Pradhanya

Active member
Staff member
Joined
Oct 6, 2024
Messages
120
காரில் செல்லும் போது மோஹித் சாலையையும், அவளையும் மாறி மாறி பார்த்தான். என்ன மேடம்க்கு முகம் ஒரு மாதிரி இருக்கு? என மெதுவாக கேட்டான்.

ஒன்னும் இல்ல என்பதை போல தலை அசைத்தாள். இல்ல சொல்லு என காரை ஓரமாக நிருத்தியவன் அவளின் கன்னத்தை தடவினான். அதில் அவள் கண்களில் நீர் கோர்க்க, இப்போ எதுக்கு டி அழுகிற? நான் தொட்டா மேடம்க்கு பிடிக்கலையோ என்றவன் கோபமாக பேசினான். உள்ளுக்குள் ஒரு வருத்தம் ஒரு வேளை நீங்க தொட்டால் பிடிக்கலன்னு சொல்லிட்டா என்ன பண்றது? என அவனுக்கு உள்ளுக்குள் வருத்தம் ஏற்பட, சட்டென திரும்பினான்.

அவள் மெதுவாக அவனை பார்த்தவள். இல்லைங்க சாமி! அய்யோ மோ மோஹித் என நாக்கை கடித்து கொண்டு எனக்கு பயமா இருக்கு. நீங்க திடீர்னு என்னோட வாயை கடிச்சு வைக்கிறது, இங்கே எதோ வந்து முட்டி எதோ அப்புறம் நைட்டு என அருவி ஆரம்பிக்க.. இப்போது தான் அவனுக்கு எதோ கொஞ்சம் நிம்மதியாக இருந்தது. பயமா இருக்கா? என அவளின் கைகளை பிடித்தான்.

ம்ம்..

அப்போ பிடிக்கலயா? என மோஹித் கேட்க.. தெரில என்றாள்.

மோஹித் தன் தவறை எண்ணி நொந்து கொண்டவன். சரி சாரி! என கன்னத்தை பிடித்தான். அவள் கண்கள் பெரிதாக விரித்து பார்த்தாள். ம்ம் மன்னிச்சிடு! இனி அப்படி நடந்துக்க மாட்டேன் சரியா!

இல்ல சாமி நீங்க என் கிட்ட ... என அவள் ஆரம்பிக்க .. மோஹித் முறைத்து பார்ப்பது நன்றாகவே தெரிந்தது. உடனே அவள் தயக்கத்துடன் மோஹித் என மெதுவாக அழைத்தாள்.

ம்ம் அது! என மெல்ல கன்னத்தை வருடினான். அங்கிருந்து அவளை நேராக போன் வாங்க கூட்டி சென்றான். எனக்கு எதுக்கு மோ.. மோஹித் இது? என அவள் கேட்க... நான் நாளையில் இருந்து ஷூட்டிங் போயிடுவேன். என் கிட்ட நீ எப்படி பேசுவ? அதுக்கு தான்.

நான் எதுக்கு உங்க கிட்ட பேசணும்? என குதர்கமாக கேட்டு வைத்தாள். அதற்கு அவன் எந்த பதிலும் சொல்ல வில்லை. போனை வாங்கினான். அதான் பின் பொடிக் சென்று உடைகளை அவளுக்கு பார்த்து பார்த்து தேர்வு செய்து வாங்கினான். அங்கிருந்து ஒரு காலேஜ் பேராசிரியரை சந்திக்க அழைத்து சென்றான். தமிழ் ஆங்கிலத்தில் பட்டம் பெற்ற பெண் ஆசிரியை. ஆம் அருவிக்கு பாடம் சொல்லி கொடுக்க மோஹித்தின் ஏற்பாடு. அவள் சிறு குழந்தை போல அவனுடன் வந்தாள் எதுவும் கேள்வி கேட்க வில்லை. அங்கிருக்கும் மக்களையும் வாழ்க்கை முறையையும் பிரமிப்புடன் பார்த்தாள்.

கடைசியாக அவளை படத்துக்கு அழைத்து சென்றான் மோஹித். அவனது கையை அவளாக பிடிக்கும் முதல் தருணம் இதோ இப்பொழுது நிகழ போகிறது. க்கும்..
என்னாச்சு தொண்டைக்கு?

அது எங்க ஊர்ல கண்ணாலம் கட்டிகிட்டவங்கள அதாவது புருஷனை முறை வச்சு கூப்பிடுவாங்க என்றாள் தயக்கத்துடன். என்ன முறை சொல்லு கேட்போம் என்றான்.

மாமா .. மச்சான் என்றாள் தேனருவி.

சரி மேடம் என்ன முடிவு பண்ணிருக்கீங்க? என மோஹித் பார்வை அவள் மீது பதிந்தது. அது அது என தீவிரமாக யோசித்தாள்.

மச்சி சொல்றயா?

அப்டின்னா? என அருவி கேட்க..

மச்சான் சார்ட் ஃபார்ம் மச்சி! எப்படி? உனக்கு ஓகேவா?

இல்லை எனக்கு மாமா சொல்ல புடிக்கும்? அப்படியா? என அடி கண்ணால் அவளை பார்த்தான் முகத்தில் வெட்கம் தாண்டவம் ஆடியது. சட்டென முகத்தை மூடினாள் அருவி.

மேடம்க்கு தான் என்னை பிடிக்காதே! நீங்க எதிர் பார்க்கிற அளவுக்கு நான் இல்லையே என்றான் குறும்பாக.

அது சின்ன வயசில இருந்து என்னை கட்டிக்க போறவரை நான் அப்படி கூப்பிடனுன்னு தான் ஆசையா இருந்தேன் என்றவள். ஆனால் உங்களை எதிர்பாராமல் கட்டிகிட்டென். என்னால தான் எல்லா பிரச்னையும் என முகம் வாடி போனது அவளுக்கு.

ம்ம் இறங்க வேண்டிய இடம் வந்திடுச்சு என கார் பார்க்கிங் செய்து விட்டு அவளை படத்துக்கு அழைத்து சென்றான். எங்கே கூட்டி போறீங்க? எனக்கு பயமா இருக்கு என தேட்டரின் இருட்டை பார்த்து பயந்தாள் அருவி.

பயப்படாத வா என அவன் முன்னே அவர்களுக்கான இடத்தில் அமர்ந்து அவளையும் கை பிடித்து அமர வைத்தான். ஒரு சில நொடிகளில் ஸ்கிரீன் ஒளிர ஆரம்பித்தது. எழுத்துக்கள் அதன் பின் அடுத்த காட்சிகளில் மனிதர்கள் வந்தார்கள். அவர்களை பார்த்த அடுத்த நொடி பிரமிப்புடன் அருவி அவனது கைகளை பிடித்து என்ன இது? என கேட்டாள்.

முதன் முறை அவளாக பிடிக்கும் நொடி. அந்த நிமிடம் மோஹித்தின் உள்ளே சில்லென சாரல் காற்று மழையுடன் வீச இமைக்க மறந்து அவளையே பார்த்தான். சொல்லுங்க மாமா இது என்ன? மனுசங்க அங்கே இருக்காங்களா? என குழந்தையை போல அவள் கேட்க. கண்களில் ஆச்சரியமும் ஆவலும் கொட்டி கிடந்தது.

இதுக்கு பேரு சினிமா. இந்த படம் எடுக்கிற வேலையை தான் நான் பண்றேன். என்றான் மோஹித். அப்படியா!! அம்மாடியோவ் எம்புட்டு பெருசா இந்த ஆளுக இருக்காங்க என ஆயிரம் கேள்வி கேட்டவள். அவனிடம் குழந்தை போல அத்தனை கேள்வி. மோஹித் அவளிடம் சலிக்காமல் பதில் கொடுத்தான். அவளின் பேச்சு தித்திப்பாக இருந்தது. மோஹித் பேச பேச அவள் தன்னை அறியாமலேயே மொத்தமாக அவன் கட்டு பாட்டுக்குள் மெல்ல அவளின் மன கதவில் அவன் வந்து அமர்ந்து கொண்டான்.

மாமா இந்த பாட்டு நல்லாருக்கு என ஆத்மார்த்தமாக அவள் கூற, கால் மி மோஹித் என அதிலேயே நின்றான். படம் மொத்தமாக முடியும் வரை விழி அகலாமல் படத்தையே பார்த்தாள். படம் முடிந்து விட வாடி போலாம்.

அவ்ளோ தானா? என அருவி கேட்க... அவ்ளோ தான் முடிஞ்சு போச்சு என்றான்.

இது ஒன்னு தான் இருக்கா? என அவள் பாவமாக கேட்க... அதில் சிரித்த மோஹித் உனக்கு நான் நிறைய படம் கூட்டிட்டு வந்து நம்ம ரெண்டு பேரும் சேர்ந்து பார்க்கலாம். ஓகே வா!

ம்ம் ஓகே என முதல் வார்த்தையில் ஆங்கிலத்தில் கூறி விட்டாள். ஹனி பேபிஇஇஇ என கட்டி கொண்டு கன்னத்தில் முத்தமிட்டான் மோஹித்.

அவளின் இதயம் வேகமாக துடிக்க, காலையில் கஷ்டமாக தெரிந்த விசயங்கள் அனைத்தும் இப்போது அவஸ்தையாகவும் தெரிந்தது அருவிக்கு. மாமா... எல்லாரும் இருக்காங்க இது தெய்வ குத்தம் என்றாள் சிணுங்கி கொண்டே.

அடியே போடி! என சிரித்து அவளின் வெட்கத்தை ரசித்து கொண்டு வெளியே அழைத்து வந்தவன் நேராக சாப்பிட அழைத்து சென்றான். அதன் பின் வீட்டுக்கு கிளம்பினார்கள். போகும் வழியில் காரில் அவளிடம் அருவி.. ஹே ஹனி என அழைத்தான்.

அவள் திரும்பி பார்க்க, ம்ம் நாளையில் இருந்து உனக்கு பாடம் சொல்லி கொடுக்க ரேவதின்னு ஒருத்தங்க வருவாங்க. அவங்க சொல்லி கொடுக்கிற விசயத்தை நீ கத்துக்கணும் சரியா?

எதுக்கு என அருவி கேட்க.. மோஹித் அவளிடம் அப்போ தான் இங்கே இருக்க விசயம் எல்லாம் உனக்கு புரியும். கொஞ்சம் கொஞ்சமா நீ எல்லா விசயத்தையும் கத்துக்கலாம். தெரியாத விஷயங்கள் எழுத படிக்க எல்லாமே கத்துக்கணும் டி என செல்லமாக அவளின் தலையை தட்டினான்.

ம்ம் ஆனால் எனக்கு பயமா இருக்கு என அவனது கைகளை பிடித்துக் கொண்டாள். எதுக்கு பயம்? நான் இருக்கேன் நீ எதுக்கும் பயப்பட வேணாம். உன் கிட்ட போன் இருக்கு நான் உனக்கு போன் பண்ணுவேன். நீ அதில் என் கிட்ட பேசலாம் என அனைத்தும் சொல்லி கொடுத்தான். கற்பூர புத்தி அவள் கப்பென பிடித்துக் கொண்டாள்.

அவர்கள் ஒன்னும் முண்ணும்மாக பழகி கொண்டு சந்தோசமாக கைகளை கோர்த்துக் கொண்டு வீடு வந்து சேர்ந்தார்கள். அங்கு தான் ஆப்பு ஹாரிகா வடிவில் அமர்ந்திருந்தது.

அருவி எந்த சினிமாவை இன்று பிரமித்து பார்த்தாலோ அதே சினிமாவால் தான் மோஹித்தை விட்டு விலகி செல்ல போகிறாள். அதை வஞ்சிகளான ஹாரிகா, அமலா , லாவண்யா என மூன்று பெண்களும் அவளை என்னவெல்லாம் செய்ய போகிறார்களோ?

பார்ப்போம்.

வருவாள்.
 
Top