அதிகாலை வழக்கம் போல நேரமே எழுந்தாள் அருவி. அவன் அசந்து தூங்கிக் கொண்டிருந்தான். எழுந்து கீழே சென்றவள் சமையலறையில் சில வேலைகளை செய்து கொண்டிருந்தாள் சுதா வரும் வரை.
ஹே அருவி? இந்நேரத்தில் என்ன பண்ற மா? இன்னும் கொஞ்ச நேரம் தூங்க வேண்டியது தானே! என சுதா கூற.. இல்ல மா தூக்கம் வரல என கூறிக் கொண்டே வேற வேலை இருக்கா என கேட்டாள்.
சுதா எதையோ யோசித்து விட்டு வேண்டாம் டி! அப்புறம் உன் புருசன் என்னை திட்டுவான்! நேத்தே உன்னை காணாமல் கத்தி கலாட்டா பண்ணிட்டான். உன் கிட்ட எந்த வேலையும் சொல்ல கூடாதுன்னு சொல்லி இருக்கான் என்றார் அவர்.
இல்ல அப்படி இல்ல மா நீங்க கொடுங்க அவரு அப்படி எல்லாம் சொல்ல மாட்டாரு என அருவி அனைத்து வேலையும் செய்தாள். சுதாவுடன் சேர்ந்து சமைக்கவும் கற்று கொண்டாள். இப்படியே நேரம் சென்று கொண்டிருக்க "மணி 7 ஆச்சு மோஹித் மின்ட் டி குடிக்க வேண்டிய நேரம். என வேகமாக செய்தவர் இந்தா ம்ம் பிடி போய் அவனுக்கு கொடுத்திட்டு நீயும் குடி. அப்படியே வரும் போது குளிச்சிட்டு வந்திடு. மோஹித்க்கு அப்படி இருந்தால் தான் பிடிக்கும் என்றவர் அவளை அனுப்பி வைத்தார்.
அருவி இரண்டு கப்பையும் எடுத்துக் கொண்டு மேலே சென்றாள். அவளை ஒரு பொருட்டாக மதிக்க வில்லை அவன். அதற்குள் கிளம்பி ஷூட்டிங் ஸ்பாட்டில் என்ன செய்ய வேண்டும் என மிரட்டி அதட்டி கொண்டிருந்தான். அவள் அறைக்கு வந்ததும் மோஹித் லேப் டாப் பேக் எடுத்துக் கொண்டு கீழே வந்தான். ஹாரிகாவும் நேரத்தில் கிளம்பி விட்டு உணவு மேஜைக்கு வந்து சேர்ந்தாள்.
அருவி குளித்து முடித்து வெளியே வந்து சுற்றிலும் பார்த்தாள். அங்கே அவள் கொண்டு வந்த டீ கப் அப்படியே ருசிக்க படாமல் இருக்க தலையை துவட்டி விட்டு பின்னலிட்டு புடவையை கட்டிக் கொண்டு நெற்றியில் பொட்டு குங்குமம் என அழகாக தன்னை தயார் படுத்திக் கொண்டு கைகள் நிறைய வலையலுடன் கீழே சென்றாள்.
சுதா உணவு பரிமாறிக் கொண்டே திரும்ப வளையல் குலுங்கும் சத்தம் கேட்டது. அட அட எவ்ளோ அழகு என சுதா அருவியை பார்த்த படி மோஹித்தின் தட்டில் சட்னியை இட்லியின் மேல் ஊற்றி விட மாம் என ஆவேசமாக எழுந்தான்.
அதில் அனைவரும் திடுக்கிட்டு பார்க்க, என்ன சுதா என ராமச்சந்திரன் கேட்டார். என்ன என்ன டா ஆச்சு? எதுக்கு இப்படி முகத்தை காட்டுற? என சுதா கேட்க.. என்ன பண்ணி வச்சிருக்க? எனக்கு சாப்பிடுற ஃபீல் போச்சு வேணாம் என கோபமாக எழுந்தான்.
அருவி வேகமாக கீழே இறங்கி வந்தவள். என்னங்க.. என்னங்க என பின்னால் ஓடினாள். மோஹித் அவளை கண்டு கொள்ளாமல் வெளியே சென்றவன். டிரைவர் வண்டி எடுங்க என சொல்லி விட்டு அவளை பாராமல் ஏறி சென்று விட்டான்.
அருவியின் முகம் வாடி போக கண்களில் கண்ணீர் முட்டி கொண்டு நின்றது. நேற்று அருகில் இல்லை என்றதும் எப்படி பதறி துடித்தார். ஆனால் இன்று இன்று என்னை பார்க்காமல் சென்று விட்டாரே? என்னோட சேர்ந்து சாப்பிட வில்லை. பேச வில்லை. என நினைத்து கண்ணை தேய்த்தாள்.
ஹாரிகாவின் மனதில் எதோ ரெண்டுக்கும் பிரச்னை. சூப்பர் சூப்பர் படிச்ச நம்மாளயே அவனை அடக்க முடியாது. அடிமை மாதிரி நடத்துவான். படிக்காத இவள் எங்கே இருந்து தாக்கு பிடிக்க போறா! இந்த கோபத்தை கொஞ்சம் கொஞ்சமா கிளப்பி விடணும் என நினைத்தாள்.
அருவி முகத்தை துடைத்துக் கொண்டு உள்ளே வந்தாள். சுதா அவளிடம் என்ன ஏது என விசாரிக்க ஒன்றும் இல்லை என மலுப்பினாள். இப்படியே அந்த நாட்கள் போர்க்களம் போல கடந்தது. மாலையும் அதே போல தான். ஹாரிகா வீடு வரும் போது சோர்ந்து இருந்தாள். அந்த அளவுக்கு ஷூட்டிங் ஸ்பாட்டில் திட்டி தீர்த்து வேலையை பெண்டு கழட்டி விட்டான்.
அருவி அவனுக்காக காத்திருக்க, மோஹித் வருவதற்கு நடு இரவை தாண்டியது. அவளுக்கு அழுகை பொங்கி கொண்டு வந்தது. கிட்ட தட்ட அந்த வாரம் முழுக்க இப்படியே நடந்து கொண்டான். அவளது போனுக்கு அழைப்பு விடுப்பதே இல்லை. ஏனோ தனியாக விட பட்டவள் போல முகம் வாடி போனது.
அன்று வீட்டுக்கு தாமதமாக தான் வந்தான். வழிய வழிய சென்று அவனுக்கு தேவையானதை செய்ய முயற்சி செய்தாள். மனம் இறங்க வில்லை. கடைசியாக அவளது போனை அவனிடம் நீட்டினாள். எதுவும் பேசாமல் முறைத்து பார்த்தான் மோஹித்.
இது எனக்கு வேணாம் இதுக்கு வேலை இல்லை. எனக்கு யாரையும் தெரியாது. தேவையில்லாம எதுக்கு எனக்கு என்று கூறி நீட்டினாள். மோஹித் எதையும் சொல்லாமல் வாங்கியவன் அவளின் கண் முன் சுவற்றில் வீசினான். ஆப்பிள் போன் மூன்று பாகங்களாக உடைந்தது.
அருவி இதை துளி கூட எதிர் பார்க்க வில்லை. இனி சினிமா படம் போனில் பார்க்க முடியாதா? என அழுகை வந்தது. அவன் எப்படியும் பேசுவான் என தான் அவ்வாறு சொன்னாள். போன் சில்லு சில்லாக நொறுங்கி போனது.
அடுத்த இரண்டு நாட்கள் அவன் வீட்டுக்கே வர வில்லை. ஹாரிகா மினுக்கி கொண்டு சென்றாள். மோஹித் வருவான் வருவான் என காத்திருந்தவளுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. மாலை போல வீட்டுக்கு வந்தான். அப்படியே சோபாவில அமர்ந்து கொண்டு எதோ வேலைகளை செய்தான். லேப் டாப் ஓபன் செய்து தீவிரமாக எதையோ செய்து கொண்டிருந்தான். அவன் தன்னை கண்டு கொள்ள வில்லை என அழுகையுடன் அறைக்கு சென்று விட்டாள் அருவி.
வீட்டில் யாரும் இல்லை சுதா, ராமச்சந்திரன் இருவரும் நண்பர் வீட்டு விசேசத்துக்கு சென்று விட அமலா குழந்தையை எடுத்துக் கொண்டு பர்த் டே பார்ட்டிக்கு லோகேசுடன் புறபட்டவள். வீட்ல மோஹித், அந்த சக்காடை, அப்புறம் நீ மூணு பேர் மட்டும் தான் இருக்கீங்க எதுவும் பண்ணி அவள் முன்னாடி நெருக்கமா இருக்க மாதிரி நடதுக்க அவளே இங்கே இருந்து சீக்கிரம் ஓடிடுவா! என தங்கைக்கு அறிவுரை சொல்லி விட்டு சென்றாள் அக்காகாரி.
அதுவும் சரி தான் என நினைத்த ஹாரிகா அவர்கள் கிளம்பியதும் அவன் அமர்ந்திருந்த சோபா பக்கம் சென்றாள். படத்தின் காட்சிகளை பற்றி பேசி கொண்டிருந்தவன் லேப் டாப்பில் எதையோ தட்டி கொண்டிருந்தான். ஹாறிகா மெல்ல மெல்ல அவன் அருகில் அமர்ந்து லேப் டாபின் அருகில் எட்டி பார்க்க,
டிஸ்கஸ்டிங் என்று லேப் டாப்பை மூடி வைத்தவன் இன்னும் ஒரு நிமிடம் என் பக்கத்தில் இருந்த உன்னை? என பற்களை கடித்தான்.
ஹாரிகா பதட்டத்துடன் சாரி சாரி மோஹித் என எழுந்து ஓடி விட்டாள். போன் கால் வந்தது அதை எடுத்துக் கொண்டு பேச சென்றான். இங்கே அருவி அவனுக்காக சுதாவிடம் கேட்டு மின்ட் டி செய்ய கற்று கொண்டவள் அதே போல ஒன்றை போட்டு அவன் முன் காத்திருந்தாள். பின் எதையோ நினைத்தவள் இங்கே வச்சிட்டு போய் கொஞ்சம் கொரிக்க தீனி எடுத்திட்டு வருவோம் என லேப் டாபின் அருகில் வைத்து விட்டு சமையலறை சென்றாள்.
இது தான் நல்ல சந்தர்ப்பம் என நினைத்த ஹாரிகா அந்த டீயை லேப் டாபின் மீது தள்ளி ஊத்தி விட்டவள் எதுவுமே தெரியாததை போல உள்ளே ஓடி விட்டாள். ஜாலி ஜாலி இப்போவே மோஹித் அவளை கழுத்தை பிடிச்சு வெளியே தள்ள போறான் என கனவுடன் எட்டி பார்த்தாள்.
அருவி தீனியை எடுத்து வந்தவள் அங்கே டீ ஊற்றி கிடப்பதை பார்த்ததும் உள்ளம் நடுக்கம் எடுத்தது. வேகமாக அவன் வருவதற்குள் துடைத்து விடலாம் என வேகமாக துணியை எடுத்துக் கொண்டு வந்தாள் அதற்குள் மோஹித் வந்து விட்டான்.
எட்சிளை விழுங்கிய படி, அவள் பயத்துடன் பார்க்க, அங்கே லேப் டாப் மேல் டி ஊற்றி இருக்க ஆஃப் ஆகி இருந்தது. சட்டென கோபம் தலைக்கு ஏற திரும்பி பார்த்தான். சா...சாமி ந.. நா.. நான் அ.. அத்.. அது வந்து என திக்கி திணற பார்த்தாள்.
ஹாரிகா நினைத்ததை விட படு கோபமாக இருந்தவன். அருகில் சென்று கையில் இருக்கும் தீனியை தட்டி விட்ட படி ஆக்ரோசமாக கத்தினான். Don't call me சாமி.. யூ பிளடி இடியட். உன்னை யாரு டி இதை பண்ண சொன்னது? நான் கேட்டேனா? என ஆவேசமாக சோபாவில் பிடித்து தள்ளினான்.
ஹாரிகா வாயை பிளந்த படி பார்த்தாள். அருவி நடுங்கி கொண்டே மோஹித்தின் இந்த அவதாரத்தை பயத்துடன் பார்த்தாள். மோஹித் அங்கும் இங்கும் நடந்தவன். இம்சை இம்சை! என்னை டார்ச்சர் பண்ண தானே இப்படி ஒரு வேலைய பண்ண? உன்னால எல்லாம் உன்னால டி! உன்னை யாரு பொய் சொல்லி அன்னிக்கு என பேச வந்தான் அதற்குள் படம் தொடர்பான முக்கிய அழைப்புகள் வர.. போச்சு போச்சு எல்லாம் போச்சு. உன்னை தயவு செஞ்சு என் கண்ணில் பட்ட உன்னை.. போடி போ எழுந்து போ என கத்தினான்.
அருவி விசும்பி உடைந்து அழுதவள் வேகமாக எழுந்து அவர்களது அறைக்கு சென்று விட்டாள்.
மோஹித் தன்னை நிதான படுத்திக் கொண்டு போன் பேசியவன். கரணுக்கு அழைத்தான்.
இங்கே ஹாரிகா அவளது அறையில் குத்தாட்டம் போட்டு குதித்து கொண்டிருக்க அங்கே தேனருவி அறையின் மூலையில் ஒடுங்கி நடுங்கி அழுது கிடந்தாள்.
அடுத்து என்ன நடக்கும்?
- வருவாள்..