Pradhanya

Active member
Staff member
Joined
Oct 6, 2024
Messages
120
என்னங்க என்னாச்சு? என அவனது முகத்தை பார்த்து கேட்டாள் தேனருவி.

"சாப்பிட போலாம் வா!"

"எனக்கு பசி இல்லங்க வரும் போது தானே தின்ன நிறைய வாங்கி கொடுத்தீங்க! அதும் இல்லாம எங்க இடமா இருந்தால், வயல் வரப்பில் வேலை, மீன் பிடிக்க, மரம் ஏற அப்படி இப்படின்னு நிறைய ஓடி ஆடி வேலை செய்வேன். ஆனால் இங்கே சும்மா இருக்கேன் பசிக்கவே மாட்டிக்கிது" என தொன தொனவென பேசினாள் அருவி.

எனக்காக கொஞ்சம் வந்து சாப்பிடு! வா ஹனி என அவளை பார்த்தான். சரி என இருவரும் கீழே சென்றார்கள். லோகேஷ், அமலா, ஹாரிகா, சுதா, ராமசந்திரன் என அனைவரும் அமர்ந்திருக்க, ஹாரிகாவின் பார்வை அவள் மீது இருந்தது.

அவளுக்கு சேர் நகர்த்தி போட்டு விட்டு அமர வைத்து, அருகில் அமர்ந்து கொண்டான் மோஹித்.

ஹாரிகாவின் கண்களை அவளால் நம்ப முடிய வில்லை. எப்போதில் இருந்து இப்படி மாறினான்? என உள்ளுக்குள் தோன்றி கொண்டே இருந்தது. அருவி மிகவும் அமைதியாக அமர்ந்திருந்தாள். அனைவருக்கும் பரிமாறி விட்டு சுதா நிற்க.. அருவி ஒரு வாய் போட்டாள். வாயெல்லாம் தகதகவென எறிய.. ஸ்ஸ் ஹா என முனகியவள் வலியில் முகம் சுனங்கினாள்.

அமலாவின் கூர் பார்வை அருவியை துளைக்க, என்னாச்சு அருவி? என கேட்டார் சுதா. அது வாயில் இரத்தம் வந்திடுச்சு என்றாள்.

மோஹித் அமைதியாக சாப்பிட்டவன் அவள் சொன்னதும் சட்டென திரும்பி பார்த்தான். எப்பிடி வந்தது? உனக்கு இந்த இடம் செட் ஆகளையா? என அவர் துருவி துருவி கேட்க .. அருவி உடனே கணவனை பார்த்தாள். அய்யோ சொல்லிட்டா அவ்ளோ தான்! மோஹித் எதுவும் பண்ணு டா என சொல்லிக் கொண்டவன். மா அது அவளுக்கு என்வுறான்மென்ட் சரி இல்லை முதல்ல அப்படி தான் இருக்கும் போக போக பழகிடும்ன்னு சொன்னேன். அவளோட லிப்ஸ் ரொம்ப சாப்ட் மா! என்றான்.

அனைவரும் சாப்பிடுவதை விடுத்து ஒரே நேரத்தில் மோஹித்தை பார்த்தார்கள். ஹாரிகாவுக்கு கண்களில் நீர் முட்டி கொண்டது. அவள் வேறு வழி இல்லாமல் அமர்ந்திருக்க, அமலாவுக்கு எக்க சக்கமாக கோபம் வந்தது. ஆனால் வெளி காட்ட வில்லை.

அருவி வாயை திறக்க போக.. மோஹித் மெதுவாக அவளின் தொடையை வருட ஆரம்பித்தான். அவளோ சாக் ஆகி முகத்தில் முத்து முத்தாக வியர்க்க அவனை பார்த்தாள். அவளின் தட்டில் ஒரு இட்லியை வைத்து பருப்பு பொடியில் நல்லெண்ணெய் ஊற்றி கொண்டே வாய திறந்த அப்புறம் மேலே வந்ததும், முத்த்தோட மொத்தமா வாயையும் சேர்த்து முழுங்கி விடுவேன் ஒகே வா! என புருவம் தூக்கினான்.

ம்ம் ஹிம் என தலை அசைத்தாள். ம்ம் இந்த இட்லி சாப்பிடு எனக்கு பெரிய கண்ணம் பிடிக்கும் ஒரு கடி கடிச்சா ஃபுல் பில் ஆகணும் என்றவன் சாப்பிடு என அதட்டினான். மோஹித் மெதுவாக சொன்னாலும் சுதாவுக்கு அவர்களின் இந்த பரிமாணம் உள்ளுக்குள் நிம்மதி பரவியது. லோகேஷ் அவ்வப்பொழுது மோஹித்தை பார்த்தான்.

இது வரை மோஹித் என்பவன் கோபகாரன், யாரையும் ஏரெடுத்து பார்க்க மாட்டான். கண்களில் அலட்சியம் தெனாவெட்டு கொட்டி கிடக்கும். கூட பிறந்த என்னுடனே விதண்டாவாதம் செய்வான். அந்த அளவுக்கு யாரையும் வச்சு வேண்டி பார்க்க மாட்டான். ஆனால் இன்று புதியாக ஒருத்தி வந்ததும் அவனது மாற்றம் ஒரே நாளில் ஏராளம். என உணவை முழுவதும் விழுங்கியவன் நொந்து கொண்டே ஹாரிகா மற்றும் அமலா இருவரையும் பார்த்தான். என்ன நடக்குமோ என இருந்தது.

அவளை சாப்பிட வைத்து அறைக்கு அனுப்பி விட்டவன் தாயிடம் வந்தான். மா!

சொல்லு டா! என்ன?

என்னால அவளை தனியா தூங்க அலோ பண்ண முடியாது. அவளுக்கு பயம் அதனால் அவளை என் கூடவே தூங்க வச்சிக்கிறேன் என சொல்லி விட்டு சிட்டாக பறந்தான். பதில் கூட எதிர் பார்க்க வில்லை.

மாற்றம் பயங்கரமா இருக்கே என ராமசந்திரன் உதட்டிக்குள் சிரிக்க, எனக்கும் அது தான் ஆச்சரியமா இருக்கு. என்றார் சுதா. நல்லாருந்தா அது சரி என அவர் கூற.. கொஞ்ச நாளைக்கு தான் என்றார் சுதா.

என்ன சொல்ற? என அதிர்ச்சியுடன் அவர் பார்க்க, உங்க பொண்ணு லாவண்யா இங்கே வரேன்னு ஆடிட்டு இருக்கா! கடைசியான் போன் பண்ணி சொன்னான். அவள் மட்டும் வந்துட்டா எனக்கு என்ன பண்றதுன்னு தான் தெரியல என சுதா யோசனையுடன் முகம் சுனங்கினார்.

நீ அதை பத்தி கவலை படாத என அனைவரும் தூங்க சென்றார்கள். அமலா தன் தங்கையை அமர வைத்து அட்வைஸ் சொல்லி தூங்க வைத்து விட்டு செல்ல.. நாளைக்கு ஷூட்டிங் ஸ்பாட்ல அவனுக்கு இருக்கு என உறங்க முயற்சி செய்தாள்.

இங்கே மோஹித் மற்றும் அருவி இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டே அருவி ஊரில் நடந்த அனைத்து கதை யையும் அவளை பற்றியும் கூற சுவாரசியமாக கேட்டுக் கொண்டே அவள் மேல் கை போட்டுக் கொண்டு உறங்கி போனான். அருவியும் அவனை பார்த்தபடி அப்படியே உறங்கி போனாள்.

அடுத்த நாள் அதிகாலை நான்கு மணிக்கெல்லாம் மேடம் எழுந்து விட்டார்கள். என்ன செய்வது என தெரியாமல் வெளியே சென்றவள் இரண்டு மணி நேரம் கழித்து வந்தாள். அப்பொழுது தான் சுதா எழுந்து வெளியே வந்தார். அருவி நடமாடுவது தெரிய பொன்னே! ஹே பொன்னே என அழைத்தார்.

அம்மா என சிரித்துக் கொண்டே வியர்வை வழிய வந்தாள். என்ன காலையில் நேரத்தில் எழுந்திருக்க? முகமெல்லாம் வியர்த்து இருக்கு என கேட்டார். வேலை செஞ்சேன் மா! சும்மா இருக்க முடியல.. அதான்.

என்ன வேலை? என சுதா ஆச்சரியமாக கேட்க..

வாங்க என அழைத்து போய் வெளியே காட்டினாள். சுதா பிரமித்து போய் அதே இடத்தில் நின்றவர். என்ன பொண்ணு மா நீ இதை எல்லாம் நீ தான் தனி ஆளாக செஞ்சியா? என கேட்க..

ஆமா என்னாச்சு? சாமி திட்டுவாரா? என பயத்துடன் கேட்டாள்.

ஓ என் பையன்னா அவ்ளோ பயமா? என கேட்டார் சுதா.

அவருக்கு தும்மினால் கூட கோபம் வர்மே மூக்கு மேல என்றாள் அருவி.

அடேங்கப்பா தெரிஞ்சு வச்சிருக்கிறயே என சுதா உள்ளே சென்று தன் கணவனை எழுப்பினாள்.

என்ன சுதா? என கண்ணாடியை போட்டுக் கொண்டே வெளியே வந்தார். சுதா சிரித்த படி கொஞ்சம் நம்ம தோட்டத்து பக்கம் வாங்க என கையுடன் அழைத்து சென்று காட்டினார். அருவி அங்கிருக்கும் தேவையில்லாத களைகள் என அனைத்தையும் மம்பட்டி வைத்து செதுக்கி அனைத்து செடிகளுக்கும் தண்ணீர் போக பாத்தி கட்டி, அங்கிருக்கும் ஊஞ்சலை சரி செய்து கீழே இருக்கும் களைகளை செதுக்கி விட்டு, தேவையில்லாத செடிகளை பிடுங்கி கத்தரி வைத்து கட் செய்து கல் மேடை இருக்கையை சுத்தம் செய்து இரு பக்கமும் அழகாக அவளின் திறனை வெளிப்படுத்தி இருந்தாள்.

படிப்பறிவு பணம் காசு இல்லன்னா கூட குடும்பத்தை எடுத்து நடத்துற பொறுப்பு இந்த பொண்ணு கிட்ட இருக்கு சுதா. அந்த பொண்ணு வந்ததும் நம்ம வீட்டு வாசல் இப்போ சொர்க்கம் மாதிரி செதுக்கிட்டா!லட்சுமி கடாட்சம் இப்போ தான் வீட்டுக்கு வந்திருக்கு என பெருமையாக கூறியவர். எனக்கு காபி இங்கே தோட்டத்தில் இருக்கும் கல் மேடையில் குடிக்கணும் எடுத்துட்டு வா சுதா. அப்படியே அந்த பொண்ணுக்கும் எடுத்துட்டு வா என்றார்.

காலையில் தூங்கி எழுந்ததும் கண்களை திறக்காமல் படுக்கையில் கைகளை துழாவி பார்த்தான் மோஹித். காண வில்லை அவள். பாத் ரூம் போயிருப்பா என நினைத்து சிறிது நேரம் பிரண்டு படுத்தான். ஆளை காண வில்லை. ஹனி! .

ஹனி!

ஹனிஇஇஇ! என அறையே அதிரும் படி கத்தியவன் எழுந்து பாத் ரூம் சென்று பார்த்தான் இல்லை அவள்.

உள்ளுக்குள் கோபமும் படபடப்பும் சேர்ந்து கொள்ள, அதே கடுமையான முகத்துடன் கீழே இறங்கி வந்தான். அருவி! அருவி என கத்தினான் வீடே அதிரும் படி, அந்த சத்தத்தை கேட்டு அமலா, ஹாரீகா, லோகேஷ், ஜிஸ்னு என மொத்த குடும்பமும் எழுந்து விட்டது.

என்ன வந்தது இவனுக்கு காட்டு வாசி கூட சேர்ந்து காட்டு வாசி போல கத்திட்டு இருக்கான் என கடுப்புடன் எழுந்து அமர்ந்தாள் அமலா..

டேய் டேய் மோஹித் எதுக்கு டா கத்துற? என்ன ஆச்சு என கேட்டுக் கொண்டே வந்தார். சுதா.

அவளை நீங்க எதுவும் சொன்னீங்களா? எங்கே அவள்? என அத்தனை கோபம் பதட்டம் முகத்தில் தாண்டவம் ஆடியது.

டேய் டேய் கொஞ்சம் பொறு! உன் பொண்டாட்டிய யாரும் எதுவும் சொல்லல! அவள் கார்டன்ல இருக்கா! என சொல்லிக் கொண்டிருக்கும் போதே! அவன் கத்திய சத்தத்தை கேட்டு உள்ளே வந்தாள் அருவி வேர்க்க விறுவிறுக்க..

என்னங்க! என அருவி அழைக்க ..

அவனது பார்வையே உக்கிரமாக இருக்க அவளை முறைத்து விட்டு வேகமாக படியேறினான். சுதா அவளிடம் போ மா! சீக்கிரம் அவன் ரொம்ப கோவத்தில் இருக்கான். என சொல்ல ... அருவி வேகமாக அறையை நோக்கி சென்றாள்.

மோஹித் கோபத்துடன் அவனது அறையில் அங்கும் இங்கும் நடந்து கொண்டிருந்தான்.

வியர்க்க விறுவிறுக்க பதட்டத்துடன் அறைக்கு வந்தாள் தேனருவி.

மோஹித்...?

ஹாரிகா ஷூட்டிங் கிளம்பிட்டா! அங்கே என்ன பண்ண போறா?

வருவாள்.
 

Jeni Shiva

New member
Joined
Oct 29, 2024
Messages
3
Sudden ah dhaa sis exam pressure load panna mudiyama padikka start pannen... 4 hrs ennala focused ah exam ku padikka mudiyala. But innaiku 4 hrs la indha 15 episodes padichutten... Naa padikkuradha paarthu en amma kooda exam ku serious ah padikkuren pola nu coffee koduthuttu rest eduthuttu padi ma nu sollittu poranga... Romba perumaiya irunduchu😂
 
Top