இனி எதுவும் வேலை பண்ண? என சொல்லி மென்மையாக அருவியின் கீழ் உதட்டை கடித்து இழுத்தான்.
அம்மாடியோவ் என அதிர்ச்சியில் வழக்கம் போல சொல்ல வந்தவளின் அன்ஆடியோவ்வ் என அவனது பற்களுக்கு உள்ளே சிறை பட்டு தவித்து துடித்து கொண்டிருக்க, மோஹித் ஒற்றை கண் அடித்தவன். உதட்டில் பச்சக் என முத்தமிட்டான்.
அருவி கண்களை அகல விரித்து ம்ம் ம்ம் ஹிம் என முனகினாள். அப்பொழுது தன் தங்கையை வெளியே விட அமலா மற்றும் அவளின் பின்னால் வந்த ஹாரிகா இருவரும் மோஹித் அவளுடன் ஒட்டி நின்ற காட்சியை பார்த்து உறைந்து நின்றார்கள். நல்ல வேளை கொஞ்ச நேரத்துக்கு முன் உதட்டில் அவன் கொடுத்த முத்தங்களும், செல்ல கடிகளும் கண்ணில் தெரிந்திருந்தால் பார்வையாலே பொசுக்கி இருப்பார்கள்.
அருவி வேகமாக அவனிடம் இருந்து விலகி மூச்சு முட்ட நெஞ்சை பிடித்த படி பார்க்க, மோஹித் கன்னத்தில் தட்டிய படி ஒழுங்கா படி. தேவையில்லாம யார் கிட்டயும் பேசாத என சொல்லிய படி காரில் ஏறினான். அது பின்னால் வந்து கொண்டிருந்த அக்காள் தங்கைகளின் காதுகளில் நன்றாகவே கேட்டது.
அமலா வஞ்சனையுடன் பார்த்தாள். அருவி அவன் சென்றதும் திரும்பி நடந்தாள். ஹாரிகாவை காரில் போக சொல்லி விட்டு அமலா அருவியை அழைத்தாள். ஹேய்! என அழைக்க, அடுத்த நொடி அருவியின் போன் சிணுங்கியது. அருவி பதட்டத்துடன் போனையும் அமலாவையும் பார்த்தாள்.
மீண்டும் மீண்டும் அழைப்பு வர, இந்த முறை அட்டன் செய்தாள். போனை எடுக்க இவ்வளவு நேரமா டி? திருப்ப வீட்டுக்கு வரட்டுமா? என மோஹித் குரல் கேட்க.. இல்.. இல்லங்க சாமி என தயங்கி தயங்கி பதில் கூறினாள் அருவி.
அமலாவுக்கு மோஹித் மேல் கொல்லும் வெறி வந்தது. அவளின் மனதில் இப்போவே ஆரம்பிக்க வேணாம் விட்டு புடிப்போம் என சொல்லி கொண்டவள் எதுவும் பேசாமல் உள்ளே சென்றாள். அருவி அவனிடம் பேசி விட்டு வீட்டுக்குள் வந்தாள். அங்கே அனைத்து வேலைகளையும் முடித்து விட்டு சுதா திரும்ப, அம்மா நீங்க சாப்பிட்டிங்களா? என கேட்டுக் கொண்டே வந்தாள் அருவி.
இல்ல மா இனிமேல் தான் என முகத்தை துடைத்துக் கொண்டே பதில் கூறினார் சுதா. வாங்க மா உங்களுக்கு நான் பரிமாருறேன். என அருவி அழைக்க, வேணாம் மா நீ படிக்க தயாராகி இரு உன் புருசன் சொல்லிட்டு போயிருக்கான் என கூறினார்.
அட வாங்க மா! என கையை பிடித்து அழைத்து சுதாவை சாப்பிட வைத்தாள். கிச்சனுக்கு சென்று இதை எப்படி பயன்படுத்தனும்? அதை எப்படி பயன் படுத்துவது? என அவள் கேட்க.. அனைத்தையும் சொல்லி கொடுத்தார். அவருக்கு ஒரு துணை கிடைத்து விட்டது போல இருந்தது. இந்த வீட்டில் யாருமே பேச மாட்டார்கள். ரோஹன் மட்டுமே அவருடன் ஒட்டிக் கொண்டு திரிவான். அது போல இப்போ அருவி.
அதன் பின் டியூட்டர் வந்து விட அருவிக்கு பாடங்கள் சொல்லி கொடுக்க பட்டது. அவளுக்கு பழக மிகவும் கஷ்டமாக இருக்க, தூங்கி தூங்கு வழிந்தாள். என்ன இது? இப்படி இருந்தால் எப்போ எல்லாத்தையும் நீ கத்துப்ப? சொல்லு? சரி இல்ல மா நீ என ஆசிரியர் மிரட்டி விட அருவிக்கு அழுகையாக வந்தது. இன்று ஒரு முடிவுடன் இந்த படிப்பு எல்லாம் வேண்டாம் என சொல்லி விட வேண்டும் என காத்திருந்தாள்.
இங்கே படப்பிடிப்புக்கு அனைத்தும் தயாராக இருக்க மோஹித் அங்கும் இங்கும் அலைந்து கொண்டிருந்தான். கரண் இன்னொரு பக்கம் செட் கேமரா மேன், ஆர்டிஸ்ட்ஸ் என அனைவரையும் சரியாக வேலை வாங்கிக் கொண்டிருக்க, நாயகன் தயாராக இருந்தார். மோஹித் நான் ரெடி சாட் போலாமா? என அவர் கேட்க.. ஹீரோயின் எங்கே? என மோஹித் மைக்கை பிடித்த படி கடுமையாக சவுண்ட் கொடுக்க அனைவரும் ஒரு நிமிடத்தில் நிசப்தம் ஆகினார்கள்.
உடனே கதாநாயகியின் மேனேஜர் தீக்சி ஓடி வந்தாள். என்னாச்சு? எத்தனை தடவை கூப்பிடறது? சாட் ரெடி ஆகிடுச்சு? ஹீரோ சார் ரெடி! என்ன பண்ணிட்டு இருக்காங்க உங்க மேடம் என அதட்டல் குரலில் கேட்டான் மோஹித்.
அது சார் அது வந்து மேடம்க்கு உங்களை பார்க்கணுமாம்.
வாட் த ஹெல்? என அவனது முகம் கோபத்தில் கொழுந்து விட்டு எரிய.. என்ன என்னாச்சு டைரக்டர் சார்! சாட் ரெடி! இன்னும் என்ன பண்றீங்க என கரன் உள்ளே வந்தான்.
அது வந்து ஹாரிகா மேடம் மோஹித் சார பார்த்தால் தான் சாட்டுக்கு வருவேன்னு சொல்லிட்டாங்க. என தீக்சி நெளிந்து கொண்டே கூற.. டேய் போகாத என கரண் கூற.. என்ன சொல்றாங்க மேடம்ன்னு கேட்டுட்டு வரேன். என சட்டையை மடித்துக் கொண்டு எழுந்து சென்றான் மோஹித்.
நானும் வருவேன் டா! என கரண் அவன் பின்னால் செல்ல, அவனது சட்டையை பிடித்தாள் தீட்சி.. ஹே கைய எட்ரி.. என கரண் அவளை முறைத்து விட்டு நண்பனின் பின்னால் செல்ல.. சாருக்கு கொஞ்சம் கூட இங்கிதமே இல்லையா? அவங்க ரெண்டு பேரும் காதலர்கள் தனியா சந்திக்கிராங்க. அங்கே இங்கிதம் இல்லாம எதுக்கு பின்னாடி போறீங்க? என அவன் முகத்தை மெய் மறந்து ரசித்துக் கொண்டே கூறினாள்.
கரண் கோபமாக மோஹித்க்கு கல்யாணம் ஆகி ஒரு வாரம் ஆகுது. அவனோட பொண்டாட்டி வீட்ல இருக்கா! இப்போ மேனா மினுக்கிய எதுக்கு அவன் பார்க்கணும்? அதுக்கு நீ தூது வேற.. என கர்ஜித்தான். என்ன? என்ன சொல்றீங்க? என தீட்சி அதிர்ச்சியுடன் கேட்டவள் அவன் அருகில் நெருங்கினாள்.
ஹே ஹே தள்ளி போ! இடியட்.. இந்த பக்கத்தில் வரது, உரசி பேசுறது இதெல்லாம் வச்சுக்கிட்ட கண்ணம் பலுத்திடும் என்றவன் வேகமாக ஹாரிகாவின் கேரவன் நோக்கி சென்றான் கரண். அவன் சென்றதும் கண்களில் நீர் முட்டி கொண்டு வந்தது தீட்சிக்கு அதை வெளிக்காட்டி கொள்ளாமல் அவளும் சென்றாள். என்ன செய்தாலும் இந்த தறி கெட்ட மனது ஆயிரம் திட்டு வாங்கினாலும் அவனை தேடி தான் செல்கிறது.
இங்கே மோஹித் கேரவன் உள்ளே நுழைந்ததும் பாய்ந்து அவனை கட்டி கொண்டாள் ஹாரிகா.
வருவாள்..