மோஹித் கோபமாக அவனறைக்கு செல்ல, அவனை பின்தொடர்ந்தாள் அருவி. நான் என்ன பண்ணேன்? எதுக்கு இத்தனை கோபத்தில் இருக்காரு? அய்யோ சாமிக்கு என்னாச்சு? என வியர்க்க விறுவிறுக்க அறை கதவை திறந்தாள்.
மெதுவாக சாமி!! என்றவள். வியர்வையை துடைத்துக் கொண்டே மோஹி! என அழைத்தாள். வேகமாக அருகில் சென்றவன். எங்கே போன? என எதிரில் இருக்கும் படுக்கையில் அமர்ந்து அவளை பார்த்தான்.
நான் எனக்கு நாலு மணிக்கே முழிப்பு தட்டிடுச்சு. அதான் என்ன பண்றதுன்னு தெரியல அப்படியே கீழே போய் வேலை செய்யலாம்னு. என தயங்கி கொண்டே கூறினாள் அருவி. அவளின் முகத்தில் முத்து முத்தாக வியர்வை சொட்டிக் கொண்டிருக்க, அது அப்படியே நெற்றியில் இருந்து தாடையில் இறங்கி அங்கிருந்து அப்படியே கழுத்து என பயணம் செய்தது. எட்சிலை கூட்டி விழுங்கியவன் இப்பொழுது கொஞ்சம் இயல்பாக "என்னை கேட்காமல் எங்கேயும் போக கூடாது புரியுதா?"
"நீங்க அசந்து தூங்கிட்டு இருந்தீங்களா? அதான் நான் மட்டும் எழுந்து போனேன்." என அருவி அவனை பார்த்து கூறினாள்.
"உனக்கு எதுக்கு அந்த வேலை? வீட்ல யாரும் வேலை செய்ய சொன்னார்களா?"என சொல்லி கொண்டே அவளை அருகில் வர சொன்னான்.
"இல்ல யாரும் எதுவும் சொல்லல. எனக்கு தான் சும்மா இருக்க முடியல. உங்க அம்மா ரொம்ப பாவம் நிறைய வேலை செய்யறாங்க" என அருவி சொல்லிக் கொண்டிருக்க.. என் மருமகள் மட்டும் தான் என்னை நினைக்கிறா? நீ கூட அம்மாவை நினைக்கல மோஹித் என சொல்லிக் கொண்டே அறை கதவில் இருந்து எட்டி பார்த்தார் சுதா.
மாம் என மோஹித் கத்த... அருவி அவனது கத்தலில் திடுக்கிட்டு பார்க்க.. டேய் இந்த கத்தலுக்கு எல்லாம் ரோகன், லோகேஷ், லாவண்யா எல்லாரும் பயப்படுவாங்க ஆனால் உன்னை நான் பெத்தவ. சும்மா சும்மா அவளை மிரட்டாத. இந்தா உனக்கு மின்ட் லெமன் டீ, அருவி இந்தா மா உனக்கு நாட்டு சக்கரையில டி. வாங்கிக்கோ குடிச்சிட்டு குளிச்சிட்டு வாங்க சுட சுட இட்லி ரெடி பொண்ணு என அன்பாக பேசினார்.
"சரிங்க மா!" என அருவி கூற.. நல்ல குட்டி டா நீ! என தலையை வருடியவர். தன் மகனை முறைத்து விட்டு கீழே சென்றார். அவரை பார்த்து சிரித்துக் கொண்டே டீயை ஒரு மிடுக்கு குடித்தாள். அவளின் முன்னால் மோஹித் கோபமாக இருக்க, மன்னிச்சிடு சாமி! எதுக்கு இத்தனை கோபம்? இனி உங்களை கேட்காமல் எங்கேயும் போக மாட்டேன் கெஞ்சி கெஞ்சி கேட்கிறேன். என அருகில் நெருங்கினாள்.
மோஹித் அவளின் கையில் இருக்கும் டீயை வாங்கி டீபாயில் வைத்தவன். அவளின் கையை பிடித்து இழுத்தான். அவள் தயங்கி கொண்டே நகர.. ப்ச் என அருவியின் வலது கையை எடுத்து அவனது இடது பக்க நெஞ்சின் மீது வைத்தான். அருவி கண்கள் விரிய பார்க்க, இப்போ புரியுதா? என்றான். எதற்கு இப்படி செய்கிறான்? அருவி தன் அருகில் இல்லை என்றதும் அறை முழுக்க தேடினான். அவள் அங்கு இல்லாமல் போகவே இதயம் வேகமாக துடித்தது கூடவே கோபமும் எக்க சக்கமாக தலைக்கு ஏறியது. அந்த நொடி வேகமாக துடிக்க ஆரம்பித்த இதயம் இது வரை அடித்துக் கொண்டிருக்கிறது. ஒரு பக்கம் அவன் உடலில் வியர்வை துளிகள் சரிந்து விழுந்தது. இது கவலை மற்றும் கோபம் கலந்த கலவையான வெளிப்பாடு.
எதுக்கு இப்.. இப்படி அடிக்குது? என அருவி வியர்க்க விறவிறுக்க கேட்டாள். "நீ சொல்லாமல் போனதால தான் எனக்கு இப்படி... " என அத்தோடு நிறுத்தி விட்டான். அதற்கு அர்த்தம் அவள் சொல்லாமல் போனதில் ஆத்திரமும், கோபமும் சேர்ந்து கொண்டது.
அருவி என்ன கனவா கண்டாள். இவனுக்கு இத்தனை கோபம் வருமென்று அவளுக்கு எப்படி தெரியும்? இன்னும் அவள் திகைப்பு குறையாமல் நின்றிருக்க, அவன் அதற்கு மேல் எதுவும் பேசாமல் அவளை முறைத்தபடி அவனது மின்ட் லெமன் டீயை ஒரே மூச்சில் குடித்து விட்டு குளிக்க சென்று விட்டான். இப்போ என்னாச்சு? வெளியே தானே போனேன்? அதுக்கு இம்புட்டு கோபமா? என அதே இடத்தில் வியர்க்க விறுவிறுக்க நின்றாள்.
அரை மணி நேரத்தில் வெளியே வந்தான். கண்களில் அதே நெருப்பு. ஆனாலும் இது டூ மச் டா மோஹித். ஆள் பாதி ஆடை பாதியாக வந்தான். அவளை கண்டு கொள்ள வில்லை. சுதா குளித்து விட்டு வர சொன்னது நினைவு வர, வேகமாக உடை எடுத்துக் கொண்டு அவனை திரும்பி திரும்பி பார்த்துக் கொண்டே உள்ளே குளிக்க சென்றாள்.
அடுத்த அரை மணி நேரத்தில் வெளியே வந்தாள். அவளின் உடையை பார்த்தான் புடவை கட்டி இருந்தாள் ஈரமாக இருந்தது. அங்கேயே உடுத்தி இருக்கிறாள். அதிலும் இன்னும் கொஞ்சம் கோபம் ஏறிட கப்போர்டில் இருந்து நேற்று வாங்கி வந்த சுடிதாரை எடுத்து கட்டிலின் மேல் வைத்தான். அவள் விதிர்விதிர்த்து பார்க்க.. மீண்டும் ஒருமுறை அழுத்தமாக பார்த்தான்.
இப்பொழுது வாய் விட்டால் அடிக்க கூட செய்வான் என நினைத்தவள் உடையை எடுத்துக் கொண்டு மாற்ற சென்றாள். பின்னால் ஜிப் இருக்க அதில் உறைந்து நின்றாள். இன்னும் எவ்ளோ நேரம்? என கர்ஜித்தான். அரக்க பறக்க வந்தவள் தயக்கத்துடன் நின்றாள்.
என்னாச்சு? என கோபமாக கேட்டான். அது பின்னாடி பூட்டல.. என தயங்கி நின்றாள். என்ன பூட்டு என முகத்தை சுளித்தவன் அருகில் வந்தான். அவள் விட விடத்த கோழி போல நின்றாள். பின்னால் திரும்ப வியர்வை துளிகளுடன் மின்னிக் கொண்டிருந்தது முதுகு. இப்பொழுதும் இதயம் துடிக்கிறது ஆனால் வேறு விதமாக. மெதுவாக ஜிப் மீது விரல் வைத்தான்.
அருவி அவனை பின் பக்கமாக தலையை சாய்த்து தெரியாமல் உங்க கிட்ட சொல்லாமல் போயிட்டேன். இனி அப்படி பண்ண மாட்டேன். என் மேலே கோபமா இருக்கீங்களா? என கேட்டாள். ம்ம் என முனுமுனுத்தான். இனி சொல்லாம போக மாட்டேன். கோபம் வேணாம் என அவள் சொல்ல.. திடீரென அவனது கைகள் அவளின் இடையுடன் அணைத்துக் கொண்டது.
இந்த முறை இதய துடிப்பு அருவிக்கு எகிறி கொண்டிருந்தது. மெல்ல அவளின் பின் கழுத்தில் மீசை முடிகள் உரச பச்சக் என முத்தமிட்டு அவளின் வியர்வை துளியை உறிஞ்சி கொண்டான். இருவரும் மதி மயங்கி அப்படியே நின்றார்கள்.
அந்த நேரம் மோஹித் போன் சிணுங்க.. அவள் பதட்டத்தில் விலக நகர்ந்தாள். அவளை அணைத்த படி போனை எடுத்தான். அம்மா!..
இந்த அம்மா! என போனை எடுத்தவன். வரேன் மா! என சொல்லி கட் செய்து விட்டு அவளின் கழுத்தில் முத்தம் பதித்தவன். இனி என் கிட்ட சொல்லாம எங்கேயும் போக கூடாது. இது தான் முதலும் கடைசியும் சொல்லிட்டேன் என இடையில் அழுத்தமாக குறும்புடன் கிள்ளினான்.
அம்மாடியோவ் என அவள் கத்திட.. இப்பொழுது தான் கொஞ்சம் சிரிப்பு வந்தது. அதையும் மறைத்து கொண்டான் கிராதகன். இருவரும் அமைதியாக கீழே சென்றார்கள். எந்த பிரச்னையும் இல்லாமல் உணவு முடிந்தது. அமலா லோகேஷ் கிட்ட கண் காட்டிட ... மோஹித் அது ஹாரிகா உன்னோட படத்தில் தானே நடிக்கிறா? நீ போகும் போது அவளையும் பிக் அப் பண்ணிக்க டா! என்றான்.
மோஹித் தன் அண்ணனை ஒரு பார்வை பார்த்து விட்டு நேராக தன் அம்மாவின் அருகில் வந்தவன். மா 10.00 மணிக்கு டியூட்டர் வீட்டுக்கு வருவாங்க. கொஞ்சம் இவளை பாத்துக்கோங்க. என்றான்.
சரி டா என சுதா கூற.. அருவி என்ன பன்றன்னு நான் போன் பண்ணுவேன். கரெக்டா எடுத்து பேசுற!
ம்ம் என உடுக்கை மண்டையை ஆட்டினாள்.
மோஹித் உன் கிட்ட தான் பேசிட்டு இருக்கேன். ஹாரிகாவை கூட்டிட்டு போக முடியுமா முடியாதா! என லோகேஷ் கேட்க..
மாமா விடுங்க நான் பார்த்துக்கிறேன் என எழுந்தாள் ஹாரிகா.
டாடி நான் கிளம்புறேன் என சொன்னவன். அருவி கொஞ்சம் வா உன் கிட்ட கிளாஸ் பத்தி பேசணும் என கையுடன் வெளியே அழைத்து சென்று விட்டான். அவன் அருவியுடன் ஒட்டிக் கொண்டிருப்பதை அமலாவும் ஹாரிகாவும் பார்க்க தவற வில்லை. உள்ளுக்குள் கொழுந்து விட்டு எரிந்தது பொறாமை.
ராமச்சந்திரன், சுதா இருவரும் பெரிதாக எதையும் கண்டு கொள்ள வில்லை. வெளியே மோஹித் அவளின் உடையை இழுத்து அருகில் ஒட்டியவன். நீ இந்த வீட்டு பொண்ணு. பயப்படாத. என் அம்மா கூட தான் இருக்கணும். யாரு எது சொன்னாலும் நம்ப கூடாது. நான் அப்பப்போ போன் பண்றேன் என கன்னத்தில் முத்தம் பதித்தான்.
அவள் முகம் வெட்கத்தில் சிவந்து சாமி குத்தம் என ஆரம்பிக்க, மோஹித் கோபத்துடன் காலையில் என்னை தவிக்க விட்டதுக்கு உன்னை என்ன பண்ணிருப்பென் தெரியுமா? சரி பாவம் குட்டி பாப்பான்னு விட்டேன். இனி எதுவும் வேலை பண்ண? என கீழ் உதட்டை கடித்து இழுத்தான்.
அருவி மட்டும் அதிர்ச்சியில் இல்லை. பின்னால் வந்து கொண்டிருந்த, ஹாரிகா மற்றும் அமலாவும் தான் உறைந்து நின்றார்கள்.
வருவாள்.