Pradhanya

Active member
Staff member
Joined
Oct 6, 2024
Messages
120
கரணுக்கு தனது பிறந்தநாள் சாக்லேட்டை கொடுக்கலாம் என்று கைகளில் வைத்திருந்தவள். அவன் பேசிய வார்த்தைகள் நெஞ்சை குத்தி கிழிக்க அப்படியே நின்று விட்டாள்.

அவள் கண்களில் நீரை பார்த்ததும் "சொப்பா இதை மட்டும் கரெக்டா பண்ணிடு" என்று எரிந்து விழுந்தான்.

என்ன நடக்குது என்று மோகித் அவ்விடத்திற்கு வர, உடனே தீட்சி கண்களை துடைத்துக்கொண்டு அவ்விடத்தை விட்டு நகர்ந்தாள். மோஹித் அவளை பார்த்ததும் வாட் ஹேப்பன் தீட்சி? கையில் என்ன என்று சாக்லேட்டை பார்த்து கேட்டான்.

ஒன்னும் இல்ல சார் என இயல்பாக பேச முயற்சி செய்தாள் தீட்சி. மோகித்துக்கு தெரியும். தீட்சி மிகவும் பண்புள்ள ஒழுக்கமான பெண் என்று. அதனால் அவளிடம் இயல்பாக பேசுவான். என்ன தீட்சி? இன்னைக்கு திருவிழா போல வந்துருக்கீங்க? என்ன விஷயம்? என்று மென்மையாக கேட்டான்.

கரண் அலட்சியமாக அவளை பார்த்தான். தீட்சி தலையை குனிந்த படி "அது.. அது வந்து எனக்கு பர்த்டே சார். இந்தாங்க சாக்லேட் என்று நீட்டினாள்.

பர்த்டேவா? என்று மோகித்தின் எண்ணம் அருவியின் மீது சென்றது. அவளுக்கு ஹான் மேரேஜ் அன்னிக்கு தான் பர்த் டே என நினைத்தவன். இப்போ ஒன் மந்த் ஆகிடுச்சே! இட்ஸ் ஓகே ஹனி பேபிக்கு எதுவும் வாங்கி கொடுக்கணும் என யோசித்துக் கொண்டே சென்று விட்டான்.

மோஹித் சென்ற அடுத்த நொடி தீட்சியும் அவ்விடத்தை விட்டு நகர்ந்தாள். கடைசியாக அவள் அவ்விடத்தை விட்டு செல்லும் போது கரணை அழுத்த பார்வை பார்த்து விட்டு சென்றாள். கரணுக்கு அடுத்த நொடி எந்த வேலையும் ஓட வில்லை. அவனது மனதில் குழப்பமும் கவலையும் சூழ்ந்து கொண்டது. "ச்ச எனக்கு என்னாச்சு?" என தனக்கு தானே சொல்லிக் கொண்டவன். வேலையில் கவனம் செலுத்த ஆரம்பித்தான்.

டேய் கரண்? என்ன டா இப்படி சொதப்புற? இந்த டீட்டியல்ஸ் எங்கே? VFX ஒர்க் என்னாச்சு? நெல்ஸ்ட் சீன் செட்டு போட்டு எடுக்கணும்னு சொன்னேனே அதை ரெடி பண்ணிட்டயா? சப்போட்டிங் ஆர்டிஸ்ட் எங்கே? அப்படி இப்படி என மோஹித் கேள்வி கணைகளாக எய்தான்.

இல்ல சார் இதோ ரெடி.. அது இது? என தடுமாறினான் கரண். ஒவ்வொரு முறையும் தேவையில்லாத வார்த்தைகளை வசைகளாக பெற்று கொண்டான். அந்த நாள் முடிவில் மோஹித் கோபத்துடன் அவனை முறைத்தான்.

அது மோஹித் என கரண் பேச வர, உன்னோட கவனம் எங்கே இருக்கு? எனக்கு வேலையில் டெடிக்கேசன் இருக்கணும் இல்லன்னா நீ அதை பண்ணாத! உன்னோட இடத்து ஃபில் பண்ண ஆயிரம் ஆட்கள் காத்திட்டு இருக்காங்க. என்றான்.

இல் இல்ல மோஹித் அது நாளையில் இருந்து சரி ஆகிடுவேன் டா என தடுமாறினான். மோஹித் எதுவும் பேசாமல் போனை நோண்டி கொண்டிருந்தவன். நாளைக்கு மட்டும் எதுவும் பிரச்னை ஆச்சு. நீ என் கண்ணு முன்னாடி வந்திடாத! என கூறினான்.

சரி என தடுமாற்றத்துடன் எழுந்தான் கரண். "ஹே ஹீரோயின்க்கு டப் பண்ண டப்பிங் ஆர்டிஸ்ட் அரேஞ்ச் பண்ணிடு. அண்ட் அவங்க சேம்பில் வாய்ஸ் நாளைக்கு நான் கேட்கணும் ஏற்பாடு பண்ணு அதன் பிறகு ஃபைனல் பண்ணலாம்"

"ம்ம் சரி" என கரண் அவ்விடத்தை விட்டு நகர்ந்தான்.

வீட்டுக்கு சென்ற கரண் நேராக படுக்கைக்கு சென்று விட்டான். கரணு வந்து சாப்பிடு டா! என்னாச்சு வந்ததும் இப்படி படுத்துக்கிட்ட? என அவனது தாய் மகேஷ்வரி அழைத்தாள்.

நான் அப்புறம் வந்து சாப்பிட்டுக்குவேன். நீங்க சாப்பிட்டு தூங்குங்க என கதவை அடித்து சாத்தியவன். பதுக்கி வைத்திருந்த பியர் பாட்டிலை எடுத்து பருக ஆரம்பித்தான் கரண்.

என்ன டி வரானா இல்லையா? என ஆனந்தன் கேட்டுக் கொண்டே உள்ளே வந்தார். இல்லைங்க அப்புறம் வரேன்னு சொல்லிட்டான் என மகேஷ்வரி உணவை பரிமாறினார்.

எதுக்கு டி இந்த சினிமா வேலை? இவன் கிட்ட எத்தனை தடவை சொல்றேன் ஒரு நாள் நம்ம கடை முன்னாடி வரானா பாரு? என ஆனந்தன் அங்கலாய்த்து கொண்டார். ஆனந்தன் ஒரு ஷோ ரூம் வைத்திருக்கிறார். டீவி, ஃப்ரிட்ஜ், வாசிங் மிசின், AC என எலக்ட்ரானிக்ஸ் மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை செய்யும் பெரிய ஷோ ரூமின் ஓனர். இரண்டு பிள்ளைகள் மகளுக்கு திருமணம் ஆகி விட்டது. பெரிய பர்னிச்சர் ஷோ ரூம் வைத்திருக்கும் முக்கிய புள்ளியின் ஒரே வாரிசுக்கு கட்டி கொடுத்திருக்கிறார். அதன் பிறகு கரண் தான் பாக்கி. நல்ல செழுமையான குடும்பம் தான்.

இங்கே கரண் கொஞ்சம் கொஞ்சமாக பியரை குடித்து கொண்டிருந்தான். தப்பு அவள் மேலே? அவள் கிட்ட நான் சாக்லேட் கேட்டனா? மூடிட்டு போக வேண்டியது தானே! என தனக்கு தானே புலம்பினான்.

இல்ல இருந்தாலும் நீ அப்படி திட்டி இருக்க கூடாது. என இன்னொரு எண்ணம் பாடாய் படுத்த, இவளை தேடி நான் போகல. நான் எங்கே இருந்தாலும் அவள் தான் என்னை தேடி வரா! அவளுக்கு வேற வேலையே இல்லையா? என கண்டதையும் புலம்பி தள்ளினான். இனி வர மாட்டாள் நம்ம நிம்மதியா வேலை செய்யணும். என நினைத்துக் கொண்டு உறங்கினான்.

அடுத்த நாள் ஆரவாரத்துடன் விடிந்தது. ஷூட்டிங் ஸ்பாட் வந்ததும் பரபரப்புடன் திரிந்தான். ஆனால் எதற்கு திரிந்தான் என்று தான் தெரிய வில்லை. மோஹித் கேசுவல் உடையில் நுழைந்தான். இன்று 24 மணி நேரமும் ஷூட்டிங் என நேற்றே சொல்லி இருந்தான்.

அனைவரும் அதற்கான வேலைகளில் மும்முரமாக இருக்க, மோஹித் இதோ ரெடி.. மோஹித் கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோ என கரணின் பார்வை ஒரு பக்கமும், கவனம் ஒரு பக்கமும் இருக்க, பற்களை கடித்த படி பார்த்த மோஹித் அவனை அழைத்துச் சென்று விட்டான் ஒரு அரை கண்ணம் சிவக்க..

உணர்ச்சி இல்லாமல் நின்று கொண்டிருந்தான் கரண். டேய் எருமை.. f* you trash.. உனக்கு என்ன கேடு வந்தது? நான் கொடுத்த இடத்தில் தான் ஆடிட்டு இருக்கியா கரண். இது கொஞ்சம் கூட சரி இல்ல டா! எனக்கு விரயம் ஆக்குறது கொஞ்சம் கூட பிடிக்காது. வீட்டில் எதுவும் பிரச்சனையா? என கேட்டான்.

"இல்ல டா" என மறுப்பாக தலை அசைத்தான் கரண்.

அப்புறம் என்ன கேடு வந்தது? என்னை திரும்ப திரும்ப டென்ஷன் பண்ணாத. உன்னால பண்ண முடியலனா சொல்லு நான் வேற ஆளை போட்டுக்கிறேன். என கண்ட படி திட்டினான் மோஹித்.

"அது இன்னிக்கு ஏன் அவள் வரல?" என கேட்டான் கரண்.

எவள்? என மோஹித் அவனை உற்று பார்க்க, அது ஹாரிகா அது ஹாரிகா கூட.. என கரண் தயங்க, what the hell? நீ ஹாரிகாவை லவ் கண்றாவி பண்றேன்னு மட்டும் சொல்லாத! ச்சீ! என முகத்தை சுழித்தான் மோஹித்.

"நான் எவளையும் லவ் பண்ணல." என உறுதியுடன் கூறினான் கரண். அப்போ யாரை பத்தி என் கிட்ட கேட்ட? என்ன டா உனக்கு கேடு வந்தது? எதுவும் கொடையுதா? சொல்லி தொலை. மண்டையில் பிரச்சனையா? சொல்லு ஹாஸ்பிடல் போகலாம் என கேட்டான் மோஹித்.

சாரி எல்லாமே என்னோட தப்பு தான். நான் கவன குறைவா இருந்துட்டேன். அது எனக்கே நல்லா தெரியுது. இனி அப்படி நடக்காது உறுதியாக சொல்றேன் என தீர்க்கமாக கூறினான் கரண்.

மோஹித் அவனை அழுத்தமான பார்வையை பதிக்க, சத்தியம் டா இனி நீ என்னை திட்டும் அளவுக்கு வச்சுக்க மாட்டேன் என்னை நம்ப மாட்டியா? என கூறினான் கரண்.

"சரி யாரை பத்தி கேட்ட? எந்த பொண்ணு?" என மோஹித் ஆரம்பிக்க, யாரும் இல்ல.. என கரண் வேறு புறம் திரும்பி கொண்டான்.

இப்போ சொல்ற? சொல்லு என கழுத்தை பிடித்தான் மோஹித். அது டேய் சொல்றேன் விடு என இரும்பி கொண்டே பார்த்தான் கரண். சீக்கிரம் சொல்லு நைட்டு ஷூட்டிங் ஆரம்பிக்கும் வேலைய நீ தான் பார்க்கணும் என்றான்.

"அந்த தீட்சி தான்" என கரண் சொன்னதும் மோஹித்தின் முகம் புன்னகையில் மாறியது. என்ன டா சொல்ற? லவ்வா? என சிரித்துக் கொண்டே கேட்டான்.

நீ நினைக்கிற மாதிரி எல்லாம் எதுவும் இல்ல. அன்னிக்கு அவளோட பிறந்த நாள்ன்னு தெரியாம உன்னோட முன்னால் காதலியையும் அவளையும் கம்பேர் பண்ணி திட்டிட்டென் அதான் என கரண் சொல்ல வர அதற்குள் ஓங்கி அறைந்திருந்தான் மோஹித்.

மோஹித்!! என அழுத்தத்துடன் அழைத்தான் கரண். ராஸ்கல் உன்னை!... அவளுக்கு வேலை வாங்கி கொடுத்ததே நான் தான் டா! வெளியில் என்னை தெரிஞ்ச மாதிரி காட்டிக்க மாட்டாள். ரொம்ப நல்ல பொண்ணு. அவளை போய் இப்படி பேசி இருக்க. உன்னை என மூக்கில் குத்து விட எகிரினான் மோஹித்.

மோஹித் சார் என வெளியில் அழைக்கும் குரல் கேட்டது. அவள் தான் அவளது குரல் தான் என தெரிந்ததும் நிம்மதியுடன் கரணின் முகம் மாறியது. வயிற்றில் ஒரு பஞ்ச் விட்ட மோஹித் கோபத்தை வெளி காட்டி கொள்ளாமல் வந்தான். சொல்லு தீட்சி? ஒர்க் முடிஞ்சதா? என கேட்டான்.

ரொம்ப தேங்க்ஸ் சார். என மெலிதான புன்னகையை உதிர்த்து இரு வார்த்தை பேசி விட்டு அங்கிருந்து ஹாரிகா இருக்கும் இடத்துக்கு சென்றாள் தீட்சி. எந்த உணர்ச்சியும் இல்லாமல் வந்துட்டு போயிட்டாளா? என எட்டி பார்த்தான் கரண்.

மீண்டும் கரணை வாயில் ஒரு குத்து விட்டான் மோஹித். டேய் நீ ஓவரா போற? என கரண் கூற, எதுக்கு ஹாரிகா பத்தி தப்பா பேசின? எந்த பொண்ணை பத்தியும் பேச உனக்கு என்ன ரைட்ஸ் இருக்கு? ஒவ்வொரு பொண்ணுக்கும் தனிப்பட்ட ஸ்பேஸ் இருக்கு தேவையில்லாம யாரை பத்தியும் லூஸ் டாக் விடாதே என திட்டி விட்டு கோபமாக சென்றான் மோஹித்.

இரவு முழுவதும் ஷூட்டிங் நடந்தது. கரண் கடமையே கண்ணாக எல்லா வேலையையும் பிசிரு இல்லாமல் முடித்தான். அடுத்த நாள் இரவு தான் அனைவருக்கும் வேலை என இருக்க. மோஹித் தன் நண்பன் கரணின் நடவடிக்கையை கவன தவற வில்லை.

அடுத்த நாள் ஆரவாரத்துடன் விடிந்தது. லாவன்யா மற்றும்
ரோஹன் இருவரும் வீட்டுக்கு வந்து சேர்ந்தார்கள்.

வருவாள்.
 
Top