மச்சான் அவள்!
மச்சான் டேய் அவள் என உதடு பிதுக்கி கொண்டே மதுவை வாயில் சரித்தான் ஜீவா.
பக்கத்தை புரட்டிய படி கண்ணாடியை மூக்குக்கு தள்ளினான் மனோஜ்.
"டேய் நான் ஃபீல் பண்றேன் ஆனால் என்னை விட உனக்கு அப்படி என்ன இந்த புக் முக்கியமா போச்சு!" என ஜீவா மண்டி போட்டு தன் நண்பனின் முன்னால் அமர்ந்தான்.
"பின்னாடி வராதீங்கன்னு தானே சொன்னாள்"
"ஆமா! வலிக்குது மச்சி இங்கே"
இதுவும் நல்ல விசயம் தான் டா ஜீவா!
என்ன நல்ல விசயம்? என ஜீவா தன் நண்பனை பார்த்தான்.
உன்னைய எட்ட நிறுத்துறான்னா இப்போ வரைக்கும் அவள் மனசுல யாருக்கும் இடம் இல்ல. அவள் யாரையும் விரும்பல. என்றான் மனோஜ்.
எப்படி? என ஜீவா கேட்க.. மனோஜ் சைக்காலஜி புத்தகத்தை மூடி வைத்து விட்டு இந்த மாதிரி பொண்ணுங்க 100 ல பத்து பேர் தான் இருப்பாங்க. அவங்களுக்கு படிப்பு விட்டால் வீடு வீட்டை விட்டால் படிப்பு அவ்ளோ தான். அதுல 5 பேர் பயந்துகிட்டு அப்படி இருப்பாங்க. மீதி 5 பேர் அவங்களோட இலக்குகளை நோக்கி போவாங்க. இதுல நல்லா படிக்கிறது, படிக்காத பொண்ணு எல்லாமே அடக்கம். இப்போ வானதி அந்த லிஸ்டில் இருக்கா! என்றான் மனோஜ்.
வானதியா! அவள் பேர் வானதியா மச்சான்! என ஜீவா கண்கள் சொக்க அவளின் பெயரை முனுமுனுத்துக் கொண்டே விழுந்தான். அடுத்த நாள் MP3 பிளேயரில் நதியே நதியே காதல் நதியே நீயும் பெண் தானே! அடி நீயும் பெண் தானே ஒன்றா இரண்டா காரணம் நூறு கேட்டால் சொல்வெனே என அறைக்குள் ஒலித்து கொண்டிருந்தது.
ஜீவா மனதில் இப்போதைக்கு ஒரு ஆறுதல் அவள் மனதில் எந்த ஆணும் இல்லை என மனோஜ் சொன்னதை முழு மனதாக நம்பினான். மச்சி நான் இனி அவளை பார்க்க மாட்டேன் டா!
குட் மச்சி!..
ஆனால் அதுக்காக நீ எனக்கு ஹெல்ப் பண்ணனும் என ஜீவா வந்து நிற்க.. எனக்கு இந்த காதல் கண்றாவி எல்லாம் சுத்தமா பிடிக்காது ஒழுங்கா போயிடு என் கிட்ட எந்த ஹெல்ப்பும் கிடைக்காது. எல்லாமே ஒன்லி செவி வழி மட்டும் தான். புரியுதா? என இடது கையில் ஸ்பூன் கொண்டு உணவை சாப்பிட்டான் மனோஜ்.
ஜீவா சலித்து கொண்டு "எத்தனை வாட்டி சொல்லிருக்கேன். ரைட் ஹேண்டில் ஸ்பூன பிடி மனோஜ்!"
உன்னோட ஆர்டரை என்னோட பிரயின் கேட்கணும்ன்னு அவசியம் இல்ல. என முறுக்கி கொண்டான் மனோஜ். சரி நீ என்னமோ பண்ணு. ஆனால் என் கூட இனி வீக் எண்ட் மட்டும் பஸ்ல வா!
நொநோ! என மனோஜ் கத்த... நீ வர அப்போ தான் உன்னோட லவ்க்கு நான் ஹெல்ப் பண்ணி ஆஷாவை சேர்த்து வைப்பேன் என்றான் ஜீவா.
டேய் ஆஷா உனக்கு இதை கொடுத்தாள் என சொல்லி கொண்டே ஒரு பாக்ஸ் மாதுளை பழங்களை நீட்டினான் அஜய்.
மனோஜ் எதுவும் பேசாமல் உணவை முடித்தவன். உடையை சரி செய்து கொண்டிருக்க.. மச்சான் என அஜய் அழைத்தான்.
மனோஜ் திரும்ப வில்லை.
டேய் நீ கூப்பிடு என அஜய் ஜீவாவுக்கு சிக்னல் கொடுக்க, மச்சி என மெதுவாக அழைத்தான் ஜீவா.
என்ன டா ஆச்சு? என அஜய் கேட்க.. ஆஷா பத்தி பேசினேன் அதான் என ஜீவா சொல்ல..அப்போ நம்மளும் தேவையில்லாத நேரத்தில் வந்துட்டோம் போலயே என இருவரும் மனோஜ் குமாரை பார்த்தார்கள்.
மனோஜ் கோபத்துடன் அவர்களை பார்த்தவன். இது தான் லாஸ்ட் வார்னிங் என்னை கம்பல் பண்ணி ஆஷாவொட சேர்த்து வச்சு பேசாதீங்க. ஐ ஹேட் தீஸ் பிஹேவியர் காட் இட்.
இல்ல மச்சி அது அவள் உன்னை ரொம்ப லவ் பண்றா என அஜய் சொல்ல.. மனோஜ் பார்வை ஜீவாவின் மீது படிந்து லிசன் உனக்கு பிடிக்குன்றதுக்காக அந்த பொண்ணுக்கும் உன் மேலே அட்ராக்சன் ரியாக்ஷன் வரணும்னு அவசியம் இல்லையே! விருப்பம் இல்லன்னா விட்டுடனும். அது பொண்ணா இருந்தாலும் சரி பையனா இருந்தாலும் சரி. எனக்கு ஆஷா மேலே அப்படி ஒரு எண்ணம் இப்போ வரைக்கும் இல்ல. எதிர்காலத்தில் அப்படி நடக்குமா எனக்கு தெரியாது. ஆண் பெண் அதுல ஒருத்தருக்கு விருப்பம் இல்லன்னா கூட வற்புறுத்துவது தப்பு. அவ்ளோ தான் சொல்லிட்டேன். இனி ஆஷா பத்தி என் கிட்ட பேசாதீங்க. என சொல்லி விட்டு அவனது உடமைகளை எடுத்துக் கொண்டு கிளம்பினான் மனோஜ்.
மனோஜ் சொன்ன விஷயங்கள் ஜீவாவின் மனதில் ஓடி கொண்டிருந்தது. அவள் தான் நம்மள டிஸ்டர்ப் பண்ண வேணாம்ன்னு சொல்லிட்டாலே இனி நம்ம அவளை தொந்தரவு பண்ண கூடாது என தன் மனதை கல்லாக்கி கொண்டு முடிவெடுத்தான்.
ஆனால் பேருந்து பயணத்தை மட்டும் தவிர்க்க முடிய வில்லை. அதற்கு பதிலாக அரசு பேருந்தில் பயணம் செய்வதை விட்டான். அதற்கு பதில் ஆண்டவர் தனியார் வண்டியில் அவ்வப்பொழுது செல்வான். அதுவும் சரியாக வாரத்தின் கடைசி.. எதோ ஒரு நப்பாசை அவளை பார்த்தால் அதாவது தூரத்தில் இருந்தாவது ரசித்து கொள்ளலாமே அந்த காரணத்தால்...
இப்படியே ஆறு மாதங்கள் ஓடியது. வழக்கம் போல அனைவரும் கல்லூரிக்கு கிளம்பினார்கள். டேய் மனோஜ் வாயேன் டா! இன்னிக்கி எங்க கூட என அஜய் அழைக்க.. மனோஜ் காரில் ஏற சென்றான். அவன் வர வேணாம் டா! அவன் ஃபேமிலி பார்ன் இன் சில்வர் ஸ்பூன் விடு என ஜீவா நடந்து சென்றான்.
நான் வரேன் என ஒரு வார்த்தையில் மனோஜ் முன்னால் நடந்தான். மனோஜ் எப்பொழுதுமே இப்படி தான் ஆனால் அந்த சிடுமூஞ்சி தனமும் பிடிக்க தான் செய்யும்.
அவர்கள் அனைவரும் பேருந்தில் செல்லும் நேரம் இன்று அரசு பேருந்து ஸ்ட்ரைக் போராட்டத்தில் ஈடுபட்டார்கள். யூஸ்லெஸ் பெல்லோஸ் நான் காரில் போயிருப்பேன் டா! உங்களால் தான் என மனோஜ் பொங்கி கொண்டிருந்தான்.
அடேய் இரு டா ஆண்டவா வருது போவோம் என அஜய் சொல்ல.. அதிகாலை என்றாலும் கூட்டம் அதிகம் மெல்ல ஏறினார்கள். அமர்ந்து கொள்ள வாய்ப்பு இல்லை. அதுல பாட்டு வேறு ஆஷா, தீப்தி, அக்ஷயா என முகத்தில் மேக் அப் கூடவே சோப்பு வாசம், அதனுடன் மாய்சரைசிங் க்ரீம் என கும்மென இருந்தார்கள்.
"உன்னை பார்த்த பின்பு தான் என் சோதனை காலம்" என பாட்டு வேறு ஓடிக் கொண்டிருந்தது. என ஓடிக் கொண்டிருக்க, ஆர்ட்ஸ் அன்ட் சயின்ஸ் மாணவர்கள் உற்சாகமாக கத்திக் கொண்டும் பாடிகொண்டும் வந்தார்கள்.
பேருந்து நிலையத்தில் இருந்து புறபட்டதும் மூன்றாவது ஸ்டாப் பெட்ரோல் பங்க் ரவுண்டானா! தன்னிச்சையாக ஜீவாவின் கண்கள் ஸ்டாப் பக்கம் சென்றது. யார் ஏறுகிறார்கள்? யார் இறங்குகிறார்கள் என எதுவும் தெரியவில்லை. ஆனால் அதற்கு மாறாக தீந்தனானா தீந்தானா நதியே நதியே காதல் நதியே என பாடல் ஓட மனோஜ் கண்ணாடியை சரி செய்த படி ஜீவாவை பார்த்தான்.
பேருந்து கூட்டத்தின் இடைஞ்சலில் பச்சக் என உதடு ஒட்டும் சத்தம் அதன் பின் பளார் என அரை சத்தம். மனோஜ் கொலை வெறியுடன் பார்க்க வேறு யார் அஜய் தான் அரையை வாங்கி கொண்டான். கூட்டத்தில் தெரியாமல் மனோஜ் கன்னத்தில் மோதி விட்டான். பெண்ணும் பெண்ணும் ஒட்டி நின்றால் அது பார்க்கும் படி இருக்கும் ஆனால் அதுவே ஆணும் ஆணும் ஒட்டி நின்றால் ச்சீ நினைக்கவே கொடுமையாக இருக்கும். இனி உன் கிட்ட பேச மாட்டேன் மனோஜ் சோடா புட்டி என கத்திக் கொண்டே அந்த இடத்தை விட்டு அஜய் நகர்ந்தான்.
தள்ளி போமா! பைய கழட்டு அப்டி இல்லன்னா கீழே இறங்கிக்க என இன்னொரு பக்கம் நடத்துநர் கத்தினார். உள்ளே போமா பொ இடம் இருக்கு போமா என கத்த..நகர்ந்து நகர்ந்து வந்தாச்சு. நதியே பாடல் முடிந்ததும் நதியே வந்தது. வானதி இப்பொழுது ஜீவாவின் அருகில். அவளை பார்த்ததும் ஒரு நொடி சிலையாகி போனான். ஒரு நொடி தான் அவளை ஊடுருவி பார்த்து விட்டு வெடுக்கென வேறு புறம் திரும்பி கொண்டான் ஜீவா.
மனோஜ் அவர்களை கண்டு கொள்ளவில்லை. வானதி முடியை காதுக்கு ஒதுக்கி கொண்டே பதட்டத்துடன் நின்றாள். அவனை பார்க்க கண்கள் வரம் கிடந்தது. அவளின் பிரத்யேக வாசனை அவன் நாசியை துளைத்தது. மிக நெருக்கத்தில் ஜீவா.
"டேய் ஜீவா!"
"ஜீவா!" என அஜய் அழைக்க..
என்ன டா! என ஜீவா எட்டி பார்த்தான்.
நம்ம எல்லார்க்கும் தீப்தி டிக்கெட் எடுத்திட்டா சொல்லிடு அவன் கிட்ட என அஜய் கூறினான்.
ம்ம் என ஜீவா கழுத்தை திருப்பி கொண்டான்.
ஜீவா என்ற பெயர் சொல்லி முடித்ததுமே பேருந்தில் பாடல் ஓடியது. உள்ளுக்குள் புது ரத்தம் பாய்ந்தது ஒருத்திக்கு.. சின்ன உதடுகள் பாட்டை முனுமுனுத்தது என்றால் பார்த்து கொள்ளுங்கள்..
பிளேயரில் பாடல் வேறு ஜீவாஆ! என காட்டு கத்தலில் முழு சத்தத்தில் ஓட அஞ்சாதே ஜீவா நெஞ்சோடு வா வா என ஜோடியாக ஆடியது பிரஷாந்த் சிம்ரன் என்றால்? இங்கே ஒரு ஜோடி கண்கள் ஜீவனை நொடிக்கு நொடி பார்த்தது. அவள் தான் வானதி அந்த பார்வை உண்மை காதல் பார்வையா? இல்லை ஈர்ப்பின் வெளிப்பாடா? ஆனால் அந்த பார்வையின் முடிவு ஜீவா தான். கம்பியை பிடித்து நின்றிருந்தான்.
அவழும் தான் ஆனால் கம்பீரம் குறைய வில்லை அவளிடம் விழுந்து விட்டோம் என காட்டி கொள்ளவும் இல்லை. கெத்து மெயின்டெய்ன் செய்தான் ஜீவா. இருவரும் ஒட்டி உரசும் நெருக்கம். பாடல் வரிகள் அவளை மொத்தமாக சாய்த்து விட்டது.
இப்படியே பள்ளி வரும் வரை வைத்த கண் வாங்காமல் அவனை பார்த்தாள் வானதி. ஜீவா தான் மொத்தமாக தடுமாறி போனான். இதயம் என்னவோ செய்தது இருவருக்கும். கண்ணியம், கட்டுப்பாடு அதனுடன் சொன்ன வார்த்தையை காப்பாற்றுவது எல்லாமே ஒருவனிடத்தில் பார்த்தாள் வானதி. அவன் நண்பன் இல்லை நண்பானாக வேண்டாம் என தோன்றியது கைய பிடிச்சு வாழ்க்கை முழுக்க பங்கு போட்டு வாழ வேண்டும் என ஒரு அவா!
இருவரின் இதயமும் தறிகெட்டு துடிக்க ஜீவா ஸ்கூல் வந்திடுச்சு என மனோஜ் குமார் என்னும் கடிகாரம் அலாரமாக அலற... என் கிட்ட எதுக்கு டா சொல்ற? நம்ம மெடிக்கல் காலேஜ் என கூறினான் ஜீவா.
அச்சோ என வேகமாக வானதி இறங்கி கொண்டவள். ஜீவாவை முறைத்து பார்த்தாள்.
ஜீவா..?
ஆசை தொடரும்..

Author: Pradhanya
Article Title: Episode-18
Source URL: Pradhanya kuzhali novels-https://pradhanyakuzhalinovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.