Pradhanya

Active member
Staff member
Joined
Oct 6, 2024
Messages
120
ஆணும் பெண்ணும் ஓருடல் ஈருயிராக கடலலை சீற்றத்துடன் பொங்கி எழுந்த வெட்கைகளை மொத்தமாக தேடலாக்கி முடித்து கூடல் தொலைத்து கட்டியணைத்து உறங்கி எழுந்ததும் தன் உயிரானவனது லீலையை நினைத்து பெண்ணுக்குள் இயல்பாக வெட்கம் பரவும். அந்த ஆண் தன் சரிபாதியானவளின் முகத்தை பார்த்ததும் தேடலில் கிறங்கிய முகம் வர இருவரின் கண்கள் ஒருவரை ஒருவர் தழுவும் போது உள்ளுக்குள் ஒரு வித பரவசமும் புது தாம்பத்தியத்தின் வெட்கமும் பரவும் தயக்கம் ஏற்படும். இது தானே உலக வழக்கம்.

ஆனால் இங்கு அறைக்குள் நுழைந்த ஜீவாவின் முன்னால் வானதி குளித்து முடித்து கொண்டை சுற்றி இருந்தாள். தாம்பத்தியத்தின் வெட்கம் எதுவும் அவளிடம் இல்லை. எதிரில் இயந்திரதனமான முகத்தை வைத்துக்கொண்டு வந்தான் ஜீவா. ரெண்டு பேருக்கும் நடுவில் என்ன நடந்தது?

பச்சையாக சொல்ல போனால் அவனுக்கு அவள் தேவைபட்டாள் மொத்தமாக நதியை சுருட்டி கொண்டான் ஜீவா.

வானதி பால்கனி பக்கம் செல்ல, உன்னோட அக்கா பார்க்கணும்னு சொன்னா! போ என ஒற்றை வார்த்தையில் முடித்துக் கொண்டான்.

கொண்டையை அவிழ்த்து விட்டு கூந்தலை ஒரு பக்கம் போட்டு கொண்டவள் நேராக கீழே இறங்கினாள்.

ஜீவா படுக்கையில் விழுந்தான். கண்ணை மூடியதும் நதியின் முகம். அவளே தான் வானதி என்னும் "நதி" அவனது நதி அவள் தானே!

எட்டு வருடங்களுக்கு முன்னால் அவளை முதன் முதலாக பார்த்த நினைவுகள் தான் ஓடியது. டேய் வாங்கடா! டேய் மனோஜு! டேய் ஜீவா பஸ் வந்திடுச்சு! என அஜய் கத்திக் கொண்டு நின்றான்.

மனோஜ் புத்தகத்தை புரட்டி கொண்டே உன் கிட்ட என்ன சொன்னேன்? நம்ப காரில் போயிருக்கலாம். பாரு அந்த பிரைவேட் பஸ் எவ்ளோ ரஷ்ஷா இருக்கு இடியட்! என்னால அதுல வர முடியாது. என கூறிக் கொண்டே தன் நண்பன் ஜீவாவை முறைத்து பார்த்தான்.

ஜீவா சிரித்த படி நிஜமாவே உன்னோட ரீசன் அது தானா? இல்ல ஆஷாவா? என கேட்டான்.

"ரப்பிஷ்!" என மனோஜ் அவ்விடத்தை விட்டு நடந்தான்.

டேய் சாரி டா! நம்ம future ல டாக்டர் ஆக போறோம்! சோ மக்களோட மக்களா அவங்க மனசை புரிஞ்சுக்க வேணும் மனோஜி! அதுக்கு பஸ்ல தான் போகனும் அப்போ தான் கேம்பிங் டிரெய்னிங் எல்லாம் நல்லா போகும் வாடா என இழுக்க...

மனோஜ் தன் நண்பன் ஜீவாவை பார்த்து கண்ணாடியை மூக்குக்கு தள்ளி கொண்டே என்னால அந்த பஸ்ல வர முடியாது. என்றான் கடுப்புடன்..

சரி சரி விடு அடுத்து கவர்மென்ட் பஸ் வரும் அதுல போலாம் என ஜீவா மற்றும் மனோஜ் இருவரும் அரசு பேருந்துக்கு காத்திருந்தார்கள்.

"ஒவ்வொன்றாய் திருடிகுறாய் திருடுகிராய் யாருக்கும் தெரியாமல் திருடிகிறாய்" என ஶ்ரீ ஆண்டவர் தனியார் பேருந்தில் பாட்டு ஜவ்வை கிழித்து கொண்டிருக்க மனோஜ், ஜீவா இருவரின் மருத்துவ கல்லூரி வட்டங்கள் அதில் ஏறிகொண்டது.

மனோ பேபி என ஆசா பேருந்தில் இருந்து கொண்டு கத்த ஜீவா மனோஜை பார்த்து சிரித்தான்..

"டிஸ்லாஸ்டிங்" என முகத்தை திருப்பி கொண்டான் மனோஜ்.

ஆண்டவர் முன்னால் செல்ல அடுத்த பத்து நிமிடங்களுக்கு பேருந்து வரவே இல்லை.. இடியட் டைம் ஆச்சு? நான் பஞ்ச்வாலிட்டி மெயின்டெய்ன் பண்ணுவேன் டா ஜீவா! உன் கூட இனி வந்தேன்னு வை அப்புறம் என்னன்னு கேளு என முறைத்து கொண்டு நின்றான் மனோஜ்.

கோவிச்சுக்காத மச்சி என அவர்கள் பேசிக் கொண்டிருக்க, அரசு பேருந்து ஆடி அசைந்து வர, டேய் பஸ் வந்திடுச்சு பாரு ரஷ் இல்ல வா வா! என ஏறினார்கள் இருவரும்.

மனோஜ், ஜீவா இருவருக்குமே இடம் கிடைக்க அமர்ந்து கொண்டார்கள். இன்று திங்கட்கிழமை என்பதால் பள்ளி மாணவர்கள் அடுத்தடுத்த ஸ்டாபிங்கில் அதிகமானது.

என்ன படிக்கிற மனோஜ் உன்னோட படிப்புக்கு கொஞ்சம் முட்டு கட்டை போடு டா! என ஜீவா கிண்டலடிக்க..

எனக்கு டைம் வேஷ்ட் பண்ண பிடிக்காது என பாக்கெட்டில் இருந்து போமோகிரானட் ORS ஜூசை குடித்துக் கொண்டே பக்கத்தை திருப்பினான்.

அடுத்த ஸ்டாப்பிங்கில் அரக்க பறக்க மாணவ மாணவிகள் ஏறினார்கள். இன்னும் இரண்டு ஸ்டாபிங் கழித்து CSI கிருத்துவ பள்ளி வர போகிறது. இதோ அரக்க பறக்க ஏறினாள் அவள். இருபக்கமும் முடி எடுத்து பின்னலிட்ட தண்ணி ஜடையுடன் லாவண்டர் வண்ண காட்டன் சுடியில் சோல்டர் பேக்குடன் ஏறி கொண்டவள் சுற்றிலும் முற்றிலும் பார்த்துக் கொண்டே எக்கி கம்பியை பிடித்தாள். மனோஜ் மற்றும் ஜீவா இருவரும் அமர்ந்திருக்கும் இருக்கைக்கு முன்னால் பேருந்து கம்பி இருக்க அதை பிடித்துக் கொள்ளும் பொருட்டு வேகமாக வந்தவள். முத்து முத்தாக வழிந்த வியர்வையை துடைத்த படி வந்து நின்றாள்.

நடத்துநர் கத்திக் கொண்டே போலாம் ரைட் என்றவர் உள்ளுக்குள் டிக்கெட் டிக்கெட் சொல்லி கொண்டே ஏன் மா! இந்த பைய கழட்டு எப்படி மா நடப்பாங்க என கடுப்புடன் எரிந்து விழுந்தார்.

இதோ ஒரு நிமிசம் என சொன்னவள் பையை கழட்டி முன்னால் படித்துக் கொண்டிருந்த மனோஜ் பக்கம் அண்ணா கொஞ்சம் இதை வச்சுக்கிரீங்களா? என கைகுட்டையில் துடைத்துக் கொண்டே நீட்ட கண்ணாடியை மூக்குக்கு தள்ளி விட்டு அவளை பார்த்தவன். ஜீவா எனக்கு விண்டோ சீட் வேணும் என எழுந்து அவனை வலுக்கட்டாயமாக தள்ளி விட்டு அமர்ந்து கொண்டான்.

இப்போ அவளுக்கு அருகில் அவன். ஜீவாவையும் மனோஜ் குமாரையும் முறைத்து பார்த்தாள் அவள்.

எதேட்சையாக தனக்கு எதிரில் நின்றிருந்தவளை பார்த்தா ஜீவா பேக் கொடுங்க என கைகளை நீட்ட... ரொம்ப தேங்க்ஸ் என பையை கொடுத்தவள் கம்பியை கட்டி பிடித்துக் கொண்டாள்.

தீடிரென பின்னால் இன்னொரு தனியார் பேருந்து அரசு பேருந்தை முந்தி கொண்டு செல்ல அண்ணா அவனை ஓவர் டேக் பண்ணு! நம்ம டைமில் வரானுங்க! கொழுபெடுத்து திரியுறானுங்க கம்ப்லைன்ட் பண்ணனும் என நடத்துநர், ஓட்டுநர் என இருவரும் பேசிக்கொண்டே ஓட்டுநர் கியரை மாற்றி ஹை கியர் போட்டு ஓட்ட ஒரு வளைவில் திரும்பும் போது வேகத்தில் ஜீவாவின் அருகில் நின்றிருந்த பெண் கம்பியை பிடித்து நிற்க முடியாமல் அப்படியே ஜீவாவின் மேல் சாய்ந்து மடியில் விழுந்தாள்.

அவளின் தனித்துவ வாசனை கூடவே புத்தம் புது மலர் தன் மீது மோதிய அந்த நொடி ஆணவன் உள்ளே இரசாயன மாற்றங்கள்... அய்யோ முருகா! என பதட்டத்துடன் ஜீவாவின் தோல் மேல் கையை வைத்து, மருண்ட பதட்டமாக விழிகளுடன் மூச்சு வாங்க உதடுகள் துடிக்க சாரி சாரி என ஜீவாவிடம் கூறிக் கொண்டே எழுந்தாள்.

இட்.. இட்ஸ் ஓகே என ஜீவா கூற.... அவளின் காது கம்மல் ஜீவாவின் பக்கெட்டில். இருவரும் அறிய வில்லை. அதை விட அருகில் இருந்த ஒரு உருவம் இன்னும் புத்தக புழுவாக இருந்தது. வேறு யார் மனோஜ் குமார் தான்.

அதன் பின் மூன்று நிறுத்தங்கள் இடை விடாமல் ஜீவாவை பார்க்கும் போதெல்லாம் சாரி கேட்டாள். ஜீவா வைத்த கண் வாங்காமல் அவளை பார்த்தான். ஜீவா நிமிரும் போது அவளும் எதேட்ச்சையாக பார்க்க, மீண்டும் சாரி

CSI கிருத்துவ பள்ளி நிறுத்தம் அடுத்ததாக வர சாரி சாரி! கூடவே தேங்க்ஸ். என முடியை காதுக்கு ஒதுக்கி கொண்டே பையை வாங்கினாள்.

ஜீவா அவளிடம் கொடுத்து விட்டு திருப்பி திரும்பி திரும்பி பார்த்தான்.

ஹே வானதி! எங்கே டி இருந்த என பள்ளி சீருடையில் சங்கவி ஷோல்டர் பேக்குடன் இருந்தாள்.

நான் அந்த பக்கம் நின்னேன் டி! என வானதி சொல்ல.. .

யூனி ஃபார்ம் போடலயா என சங்கவி கேட்க.. லேட்டா கிளம்பிட்டேன். ஹாஸ்டல்ல போய் போட்டுப்பேன் என வானதி கூற..ஹே எங்க டி உன்னோட தோடு? என சங்கவி கேட்க..

போச்சா! என வானதி தவிப்புடன் இருபக்கமும் தொட்டு தேடி பார்த்தாள்.

புதுசு டி! வான் மதி கிட்ட சண்டை போட்டு அம்மா வாங்கி கொடுத்தாங்க! என உதடு பிதுங்க கூறினாள் வானதி.

சரி விடு வெள்ளி தோடு தானே! வாங்கிக்கலாம்.

இருந்தாலும் எல்லாமே காசு தானே! என வானதி சொல்லி கொண்டே இறங்கினார்கள் பெண்கள் இருவரும்.

அவள் ஸ்கூல் படிக்கிற பொண்ணு! என மனோஜ் கூறிக் கொண்டே பக்கத்தை திருப்பினான் மனோஜ்.

ஹே நீ நினைக்கிற மாதிரி இல்ல சும்மா பார்த்தேன். என ஜீவா சமாளித்து விட்டு ஜன்னல் பக்கம் பார்வையை திருப்பினான். ஏனோ உள்ளுக்குள் இதயம் படபடவென துடித்தது.

CSI கிருத்துவ பள்ளி சீருடையில் மாணவ மாணவிகள் சென்றார்கள் பள்ளிக்குள்.

மனோஜ் ஒரு விரலை எடுத்து ஜீவாவின் மூக்கின் அருகில் வைத்தவன் கையை பிடித்து, உன்னோட ஹார்ட் பீட் ரொம்ப அதிகமா இருக்கு. வாட் ஹேப்பன்?

"நத்திங்" என ஜீவா திரும்பி கொள்ள..

அப்போ சம்திங்.. என மனோஜ் கூறி விட்டு புத்தகத்தில் கவனம் செலுத்தினான்.

நெருக்கம் தொடரும்...



































.
 

Author: Pradhanya
Article Title: Episode-14
Source URL: Pradhanya kuzhali novels-https://pradhanyakuzhalinovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

Magi

New member
Joined
Oct 6, 2024
Messages
24
Unexpected Manoj entry super 😍 and intresting 🔥 💯 sema nga antha bus scene laam kannu munnadi vanthutu poguthu avlo realistic ah irukku aprm bus la nadakara sanda😂 bus kulla poyittu Vara pola irukku super siss💥
 

Aishwarya

New member
Joined
Oct 6, 2024
Messages
8
Unexpected Manoj entry super 😍 and intresting 🔥 💯 sema nga antha bus scene laam kannu munnadi vanthutu poguthu avlo realistic ah irukku aprm bus la nadakara sanda😂 bus kulla poyittu Vara pola irukku super siss💥
Ama
 

vedha

New member
Joined
Oct 7, 2024
Messages
18
Ippolam ennganga busla love scene pogudhu, aana adha story moolama thirumbi kondu vandhuteenga, super palasellam nabagam varudhu 😂😂🥰🥰🥰☺️☺️☺️☺️☺️🤦‍♀️
 
Top