Pradhanya

Active member
Staff member
Joined
Oct 6, 2024
Messages
120
மின்னலுடன் கூடிய மழையை வீடியோ எடுக்க ஆயத்தமானவனின் கண்களுக்கு
மழையுடன் போட்டி போட்டுக் கொண்டே ஒரு அழகிய பெண் துள்ளி குதித்து வருவதை பார்த்ததும் உடலில் புத்துணர்வு பரவியது. இந்த காட்சி அத்தனை அருமையாக இருக்க, வீடியோவை ஆன் செய்து சரியாக வைத்தவன் அவனது DSLR கேமராவில் போட்டோ எடுக்க ஆரம்பித்தான்.

அவள் வைக்கும் ஒவ்வொரு காலடிக்கும் இங்கே கிளிக் கிளிக் கிளிக் என மோஹித் எடுத்துக் கொண்டிருந்தான். இந்த காட்சியை அப்படியே தனது படத்தின் நாயகி ஹாரிகாவுக்கு இந்த மாதிரி வைக்க வேண்டும் என்று தோன்றியது ஆனால் அது ஒரு சில நொடிகள் தான். மூச்சு வாங்க நெஞ்சுக்கூடு ஏறி இறங்க இரண்டு கைகளையும் ஆட்டிக் கொண்டே உடலோடு ஒட்டிய புடவையுடன் அவளின் உருவம் அருகில் கண்ணுக்கு தெரிய, அவனது சிந்தையில் ஹாரிகாவின் இடத்தில் அதாவது அந்த கதாபாத்திரத்தில் ஓடி வரும் பெண்ணை தவிர வேறு யாரும் பொருந்த மாட்டார்கள் என்ற அளவுக்கு போய் விட்டான் மோஹித்.

அவனது கைகள் நின்ற பாடில்லை தொடர்ந்து போட்டோ எடுத்துக் கொண்டிருக்க, அவனது உலகில் திடீரென அந்த பாவை காணாமல் போய் விட்டாள். சுற்றிலும் தேடி பார்த்தான். கற்பனையா? இல்லை இல்லை நிஜம் தான் எங்கே போனாள். என யோசித்துக் கொண்டே கேமராவில் இருக்கும் அவளின் படத்தை ஜூம் செய்து பார்த்தான். அந்த நேரம் பார்த்து "அம்மாடியோவ் இத்தனை மழையா" என தேன் குரல் கேட்க.. சட்டென திரும்பி பார்த்தான். இதோ குரலுக்கு சொந்தக்காரி. முகத்தில் வழியும் நீரை துடைத்த படி மெல்ல வலது பக்கம் திரும்பி பார்த்தாள்.

அய்யோ யாருங்க நீங்க!! என அவளின் விழிகளில் கொஞ்சம் பயமும் பதட்டமும் குடி கொள்ள, உடனே வேகமாக இறங்க திரும்பினாள். அவளின் கண் முன் ஒரு பச்சை மரத்தில் இடி இறங்கியது. உள்ளுக்குள் பயம் தொற்றிக் கொள்ள, இறங்காத! அங்கே இடி விழுது பாரு அப்புறம் உனக்கு எதுவும் ஆகிட போகுது என கூறிக் கொண்டே அவளை ஆராயிந்தான் மோஹித். பதின்ம வயதில் இருப்பாள் போல, மழையில் நனைந்ததால் உடல் எல்லாம் ஊறி அவளின் குங்கும நிற புடவை அப்படியே உடலோடு ஒட்டிக் கொண்டது. அப்பொழுது தான் அவளின் கழுத்துக்கு கீழ் பார்த்தான். My god என மூச்சு வாங்கியது அவனுக்கு. இது வரை இந்த மாதிரி தோன்றியதே இல்லையே! ஹிம் என தலையை கோதினான்.

கொஞ்சமாக தன்னிலைக்கு வந்தவன். அவளை நிமிர்ந்து பார்க்க, அவளோ பயந்து நடுங்கினாள். மழையின் வேகம் அதிகரித்ததே அன்றி குறைய வில்லை. மழையையும் அவளையும் மாறி மாறி பார்த்தான். தனது கதைக்காக உருவாக்கப்பட்ட கதாநாயகி போல இருந்தாள். மோஹித்தின் மூலையில் ம்ம் இந்த கேர்லோட ஒவ்வொரு ஆக்சனையும் நல்லா நோட் பண்ணிக்கணும். அப்போ தான் நம்ம மூவி எடுக்கும் போது உயிரோட்டமாக இருக்கும் என நினைத்தவன். அவளின் ஒவ்வொரு அசைவையும் உள்ளுக்குள் ஏற்றினான். கூந்தல் ஈரமாக இருக்க, பட்டாம் பூச்சியின் ரெக்கைகளை தான் இமைகளாக படைத்திருப்பான் போல.. உதடுகள் ப்பா ஊறி போயிருந்தது. பால் கொழுகட்டை போல, கொழு பொம்மை போல இருந்தாள். உதடுகள் அப்பப்பா ஆரஞ்சு மிட்டாய் போல இருந்தது. அந்த மெரூன் வண்ண நூல் புடவையில் பேரழகியாக இருந்தாள்.

எவனுக்கு கொடுத்து வைத்திருக்கோ! என பெரு மூச்சை விட்டவன். ஹே மோஹித் காண்சன்டிரேட் பண்ணு டா அவள் உனக்கு கண்டன்ட் என அறிவு அவனை தட்டி எழுப்ப.. கொஞ்சம் தெளிவானான். அப்படியே மெல்ல அவளின் பின் அழகையும் கெண்டை கால்களையும் பார்த்தான். குச்சி போல கால்கள் இடையில் வனப்பு இன்னும் அதிகமானது. முன்னால் m வடிவமும் பின்னழகில் w என மொத்தத்தில் பதுமை பேரழகி. கொஞ்சம் பேச்சு கொடுப்போம் என மெல்ல ஆரம்பித்தான்.

"மழை நிற்காது போல கொஞ்சம் உள்ளே வந்து நில்லு! "என்றான்.அவள் கண்டு கொண்டாள் இல்லை. இதுக்கு மேலே எதுக்கு சொல்லணும்? என்னமோ பண்றா! பெரிய சீன் வேற என நினைத்தவன் மீண்டும் விறைப்பான மோஹித்தாக மாறினான்.

கொஞ்சம் கொஞ்சம் கொஞ்சமாக அவள் நடுங்க ஆரம்பிக்க மெதுவாக அவள் மர வீட்டின் உள்ளே வந்தாள். பேசாமல் அங்கேயே ஒளிஞ்சிருக்களாம் இங்கே வந்து இப்படி மழையில் மாட்டிகிட்டெனே என அவளின் உதடுகள் குளிரில் தந்தி அடித்தது. அந்த மர வீட்டின் உள்ளே மழையின் சாரல் கிட்ட தட்ட இருவரும் நடு பக்கம் வந்திருந்தார்கள். இருவர் முதுகும் மோதிக் கொள்ள.. அம்மாடியோவ் என பயத்துடன் கத்தினாள் தேனருவி.

அதில் கடுப்பானவன் don't make noise என கூற, அவனை பார்த்து பேந்த பேந்த முளித்தாள். அதை உணர்ந்து கொண்டவன். சத்தம் போடாதே! என்றான். ம்ம் என்று அனிச்சையாக தலை அசைத்தாள். உள்ளுக்குள் நடுக்கம் மட்டும் நிற்க வில்லை. அவனது பிளாஸ்கை எடுத்து நீட்டியவன். கொஞ்சம் தண்ணி குடி என்றான்.

ம்ம் ஹிம் என தலை ஆட்டினாள்.

அப்டின்னா போ! என அவன் திறந்து குடித்தான். அதில் ஆவி பறந்தது. அவனது பாட்டிலையே பார்த்துக் கொண்டிருந்தாள். ம்ம் வேணுமா? என மோஹித் கேட்க... என்ன இது? என மெல்லிய குரலில் கேட்டாள். ஹாட் வாட்டர்.. ஐ மின் சுடு தண்ணி என்றான். உடனே வாங்கிக் கொண்டவள் தயக்கத்துடன் பார்த்தாள். ம்ம் குடி என்றான்.

ஒரு மிடுக்கு குடித்தவள். வேகமாக கொஞ்சம் நிறைய குடித்தாள். ரொம்ப நன்றி என நீட்டினாள்.

உன் பேர் என்ன?

அருவின்னு எல்லாரும் கூப்பிடுவாங்க என் பேரு தேனருவி என்றாள்.

ம்ம் என ஒற்றை பதில் அளித்தவன் அப்போ இந்த நேம்ல ஃபிக்ஸ் ஆகிடலாம் என நினைத்து அடுத்த கட்டமாக கதையை யோசித்தான். ஒரு சில நொடியில் அவள் பக்கம் திரும்பி பார்க்க, குளிரில் நடுங்கினாள். அவனது சோல்ட்ர பேக்கை எடுத்து துழாவியவன் ஓவர் கோட்டை எடுத்து அவளிடம் நீட்டினான்.

வேணாம் என தலை அசைத்தாள். மோஹித் அவளை பார்த்து உன்னோட ட்ரெஸ் ஐ மின் புடவையை மேலே இருந்து உருவிட்டு இதை போட்டுக்க, இல்லன்னா காய்ச்சல் வரும் ஜென்னி கூட வர வாய்ப்பு இருக்கு. உனக்கு நடுக்கம் அதிகமா இருக்கு என்றான்.

எப்படி மாத்த முடியும்? நீங்க இருக்கீங்க! என அவள் தயங்கி கொண்டே கேட்டாள். ஒரு கையில் ஜாக்கெட் இல்லையே உனக்கு. என கண்களில் அவள் பிம்பம் ஓடியது.

அப்டின்னா? என்ன? என தேனு கேட்டாள்.

எப்படி? என மோஹித் கேட்க..

அது தான் ராக்கெட்... என்றாள் அதில் உதடு கடித்து சிரித்தவன். அது என விளக்கிஎவன். நான் உன்னை பார்க்க மாட்டேன் நம்பு எனக்கு ஆல்ரெடி லவ்வர் இருக்கா என்றான் நேர்மையுடன்.

அப்டின்னா? என தேனருவி மீண்டும் கேட்க..

காதலி! என்னை கல்யாணம் பண்ணிக்க போரவ என்றான்.

சரிங்க அய்யாவா!! என அதிர்ச்சி அவனுக்கு.

சரிங்க சாமி! என்றவள் அந்த ஓவர் கோட்டை போட்டுக் கொண்டாள். இப்போ திரும்பலாம் சாமி என அவள் கூற..

Irritating word என கடுப்புடன் திரும்பியவன் அவளை பார்த்ததும் இந்த அவதாரத்தையும் கண்ணுக்குள் நிரப்பி கொண்டான்.

மழை நின்ற பாடில்லை.. அப்படியே இருட்ட தொடங்கியது. இரவு எட்டு மணி இருக்கும் அப்பொழுது தான் மழை கொஞ்சம் விட்டது. ஆனால் கும் இருட்டு.. கோட்டான், தவளை பூச்சி என அனைத்தும் கத்த ஆரம்பிக்க.. பெரிய தப்பு பண்ணிட்டேன். அங்கேயே இருந்திருக்கலாம் என தலையை பிடித்து கொண்டே நினைத்தாள்.

அடுத்த நாள் காலை ஆரவாரத்துடன் விடிந்தது. தேனை காணோம். என அவளின் ஊருக்குள் செய்தி பரவ.. அவள் மரகுடில் பக்கம் இருக்கா. ஆனால் கூட...?

வருவாள்..
 
Top