Pradhanya

Active member
Staff member
Joined
Oct 6, 2024
Messages
120
அருவி எதையும் அறியும் நிலையில் இல்லை அதே மன ஓட்டத்துடன் அதுவும் மோஹித் பேசிய பேச்சுக்கள் என்ன என நிதானமாக கேட்கவே அதை புரிந்து கிரகித்து கொள்ளவே வெகு நேரம் பிடித்தது. அவளின் கண்களில் நீர் கொட்ட விசும்பி கொண்டே நேராக சென்று படுத்து விட்டாள் சுவற்று மூலையில்.

மோஹித் அங்கும் இங்கும் நடந்தவன் போனை எடுத்துக் கொண்டு கரணிடம் பேச சென்று விட்டான். கிட்ட தட்ட இரவு பத்து மணியை தாண்டியது. ஹாரிகா நன்றாக ஆர்டர் போட்டு சாப்பிட்டு விட்டு நாளைக்கு எப்படி மோஹித்தை கைக்குள் போட்டு கொள்வது என யோசித்து கொண்டே படுக்கையில் புரண்டாள். வீட்டிற்கு ஒவ்வொருவராக வர தொடங்கினார்கள். சுதா மற்றும் ராமசந்திரன் இருவரும் விருந்தில் சாப்பிட்டதால் அப்படியே படுத்து விட்டார்கள்.

லோகேஷ், அமலா இருவரும் ஒரு பெரிய ஹோட்டலில் டின்னர் முடித்து விட்டு வந்தார்கள். இங்கு உணவு உண்ணாமல் இருக்கும் நபர்கள் இருவர் தான் அதில் ஒன்று கோபக்காரன் இன்னொன்று அவனிடம் மாட்டி கொண்ட தேனருவி. மணி 12 ஐ தாண்டி இருக்க, அறைக்குள் நுழைந்தான் மோஹித்.

படுக்கையில் தேடினான் காணவில்லை. ஒரு வித பதட்டம் பரவியது. பாத் ரூம் சென்று பார்த்தான். அங்கும் அவள் இல்லை. இப்பொழுது எங்கே சென்றிருப்பாள் என நினைத்தவன். தலையை கோதி விட்ட படி அறையின் விளக்கை போட்டு விட்டான். ச்ச!! என ஆவேசமாக கத்தியவன் வெளியே செல்ல போக.. சுவற்று மூலையில் விசும்பல் சத்தம் கேட்டது.

அய்யோ அவளே தான்! என உள்ளம் கனத்து போக வேகமாக வந்து அவள் அருகில் வந்தவன் மென்மையாக அழைத்தான். அருவி! அருவி..

கண்களை திறக்க முடியாமல் முழித்து பார்த்தவள். எதிரில் மோஹித் இருக்கவும் நடுக்கத்துடன் எழுந்து அமர்ந்தாள். அவனை பார்த்து கை கூப்பி சத்தியமா நான் கொட்டல நம்புங்க என கண்களில் நீர் வழிய பார்த்தாள்.

அதில் மோஹித்தின் இதயம் கனத்து போக.. சரி சரி அழாத நான் நம்புறேன் என்றவன் அவளை எழ சொன்னான். கண்களை துடைத்துக் கொண்டு நடுங்கிய படி அவனை பார்த்தவள். ந.. நான் ஒன்னு சொல்லவா?

மோஹித் அருகில் நெருங்கி போதும் அழாத என கண்ணை துடைத்து விட்டான். அருவி அழுது கொண்டே என்னை என்.. எனை.. எங்க கிராமத்தில் கொண்டு விட்டுடுங்க. நான் தான் முட்டாள் என்னால இங்கே உங்க எல்லாருக்கும் பாரமா இருக்க முடியாது என கரைந்தாள். அவளின் முகமெல்லாம் சிவந்து போனது.

இந்த வார்த்தைகளை கேட்டதும் மோஹித்துக்கு முதலில் வந்தது கோபம் தான். ஆனால் என்ன செய்ய? சின்ன பெண் தானும் அவ்வளவு கோபமாக நடந்திருக்க கூடாது என நினைத்தவன். இறுக்கி பிடித்திருந்த வீராப்பை தகர்த்து விட்டு அருகில் நெருங்கி, நான் உன்னோட புருசன் நீ என்னோட பொண்டாட்டி என்னை விட்டு எங்கேயும் போக கூடாது புரியுதா?

அவள் எதுவும் பேசாமல் இன்னும் தேம்பி தேன்பி அழுதாள். ப்ச்ச் இப்போ சொன்னது காதில் விழலையா? என அதட்டினான் மோஹித்.

என்னை தான் உங்களுக்கு பிடிக்கலயே? நான் உங்களுக்கு பொருத்தம் இல்ல. உங்க பொட்டியில் நான் டி ஊத்தள நீங்களே ஊத்திட்டு என் என்னை என்னை எப்படி ஏசினீங்க? இந்த ஒருவாரம் என்னை எவ்ளோ கஷ்ட படுத்துனீங்க? என இன்னும் கறைந்தாள். கூடவே அவனது கைகளை விலக்கி விட்டாள்.

யாருக்கு ஹான் யாருக்கு? உனக்கு தான் என்னை பிடிக்கலன்னு அன்னிக்கு நீ தானே டி சொன்ன? என்றவன் அவளின் முகத்தை நிமிர்த்தி நீ ரொம்ப சின்ன பொண்ணு! உன்னை பத்திரமா பார்த்துக்க நினைச்சேன். உனக்கு படிப்பு சொல்லி கொடுத்து உன்னை நிறைய கத்துக்க வைக்கணும்னு நினைச்சேன் ஆனால் நீ! நீ என்ன டி பண்ண? படிக்க முடியாதுன்னு ஆர்பாட்டம் பண்ணி அழுது நாடகம் நடிச்ச. எனக்கு கோபம் வந்தது. அது தான். என்றான்.

அவன் சொல்வது புரிந்தாலும் சொன்ன விதம் ஆக்ரோசமாக இருக்க இன்னும் அழ ஆரம்பித்தாள். ஒரு சில நொடிகள் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தான் அவளின் முகத்தை பார்க்க பார்க்க மிகுந்த வேதனையாக இருக்க இதற்கு மேல் தாக்குப் பிடிக்க முடியாமல் சாரி சாரி என பாயிந்து கட்டிக் கொண்டான்.

ம்ம் ஹி ம் என அவள் இன்னும் அழுதாள். ஹே அருவி பிளீஸ் டி! சாரி சாரி டி நான் கோபத்தில் பேசிட்டேன். அந்த டீ லேப் டாப் மேலே ஊத்தி போச்சு! எல்லா வேலையும் எனக்கு அதை நம்பி தான். அந்த கோபத்தில் அப்படி ஆகி போச்சு என மீண்டும் பாய்ந்து அவளை அணைத்தான்.

அவள் மெல்ல நிமிர்ந்து சத்தியமா நான் பண்ணல. பொய் சொன்னா சாமி கண்ணை குத்தும் நான் அதை ஊத்தல நம்புங்க சாமி என அவள் அழுதாள். மோஹித் கண்கள் இடுங்க யார் செஞ்சிருப்பா? என் யோசித்தவன் அதை ஓரம் தள்ளி விட்டு சரி நான் அருவிய நம்புறேன். என இறுக்கி அணைத்தான்.

அவனிடம் இருந்து விடுபட போராடினாள். ஹே என்ன டி பண்ற? என அவன் வலு கொடுக்க..

என்னை விடுங்க சாமி! என அவள் முகத்தை திருப்பி கொண்டாள். அவன் மீண்டும் அணைக்க, அவள் விலகினாள்.

ஹே நீயா இப்போ கட்டிக்கல.. நான் இப்பவே பூச்சாண்டி கிட்ட புடிச்சு குடுப்பேன் சம்மதமா? என கேட்டான்.

பூச்சாண்டி என்றதும் தாவி வந்து அணைத்து கொண்டாள். அவளின் உச்ச தலையை முகர்ந்து இன்னொரு முத்தமிட்டான். சிறிது நேரம் கழித்து நகர்ந்தவன். சரி முகத்தை கழுவு உன்னை ஒரு இடத்துக்கு கூட்டி போறேன்.

பூச்சாண்டியா

மோஹித்தின் உதடுகள் சிரித்தது. அவன் அவளிடம் இல்ல வேற இடம். நீ தான் என்னோட பேச்சை கேட்கும் சமத்து குட்டி ஆச்சே அதனால் உன்னை ஒரு முக்கியமான இடத்துக்கு கூட்டிட்டு போறேன். என்றான்.

ஆனால் நடு சாமம் ஆகி போச்சே!

அதனால் என்ன வாடி என அவளை தள்ளு. தல்லோ வென தள்ளி அழைத்து சென்றான் அந்த இடத்துக்கு.

அங்கு சென்றதும் அருவியின் கண்கள் விரிய நடு சாமத்தில் யாரு சோறு சாப்பிடுவாங்க. என கேட்டாள்.

எனக்கு பசிக்குது உனக்கு வேணாம் தானே அப்போ போ! என்றவன் உணவுகளை ஆர்டர் செய்து சாப்பிட ஆரம்பித்தான்.

அருவி அவனையே பார்த்துக் கொண்டிருக்க, அவளுக்கு ஒரு வாய் ஊட்டினான். கோபம் இருக்கிற இடத்தில் தான் குணம் இருக்கும் அது போல மோஹித் என உள்ளுக்குள் நினைத்தாள். அவனுடன் சேர்ந்து எதுவும் சொல்லாமல் அமைதியாக சாப்பிட்டாள்.

வயிறு full ஆ?

அப்டின்னா? என்றாள்.

அது வயிறு நிறைந்து போச்சா!

ம்ம் வயிறு நிறைந்தது என்றவள் அதன் பின் எதுவும் பேச வில்லை.

மோஹித் காரில் செல்லும் போது அவளின் கையை பிடித்துக் கொண்டான். அருவி எதுவும் பேச வில்லை. என்ன பேசுவாள் எரிந்து விழுகிறான். அவனை புரிந்து கொள்ளவே முடியாது என்ற மன நிலையில் பயணம் செய்தாள்.

வீடு எப்போ வரும் என்று மட்டும் கேட்டாள்.

இப்போ நம்ம வேற இடத்துக்கு போக போறோம்!

எங்கே?

சொல்ல மாட்டேன் டி! என்றவன் அழைத்து சென்றான்.

"புஷ்பா படத்துக்கு"

தியேட்டருக்கு வந்திருக்கிறோம் என தெரிந்ததும் இவ்வளவு நேரமும் சோர்ந்து இருந்த முகம் இப்பொழுது பிரிஸ்க் ஆனது.

படம் பார்க்கவா? என அருவி கண்கள் மின்ன கேட்க..

இல்ல தூங்க என்றான்.

அவள் உற்சாகத்துடன் இருந்தாள். இவ்வளவு நேரமும் இருந்த கவலை துளி கூட இல்லை. கண்கள் எல்லாம் இப்பொழுதே விரிய ஆரம்பித்தது. அவனுடன் ஆட்டுக்குட்டி போல சென்றாள்.

உள்ளே சென்றதும் படம் ஆரம்பித்தது. இந்த படத்தில் வரும் அனைத்தும் அவளுக்கு மிகவும் பிடித்தது. அதில் முக்கியமான ஒரு விசயம் ஹே சாமி வா வா சாமி! அம்மு அம்மு சொல்லயிலே பொண்டாட்டியா பூரிக்கிறேன் சாமி என்ற பாடல் தான் அவளுக்கு மிகவும் பிடித்தது. அவளின் முகத்தில் இருக்கும் பரவசத்தை தனதாக்கி கொள்ள துடித்தது மோஹித்தின் உதடுகள்.

அருவி என மெல்ல அழைத்தான். பதில் இல்லை படத்தை தீவிரமாக பார்த்துக் கொண்டிருந்தாள்.

ஹனி என அவளின் விரல்களை வருடினான். இந்த படம் ரொம்ப ரொம்ப நல்லாருக்கு சாமி என மெய் மறந்து பார்த்தாள்.

ஹே ஹனி என மீண்டும் மெதுவாக அழைத்தவன் கைகள் அவளின் இடையில் அழுத்தமாக படிய...

ப்ச்ச படம் பார்த்திட்டு இருக்கேன். நீங்க எதுக்கு என் இடுப்புல கை வைக்குறீங்க என சொல்லி கொண்டே கோபமாக திரும்பினா
ள். அடுத்த நொடி அவளின் உதடுகளை அவன் கவ்வி கொண்டான்.

தேன் தான்..

அருவி..!

வருவாள்.
 
Top