?" என ஜீவா அவளிடம் கேட்க.. மென்மையாக புன்னகையை சிந்தியவள்.

பெரிய டாக்டர் உங்களுக்கே தெரியல! எனக்கு எப்படிங்க தெரியும்? நான் சாதாரண நர்ஸ் தான என அவனை பார்த்தாள் வானதி.

ஆனால் வேற வழி இல்ல நீ என் கூட இருந்து இப்படி கஷ்டம் அனுபவிக்கனும்ன்னு எழுதி இருக்கு என உதட்டுக்கு அருகில் வந்தவன். என்னை கட்டி பிடி! குழந்தை வேணும்னு நினைச்சா! என்றவன் அவளின் அருகில் நெருங்கி முத்தமிட ஆரம்பித்தான் ஆவேசமாக.. அவளின் அங்கங்களின் வனப்பை ரசித்து அருகில் இழுத்தவன் வழக்கம் போல முக்கனிகளில் அடங்காத சுவையை ரசித்து ருசித்து கொண்டான்.

வானதி கண்களை மூடி படுக்கை விரிப்பை இறுக்கி பிடித்துக் கொண்டாள். தேகம் மொத்தமும் அவனது கைகள் தடவி பார்த்தது. மேடுகள், பள்ளங்கள், சுளிகள், வெட்டுகள் என ஆராய்ச்சி சென்று கொண்டிருந்தது. உணர்வுகள் மொத்தத்தையும் அடக்கி கொண்டு படுத்திருந்தாள். அவன் எட்சில் படுத்திய அனைத்து இடங்களும் துடித்துக் கொண்டிருந்தது. ஆனால் கூடல் இல்லை... மீண்டும் முதலில் இருந்து உணர்வுகளை கிளறி விட்டு அவள் தகித்து எரிவதை பார்த்தான் ஜீவா. அவளை விட ஆயிரம் மடங்கு வலி அவனுக்கு. இப்படியே மதிய உணவை மறந்து மாலை வரை கட்டிலில் அவளை வைத்து விளையாடி கொண்டிருந்தான்.

அவனது தீன்டலில் துவண்டு போனவள் ஒரு கட்டத்தில் தூங்கி விட்டாள். இரவு டூட்டிக்கு கிளம்பி விட்டான். அவளை விட்டு போக மனமில்லை. ஆனால் போயே ஆக வேண்டிய கட்டாயம். மதியம் அவள் செய்த உணவை சாப்பிட்டவன். அவளின் அருகில் வந்து ஆசை தீர பூ முகத்தை மனதில் நிரப்பி கொண்டு கிளம்பினான்.

அடுத்த நாள் காலை கூட ஜீவா வீட்டுக்கு வர வில்லை. இன்று இரவு அவளுடன் உறங்க வேண்டும் என்ற ஆசையில் பகல் டூட்டியயும் பார்த்து முடித்து விட்டு வீட்டுக்கு வந்தான். அவனது கண்கள் அறை முழுவதும் தேடியது அவளை தான். வானதி அங்கு இல்லை.. வேகமாக குளித்து முடித்து விட்டு கீழே வந்தவன் அனைத்து இடங்களிலும் தேடினான். வானதி இல்லை.

எங்கே போயிட்டா? என தேடினான். ஒருவேளை கடைக்கு போயிருப்பாளா? என இன்னொரு பக்கம் தோன்ற மீண்டும் அறைக்கு சென்றான். ஆனால் ஒரு முறை கூட அவளுக்கு போன் செய்து கேட்க வேண்டும் என தோன்றவே இல்லை.

இரவு உணவுக்கு கீழே வந்தவன் கோபத்துடன் அம்மா என அழைத்தான். என்ன டா ஜீவா பசிக்குதா? என கேட்டுக் கொண்டே வந்தார் சீதா.

வானதி எங்கே? என அதற்றலுடன் கேட்டான் ஜீவா.

"அவள் வேலைக்கு போயிட்டா! இன்னிக்கு 4.30 மணிக்கு டூட்டி அதனால் நைட்டு 11.30 மணிக்கு முடியும்ன்னு சொன்னா! என்ன டா ஆச்சு?" என சீதா கேட்க...

ஜீவாவுக்கு கோபம் கொழுந்து விட்டு எரிந்தது. எவ்வளவு தைரியம் இருக்கும்? இவளை என திரும்பினான்.

வான்மதி , வானதி ரெண்டு பேரும் கல்யானத்துக்கு அப்புறம் வேலைக்கு போவாங்கன்னு சொல்லி தான் கட்டி கொடுத்தாங்க என சீதா சொல்ல வர... அந்த நேரம் வான்மதி மற்றும் சஞ்சய் இருவரும் ஆபிஸ் முடித்து வீட்டுக்குள் நுழைந்தார்கள்.

ஜீவா தன் அன்னையை முறைத்து விட்டு மேலே சென்றவன் சிறிது நேரத்தில் கீழே வந்தான். எங்கே டா போற? என சீதா கேட்க.. .

நான் அவளை டூட்டி முடித்து கூட்டிட்டு வரேன் என சொல்லி விட்டு காரை கிளப்பினான்.

நீ பண்ண வேலை அப்படி? என கார்த்திக் முறைத்து பார்க்க, சங்கவி அவளின் டூட்டி இரவு தான் ஆரம்பம் ஆகிறது. வானதி வேலை பார்க்கும் மருத்துவ மனைக்கு எதிரில் நாங்கு கட்டிடங்கள் தள்ளி தான் ஜீவா, கார்த்திக் மற்றும் சங்கவி என மூவரும் வேலை செய்கிறார்கள்.

இனி எப்புவும் என் கூட பேச மாட்ட அப்படி தானே! என காபியை கார்த்திக்கிடம் நீட்டினாள் வானதி.

ஜீவா அவளை பிக் அப் செய்ய வரவும் கார்த்திக் வானதியிடம் பேசி விட்டு திரும்பவும் சரியாக இருந்தது.

வானதி ...?

ஜீவா ...?

நெருக்கம் தொடரும்...
 

Author: Pradhanya
Article Title: Episode-11
Source URL: Pradhanya kuzhali novels-https://pradhanyakuzhalinovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top