அருவி அவனது கைகளை கோர்த்துக் கொண்டு சில்லறை காசுகளாக குலுங்கிய சிரிப்புடன் வீட்டுக்குள் நுழைந்தாள். மோஹித்தின் கண்கள் இவ்வளவு நேரமும் சிரித்துக் கொண்டிருந்த அந்த சந்தோஷம் ஒரே நிமிடத்தில் காணாமல் போனது. ஆம் ஒற்றை இருக்கை சோபாவில் ஒரு பக்கம் ஹாரிகா அமர்ந்திருக்க இன்னொரு பக்கம் லோகேஷ் அமர்ந்திருந்தான். அமலா கையில் குழந்தையை வைத்துக் கொண்டு ராம சந்திரனிடம் எதோ சொல்லிக் கொண்டிருக்க... அவரோ புருவம் இடுங்க தீவிர சிந்தனையில் அமர்ந்திருந்தார்.
அக்கா வேணாம் விடு! நான் கிளம்புறேன். டாடிய வர சொல்றேன் என மிகவும் பவ்யமாக ஹாரிகா எழுந்தாள். இவ்வளவு நேரமும் சிரித்து பேசிக் கொண்டிருந்தவள். உள்ளே ஹாரிகாவை பார்த்த அடுத்த நொடி மோஹித்துடன் கோர்த்திருந்த கைகளை எடுத்துக் கொண்டாள் அருவி.
மோஹித் பற்களை கடித்த படி, ஹே இப்போ எதுக்கு டி கைய விட்ட? என தோலின் மேல் கைகளை போட்டு அழுத்தமாக பற்றி அவளின் முகத்தை பார்த்தான். அது வந்து எல்லாரும் இருக்காங்க சாமி என அவள் சொல்ல.. அவனது கோபம் கண்கள் சிவக்க அவளின் கொஞ்சமே விலகி இருந்த வெற்று இடையில் கைகளை பரப்பினான்.
அம்மாடியோவ்!!!
இதை மோஹித் பெரிது படுத்தி கொள்ளாமல் இப்போ கைய பிடிக்கிரயா இல்ல நான் இடுப்புல கை வச்ச்சிட்டு நம்ம ரெண்டு பேரும் உள்ளே போலாமா? என கேட்ட படி மெதுவாக நடந்தான். பிடி.. பிடிக்கிறேன் என கைகளை கோர்த்துக் கொண்டாள் வேகமாக.
நீ சட் அப் ஹாரி. என்ற அமலா. தன் மாமனாரிடம் அங்கில் எங்க அப்பா ரொம்ப டிப்ரஸ்டா இருக்காரு. இப்போ ஹாரிகா வீட்டுக்கு போனால் அவரோட கவலை இன்னும் அதிகம் ஆகிடும். ஜஸ்ட் ஹாரிகா கொஞ்ச நாளைக்கு என் கூட இருக்க போறா! டாடி வந்து அவளுக்கு இமிடியேட்டா வரன் பார்க்க ஆரம்பிச்சுட்டார். உங்க பையன் மட்டும் அப்படி ஒரு காரியத்தை பண்ணாமல் இருந்து இருக்க எந்த பிரச்னையும் இல்ல. ஆனால் இப்போ நிலமை அப்படி இல்ல. நீங்க என்ன சொல்றீங்க? என என கேட்டாள்.
லோகேஷ் உடனே தன் மனைவியின் பார்வையை புரிந்து கொண்டு எழுந்தவன். ஆமா டாடி! ஹாரிகா கூட நம்ம குடும்பத்தில் ஒருத்தி தானே! கொஞ்ச நாளைக்கு இங்கே இருக்க போறா! இதோ கெஸ்ட் ரூமில் அவள் இருக்கட்டும். என உறுதியாக பேசினான்.
சுதா சோர்வுடன் அமலாவை பார்த்தார். என்ன பிரச்னை பண்ண போராளுங்களோ! என உள்ளுக்குள் கொஞ்சம் யோசனை சந்தேகம் இருந்தது கொண்டு தான் இருந்தது. ஆனால் அதை வெளி காட்டிக் கொள்ள வில்லை.
அந்த நொடி ராமச்சந்திரன் பேசும் நேரம் உள்ளே மோஹித் மற்றும் அருவி இருவரும் வந்தார்கள். அவர் ஒரு பெரு மூச்சை விட்ட படி, ஓகே ஹாரிகா இங்கேயே இருக்கட்டும். என சொல்லி விட்டு அவ்விடத்தை விட்டு எழுந்தார்.
மோஹித் எதையும் கண்டு கொள்ளாமல் நேராக அவனது அறையை நோக்கி சென்றான். அமலா, லோகேஷ், ஹாரிகா, சுதா என அனைவர் பார்வையும் அவன் மீது இருக்க ஹாரிகா வெறுப்பு உமிழும் கண்களுடன் தேனருவியை இமை வெட்டாமல் பார்த்தாள். சுதா அனைவரையும் பார்த்து விட்டு இனி என்ன நடக்கும்னு தெரியலையே? என அவ்விடத்தை விட்டு சென்று விட்டார்.
என்னங்க மோஹித்! கைய விடுங்க என அவள் தடுமாற... கைய எடித்தேன்னு வை ரெண்டு உதடும் இருக்காது. பிச்சு தின்னுடுவென் என்றான் மோஹித் காட்டமாக. அதற்கும் மேல் பேசவா முடியும் வாய் மூடிக் கொண்டாள்.
ஹாரிகாவின் கைகளை பிடித்து கொண்டு நேராக கெஸ்ட் ரூமுக்கு அழைத்து சென்றாள் அமலா. குழந்தையை லோகேஷ் வாங்கிக் கொண்டான். ஹாரிகா இங்கு வந்து தங்குவதில் அவனுக்கு பெரிதாக உடன்பாடு இல்லை. ஏற்கனவே தனி ஆளாகவே பல தகிடு தத்தம் வேலை செய்வாள் அமலா. இப்பொழுது தங்கையுடன் சேர்ந்து கொண்டு ஆட்டம் போட்டால் என்ன செய்ய முடியும். அவன் அமைதியாக கடக்க முடிவெடுத்தான்.
அறைக்குள் வந்ததும் ஹாரிகா பைத்தியம் போல அங்கிருக்கும் பொருட்களை உடைக்க பாயிந்தாள். அவளின் கையை பிடித்துக் கொண்ட அமலா கொஞ்சம் பொறுமையா இரு ஹாரி. இது நமக்கான நேரம் இல்ல. பாரு எதோ சாக்காடையில் இருக்க வேண்டியவள் எங்கிருந்து வந்தாள்ன்னு தெரியல. எப்படி அவனை மயக்கினான்னு தெரியல கைய பிடிச்சிட்டு போறா! எனக்கு எப்டி இருக்கு தெரியுமா அமலா! பத்தி எரியுது டி. எந்த விதத்தில் டி நான் குறைந்து போய்ட்டேன் என அகங்காரத்துடன் கொக்கரித்தாள் ஹாரிகா.
நான் இந்த வீட்ல வச்ச ஸ்பை என்ன சொன்னான்ன்னு கேட்டால் நீ இப்படி பேச மாட்ட ஹாரி! என்றாள் அமலா.
என்ன சொல்ற? என ஹாரிகா கேட்க.. அமலா குரூர புன்னகையுடன் நான் சொல்றத கேளு அந்த சாக்கடை மோஹித்தை இஷ்ட பட்டு கட்டல இது ஒரு accidental மேரேஜ்.
நிஜமாவா! என உடலெல்லாம் சிலிர்த்தது ஹாரிகாவுக்கு.
ஆனால் இந்த மோஹித் எதுக்கு இப்படி நடந்துக்கறான்னு தெரியல என கூறிய அமலா. இப்போ நமக்கு மோஹித் முக்கியம் இல்ல அந்த தேனருவி தான் முக்கியம். அதை விட அவங்க ரெண்டு பேருக்கும் நடுவில் எதுவும் நடந்திருக்க வாய்ப்பு இல்ல..
அப்போ உடனே பிரிக்கலாம் அமலா. என ஹாரிகா தன் அக்காவின் அருகில் நெருங்க, பொரு சொல்றத கேளு ஹாரி முதல்ல நம்ம டார்கெட் அந்த சாக்கடை தான். அவளை தான் அவன் எப்படி தாங்குறான் பாரு என ஹாரிகா கூற.. ஆசை அறுபது நாள் மோகம் முப்பது நாள். அந்த பொண்ணு நம்பள மாதிரி இல்ல. நான் கல்யாணத்துக்கு முந்தி எனக்கு நாலு பாய் பிரண்ட்.. நான் வெர்ஜின் கூட இல்ல.. லோகேஷ்காக நான் கல்யாணம் பண்ணிக்கல. எனக்கு இந்த அந்தஸ்து வேணும். அதுக்கு தான் பண்ணிட்டேன். ஆனால் அந்த பட்டிகாட்டுக்கு அப்படி இல்ல அவளை ஈசியா தட்டி தூக்கிடலாம். நீ கவலை படாதே!
அப்போ எப்போ ஆரம்பிக்கலாம்? என பற்களை நரணரத்துக் கொண்டே கேட்டாள் ஹாரிகா. அமலா பெரு மூச்சுடன் அமர்ந்து முதல்ல அந்த லாவன்யா வரட்டும். இப்போதைக்கு நீ எதுவும் பண்ண மாட்ட. நீ ரொம்ப நல்ல பொண்ணு இப்படி பட்ட பொண்ணை நம்ம மிஸ் பண்ணிட்டோம்னு கெல்டு கட்டைங்க ரெண்டும் நம்பனும். அதுக்கு அப்புறம் லாவண்யா லூச வச்சு இந்த சாக்கடைய வெளியே அனுப்பிடலாம் என்றாள் அமலா.
நான் இப்போ என்ன பண்ணனும்? என ஹாரிகா கேட்க. . ஜஸ்ட் சிம்பதி கிரியேட் பண்ணு அது போதும். ஷூட்டிங் ஸ்பாட்டில் நீ நல்லா நடந்துக்கனும் என்றாள் அமலா.
எப்டி intimate ஆவா? என ஹாரிகா கேட்க..
அதை மட்டும் பண்ணி தொலையாத! அந்த மோஹித் எமகாதகன். நீ நினைக்கிற மாதிரி இல்ல என்றவள் நினைவுகள் பின்னோக்கி நகர்ந்தது. முதன் முதலில் அமலாவுக்கு மோஹித்தை தான் மிகவும் பிடித்திருக்க... தன்னை குடி போதையில் இருப்பவள் போல காட்டிக் கொண்டு அவளே வழிய சென்று அவனிடம் குலைந்து இருக்கிறாள். எட்ட நிறுத்தி நாசுக்காக அவமான படுத்தி விட்டு சென்று விட்டான்.
அமலா என ஹாரிகா கத்த.. ம்ம் என தண்ணிலைக்கு வந்தவள். நீ இழுத்த இழுப்புக்கு எல்லாம் மோஹித் வர மாட்டான். கொஞ்சம் பொறு. லாவண்யா வரட்டும். அக்காகாரிய வச்சு மூவ் பண்ணலாம் என அனைத்தையும் சூசகமாக சொல்லி விட்டு சென்றாள்.
ஹாரிகாவுக்கு மனதில் கொஞ்சம் நம்பிக்கை பிறந்தது. அவனுக்காக தக்க சந்தர்ப்பம் பார்த்து காத்து கொண்டிருந்தாள்.
இங்கே மோஹித் அவர்களின் அறைக்கு வந்ததும் கதவை படாரென சாத்தியவன். என்ன டி எதுக்கு கைய விட்ட.. பதில் சொல்லு என அவளின் கழுத்தை பற்றினான். அது அது வந்து என அருவியின் கண்களில் நீர் கோர்த்துக் கொள்ள... அவளை விட்டு தலையை அழுத்தி கோதியவன். சொல்லு அருவி என்னை டென்ஷன் பண்ணாத என அவளை பார்த்தான்.
அந்த பொண்ணு உங்களை கண்ணாலம் கட்டிக்க.. அது அந்த பொண்ணை தானே நீங்க கண்ணாலம் கட்டிக்க இருந்தீங்க. அவங்க முன்னாடி இப்படி நாகரீகம் இல்லாம கைய புடிச்சிட்டு வந்தால்.. என அருவி தலையை குனிந்து கொண்டு கூற.. இல்ல பொய் சொல்ற! என மோஹித் அவளின் முகத்தை நிமர்த்தினான்.
இல்ல இது தான் உண்மை என்றாள் அருவி.
நாகரீகம்... ம்ம் நாகரீகம் என்றவன். கொஞ்சம் புன்னகைத்த படி.. மேடம் ஜக்கெட்டு போடாம சுத்திட்டி இருந்தவங்க எனக்கு நாகரீகம் சொல்லி தரீங்க? ஹான் என அவனது பார்வை அவளின் கழுத்துக்கு கீழ் சென்றது.
அருவி கள்ள முழி முழித்துக் கொண்டே அவனை மெதுவாக நிமிர்ந்து பார்க்க, அவனது பார்வை சென்ற இடம் பற்றி கொண்டது வேறு விதமாக..
வருவாள்...