Pradhanya

Active member
Staff member
Joined
Oct 6, 2024
Messages
120
மோஹித் கடுப்புடன் கேரவனின் கதவை தட்ட திறந்திருந்தது. ஹாரிகா என கோபமாக கத்திக் கொண்டே உள்ளே சென்றான். அடுத்த நொடி அவனை பாய்ந்து அணைத்துக் கொண்டாள்.

அவளின் அங்கங்களை மோஹித் மேல் போட்டு அழுத்திக் கொண்டே மோஹித் நீ நடிக்கிற? உன்னால் எப்படி அந்த படிக்காத முட்டாள் கூட இருக்க முடியும்? எனக்கு எல்லாம் தெரிஞ்சிடுச்சு நீ எதோ கட்டாயத்துக்காக தான் அந்த வில்லேஜ் பொண்ணு மேரேஜ் பண்ணிருக்க.. எதுவா வேணாலும் இருக்கட்டும். உன் மனசுல நான் தான் இருக்கேன்னு தெரியும் என அவள் மீண்டும் தொடர்ந்து பேச..

ஹாரிகாஆஆஆ! என கோபமாக கத்தியவன் ஆவேசத்துடன் தள்ளி விட்டான். அவள் எதிரில் இருக்கும் ஒன் சீட்டர் சோபாவில் பொத்தென விழுந்தாள். மோஹித்தின் முகம் கடுமையாக மாறி கண்கள் எல்லாம் சிவந்து போனது. என்ன மோஹித் இது? நான் உன்னோட லவ்வர் என அவள் வலியில் முனகினாள்.

மோஹித் ஹாரிகாவை பார்த்து முறைத்து தன் கோபத்தை கட்டு படுத்தியவன். இன்னொரு தடவை இந்த மாதிரி என் மேலே உரசுற வேலைய வச்சுக்காத! நான் கல்யாணம் ஆனவன். எனக்கு பொண்டாட்டி இருக்கா! Finally உனக்கு இந்த படத்தில் நடிக்க விருப்பம் இருந்தால் நடி . இல்லன்னா கிளம்பி போறதா இருந்தால் ஒரு பிரஸ் மீட் வைக்கிறேன் என்னை பத்தி ஆயிரம் அவதூறு கூட சொல்லிட்டு கிலம்பிடு. எனக்கு வேலைன்னு வந்துட்டா யாரும் முக்கியம் இல்ல. அண்ணன் தம்பி, தெரிஞ்சவங்க தெரியாதவங்க எதையும் பார்க்க மாட்டேன் தூக்கி போட்டுட்டு போய்ட்டே இருப்பேன். உனக்கு இன்னும் 3 நிமிடம் டைம் ஷாட்க்கு வர என சொல்லி விட்டு நகர்ந்தான்.

வெளியில் ஒரு பக்கம் கரண் நின்று கொண்டிருக்க இன்னொரு பக்கம் தீட்சீ நின்றுருந்தாள். கேரவன் கதவுகள் டமாரென உடையும் அளவுக்கு கதவை திறந்து கொண்டு கோபத்துடன் சென்றான் மோஹித். கரண் தன் நண்பனின் பின்னால் செல்ல, தீட்சி கேரவன் உள்ளே ஓடினாள். மேடம் என்னாச்சு? என பதட்டத்துடன் அவள் கேட்க..

கெட் அவுட் என கத்தியவள். ஒரு ஆல பெரு மூச்சை விட்டு எப்படியாவது மோஹித்தை அவளிடம் இருந்து பிரித்து விட வேண்டும். எனக்கு கிடைக்காத மதிப்பும், சுக போக வாழ்க்கையும் யாருக்கும் கிடைக்க கூடாது என சபதம் எடுத்துக் கொண்டவள் அடுத்தடுத்து என்ன செய்ய வேண்டும் என முடிவெடுத்தாள் அதை உடனேயே செயல் படுத்த தொடங்கினாள்.

உள்ளே என்ன டா நடந்தது? என கரண் கேட்க.. ஒன்னும் இல்ல விடு! என அவர்கள் பேசி கொண்டிருக்கும் போதே மேடம் வந்தாச்சு என சத்தம் கேட்க.. அடுத்தடுத்த காட்சிகள் சக் சக்கென நடித்து கொடுத்தாள். அவளின் முகத்தில் எதையும் காட்டி கொள்ள வில்லை. மோகித்தின் முகம் கடுமையை தத்தெடுத்து இருந்தது.

அந்த நாள் மொத்தமாக அவளால் மிகவும் கோபத்தில் இருந்தான் மோஹித். இன்று எடுக்க பட்ட அணைத்து ஷாட்களையும் பார்த்து விட்டு அவனுக்கு திருப்தியாகவே இல்லை. உயிரோட்ட நடிப்பு கொஞ்சம் கூட ஹாரிகாவிடம் இல்லை. அதே கடுப்புடன் அந்த நாள் முடிந்தது. ஷூட்டிங்கில் வாடி வதங்கிய மோஹித் தன்னவளின் மார்பில் இளைப்பார வந்தான்.

ஆனால் இங்கே அவனது தேன் என்ன செய்ய காத்திருக்கிறாளோ? ஹாரிகா சரியாக 9.30 மணிக்கு வந்து சேர்ந்தாள். ஹாரி ஃப்ரெஷ் ஆகிட்டு சாப்பிடு என அமலா அழைக்க, நேராக அவளறைக்கு சென்றாள். நாகரீக உடையை அணிந்து கொண்டு ஃப்ரெஷ் ஆகி வெளியே வந்தாள். அடுத்ததாக மோஹித் 10.00 மணிக்கு வீடு வந்து சேர்ந்தான்.

அவன் வந்ததும் வேகமாக முன்னால் சென்றாள் அருவி. அவளை பார்த்ததும் தொலைந்த உற்சாகம் மீண்டும் நட்டு கொண்டது. அவளை அணைக்க நெருங்கினான். அம்மாடியோவ்வ் எல்லாருக்கும் இருக்காங்க என வெட்கத்தில் சிவந்தாள்.

மோஹித் சீக்கிரம் ஃப்ரெஷ் ஆகிட்டு வா டின்னர் ரெடி என சுதா கூற.. மேலே வா என அவளை கண்களால் அழைத்தான். அருவி என சுதா அழைக்க இதோ அம்மா என அவனை விட்டு சுதாவிடம் ஓடி விட்டாள். அங்கு ஹாரிகா என்பவள் இருக்கிறாள் என்பதையே மறந்து போனான்.

சரியாக மோஹித் உணவு மேஜைக்கு சாப்பிட வர, ஹாரிகா எழுந்து சாப்பிட சென்றாள். வா மா வந்து உட்காரு என சுதா பணிவுடன் கூறினாள். இதோ ஆன்ட்டி என மோஹித்தின் எதிரில் அமர்ந்தாள். அருவி நீயும் உட்காரு அவன் கூட சாப்பிடு என வலுக்கட்டாயமாக அமர வைத்தார்.

மோஹித் கண்களில் புன்னகை தாண்டவம் ஆடிட அவளை பார்த்தவாறே உணவை மெல்ல மெல்ல எடுத்து சாப்பிட்டான். ஹே இதை வச்சுக்கோ! இது சூப்பரா இருக்கும். இதுல கொஞ்சம் நெய் விட்டுக்க, இந்த பூண்டு பொடி இன்னும் நல்லாருக்கும் என அவளுக்கு பார்த்து பார்த்து பரிமாறி அவளிடம் கிறுக்கு தனமாக பேசிக் கொண்டே கொஞ்சம் சிரித்தான். அவளை சிரிக்க வைத்தான். மொத்தத்தில் அங்கு ஹாரிகா என்று ஒருவள் இருப்பதையே மறந்து போனார்கள் இருவரும்.

ஹாரிகாவுக்கு துக்கம் தொண்டையை அடைத்தது. ஆனால் வெளி காட்டி கொள்ள வில்லை. மோஹித் உணவு முடித்து எழும் நேரம் ஹாரிகா அழைத்தாள். மோஹித்..

மோஹித்..

என்னங்க உங்களை அவங்க கூப்பிடுறாக என அருவி கூப்பிட்டு சொல்ல.. அவளின் முன் எதுவும் காட்டிக் கொள்ளாமல் என்ன சொல்லு ஹாரிகா? என அவளை பார்த்தான்.

ஒரு நீண்ட பெரு மூச்சை விட்ட ஹாரிகா அவனை பார்த்து என்னை மன்னிச்சிடு. நீ சொன்னது சரி தான். உனக்கு கல்யாணம் ஆகிடுச்சு. இனி உன்னோட வழியில் வர மாட்டேன். இன்னிக்கு நான் அப்படி நடந்திருக்க கூடாது சாரி! இனி நம்ம ரெண்டு பேரும் நல்ல ஃப்ரெண்ட்ஸ்சா இருக்கலாம். இப்போ கூட என்னோட வீட்டுக்கு போக தான் தோணுது. ஆனால் என்னோட டாடி கொஞ்சம் சிக்கா இருக்காரு நான் போனால் BP இன்னும் பிரச்னை ஆகிசுச்சுன்னா என்ன பண்றது? பயமா இருக்கு. அதான் இனி நான் உண்டு என் வேலை உண்டுன்னு இருக்கேன். என சொல்லி விட்டு பெருந்தன்மையான முகத்துடன் அருவியை பார்த்து விட்டு கை கழுவி விட்டு அவளறைக்கு சென்று விட்டாள்.

அருவிக்கு தலையும் புரிய வில்லை வாலும் புரிய வில்லை. அவள் எதுவும் பேசாமல் எழுந்து கை கழுவி விட்டு பாத்திரத்தை ஜலதரையில் இருந்து கழுவி எடுத்து வைத்து சாப்பிட்ட தட்டை முகர்ந்து பார்த்தாள். டிஷ் வாசர் வாசனை ஒரு திருப்தியை கொடுத்தது. பட்டணத்து வாழ்க்கை எவ்வளவு சொகுசு. எத்தனை சுக போகம்? என பாத்திரம் விளக்கும் சாமான் பவுடரில் இருந்து தோன்றியது.

அவள் ஒரு எண்ணத்தில் இருக்க, அதை களைக்கும் விதமாக அவளின் பின் கழுத்தில் ஆண் வாசனையுடன் சேர்ந்து அழுத்தமான மூச்சு காற்று. அவள் அம்மாடியோ என கத்த ஆரம்பிக்க..ஹே இர்ரி இன்னும் பத்து நிமிசத்தில் மேலே வர.. இல்லன்னா எல்லார் முன்னாடியும் உன்னை தூக்கிட்டு போக வேண்டி வரும் என கண் இமைக்கும் நொடியில் காணாமல் போனான்.

அருவி அப்படியே நின்று கொண்டிருக்க, அம்மாடியோவ் என கிண்டலடித்து கொண்டே சமையலறைக்குள் நுழைந்தாள் சுதா. அம்மா! என்ன நீங்க என்னை மாதிரி சொல்றீங்க? என சிரித்தாள். சுதாவும் சிரிக்க, சரி வாங்க மா சாப்பிடுங்க என அழைக்க, எத்தனை தடவை? நான் உன்னோட மாமா கூட சாப்பிட்டேன். என்றார்.

மாமாவா? என அருவி முழிக்க..

உன் புருஷனோட அப்பா உனக்கு மாமா தானே! என சுதா சொல்ல.. அதற்குள் அருவியின் போன் சிணுங்கியது. மோஹித் என தெரிந்து கொண்ட சுதா மெல்ல சிரித்த படி.. இந்த ஃபிளாஷ்க் தண்ணி எடுத்திட்டு போ! கொடுத்து விட சொன்னான். என அனுப்பினார்.

சரிங்க மா! என அருவியும் மேலே சென்றாள். அப்பொழுது அங்கு கதவோரம் நின்று கொண்டிருந்த ஹாரிகா அவளை பார்க்க.. அருவியும் பார்த்தாள். ஹாரிகா மென்மையாக புன்னகைத்து கை அசைத்தாள். அருவியும் அதே போல செய்து விடை பெற்றுக் கொண்டு மேலே சென்றாள்.

என்ன பண்றா? இன்னும்.. என மோஹித் நிலை கொள்ளாமல் தவித்தான். கதவு திறக்க பட அடுத்த நொடி பாய்ந்து கொண்டு அவளை சுருட்டி கொண்டவன். Miss you baby என் ஹனி பேபி! Miss you too டிஇஇஇ! என உதட்டில் அத்தனை முத்தம் கணக்கில்லாமல் கொடுத்தவன் அப்படியே அவளுடன் படுக்கையில் விழுந்து முத்தத்தை தொடர்ந்தான்.

மம்.. ஹிஹம்.. க்ம்.. ப்ம் என முனகல் சத்தத்துடன் அவள் துவண்டு விழ இறுதியாக கீழ் உதட்டையும் நாவையும் சேர்த்து கடித்து இழுத்து உதடு தடித்த பின் விடுவித்தான். அவள் மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க முகம்மெல்லாம் சிவந்து படுக்கையில் கிடந்தாள். அவளின் முகத்தை இமை வெட்டாமல் ரசித்தான். பாற்கடலில் பள்ளி கொண்ட பெருமாள் போல.

அருவி வேகமாக முகத்தை மூடிக் கொள்ள.. ப்பா கொல்ற ஹனி என நெற்றியில் முத்தமிட்டான். அவள் கீழ் உதட்டை கடித்த படி வேறு புறம் திரும்பி கொள்ள.. நீ என்னை மிஸ் பண்ணலயா? என கேட்டான். அவளின் முகத்தை ஏந்தி. அப்படின்னா? என அருவி கேட்க.. இன்னிக்கி என்னோட நினைப்பு உனக்கு வரலையா? என மோஹித் அவளின் விரல்களுக்கு முத்தமிட்ட படி கேட்டான்.

அது என அவள் தயங்கினாள். எப்படியும் வாயை திறந்து சொல்ல மாட்டாள் என நினைத்தவன். சரி சொல்லு இன்னிக்கு க்ளாஸ் எப்படி போச்சு? என கேட்டான்.

என்ன கிளாஸ்? அப்படின்னா?

உனக்கு ஒருத்தங்க வீட்டுக்கு வந்து சொல்லி கொடுத்தாங்களே அதை பத்தி கேட்டேன் என்றான்.

உடனே நினைவு வந்தவளாய் எழுந்து அமர்ந்தவள். சாமி எனக்கு அது எல்லாம் தெரியாது. என்னால முடியல. நாளையில் இருந்து வர வேணாம்னு சொல்லிடுக என்றாள். இவ்வளவு நேரமும் கையை பிடித்துக் கொண்டிருந்த மோஹித் விரல்கள் மெல்ல விட்டபடி அதெல்லாம் முடியாது நீ படிச்சு தான் ஆகணும் என உறுதியுடன் கூறினான்.

இல்ல சாமி என்னால முடியாது. என அருவி மறுத்து பேச.. மோஹித் எவ்வளவோ எடுத்து கூறினான். அருவி அதன் பிறகு அழ ஆரம்பித்து விட்டாள். அவளை கண்கள் இடுங்க பார்த்தவன் உடனே போனை எடுத்து டியூட்டருக்கு போன் செய்து வர வேணாம் என அருவியை கண்களால் எரித்து விடுவது போல பார்த்தான்.

சாமி என அவள் பேச வர.. அவளை ஒரு பொருட்டாக மதிக்காமல் வெடுக்கென அறையின் விளக்குகளை அணைத்து விட்டு படுத்து விட்டான். அடுத்த நாள் அருவிக்கு அவன் ஒரு தடவை கூட போன் செய்ய வில்லை.

அதில் அமலா அனைத்தையும் கண்கானித்து ஒரு திட்டம் தீட்டினாள். அக்காளும் தங்கையும் குதூகலமாக சிரித்து கொண்டார்கள்.

மோஹித்.. ?

அருவி...?

வருவாள்..
 
Top