Pradhanya

Active member
Staff member
Joined
Oct 6, 2024
Messages
120
ஜீவா எக்கி கொண்டு மனோஜ் குமாரை தலை கவிழ்க்க வைத்து விட்டு ஜன்னலோரம் பார்த்தான்.

என்ன டா பண்ற ஜீவா? என கோபத்துடன் தலையை உயர்த்தினான் மனோஜ். டேய் இர்ரா! என ஜீவா பள்ளியை பார்த்துக் கொண்டான்.

உள்ளுக்குள் எதோ சொல்ல முடியா பரவசம். தலையை கோதிய படி நேராக அமர்ந்தான். அவளோட வாசம்! என இழுத்து விட்ட மூச்சு காற்று கூட அவளின் வாசமாக தான் இருந்தது. பேர் என்ன? பின்னாடி ஒரு பொண்ணு கூட பேசிட்டு இருந்ததாலே! என யோசித்தான். நினைவு வர வில்லை. எப்படி கல்லூரிக்கு வந்தோம் என ஜீவாவுக்கு தெரிய வில்லை.

மச்சி! எங்க கூடயே வந்திருக்கலாம் என அஜய் சொல்ல, ஜீவா இப்பொழுது சுயம் பெற்று ஏன் உட்கார்ந்து கிட்டே வந்தியா? என கேட்டான்.

இல்ல footboard அடிச்சேன் டா! வலையோசை கலகல வென என அஜய் பாட.. footboard danger.. நீ டாக்டரா இருந்திட்டு இருக்க அது கூட உனக்கு தெரியாதா? என மனோஜ் குமார் கண்ணாடியை மூக்குக்கு தள்ளிய படி கூறினான்.

சரிங்க டாக்டர் என அஜய் கிண்டலடிக்க.. அவர்களை முறைத்த மனோஜ் குமார் கிளாசுக்கு சென்றான். அதிகமாக பிராக்டிகல் வகுப்பு மட்டுமே அவர்களுக்கு இருக்கும். இரவு களைத்த படி அவர்கள் தங்கி இருக்கும் ஹாஸ்டலுக்கு வந்தார்கள்.

மனோஜ் குமார் எப்பொழுதும் தனியாக தான் இருப்பான். அஜய் அறைக்குள் நுழைய, நான் நைட் ஸ்டடி பண்ண போறேன் என மனோஜ் கூற... அய்யோ வேணாம் டா சாமி இனி உன்னோட ரூம் பக்கம் வரவே மாட்டேன் என அலறி அடித்துக் கொண்டு ஓடினான்.

ஜீவா புன்னகையுடன் அறைக்குள் நுழைந்தான். உள்ளுக்குள் இன்று ஒரே உற்சாகம் தான். ஹே நான் நைட் ஸ்டடி பண்ண போறேன்.

ஜீவா சிரித்த படி கட்டிலில் சாய்ந்தான்...

ஜீவா!! என கத்தினான் மனோஜ்.

என்ன டா எதுக்கு கத்தற? என ஜீவா அரக்க பறக்க பார்க்க, நான் நைட் ஸ்டடி பண்ண போறேன்.

பண்ணிக்கோ என ஜீவா அவனது இதயத்தை வருடினான்.

மனோஜ் மோப்பம் பிடித்த படி! ஹே இடியட் குளிர்ச்சியா நீ? என்ன மார்னிங் போட்ட ட்ரஸ்ல இருக்க! ஹே கெட் அப்! ஐ சே கெட் அப்!! ஹைஜீன் இல்லாம என்னோட ரூம் உள்ளே வர கூடாது. கெட் லாஸ்ட் என கத்தினான்.

ஜீவா அவனை முறைத்த படி, மிஸ்டர் மனோஜ் குமார் எனக்கும் இது தான் ரூம் ஓவரா கத்துற வேலை வேணாம். என சொன்னதும் உடனே மனோஜ் எழுந்து முறைத்த படி அவனது பொருட்களை பேக் செய்தான்.

என்ன டா பண்ற? என ஜீவா பார்க்க..

நான் வெக்கேட் பண்ண போறேன். கெஸ்ட் ஹவுஸ்ல ஸ்டே பண்ண போறேன் என அதிரடியாக கிளம்பினான் மனோஜ்.

டேய் டேய் இரு இப்போ என்ன பண்ணனும் குளிக்கணும் அவ்ளோ தான! இதோ போறேன் என அவசரமாக பாத்ரூம் சென்று குளித்தான் ஜீவா அப்பொழுது தான் அவனது பாக்கெட்டில் இருந்த தோடு சட்டையில் இருந்து விழுந்தது.

இது என நீர் சொட்ட சொட்ட எடுத்து பார்த்த ஜீவாவுக்கு குதூகலம் ஒட்டிக் கொண்டது. இதயம் வேகமாக துடிக்க அதற்கு முத்தமிட்டவன். பொக்கிஷம் போல பத்திர படுத்த உற்சாகமாக அறைக்கு சென்றான்.

ஜீவா உடையை மாற்றியதும் அந்த தோட்டை வருடிய படி முத்தமிட்டான்.

சம்திங் மிஸ்ட்ரி உனக்கு என்னாச்சு என கம்யூனிட்டி மெடிசன், பார்மகொலாஜி பற்றிய reference புத்தகங்களை புரட்டிய படி படித்த படி ஜீவாவை பார்த்தான் மனோஜ்.

உடனே தன்னிலைக்கு வந்த ஜீவா தீவிரமாக முகத்தை வைத்துக் கொண்டு இல்லையே நான் நல்லாருக்கேன் என சமாளித்தான்.

அந்த நேரம் பார்த்து கதவு தட்டபட... F* என கத்தியது மனோஜ் தான்.

டேய் இரு போய் பார்க்கிறேன். என ஜீவா கதவை திறக்க.. எதிரில் கண்கள் மின்ன நின்றான் அஜய்.

என்ன டா? ஏன் டா டிஸ்டர்ப் பண்றீங்க? மனோ படிச்சிட்டு இருக்கான். என சொல்ல..

மச்சி உன்னைய எங்கெல்லாம் தேட! என அஜய் உள்ளே வந்து ஹாலில் சாமி படம் ஓடுது அதுக்கு தான் வந்தேன். வாடா! சீனியர் ஜூனியர் ன்னு மொத்த மெடிசன் பாய்ஸ்சும் அங்கே தான் இருக்காங்க.

வாட்? என மனோஜ் அஜைய பார்க்க, சாமி படம் மச்சி!! டேய் சொல்லு டா! என ஜீவாவை பார்த்தான்.

ஜீவா சிரித்துக் கொண்டே "மனோஜ் அது வந்து ஹியூமன் ரிபுரோடக்டிவ் சிஸ்டம் மூவி!"

ரப்பிஸ் என மனோஜ் அஜையை கத்தினான். அஜய் தன் நண்பனை பார்த்து, என்ன டா இதுல என்ன தப்பிருக்கு? அப்போ நீ இம்பொடன்ட்டா.. என முடிக்க வில்லை.

மனோஜ் முறைத்த படி எழுந்தவன். B* என கெட்ட வார்த்தையில் பிளந்தான்.

ஜீவா இருவரையும் சமாதான படுத்தி அவன் தான் வரலைன்னு சொல்லிட்டானே! நீ போயி பாரேன் டா!

வரலன்னு இல்ல பார்க்க முடியல போடா என முன்னால் அஜய் சென்றான்.

ஹலோ நில்லு! உனக்கு நான் proof பண்றேன் என கண்ணாடியை மூக்குக்கு தள்ளி கொண்டே படம் பார்க்க சென்றான் மனோஜ்.

ஜீவா நீ வரல என அஜய் கேட்க..

"நான் வரல நீங்க போங்க!"

இந்த கிளாஸ எங்கேயும் எடுக்க மாட்டாங்க! வா போலாம் என படிக்கும் நோக்கத்தில் இருந்தது ஒரு விஷ ஜந்து.

இவனை? ஒன்னும் முடியல என சென்றவர்கள் அதிகாலை இரண்டு மணிக்கு தான் வந்தார்கள். என்ன லிப் கிஸ்.. என நினைத்து கொண்டான் ஜீவா.

மனோஜ் அதே சாளனமில்லா முகத்துடன் வந்து தூங்க சென்றான். இப்படி ஜீவாவின் படிப்பு, ஹாஸ்டல் வாழ்க்கை அப்படியே போயி கொண்டிருக்க, பிளட் டொனேஷன் பற்றி விழிப்புணர்வு மற்றும் பால்வினை நோய்கள், பெண்கள் தொடர்பான மாதவிடாய் மற்றும் ஹெச் ஐ வி பற்றிய விழிப்புணர்வு வகுப்புகள் ஏற்பாடு செய்ய பட்டிருந்தது.

அதற்காக மருத்துவ கல்லூரியில் இருந்து பள்ளிக்கு சென்றார்கள் மருத்துவ மாணவர்கள். பெண்களுக்கு குட் டச், பேட் ட்ச், மாதவிடாய் பிரச்னைகள், அணிமிக் போன்ற விசயங்களை பற்றி ஆஷா, திவ்யா, தீப்தி, பார்வதி மேனன், நிக்கிதா கவுடா, என பெண் பயிற்சி மருத்துவ மாணவிகள் ஒவ்வொரு வகுப்பிலும் எடுத்து சொல்லி கொடுத்தார்கள்.

அதே போல ஆண் மருத்துவ பயிற்சி மாணவர்கள் பள்ளி மாணவர்களுக்கு பால்வினை நோய்கள் மற்றும் ஆண்களின் பருவ மாற்றங்கள் good touch bad touch என அனைத்தையும் சொல்லி கொடுத்தார்கள். அங்கு தான் ஜீவா அவளை இரண்டாவது முறையாக பார்த்தான்.

பள்ளி சீருடையில் இரட்டை ஜடை போட்டு கொண்டு ஸ்டாப் ரூம் மற்றும் வகுப்பறை என உலாத்தினாள் வானதி. என்ன கிளாஸ் என்ன கிளாஸ் என தேடி பார்த்த ஜீவாவுக்கு கண்டறிய முடிய வில்லை. 6,7,8 மாணவிகள் மொத்தமும் ஒரு பக்கம் கூடி இருக்க, இன்னொரு பக்கம் 9,10 மாணவிகள், 11, 12 மாணவிகள் வேறு வகுப்பில் அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த பட்டது.

அவளின் உடையையும் ரெட்டை ஜடை ரிப்பனையும் வைத்து ஆராய்ந்து பார்த்ததில் 11மற்றும் 12 வகுப்பில் எதாவது ஒன்றாக இருக்க வேண்டும் என நினைத்தான் ஜீவா.

ஆனால் ஜீவாவால் அதற்கு மேல் கண்டு பிடிக்க முடிய வில்லை.

அதே வருத்தத்துடன் திரும்பினான் இரண்டு நாள் கேம்பிங் முடிந்து.

கேம்பிங் போட்டோக்கள் அனைத்தும் வந்திருந்தது. அதனுடன் மாணவர்களின் feedback கடிதங்கள் ரெக்கார்ட்க்காக எடுத்து வைத்துக் கொண்டார்கள்.

ஜீவா பெரிதாக ஆர்வம் காட்டாமல் தனித்து அமர்ந்திருந்தான். இந்த உணர்வை விளக்க முடிய வில்லை. படிப்பில் கவனம் சிதற அனைத்து பேப்பரிலும் அறியர். தனது உணர்வுகளை அவளிடம் சொல்ல வேண்டும் என மனமும் உடலும் பேயாட்டம் கண்டது.

கடந்த வருடம் நன்றாக படித்த ஜீவா இந்த வருடம் என்னாச்சு என லக்சர்ஸ் அழைத்து அவனுக்கு மீண்டும் ஒரு லெக்சர் கொடுத்தார்கள்.

ஜீவா கலங்கி போயி அமர்ந்திருந்தான். பேருந்தில் மனோஜ் சொன்னது தான் திரும்ப திரும்ப தோன்றியது. அவள் ஸ்கூல் படிக்கிற பொண்ணு! இது தப்பு என திரும்ப திரும்ப தோன்ற... மனோஜ் தனக்கு எதிரில் வாடி வதங்கி இருக்கும் ஜீவாவை பார்த்தான்.

இப்போ என்னாச்சு? இந்த செம்ல இப்படி எல்லாத்திலும் கோட்டை விட்டுட்டு இருக்க? என்ன பிரச்னை?

ஜீவாவிடம் அமைதி

மனோஜ் கண்ணாடியை மூக்குக்கு தள்ளி கொண்டே டெஸ்ட்டோஸ்ட்ரோன் பீக்கா புரோஜஸ்ட்ரோனையும், ஈஸ்ட்ரோஜென்னையும் தேடுதா?

ஜீவா நிமிர்ந்து தன் நண்பனை பார்த்தான் கோபத்துடன்..

மனோஜ் அடுத்து சொன்ன விசயத்தில்...?

ஜீவா...?

ஆசை தொடரும்...
 

Author: Pradhanya
Article Title: Episode-15
Source URL: Pradhanya kuzhali novels-https://pradhanyakuzhalinovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

Magi

New member
Joined
Oct 6, 2024
Messages
24
Adi poli rekka katti parakuthu cast mothamum Inga irukku💥💯 Manoj uhh inagiyum athey sidumoonji, jeeva ni enna ya total ah vera maari irukka past la jolly ah na person ah.., then saami padam ahh🙃 boys hostel kulla pona pola irukku intha talks uhh and writer unngaloda song selection ku Naa adimai♥️ athum ippo bus travel ku choose panra songs thirudugirai and valaiyosai superb........yov jeeva pocso la pudichi potruvanga ya😅 ivlo chinna pullaiya vachittu nithan ellam solli tharanum so ni saami padam paakalam thappu ila...jeeva and Manoj convo always superb 🔥 and finally writer siss unga story oda ovovru lines Kum review eluthanum pola Kai paraparakuthu😅 unga story epd irunthalum athey emotions oda eduthukuren ninga eppovum solrapola happy sad rendum thevai atha realise panren Inga😌 this story has spl bond to my heart 💓
 
Top